1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,714
    Likes Received:
    1,854
    Trophy Points:
    325
    Gender:
    Female
    மிக சிறப்பான சுய அலசல். நம்ப முடியவில்லை.
    அப்பா! 360 டிகிரி அளவாக செய்து
    இருக்கீங்க V ! பாரபட்சமின்றி தன்னை
    அலசுவது எல்லோருக்கும் கை வராது.
    எனக்கும் அப்படியே! தற்சோதனை செய்வேன்,
    ஆனால் முழுமையாக முடியாது.
    இன்றைய அரசியல் வாதிகள் தங்களைப்போல்
    சுய அலசல் செய்தால் நன்றாக இருக்கும்.
    உங்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.
     
    singapalsmile and Thyagarajan like this.
  2. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,519
    Likes Received:
    13,226
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I agree in toto. I like equally the solitude and large gathering.

    I too befriend easily a stranger men or women . All that is required to befriend is a smile and modulated voice i mean not harsh. It could be in person or over phone. After that discover what are the interests of the person whom we wish to befriend. Subtle questions to which their response would reveal their profound interest. Any subject there is something one might know and that is adequate to initiate interest in sustaining conversation.

    One has to believe enlarging & net-working friends’ circle which helps in many ways paying rich dividends in the long run if not immediately. I picked up the technique from my mom who had a very large circle of friends that earned her the sobriquet- a BBC Correspondent.

    Secondly, about enjoying vicariously of the past delectable moments. I too indulge in this to arrest the wayward mind that operates in negative territory.
    Regards. GOD BLESS
     
    singapalsmile and vidhyalakshmid like this.
  3. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,519
    Likes Received:
    13,226
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Pleasure is mine. Glad to note that you keep your bosom friends at a higher pedestal. Out of my seven bosom friends three have departed. They were all my class mates in engg. Out of remaining four one is school mate. Another one with his family stays in senior citizen home since 2005. All these friends were/are very genuine and extended help when I was distressed.

    i happen to befriend my room mates when i was staying in a three seater lodge for about four years. One of them -kalpathri is simply unforgettable. Narration in link below would demonstrate our profound friendship.
    Friend, Moon & Cemetery

    This list contain the ingredients or virtues -a sine-qua-non for enlarging friends’ or and clients’ circle.

    This term came into vogue in TN sometime when koundamani & Senthil combo arrived in tamil movies. During my prime time the equivalent that was in vogue am unable to recall. இரம்பம் seems to be close to this! But கடலை may provide some amusement. Has it any bearing on ground nut or monkey nuts?
     
    singapalsmile likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    மிக்க நன்றி, V.

    360 டிகிரி சுய அலசல் 100% தெளிவை தரும். நாம தெளிவா இல்லாவிட்டால் வாழ்வில் வருவோர் போவோர் எல்லாம் நம்மை குழப்பி விட்டு போவார்கள்.
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    மிக சரியாக சொன்னீர்கள். எனக்கும் இது எல்லாம் பொருந்தும். என்னோட பங்குக்கு இன்னும் கொஞ்சம் சேர்த்து கொள்கிறேன்.

    • மரியாதையாக பேசுவது
    • வெளிப்படையாக பாராட்டுவது
    • நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் பேசுவது
    • விவாதம் இருக்கலாம் விதண்டவாதம் இருக்க கூடாது
    • Agree to disagree
     
    Thyagarajan likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பொன்னியின் செல்வன் கட்டிய கோவில் பற்றி போன பதிவாக இருந்தது. எங்கள் வீட்டு பொன்னியின் செல்வன் பற்றி இந்த பதிவில்.

    அலுவலகத்தில் இருக்கும் போதும் எனது குடும்பத்து நபர்கள்/ நண்பர்களிடம் போனில் பேசுவதை விரும்ப மாட்டேன்/ முடிந்தவரை தவிர்த்து விடுவேன். Whatsapp மெசேஜ் பார்த்து அவசரம்/ அவசியம் இருந்தால் மட்டுமே பேசுவேன். இன்று அலுவலகத்தில் இருக்கும் போது குடும்பத்து நபரிடம் இருந்து Whatsapp call. யார் அழைத்தது? எதற்காக? தனக்கு பிடித்தமான ஒரு விளையாட்டு பொருளை என்னிடம் வீடியோவில் காண்பிப்பதற்காக யார் உதவியும் இல்லாம தானாகவே முதல் முறையாக போனில் என்னை அழைத்து இருந்தான் எங்கள் வீட்டு பொன்னியின் செல்வன். ஒன்று இரண்டு தமிழ் வார்த்தைகள் மட்டுமே பேசி மனம் இல்லாமல் இரண்டு நிமிடத்தில் போனை வைத்தது இதுவே முதல் முறை எனக்கும். (வார இறுதியில் ஒரு மணி நேரம் கதை அடிப்போம்)

    எப்படி இவ்ளோ பந்தம் எங்கள் இருவருக்கும்?

    குட்டி பையனுக்கு சரியான கார் பைத்தியம். இதை நான் நிறையவே பயன்படுத்தி கொண்டேன்.

    • Gifts - Hot Wheels cars & track sets, Remote control cars
    • தாயகத்தில் நாங்கள் காரில் பயணிக்கும்/நடக்கும் போது மற்ற car logos காண்பித்து என்ன கார் என்று சொல்லி கொடுத்து இருக்கிறேன். தாயகத்தில் பெரும்பாலான கார்கள் logo பார்த்து make சரியாக சொல்லி விடுவான்.
    • ஆட்டோ/லாரி/கார் பேப்பரில் வரைந்து கொடுப்பேன். அவன் கலர் கொடுப்பான். என்ன வரையனும் என்று கேட்பேன். அவன் சொல்லி முடித்தவுடன் ரூமிற்கு வெளியே சென்று அஞ்சு நிமிடம் கழித்து வர சொல்வேன். நெட் ல எப்படி வரைவது என்று தேடி பார்த்து உடனே வரைந்து விடுவேன். இந்த லிங்க் பார்க்கவும்
    • Addition/Subtraction - குட்டி கார்கள் வைத்து சொல்லி கொடுத்து இருக்கிறேன். சரியான பதில் அளித்தால் பாராட்டு. தவறான பதில் சொன்னால் - வேறு முறையில் புரியும்படி திரும்பவும் சொல்லி கொடுப்பேன்
    • A-Z alphabet with car brands - YT வீடியோஸ் சேர்ந்து பார்ப்போம்
    • ரூம் முழுதும் நிறைந்து கிடைக்கும் குட்டி கார்கள் வைத்து சேர்ந்து விளையாடுவோம்
    • Mall சென்று விளையாட்டு car rides
    • இங்கு நான் ஓட்டும் காரை காண்பித்து இருக்கிறேன். இந்த கார் அவனோட most fav car இது வரையில்.

    எக்ஸ்ட்ரா: என்னை போலவே இவனும் ஸ்வீட் பைத்தியம். ஷேர் செய்து ஸ்வீட் சாப்பிடுவோம்.
    இனிமையான நிகழ்வுகள்!!
     
    Thyagarajan likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கண்ட நாள் முதல் - எங்கள் இருவருக்கும் பிடித்த படம். இந்த படத்தை தான் முதல் முறையாக சேர்ந்து OTT ல பார்த்தோம். இந்த படத்தின் இயக்குனர் ஒரு பெண். இவரது இயக்கத்தில் "பொன் ஒன்று கண்டேன்" படம் இந்த மாதம் OTT ரிலீஸ் மட்டுமே. கடந்த வார இறுதியில் படம் பார்த்தேன்.

    Ashok Selvan - படத்தில் சொல்வது போல GVM படத்து hero மாதிரி இருந்தார். லாஜிக் பார்க்காமல் மேஜிக் தேடாமல் சும்மா பார்த்தால் படம் பார்ப்பதற்கு ஓகே. இந்த மெலடி எனக்கு ரொம்பவே பிடித்தது.

    இரண்டு வாரங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் OTT ல பார்த்த ஒரு feel-good படத்தில் இருந்து ஒரு அருமையான பாடல்.
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    போன வாரம் எனது கல்லூரி தோழி ஒரு WA வீடியோ அனுப்பி இருந்தார். இவர் படித்து முடித்து நல்ல வேலை பார்த்து குடும்பத்திற்காக வேலையை விட்டவர். எனது நெருங்கிய கல்லூரி தோழி வழியாக எனது போன் நம்பர் தெரிந்து கொண்டு பல வருடங்களுக்கு பிறகு போன மாதம் தான் என்னிடம் போனில் பேசினார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் போனில் உரையாடல் சென்றது. கல்லூரி நாட்கள் தொடங்கி இப்போ எங்கோ இருக்கிறோம் என்பது வரை பேசி விட்டோம்.

    இவர் அனுப்பிய வீடியோவிற்கு வருகிறேன். Homemaker க்கு கிடைக்கும்/கிடைக்காத மரியாதை. இந்த தலைப்பில் இதுவரைக்கும் நான் யாரிடமும் விவாதம் புரிந்ததில்லை என்பதை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. எனக்குள் கருத்துக்கள் பொங்கி வழிந்தது. ஆனால் எனது தோழிக்கு ஒரு வார்த்தை கூட பதில் சொல்லவில்லை. அனுப்பிய வீடியோவிற்கு லைக் போடவும் இல்லை.

    பேச்சு சம்பந்தமாக சமீபத்தில் இங்கு கிறுக்கியது தான் எனது நினைவிற்கு வந்தது. சூழல் புரிந்து பேசுவது ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம். Corporate world ல இருப்பவர்களை நான் முதலில் சந்தித்தால் எனது வேலை சார்ந்த அனுபவங்களை மணிக்கணக்காக மூச்சு விடாமல் சந்தோஷம் பொங்க பேசுவேன். நான் பேசிக்கொள்ளும் நபர் Homemaker ஆக இருந்தால்?? எனது வேலையை பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் இருந்து வராது. அவரது வாழ்வு முறையை தெரிந்து கொள்ள முற்படுவேன். அவர்கள் செய்யும் செயல் என்னை வியப்பில் ஆழ்த்தினால் கண்டிப்பாக பாராட்டுவேன்.

    எனது கல்லூரி படிப்பை முடித்தவுடனே வேலைக்கு சேர்ந்து விட்டேன். அன்று வேலை மீது எவ்ளோ காதல் இருந்ததோ அதை விட அதீத காதல் இன்றைய வேலை மீது. Homemaker ஆக என்னை ஒரு நிமிடம் கூட கற்பனை செய்து பார்க்க முடியல.

    எனது இணையிடம் திருமணத்திற்கு முன்பே வேலை விஷயத்தை பற்றி ஆணித்தரமாக பேசி விட்டேன். வேலை பார்க்கும் பெண்களுக்கு எனது இணை அதிகமாகவே மதிப்பு அளிப்பார். அவரும் வேலையை பெரிதாக எடுத்துக்கொள்வார். திருமணத்திற்கு முன்பு எத்தனையோ கேள்விகள் முன் பின் முரணாக வேண்டும் என்றே கேட்டு இருக்கிறேன்.

    ஒரு முறை நான் கேட்ட கேள்வி: எந்த வயதில் ரிட்டையர் ஆக விருப்பம்?
    எனது எனது இணையின் பதில்: 65 வயது (சமீபத்தில் கேட்ட போதும் இதே பதில் தான் வந்தது)

    நான் : After 65 என்ன பிளான்?
    அவர்: Part-time job. (சமீபத்தில் கேட்ட போதும் இதே பதில் தான் வந்தது)

    முரணாக பதில் வருகிறதா என்று பார்ப்பதற்காக நான் கேட்ட கேள்வி: லாட்டரி சீட்டில் மில்லியன் டாலர் கிடைத்தால் என்ன பண்ணுவீங்க? (லாட்டரி வாங்கும் பழக்கம் அவருக்கு கிடையாது )
    அவர்: Fixed Deposit ல போட்டு விடுவேன்
    நான் : Interest பணம் வரும். செலவுக்கு போதும். அப்புறம் வேலைக்கு போவீங்களா?
    அவர்: வழக்கம் போல வேலைக்கு போவேன்

    எங்கள் இருவருக்கும் வேலை பார்ப்பது ரொம்பவே பிடித்தமானது. வேலைக்கு போனால் கிடைக்கும் பணத்தை விட வேலை பார்க்கும் அனுபவம் அளிக்கும் திருப்தி அதிகம் எங்கள் இருவருக்கும்!!
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தாயகத்தில் நடந்த ஒரு நிகழ்வு

    என்னை பார்ப்பதற்காக எனது உறவினர் எங்கள் வீட்டிற்கு வந்தார். எனது உறவினர் ஒரு அரசு வங்கியில் வேலை புரிகிறார். இவர் இன்ஜினீரிங் படிப்பு முடித்து பொது தேர்வு எழுதி வங்கி வேலைக்கு சேர்ந்தவர். இவரது சின்ன வயதில் இருந்தே இவரை எனக்கு நன்கு தெரியும். இவரிடம் வங்கி நடப்புகள் அங்கு நிகழும் சுவாரசியமான நிகழ்வுகள் வித்தியாசமான வாடிக்கையாளர்கள் பற்றி எல்லாம் கேட்டு கொண்டிருந்தேன். வங்கி வேலை அனுபவங்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தது. இவருக்கு திருமணம் முடிந்து அஞ்சு வருடங்கள் இருக்கும். இவரது கணவரும் ஒரு அரசு வங்கியில் தான் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இருக்கும் இன்வெஸ்ட்மென்ட் பிளான்ஸ் என்னவென்று கேட்டேன். ஏதாவது புதுசாக நான் கற்றுக்கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் தான் கேட்டேன்.

    Mutual Funds ல இன்வெஸ்ட் செய்து இருக்கிறோம் என்றார். எனக்கு ஆர்வம் மேலும் தலை தூக்கி விட்டது. எந்த Funds ? எதனால் இதை தேர்ந்து எடுத்தீர்கள்? என்று கேள்வி கேட்க ஆரம்பித்தேன். இவர் சொன்னார்: எனக்கு எதுவும் தெரியாது. எனது கணவர் சொன்னதை நான் அப்படியே பின்பற்றி விட்டேன். எங்கள் வீட்டில் எனது கணவர் அவரது குடும்பத்து நபர்கள் எல்லோரும் ஸ்டாக் மார்க்கெட் பற்றி தான் நிறைய பேசுவார்கள்.

    இந்த பதிலை கேட்டவுடன் நான் என்ன செய்து இருப்பேன் என்று நினைக்கறீங்க?

    சுமார் இரண்டு மணி நேரங்கள் ஸ்டாக் மார்க்கெட் அடிப்படை பற்றி சொல்லி கொடுத்தேன். அவ்ளோ ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தார். Banker அல்லவா? நான் சொன்னதை பக்காவாக புரிந்து கொண்டார். இவர்கள் இன்வெஸ்ட் செய்யும் Mutual Funds பற்றி இன்டர்நெட்டில் எப்படி ஆராய்வது என்றும் சொல்லி கொடுத்தேன். இவருடன் சேர்ந்து ஆராய்ந்து well-diversified funds இல்லை என்பதை புரிய வைத்தேன். பணம் வந்தால் பல மடங்கு. அடிபட்டால் பாதிப்பு அதிகம். நிறைய கேள்விகள் கேட்க சொல்லி கொடுத்தேன். கற்றுக்கொண்ட சந்தோஷம் அவருக்கு. கற்று கொடுத்த சந்தோஷம் எனக்கு.
     
    Thyagarajan likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வாரம் முழுவதும் மாலை பொழுதில் 80s/90s IR songs கேட்டு கொண்டிருந்தேன். மனசு இலகுவாக தற்போது இருக்கிறது. சில சமயம் சொர்க்கமாக இருந்தது.

    பூ மாலையே - பகல் நிலவு
    கொடியிலே மல்லிகைப்பூ - கடலோர கவிதைகள்
    ராஜ ராஜ சோழன் - இரட்டை வால் குருவி
    என் இனிய பொன் நிலாவே - மூடு பனி
    அடி பெண்ணே - முள்ளும் மலரும்
     
    vidhyalakshmid and Thyagarajan like this.

Share This Page