1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Splendid. I used to wear only white shirt. But she presented for our first wedding anniversary a purple Printed slack shirt made from the best cotton procured from Gandhi market - Matunga in the vast glare of her in laws and sil. She rejoiced in adorning my right wrist with A gift - a Jawahar black dial HMT watch. All from her emoluments!
    Thanks and Regards.
    God Bless.

    Ps: only men prefer duets with visual while ladies always enjoy listening to lyrics. A debate ensued when spouse proclaimed this statement. From his WFH environment, my son in law darted out of his chamber to join the debate with ear to ear smile. Spouse camouflaged her shock by a spirited laughter!
     
    Last edited: Feb 10, 2023
    singapalsmile likes this.
  2. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Well said singalpalleee @singapalsmile
     
    singapalsmile and Thyagarajan like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

    கிப்ட்ஸ் பரிமாறிக்கொள்வது பழசாக இருந்தாலும் எங்களுக்கு இன்றும் பிடிக்கும்/பழக்கம் இன்றும் தொடர்கிறது. பொருட்களை பார்க்கும்போதெல்லாம் நினைவுகள் இனிக்கும். பத்து வருடத்திற்கு முன்பு கொடுத்த சாக்லேட் (பேப்பர்), பீச்சில் சேர்ந்து பறக்க விட்ட பட்டம், போன் வைத்துக்கொள்ள வாலட், ஆரம்ப காலத்தில் குடுத்த பிறந்த நாள் கிரீட்டிங் கார்ட்ஸ், கையால் வரைந்து கொடுத்த ஒரு படம், உடைகள், முதல் முறையாக வாங்கி கொடுத்த மல்லிகைப்பூ, பிரத்யேகமான ஒரு ஆங்கில புத்தகம், வாசனை திரவியங்கள், நகவெட்டி, கம்மல், அஞ்சு வருடத்திற்கு முன்பு கொடுத்த ஐபாட், backpack, வீட்டின் உள்ளே நடக்க வாங்கி கொடுத்த செருப்பு, போன வருடம் பூஜை போட்டு கடவுள் முன்னிலையில் கையில் அணிவித்த மோதிரம் வரை பத்திரப்படுத்திய பொருட்கள் நிறைய.

    எப்படி இப்படி எப்பவும் தத்ரூபமா எழுதறீங்க? அருமை. நான் முதலில் ரசிப்பது lyrics தான்.
     
    Last edited: Feb 14, 2023
    Thyagarajan likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Filter எதுவும் போடாமல் எண்ணத்தில் தோன்றுவதை எல்லாம் கிறுக்குகிறேன். அதற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்ததில் சந்தோசம். படிச்சுட்டு மட்டும் போகாமல் இங்கு வந்து போஸ்ட் போட்டதிற்கு மிக்க நன்றி. singalpalleee என்று குறிப்பிட்டது எனக்குள் புன்னகையை வரவழைத்தது. அதற்கும் நன்றி.
     
    Thyagarajan likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று V-day special!! இந்த போஸ்ட் Strictly for A1C!! :wink::wink:

    உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
    கண்டார் மகிழ்செய்தல் இன்று.


    மு.வரதராசன் விளக்கம்:
    கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

    சாலமன் பாப்பையா விளக்கம்:
    காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.

    Director GM's கைவண்ணத்தில் சூடான காட்சி அமைப்பில், Madan Karky's செம கிக் ஆன வரிகளில்..(எந்த வரிகள் போடுவது எந்த வரிகள் விடுவது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு வரிகளும் கிக் மேல கிக்.)

    ஹே புகைபூஞ்சுருளும் பொருளும்
    எரித்திட தேவை இல்லை
    ஒரு முத்தம் கொடு

    படிகத்து துகளோ பனியோ
    நுகர்ந்திட தேவை இல்லை
    உன் வாசம் கொடு

    உன் குழல் எழிலில்
    அக் குழல் மறக்க
    உன் காதல் போதும் பெண்ணே
    கிரு கிறுக்க ஹே பெண்ணே
    ஹே புகைபூஞ்சுருளும் பொருளும்
    எரித்திட தேவை இல்லை
    ஒரு முத்தம் கொடு

    என் போதை கோதை
    போதை கோதை நீயே
    திரவங்களும் பீற்று குழலும்
    குருதிக்கு தேவை இல்லை
    ஒரு புன்னகை கொடு

    தேவதை சாத்தான் ரகசியம்
    கேட்டிட தேவை இல்லை
    உன் சொற்கள் கொடு

    உன் மொழியினிலே சுகம் கிடைக்க
    உன் காதல் போதும் பெண்ணே
    என்னை ஈர்க்க ஹே பெண்ணே

    மூலிகை சாலக் காளான்
    எதுவுமே தேவை இல்லை
    உன் நெஞ்சை கொடு

    என் போதை கோதை
    போதை கோதை நீயே
    திமிரழகி
    என் நெஞ்சின் ஆடை கலைந்தாய்
    திமிரழகி
    நிர்வாணமான என் காதல்
    நீள் மயக்கம் நீ
    நீள் உறக்கம் நீ
    நீள் இரவும் நீ
    நீள் கனவும் நீ

    என் போதை கோதை
    போதை கோதை நீயே...


    பொருத்தமான ரொமான்டிக் சீன் மற்றும் கலாய் அடுத்த பதிவில்..
     
    Thyagarajan likes this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Mere reading put me with similar if not identical musings on cloud Nine. That too a minute after you texted in the preceding reply boxes. Sometime when gripped with ennui, chewing the cud helps. For example when spouse was in the family way. A time when I had to protect her from solar radiation - the day total solar eclipse....which I made an amateurish attempt to describe in
    The link
    Carry On But Never Hurry Or Worry
    Please read only at your leisure - not leaving aside the work that is dear to & being executed by you.
    God Bless
     
    singapalsmile likes this.
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Deleted being duplicate.
     
    Last edited: Feb 14, 2023
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த ஹீரோ இன்னும் ஒரு பத்து படி மேல போய் உளறாரு --> Full அடிச்சும் போதை இல்லை; பீர் அடிச்சும் கிக் இல்லை; கள் குடிச்சும் தூக்கமில்லை கண்ண மூடினா கனவுல நீ தானே --> 2:10 to 2:30

    ----------------------------------------------------------------
    இது என்னுடைய கற்பனை. :grinning::grinning:

    திருமணம் முடிந்து பத்து வருடங்கள் கடந்த பிறகு அதிக போதை தருவது காதலா? மதுபானமா? என்ற தலைப்பில் கணவர்களை மட்டும் வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்தினால் எப்படி இருக்கும்? பார்வையாளர்களும் ஆண்கள் மட்டுமே.

    பட்டிமன்றத்தில் பேசும் நபர்கள் அத்தனை பேரிடமும் ஒரு Lie detector கொடுத்து விடணும். மதுபானம் என்று பேசும்போது கைத்தட்டலில் அரங்கம் அதிரும். Lie detector க்கு வேலை சுத்தமா இருக்காது. காதல் என்று பேசும்போதும் அரங்கமே அதிராதா? பார்வையாளர்கள் அமைதியாக இருப்பினும் Lie detector முழுவீச்சில் அத்தனை சத்தம் எழுப்பும்போது ? :wink::wink:
     
  9. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    V a-day க்கு மிகப்பொருத்தமான வரிகள் தான்.
    3 முறையாவது வாசித்ததில் 90% புரிந்தது. வாழ்க தங்கள் வரி ஆர்வம் .
    Home - V-Day
     
    singapalsmile likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    குறள் இங்கே குறிப்பிட முடியாது. (முடிந்தால் குறள் கண்டிபிடிங்கள்!! கண்டுபிடித்து உங்களுக்குள் வைத்து கொள்ளுங்கள். :wink::wink:) ஒரு பொருத்தமான பாடல் மட்டும் போடுகிறேன். இந்த ரொமான்டிக் பாடல் இதுவரை இங்கு யாருமே போஸ்ட் பண்ணதில்லை என்று நினைக்கிறேன். சமீபத்தில் தான் முதல் முறையாக கேட்டேன். கேட்ட நாளில் கிடைத்த அதே கிக் இன்று இந்த பாடல் திரும்ப கேட்கும்போது கிடைத்தது. நான் ரசித்த பாடல் உங்களுக்காக..

    எல்லோருக்கும் (APK+A1C) இனிய V தினம் அமைய வாழ்த்துகிறேன்!! :grinning::grinning:
     
    Thyagarajan likes this.

Share This Page