1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

World After 100 Years

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Jan 8, 2023.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நம்முடைய உலகம் நூறு ஆண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கும்? - சுஜாதா கட்டுரை

    இதை எக்ஸ்டராபொலேஷன் - எதிர்நீட்டல் - என்பர்.

    இதை கணிக்க சமூக அமைப்பில் ஆதார மாறுதல்களை ஏற்படுத்தும் அறிவியல் முன்னேற்ற

    வேகத்தை கவனிக்க வேண்டும். சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளில் அறிவியலில் ஏற்பட்ட

    முன்னேற்றத்தை விட கடந்த ஐம்பது ஆண்டுகளில் முன்னேற்றம் அதிகம். சென்ற ஐம்பது

    ஆண்டுகளை விட கடந்த பத்தாண்டுகளில் அதிகம். சென்ற பத்தாண்டுகளை

    விட கடந்த ஒரு ஆண்டில் அதிகம்.

    இவ்வாறு, அறிவியல் தீட்டப்பட்டு கூர்மையாகக் கவலை தரும் கதியில்

    முன்னேறிக்கொண்டிருக்கிறது இந்த நூற்றாண்டின் இறுதிக்குள். உலகத்தின்

    எந்த மூலையிலும், யாரும் எந்த தேசத்தின் எந்தத் தெருவிலிருக்கும்

    மற்றொருவரை ஃபோன் அவர் அழைத்துப் பேச முடியும்.

    வேண்டுமென்றால் குட்டியாக டெலிவிஷன் திரையில் மறுமுனையில்

    இருப்பவரின் முகத்தையும் பார்க்க முடியும். இது அடுத்த பத்து வருஷத்துக்குள்.

    இந்த ரேட்டில் போனால் அடுத்த நூறு வருஷத்தில் என்னவெல்லாம்

    ஆகப்போகிறது என்று நினைத்துப் பார்க்க சுவாரஸ்யமான பயமாக

    இருக்கிறது. முதன் முதலாக பெட்ரோல், டீசல் தீர்த்துவிடும்,

    கார், பஸ் எல்லாம் மின்சக்தி, சூரிய சக்தி, அல்லது ஏதாவது தண்ணீர்,

    ஐயான் (ion) சக்தி என்றுதான் ஓட முடியும் அல்லது பிரயாணத்திற்குத்

    தேவையே இல்லாமல் வீட்டை விட்டே விலகாமல் முழு வாழ்க்கையையும்

    செலவிடும் சாத்தியக் கூறும் இருக்கிறது

    வீட்டில் உள்ள கணிப் பொறி திரையிலேயே ஆபீஸ் வேலைகள்

    முடிக்க முடியும். மார்க்கெட் போக வேண்டாம். கணிப்பொறியிலேயே

    வாய் வார்த்தையாக ஆர்டர் செய்ய முடியும் பிள்ளைகள் பள்ளிக்குப்

    போக வேண்டாம் பள்ளிப் பாடங்கள் அனைத்தும், ஏன் உலகின்

    அத்தனை அறிவும் வீட்டுச் சில்லுகளில் அடங்கிவிடும்

    சுற்றுலா தேவையின்றி சுற்றுலாக் காட்சிகள் அனைத்தும்

    வீட்டுக்கே வந்து விடும் பரிமாணம், ஓசை சகிதமாக

    தமிழ்நாட்டில்தான தமிழ் பேச வேண்டும் என்றில்லை. டெக்ஸாஸில்

    இருப்பவர் திருநெல்வேலிக்கு வர முடியும் வீட்டை விட்டு ஒரு

    அடி விலகாமல்.

    அடுத்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மனிதன வீட்டை விட்டு

    விலகும் தேவைகள் மறைத்துவிடும் என்று கூறுகிறார்கள். காகிதம்

    இருக்காது காகிதத்துக்காகக் காடுகளை வெட்டி காலியாகியிருக்கும். ;

    இல்லை சட்டம் கொண்டுவந்து, மரத்தை வெட்டினால் மரணம் என்ற

    பயம் ஏற்பட்டிருக்கும்

    வீட்டுக்கு வெளியே புறப்படுமுன் முகமூடி அணியும் நிர்ப்பந்தமும் ஏற்படலாம்

    வீடு என்பது ஒரு. நாட்டின் அத்தனை பரிமாணங்களும் கொண்ட

    சொந்தக் கோட்டையாகி விடும்.

    கல்யாணம் இருக்குமா? சந்தேகம்தான் பெண்களிடம் பிள்ளைகள்

    பெற ஆண்கள் மனுப்போட வேண்டி வரும்.
    =======================
    = 1993-ம் ஆண்டில், குமுதம் இதழில் அறிவோம் சிந்திப்போம்

    என்ற தலைப்பில் சுஜாதா சில கட்டுரைகள் எழுதினார் அவற்றில் ஒன்றுதான் இது.=
    =======================
    1993-ம் ஆண்டே நம்முடைய எதிர்காலத்தை (கிட்டத்தட்ட) துல்லியமாக

    கணித்த சுஜாதாவின் சாதுர்யம் உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

    Jayasala 42
     
    joylokhi and Thyagarajan like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Am an avid follower of Sujatha’s writings and a writer who do not hesitate to call a spade a spade. Sujatha was a voracious reader. His core analysis always remain awesome indeed. He had done extensive research in various fields that includes even in the pastime “sudoku”. His quest for understanding nitty gritty of any situation used to be profound indeed.

    “The post” also reminds me of Non-Fiction “Future Shock” & “Third Wave” where author Alvin Toffler prophesied such miracles in future. I remember to have read these great works during years 1970-75.

    Thanks & regards.
     

Share This Page