1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Whether all mothers deserve rich tributes?

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Nov 28, 2015.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,357
    Likes Received:
    10,550
    Trophy Points:
    438
    Gender:
    Female


    வாசலிலேயே காத்திருந்தாள் என் சினேகிதி விஜயா. காரை விட்டு இறங்கியதுமே ஓடி வந்து கைகளைப் பற்றியவளின் உதடுகள் துடித்தன.




    இப்போ எப்படி இருக்கு அம்மாவுக்கு?



    பரவாயில்லை. ஆனால் கவலையாகவே இருக்கு!”



    உள்ளே நுழைந்து அவள் அம்மாவைப்பார்த்ததும் மனசு கனமானது. உடல் குறுகி, வலியின் வேதனையில் முனகல் தொடர என்னைப்பார்த்ததும் ஒரு கணம் யோசனை தெரிந்தது. உடனேயே ஞாபகம் வர மெலிசான குரலில் விசாரணை.



    எப்படி இருக்கிறாய்? ரொம்ப நாள் ஆச்சு பார்த்து!..”



    நான் நல்லா இருக்கேன். உங்க உடம்பு தேவலாமா?”



    நல்லாவே இல்லை. எங்கே, இவள் டாக்டரிடம் என்னை அழைத்துப்போவதே இல்லை..”



    குபுக்கென்று கண்ணீர் எட்டி பார்த்தது என் சினேகிதியின் விழிகளில். அதை முழுங்கிக்கொண்டு, [B]வெதுவெதுப்பான கஞ்சியைக் கொண்டு வந்து அம்மாவுக்கு [B]புகட்டினாள். வாயைத் துடைத்து விட்டு சாய்ந்தாற்போல உட்கார வைத்தாள். அவள் [B]மறுபடியும் சமையலறை சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் என்னிடம் [B]மகளைப்பற்றி சரசரவென்று மனதிலிருந்து குறைகள் வெளியே தெறித்து விழுந்தன. [B]விஜயா வந்து அமர்ந்து ஒரு கணம் கூட ஆகியிருக்காது, [B]உடற்கழிவுகள் அந்தப் [B]பாயிலேயே வெளியேற, [B]மறுபடியும் அம்மாவை துடைத்து விட்டு, [B]ஆசுவாசப்படுத்தி [B]சாய்ந்தாற்போல அமர வைத்து, [B]கழிவுகளை நீக்கி, [B]பாயையும் அந்த இடத்தையும் அலசி [B]விட்டு நிமிர்வதற்குள் விஜயாவுக்கு உடம்பு இற்றுப்போயிருப்பது தெரிந்தது.[/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B]
    [B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B]
    [B]சும்மாவா! [B]அவளுக்கும் [B]60 [/B][B][B]வயது முடிந்தது இரு மாதங்களுக்கு முன்பு! மகள்களுக்குத் [B]திருமணம் முடித்தாயிற்று. மகனும் கணவரும் வீட்டில் இருக்கும்போது அம்மாவைத் [B]தூக்க, [B]மெல்ல கழிவறைக்கு கொண்டு செல்ல உதவுகிறார்கள். [/B][/B][/B][/B][/B][/B][/B]
    [B][B][B][B][B][B][B][B]
    [/B][/B][/B][/B][/B][/B][/B][/B]
    [B][B][B][B][B][B][B][B][B]ஒரு தம்பியும் [B]இருக்கிறான் பக்கத்துத் தெருவிலேயே. அவனுடைய மனைவியும் வேலைக்குச் [B]செல்லுவதால் அம்மாவை தன் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியாது [B]என்பதை முன்னமேயே தெரிவித்து விட்டான். இதே மகன் தன் அம்மா உடம்பு நன்றாக [B]இருக்கும்போது தன் அம்மாவை தன் செளகரியங்களுக்காக வீட்டில் வைத்துக் [B]கொண்டவன் தான். இப்போது எந்தப்பயனும் இல்லாத அம்மாவை எதற்காக வீட்டில் [B]வைத்துக் கொள்ள வேண்டும்? [B]ஒரு வேலைக்காரி போல அந்த வீட்டில் வேலைகள் [B]செய்திருந்தாலும் அம்மா தன் வாயைத் திறந்து எந்த குறையும் மகனைப்பற்றிச் [B]சொன்னதில்லை. ஏனென்றால் அவன் மகன்! மகளைப்பற்றி மட்டும் மனதில் எத்தனை [B]குறைகள்!![/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B]
    [B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B]
    [B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B]
    [B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B] [/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B]

    [B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B] [B]அம்மா முனகலுடன் உறங்கியதும் விஜயா என்னருகில் வந்து அமர்ந்தாள்.[/B]
    [B] “ [B]அம்மா சென்ற மாதம் கட்டிலிலிருந்து விழுந்து விட்டதாய் [B]எழுதியிருந்தேனல்லவா, [B]அப்போது டாக்டரிடம் அழைத்துச் சென்ற போது, [B]அம்மாவின் [B]எலும்புகள் எல்லாம் கிட்டத்தட்ட நொறுங்கி விட்டதாக டாக்டர் சொன்னார். [B]வயசும் 80[B]க்கு மேல்! எந்த மருந்தும் வைத்து தேய்க்கக் கூடாது என்கிறார். [B]அம்மாவுக்கோ வலி தாளமுடியவில்லை. மருந்து தேய்க்க மாட்டாயா? [B]என்று கேட்டுக் [B]கொண்டே இருக்கிறார். அக்கம் பக்கத்திலிருந்து வருகிறவர்கள் போகிறவர்கள் [B]எல்லோரிடமும் நான் கவனிப்பதில்லை, [B]மருந்து தேய்த்து விடுவதில்லை என்று ஒரே [B]புலம்பல்! நீயே பார்த்தாயல்லவா, [B]நீ வந்து உட்கார்ந்த இந்த அரை மணி [B]நேரத்தில் என்னென்னவெல்லாம் நான் செய்கிறேன் என்று! எனக்கும் உடம்பு [B]வலிக்கிறது, [B]இற்றுப்போகிறது, [B]இருந்தாலும் இந்த நோயுடன் போராடும் ஒரு [B]அம்மாவிற்கு என்ன குறையை நான் வைத்தேன்? [B]நான் போதாதென்று என் கணவர், [B]மகன் [B]என்று அத்தனை பேரும் இவர்களைப் பார்த்துக்கொள்கிறோம். இது புரியவில்லையா [B]அம்மாவுக்கு?”[/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B]
    [B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B] [B]விஜயாவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய்ப் பொழிந்தது.[/B]
    [B] [B]அவள் கரங்களை ஆதூரத்துடன் தடவிக் கொடுத்தேன்.[/B]
    [B]
    [B][/B][/B]
    [B][B][B] [/B][/B][/B]

    [B][B][B] “ [B]தம்பி இங்கு வருவதேயில்லையா?”[/B]
    [B]
    [/B]

    [B] [B]கசப்பான புன்னகை அவள் முகத்தில் படர்ந்தது.[/B]
    [B]
    [B][/B][/B]

    [B][B] “ [B]வருகிறான் தினமும் இரண்டு வேளை! அவன் வந்து சாப்பாடு கொடுத்தால் இவர்கள் [B]கொஞ்சம் கூடுதலாகவே சாப்பிடுகிறார்கள். அதனால் கட்டாயம் வரவேண்டும் இரண்டு [B]வேளை என்று சொல்லியிருக்கிறேன். அவனும் எங்கே முழு பாரமும் தன் மேல் வந்து [B]விடுமோ என்ற பயத்தில் தினமும் வந்து போகிறான்.. “[/B][/B][/B][/B]
    [B][B][B][B]
    [/B][/B][/B][/B]

    [B][B][B][B] [B]என் [B]மனமும் ஆற்றாமையில் குமைந்தது. என்ன நியாயம் இது! இவள் சமைத்துத் [B]தந்தாலும் அக்கறையுடன் இந்த அளவு விழுந்து விழுந்து செய்தாலும் [B]கவனிப்பதில்லை என்று குறை! கவனிக்காமல் அலட்சியப்படுத்தி, [B]கடமைக்காக வந்து [B]எட்டிப்பார்த்து, [B]தன் கையால் இதே உணவை மகன் கொடுக்கும்போது கொஞ்சம் [B]அதிகமாகவே உள்ளே செல்கிறது! தாய்மையிலும் பாரபட்சம் இருக்கிறதா?[/B][/B][/B][/B][/B][/B][/B][/B]
    [B][B][B][B][B][B][B][B]
    [/B][/B][/B][/B][/B][/B][/B][/B]

    [B][B][B][B][B][B][B][B] “ [B]விடு விஜயா! வயது முதிரும்போது பெரியவர்கள் குழந்தையாக மாறி விடுகிறார்கள் [B]என்று தான் உனக்குத் தெரியுமே! மனம் முதிராத குழந்தையாக இவர்களை [B]நினைத்துக்கொள்”[/B][/B][/B]
    [B][B][B]
    [/B][/B][/B]

    [B][B][B] “ [B]குழந்தையென்றால் அடிக்க முடியும். திட்ட முடியும். இவர்களை என்ன செய்வது? [B]நம் குழந்தை அடுத்த வீட்டில் போய் நம்மைக் குறை சொல்லாதே! அக்கம் [B]பக்கத்தில் நான் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு தானிருக்கிறார்கள். [B]இருந்தாலும் ‘ [B]பெற்ற அம்மாவே மகளைப்பற்றி இப்படிச் சொன்னால், [B]ஒரு வேளை அது [B]உண்மையாகவே கூட இருக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றாதா? [B]காலத்துக்கும் [B]எனக்கு அது கெட்ட பெயர்தானே?”[/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B]
    [B][B][B][B][B][B][B][B][B]
    [/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B]

    [B][B][B][B][B][B][B][B][B] “ [B]அம்மா! பேசாமல் இருக்க மாட்டீர்களா?”[/B]
    [B]
    [/B]

    [B] [B]அதட்டியபடி உள்ளே நுழைந்தான் விஜயாவின் மகன் ப்ரகாஷ்.[/B]
    [B]
    [B][/B][/B]

    [B][B] “ [B]வாங்க பெரியம்மா! பாருங்கள், [B]அம்மா இப்படித்தான் எப்போதும் அழுது கொண்டே [B]இருக்கிறார்கள். அவர்களுக்கு புத்திமதி சொல்லுங்கள். கீதையில் [B]சொல்லியிருக்கிறதல்லவா, [B]கடமையைச் செய், [B]பலனை எதிர்பாராதே என்று. இதை [B]எனக்குச் சொல்லிக் கொடுத்ததே அம்மா தான். [B]எப்போதுமே [B]தானாக வந்து மடியில் விழும் எந்த விஷயத்திற்கும் மதிப்பில்லை. அம்மாவின் [B]அன்பும் அப்படித்தான். கிடைக்க முடியாத தூரத்தில் மாமாவின் அன்பு [B]இருப்பதால் அதற்காகத் தான் பாட்டி ஏங்கித் தவிக்கிறார்கள். அவ்வளவு தான். [B]எல்லோருக்குமே வயதானவர்கள் அருகேயிருந்து கவனிக்கும் கொடுப்பினை கிடைக்காது [B]பெரியம்மா. எங்களுக்கு அது கிடைத்திருக்கிறது.....”[/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B]
    [B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B]
    [/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B]

    [B][B][B][B][B][B][B][B][B][B][B][B][B] [B]தந்தைக்கே [B]உபதேசித்த மகனாய் எனக்கு அவன் தோன்றினான். [B]25 [/B][B][B]வயதில் முதிர்ச்சியடைந்த [B]மகன், [B]85 [/B][B][B]வயதில் மனம் இன்னும் முதிராத தாய் - இரண்டு பேருக்கும் நடுவே [B]கலங்கிய கண்களுடன் என் சினேகிதி! அவள் மனம் இந்த விளக்கத்தால் சமாதானமாகி [B]விடுமா என்ன?[/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B]
    [B][B][B][B][B][B][B][B][B]
    [/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B]

    [B][B][B][B][B][B][B][B][B] [B]வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு உண்மையிலேயே பதில் தெரிவதில்லை![/B]
    [B]
    [B][/B][/B]
    [B][B][B]( This is my personal experience also_One of my sisters ,deserted by her husband,had to necessarily stay with my parents and was looking after my mother suffering from paralytic stroke at our village home.She had to work from 5A. M. to 11 P. M. daily.Whenever any of the other daughters visited our parents for a day or two ,amma used to complain a lot about her.The visitors also gave generous advices to that sister .,which she had to take with a pinch of salt.)
    [/B][/B][/B]
    [B][B][B]
    [B][/B][/B][/B][/B]
    [B][B][B][B]Mothers can be like this too.

    That makes me think whether all mothers deserve rich tributes that are normally showered on them.

    Jayasala 42
    [/B][/B][/B][/B]

    [/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B]
     
    coolmum, iyerviji and vaidehi71 like this.
    Loading...

  2. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Mami,

    Naan indru thaan padithen..
    Nejamai azhugiren..

    I am now thinking abt my elder parents and without much help over there in Chennai. Though the context in which you have written is different, still thinking abt them.

    Yes, one should be blessed to be beside the elder parents and grandparents which I am not able to give for multiple reasons. As the young son told one should be happy for doing the service. Elderly whilst being sick have depression can't think logically like a normal person. So anything they say should not be taken at face value, having said that it would definitely be hurtful to the children. But if we understand the situation then it would be easy to understand them.

    Thanks.
     
  3. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Mami,

    I do hope you and your family are safe and sound. Long time since I have seen you active in the IL. I do know that the internet and electricity had been worst hit in Chennai due to floods. I hope that is the reason for you not being active here in IL.

    I do pray for everyone in Chennai.

    Regards,
    Vaidehi
     

Share This Page