1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Was Kaikeyi really cruel?

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Feb 27, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சாதாரணமாக கைகேயி இருதயமே இல்லாத கொடுமைக்காரியாகவே சித்தரிக்கப்
    படுகிறாள் .உண்மையில் கைகேயி கொடியவளா?
    கைகேயி ராமனிடத்தில் பரதனைப் போன்றே சம அன்பு செலுத்தியவள் .

    வால்மீகி ராமாயணம், அயோத்யா காண்டம் ,107 வது சர்கம்,
    ராமன் பரதனிடம் கூறுகிறான் "உடன் பிறந்தவனே,முற்காலத்தில் உனது தாயாரை
    நமது தகப்பனார் விவாஹம் செய்து கொள்ளும்போது,உனது பாட்டனார் கேகய
    மன்னனிடம் தனது ராஜ்ஜியத்தைக் கன்யா சுல்கமாகப் (ப்ரதிஞை செய்து
    கொடுத்தார்"( கன்யா சுல்கம் என்பது மணமகன் திருமணத்துக்கு முன் தன்
    வருங்கால மனைவிக்காகவும் அவளுக்குப் பிறக்கும் வாரிசுகளையும் மனதில்
    கொண்டு ,பெண்ணின் தகப்பனாரிடம் பிரதிஞை செய்து அளிக்கும் அன்பளிப்பு .வதூ
    தட்சிணை என்று கொள்ளலாம்.)

    கம்ப ராமாயணமும்
    " வானில் உந்தைசொன் மரபினால் உடைத்
    தரணி நின்னதென்று இயைந்த தன்மையால் ,
    உரனில் நீ பிறந்துரிமை யாதலால்
    அரசு நின்னதே ஆள்க என்றனன்
    இது ராமனும் பரதனும் வானகத்தில் சந்திக்கும் போது நடந்த சம்பாஷணை .
    தசரதன் குறை
    _______________

    1.கோசலை நாட்டைத் திருமணப் பரிசாகப் பெற்றவள் கைகேயி.அதை ஆள பரதனே
    உரியவன்.இதை நியாயமாக தசரதனே செயதிருக்கலாம் .
    2.வயதான காலத்தில் பிறந்த ராமன் தசரதரின் செல்லப் பிள்ளை.
    சுல்க சீதனச் சொத்தாகி கைகேயியின் பேரில் ஆளப் படுமேயன்றி
    தயரதனுக்கு அரசில் எவ்வித் உரிமையில்லை.எனவே கொடை உரிமையும்
    இல்லை.கைகேயிக்கு வாரிசு இல்லை எனில் ,சுல்க நிதி கைகேயியின் சஹோதரனைச்
    சேரும் என்பது சுல்க நியாயம்.
    3. இவை யாவும் அறிந்த தசரதன் ராமனின் மீது வைத்த அபரிமிதமான பாசத்தால்
    ராமனுக்கு மகுடம் சூட்ட விரும்பி ,நன்கு ஆலோசித்து பரதனை மாமன்
    வீட்டுக்கு அனுப்புகிறான்.
    4.அதே சமயம் தன ஆட்சியில் ராமனுக்கு சில பயிற்சிகளும் கொடுக்கிறான்.
    5.பட்டாபிஷேகத் தகவல் கேகய மன்னனுக்கும், ஜனகருக்கும் ,அன்பு ராணியான
    கைகேயிக்கும் அறிவிக்கப் படவில்லை. கைகேயி சுபச் செய்தியை சேடி மூலம்
    அறிகிறாள்.
    6.வால்மீகி ராமாயணம் ,அயோத்யா காண்டம், 4 வது சர்கம்,25 வது ஸ்லோகப் படி
    தசரதன் "பரதன் மாமன் வீட்டுக்கு போயிருக்கும் தருணம் தான்
    பட்டாபிஷேகத்துக்கு உகந்தது "என்றும்
    "நிறைய தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நண்பர்கள் உன்னை சூழ்ந்து
    பாதுகாக்கட்டும் "என்றும் ராமனிடம் கூறுகிறான்.
    இதிலிருந்து தசரதன் தான் செய்வது தவறு என்று உணர்ந்ததாகவே
    தெரிகிறது.பட்டாபிஷேகம் முடிந்துவிட்டால் பிறகு ratify செய்வது எளிது
    என்றும் எண்ணியிருக்கலாம்.
    கைகேயி முதலில் பட்டாபிஷேகச் செய்தியை மகிழ்ச்சியாகவே
    வரவேற்கிறாள்.மந்தரையைத் திட்டவும் செய்கிறாள்.
    மந்தரை கொஞ்சம் கொஞ்சமாகக் கைகேயியின் மனதை மாற்றுகிறாள்.
    கைகேயி தசர தனிடம் முன்பு தான் கேட்ட இரண்டு வரங்களை நினைவு படுத்தி,
    பரதனுக்குப் பட்டம் கட்டவும், ராமனை ஈரேழு ஆண்டுகள் வனத்துக்கு
    அனுப்பவும் வேண்டுகிறாள்.
    கைகேயி விரும்பியிருந்தால்
    'கன்யா சுல்கம்' என்ற காரணத்தைக் காட்டி சுலபமாக உரிமை
    கோரியிருக்கலாம்.ஆனால் அப்படிச் செய்தால் அனைவருக்கும் தசரதனின் பிழை
    தெரிந்து விடும்.தனக்கு உரிமை இல்லாத ஒன்றை ராமனுக்கு அளிக்க
    விரும்பினான் என்ற அவச் சொல் ஏற்படும்.கன்யா சுல்கம் என்ற உறுதியை
    தசரதன் மீறினான் என்ற பழி ஏற்படும்.அந்த பழிச் சொல்லிலிருந்து கணவனைக்
    காப்பாற்ற ,மரபையும் உறுதியையும் மீறாதவன் தன கணவன் என்று எல்லோரும்
    நினைக்கும் பொருட்டு கைகேயி தானே பெரும் பழியை ஏற்கத் துணிகிறாள்.
    பரதனுக்கு முடி சூட்ட வேண்டும் என்று மட்டும் கேட்டிருக்கலாம். ராகவனைக்
    காடேகச் சொன்னது ஏன் ?
    தசரதன் மேல் மாறாக் காதல் கொண்ட கைகேயி மன்னனை நன்கு அறிவாள் .தசரதன்
    ராமன் மேல் உள்ள எல்லை மீறிய பற்றினால் தான் தவறு இழைக்கிறான் என்றும்
    அறிவாள் . சில வருடங்கள் ராமனைப் பிரிந்து இருந்தால் தசரதனின் எல்லையற்ற
    அன்பு வசத்துக்கு வரும்.ராமனை வேறு நாட்டுக்கு அனுப்பினாலும் தசரதன
    மீண்டும் ராமனை அயோததிக்கு வரவழைத்துப் பழிக்கு ஆளாவான்.எனவே கானகம்
    அனுப்ப முடிவு செய்கிறாள்
    இந்த கன்யா சுல்க விவகாரமே ராமன் பரதனிடம் சொல்லும்போது தான் வெளி
    வருகிறது.ராமன் இதை முன்னமே அறிந்திருந்தால் பட்டாபிஷேகத்துக்கே
    சம்மதித்து இருக்க மாட்டான்.தசரதரோ, கோசலையோ சொல்ல
    வாய்ப்பில்லை.பட்டாபிஷேகம் நிறுத்தப் பட்டபிறகு ,சுமந்திரர் மூலமாக ராமன்
    அறிய வாய்ப்புண்டு.
    கைகேயியின் நல்ல மனதையும், உட்கருத்தையும் நன்கு புரிந்து கொண்டவன்
    ராமன் ஒருவனே என்பதை ராமனுடைய பல செயல் பாடுகள் காட்டுகின்றன.

    பரதனுக்கு அரசுரிமை கோருவதோ, ராமனைக் கானகம் அனுப்புவதோ கைகேயியின்
    நோக்கமல்ல.தன கணவனை பழியிலிருந்து காப்பாற்ற 'உலகிலேயே வஞ்சகம் சூழ்ந்த
    கொடுமைக்காரி கைகேயி'எனும் அவப் பெயரை வலிய ஏற்றவள் .
    இந்த சர்ச்சை இன்று நேற்று எழுந்ததல்ல.பல நூற்றாண்டுகளுக்கு முன்
    வடமொழியில் புலமை வாய்ந்த பாசு கவி எழுதிய 'ப்ரதிமா'நாடகத்தில்
    கைகேயியின் மாசற்ற தன்மை எடுத்து காட்டப் பட்டுள்ளது.
    கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் முன் எழுதப்பட்ட தமிழ் நூல்களிலும் இந்த
    விவாதங்கள் இடம் பெருகின்றன.

    Jayasala42
     
    1 person likes this.
    Loading...

  2. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    thanks for sharing the information
     

Share This Page