1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

The Secret Of His Worshipping Every Aged Muslim

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Nov 28, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    [​IMG]


    The secret of his worshipping every aged Musalmaan

    சித்த வைத்திய நிபுணர் டாக்டர் ராமசர்மா வீட்டுப் புதுமனைப் புகுவிழா கரூரில் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. அவரது தம்பி சுப்பிரமணியம் தன் மனைவி ஜானகி, மற்றும் 4 வயது ஆண் குழந்தையுடன் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார். விழாவில் ஹோமம் போன்ற சம்பிரதாயங்கள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன.

    குழந்தைகள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு குழந்தை கொல்லைப்புறத்தில், அடுப்பில் அணையாமல் அனலாகக் கிடந்த ஒரு கொள்ளிக் கட்டையை எடுத்து தன் இடது தொடையில் வைத்துக் கொள்ளும் என்று மற்ற குழந்தைகள் எதிர்பார்க்கவில்லை. குழந்தையின் தாங்கமுடியாத அலறல் சப்தம் கேட்டு பெரியவர்கள் கொல்லைப்புறத்திற்கு ஓடி வந்தார்கள்.

    கொள்ளிக் கட்டையை தொடையில் இருந்து எடுக்கத் தெரியாமல் குழந்தை அலறிக் கொண்டிருந்தது. குழந்தையின் நிலையைக் கண்டு அதன் தாய் ஜானகி அம்மாள் அழுது புரண்டார்கள். சித்த வைத்தியர் ராமசர்மாவும் இயன்றவரை முதலுதவி சிகிச்சை செய்தார். நாமக்கல் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள். இடது கால் தொடை முழுவதும் வெந்து பழுத்துவிட்டது.

    அன்றிரவு குழந்தை ரண வேதனையில் தூங்கவில்லை. பெற்றோரும் உறவினரும் மன வேதனையில் தூங்கவில்லை. காலையில் தீப்புண் மிகவும் மோசமாயிற்று. பிரபல ஆயுர்வேத மருத்துவர் வரவழைக்கப் பட்டார். புண்ணைப் பார்த்து விட்டு முகம் சுளித்தவர், "கால் அழுக ஆரம்பித்து விட்டது. காலை எடுப்பதை தவிர வேறு வழியில்லை" என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். அதுவரை விளக்கெண்ணெய் தடவிக் கொண்டிருங்கள் என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

    குழந்தையின் பெற்றோர் ஒரு முடிவுக்கு வந்தார்கள். கோழிக் கோட்டிலிருந்து கரூருக்கு புறப்பட்ட சகுனம் சரியில்லை. உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு கோழிக்கோட்டுக்கே போய்விடுவது தான் சரி என்று, ஒரு பெரிய தலைவாழை இலையில் குழந்தையைச் சுற்றித் தூக்கிக் கொண்டு அன்றைய தினமே ரயில் ஏறி வட்டார்கள்.

    குழந்தையைப் பார்க்கும் பயணிகள் எல்லாம் மிகவும் பரிதாபப் பட்டார்கள். 'எப்படி நடந்தது' என்று கேட்பவர்களுக்குச், சொல்லி மாளவில்லை. எங்களுக்கு எதிர் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு முஸ்லிம் பெரியவரும் கேட்டார். நடந்ததைக் கூறி, இதற்கு வைத்தியமே கிடையாது என்று வைத்தியர்கள் கை விட்டு விட்டார்கள். இனிமேல் என்ன செய்ய முடியும் என குழந்தையின் தந்தை சுப்பிரமணியம் மிகவும் வேதனையுடன் கூறினார். "அதெல்லாம் ஒன்றுமில்லை. என் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என ஜானகி அம்மாள் கூறியது அந்த முஸ்லிம் பெரியாருக்கு பிடித்திருக்க வேண்டும். "நான் ஒரு வைத்தியம் சொல்கிறேன் கேட்பீர்களா ?" என்று அந்தப் பெரியவர் கேட்டார்.

    சுப்பிரமணியம் அதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. ஜானகி அம்மாள் ஆர்வத்துடன் கேட்டார். "மெல்லிய பருத்தித் துணியை கறந்த ஆட்டுப் பாலில் நனைத்து புண்ணின் மேல் போட வேண்டும். இவ்வாறு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால் புண் ஆறி விடும். கவலைப்பட வேண்டாம்" என்று கூறிய அந்தப் பெரியவர், சற்று நேரத்தில் வந்து விட்ட, அடுத்த நிறுத்தத்தில் இறங்கிப் போய்விட்டார்.

    அவர் மீதும் அவர் வைத்தியத்தின் மீதும் நம்பிக்கை இல்லாததால் அவர் பெயர், ஊர் போன்றவற்றை சுப்பிரமணியம் கேட்டுக் கொள்ள வில்லை. ஆனால் ஜானகி அம்மாளுக்கு நம்பிக்கை இருந்தது. வீட்டிற்கு வந்ததும், தெரிந்தவர் வீட்டிலிருந்து, பால் கறக்கும் ஒரு வெள்ளை ஆட்டைப் பிடித்து வந்து வாசலில் கட்ட ஏற்பாடு செய்து விட்டார். அந்த முஸ்லிம் பெரியவர் சொன்னது போலவே அரைமணி நேரத்திற்கு ஒரு முறை சுடச்சுட பால் கறந்து மெல்லிய துணியில் நனைத்து புண் மீது விரித்துப் போட்டார்கள். இப்படி 6 மணி நேரம் நடந்தது. ஆச்சரியம்.. புண்ணில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு புண் ஓரளவு ஆற ஆரம்பிப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப் பட்டார்கள். அப்போதுதான் சுப்பிரமணியத்திற்கும் நம்பிக்கை வந்தது. முழு ஈடுபாட்டோடு அந்த வைத்தியத்தைத் தொடர்ந்தார்.

    மூன்று நாட்களில் புண் உளர்ந்து விட்டது. குழந்தையின் கால் தப்பித்தது. "ஆஹா எவ்வளவு அருமையான வைத்தியம் ! பெரிய மருத்துவர்களால் கைவிடப்பட்ட இந்தக் குழந்தையைக் காப்பாற்றிய அந்த முஸ்லிம் பெரியவர் யார் ? எதுவும் சொல்லாமலே போய்விட்டாரே !" இது இன்னும் அந்தக் குடும்பத்திற்கு புதிராகவே இருக்கிறது.

    அந்தக் குழந்தை ஓரளவு வளர்ந்த பிறகு, தாய் ஜானகி அம்மாள் கூறினார், "குழந்தே உன்னைக் காப்பாற்றிய அந்த முஸ்லிம் மகான் யாரென்று தெரியவில்லை. எனவே இனிமேல் நீ எந்த ஒரு முஸ்லிம் பெரியவரைப் பார்த்தாலும் அவரே உன்னைக் காப்பாற்றியவர் எனக் கருதி, கையெடுத்துக் கும்பிடு" எனக் கேட்டுக் கொண்டார். அறுபது வயதைக் கடந்த அந்த ஆண் குழந்தை இப்போதும் எந்த முஸ்லிம் பெரியவரைப் பார்த்தாலும் எழுந்து பணிவாகக் கையெடுத்துக் கும்பிட்டு மரியாதை செலுத்தி வருகிறது. அந்த ஆண் குழந்தை தான் இப்போது இந்த நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் 'திருப்பூர் கிருஷ்ணனா'கிய நான்.

    Jayasala 42
     
    Loading...

  2. Ragavisang

    Ragavisang Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    438
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Getting Goosebumps...Thanks for sharing.
     

Share This Page