Speed/velocity Of Sudarshan Wheel

Discussion in 'Religious places & Spiritual people' started by Thyagarajan, Jun 8, 2023.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    12,749
    Likes Received:
    13,484
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Speed/velocity of
    Sudarshan
    Wheel

    சுதர்சன சக்கரத்தின் சுழலும் வேகம் எவ்வளவு தெரியுமா?
    இணையத்தில் deiveegaa என்ற முகநூல் பகதி தளத்தில் இந்த பதிவினை படித்தேன்.

    இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை.
    இதை படித்த போது 'அட' என என்னை ஆச்சரியப்படுத்தியதால் உங்களுக்கு பகிர்கிறேன்.

    பெருமாளின் கையில் உள்ள சுதர்சன சக்கரத்தின் சுழலும் வேகம் எவ்வளவு?
    இப்படி ஒரு கேள்வியை நான் உங்களை கேட்டால் என்னை எப்படி பார்ப்பீர்கள்?
    உங்களுக்கு இது கொஞ்சம் நகைப்புக்குரிய விஷயம் என்று கூட தோனலாம்..
    ஆனால் இதில் விஷயம் இருக்கிறது..

    பக்தியில் சிறந்த பெரியவர்களிடம் இந்த கேள்வியை கேட்டால் கூட கொஞ்சம் யோசனை செய்வார்கள்.
    ஆனால் இந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?.

    சரி,பெருமாளின் கையில் உள்ள சுதர்சன சக்கரத்தின் சுழலும் வேகம் எவ்வளவு?என்ற கேள்விக்கான அறிவியல் பூர்வமான பதிலை தெரிந்து கொள்வோமா!

    திருமால் கையில் வைத்திருக்கும் சுதர்சன சக்கரத்தின் சுழல் வேகம் 30கிமீ/வினாடி என்று துல்லியமாக கூற முடியும்.
    எப்படி?
    திருமால் கையில் வைத்திருக்கும் சுதர்சன சக்கரம், சிவபெருமான் அளித்தது என்பது நீங்கள் அனைவரும் அறிந்த ஒரு பக்தி செய்தி.
    திழருவீழிமிழலை,திருமாற்பேறும் ஆகிய இந்த இரண்டு ஊர்களும் இந்த வரலாற்றை நினைவு கூறும் அற்புதத் தலங்கள்
    சிவபரம்பொருளை ஆயிரம் மலர்கொண்டு அர்ச்சித்த, நாராயண மூர்த்தி, ஒருநாள் மலரொன்று குறையவே ,தன் கண்ணொன்றை எடுத்து இறைவன் திருவடியில் சமர்பிக்க, மகிழ்ந்த இறைவன் தான் கையில் வைத்திருந்த ,
    சக்கரப்படை என்ற சுதர்ன சக்கரத்தை நாராயணனுக்கு வழங்கினான் என்பது வரலாறு.
    திருமாலுக்கு சிவபரம்பொருள் வழங்கிய சக்கரம் சிவனிடம் எப்படி வந்தது? என்று ஆராயப் போனால் அதற்கு நாம் சலந்தராசுர வதம் என்ற, ஒரு வீரச்செய்தியை நினைவு கூறவேண்டும்

    இறைவனின் கோபத்தில் இருந்து தோன்றிய அசுரன் சலந்தரன்.
    இறைவனை தவிர யாராலும் அவனை அழிக்க முடியாத வல்லமை பெற்ற அவன், சகல உலகங்களையும் வெற்றி கொண்டு திருக்கயிலாயம் நோக்கி வந்து, இறைவனுடன் போரிட வந்தான்
    இறைவன் ஓர் முதியவர் வடிவில் ஆங்கோர் இடத்தில் அமர்ந்து, யாரப்பா நீ? என்றார்
    நான் சலந்தரன்! கயிலாயத்தை வெல்ல வந்தேன் என்றான் அவன்.
    கயிலாயத்தை வெல்ல உனக்கு வலிமை போதாது!
    கிழவரே! என்னை பற்றி உமக்கு தெரியாது!
    சரி தெரிந்து கொள்கிறேன்!
    உன் வலிமையை சோதித்து பார்ப்போம்!!
    நான் தரையில் ஒரு சக்கரம் வரைவேன்
    அதனை நீ பெயர்த்து தலைக்கு மேல் தூக்கினால் வலிமையானவன் என்று ஒப்புகொள்கிறேன் என்ற சிவ பெருமான் தன் கால் விரலால் தரையில் ஒரு சக்கரம் வரைந்தார்.

    கேவலம் மண்ணை பெயர்த்து தலையில் வைப்பது ஒரு சாதனையா? என்ற சலந்தரன் குனிந்து சக்கர வடிவத்தை நகத்தால் கீறி அடியில் விரல்களை நுழைத்து அந்த சக்கரத்தை தூக்க முயற்சித்தான்.
    சக்கரம் தரையில் இருந்து விடுபட்ட உடனேயே அதி வேகமாக சுழல துவங்கியது!
    அதெப்படி சக்கரம் எப்படி உடனே சுழல துவங்கியது? என்கிற ஒரு கேள்வி உங்களுக்குள் வரலாம்!
    சக்கரம் எப்படி உடனே சுழல துவங்கியது? என்று அறிய ஆவலென்றால் உங்களுக்குள் தூங்கும் இயற்பியல் விஞ்ஞானியை தட்டி எழுப்புங்கள்.

    இயக்கத்தில் உள்ள பொருளில் இருந்து பிரியும் எந்த ஒரு பொருளும் மூலப் பொருளின் இயக்கத்திலேயே இயங்கும் என்பது இயற்பியல் விதி
    அதாவது நாம் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கினால் சிறிது தூரம் ஓடுகிறோமே!!
    ஏன்?? என்றால் நாமும் அது வரை பேருந்தின் வேகத்துடன் இணைந்து பயணித்திருக்கிறோம் என்பதுதான் பொருள்
    அது போல பூமியின் ஒரு பகுதியாக அதுவரை இருந்த சிவனால் வரையப்பட்ட மண்சக்கரம் சலந்தரனால் புவியில் இருந்து விடுபட்ட உடன் புவியின் வேகத்தில் சுழல துவங்கி விட்டது.

    புவியானது விநாடிக்கு முப்பது கிமீ வேகத்தில் சுற்றுகிறது அதாவது 30Km/Second on upper surface
    புவியின் வேகத்திலேயே புவியில் இருந்து பிரிந்த அந்த சக்கரமும் சுழலும் என்பது நவீன அறிவியலாலும் மறுக்க இயலா உண்மை!

    சுழலும் அந்த சக்கரத்தை முக்கி முனகி இரு கைகளால் ஏந்தி தலைக்கு மேல் தூக்கிய சலந்தரன் அதனை தாங்க வலிமையின்றி நழுவ விட அது அவனை இருகூறாக பிளந்து கொண்டு உருள அதனை இறைவன் தன் திருக்கரத்தில் தாங்கி கொண்டான்!
    இந்த சக்கரமே சிவபெருமான்
    மூலம் பெருமாளிடம் வந்தது.
    இந்த சக்கரமே திருமால் வேண்டி
    விரும்பியது,
    இறைவன் திருமாலுக்கு சக்கரத்தை
    தாங்கி வீசியெறிய வலிமையும்
    கொடுத்து சக்கரத்தையும் கொடுத்து
    "சக்கரதான மூர்த்தியாக நின்றான்
    சுதர்சன சக்கரம் குறித்து இன்னும் அறிந்துகொள்வோமா!
    சுதர்சன சக்கரத்தின் மகிமை
    சக்கரத்தாழ்வாரை வணங்குவோம்!
    கிருஷ்ணரின் கையில் உள்ளது சுதர்சன சக்கரம் என்பது நமக்கெல்லம் தெரியும்.
    சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம்.
    'சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்று பொருள்.
    சுதர்சன சக்கரம்
    மற்ற ஆயுதங்களைப் போல்
    இல்லை.
    எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது.
    அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது.
    சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும்
    மகாவிஷ்ணுவோ,இதை தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
    யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.
    எதிரிகளை, அசுரக்கூட்டத்தை அழித்த பின்னர், சுதர்சனச் சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்துவிடுகிறது.
    அதாவது, சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகு ஏவிய பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவரின் திருக்கரங்களுக்கே வந்துவிடுகிறது.
    எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம்.
    மேலும் மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது, மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்துகொள்வதும் தெரியாது.
    எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும்.
    ஒருவேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரம் மிக்கவனாக இருந்தால், சுதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால்...
    அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்! இதை ‘ரன்ஸகதி’ என்பர்.
    இன்னொரு விஷயம்... சுதர்சனச் சக்கரம் சுழலும் தருணத்தில், சப்தங்கள் எழுப்புவதில்லை.
    சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் எத்தகையது தெரியுமா?
    சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது.
    அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது.
    சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார்.
    மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது.
    நம் எதிர்ப்புகளையும்
    எதிரிகளையும் அழித்து
    நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார்
    என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
    ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில், சக்கரத்தாழ்வாருக்கு துளசி சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் இன்னல்கள் யாவும் பறந்தோடும்.
    இல்லத்தில் நிம்மதியும் ஆனந்தமும் குடிகொள்ளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!
    ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் :
    ஓம் நமோ சுதர்சன சக்ராய
    ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய
    த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய
    மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா
    மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இந்த மந்திரத்தை முதன் முதலில் சூரிய கிரகணத்தன்றோ அல்லது சந்திர கிரகணத்தன்றோ விளக்கேற்றிவைத்து 1008 முறை ஜபித்தால் சித்தியாகும்.
    அதன் பிறகு தேவையானபோது 3 தடவை ஜபித்தால் எத்தகைய ஆபத்தில் இருந்தும் தப்பிக்கலாம்.
    அதோடு எந்த வித தீய சக்தியும் நெருங்க விடாமல் இது கவசம் போல் காக்கும்.
     
    Loading...

Share This Page