1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

sila kurumbu Pechchukkal

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 23, 2015.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வாலியின் மேலான பேச்சு
    ----------------------------------------------



    கவிஞர் வாலியும் கண்ணதாசனும் ஒரு பட்டி மன்றத்துக்குச் சென்றனர்.பட்டி மன்றம் ' கற்பில் சிறந்தது கண்ணகியா?மாதவியா? என்ற நடந்தது.கண்ணதாசன் வாலியிடம்," நீ சொல்,யார் மேல்?கண்ணகியா, மாதவியா?" என்றார்.உடனே வாலி' அண்ணே,இரண்டு பேருமே female

    தான் என்றாராம்.


    பீர்பாலின் குறும்புத்தனம்
    -------------------------------------------


    பீர்பாலு க்குப் புகையிலை போடும் பழக்கம் உண்டு.அக்பருக்கோ புகையிலை என்றால் அறவே பிடிக்காது.ஒரு நாள் இருவரும் ஒரு புகையிலைத் தோட்டம் வழியாக நடந்து சென்றார்கள்.அந்த சமயம் தோட்டத்தில் நுழைந்த கழுதை ஒன்று புகையிலை நெடி பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றது.உடனே அக்பர்,'பார்த்தாயா பீர்பால்,புகையிலை யைக் கழுதை கூட விரும்பவில்லை' என்றார்.

    அக்பர் தனது புகையிலை போடும் பழக்கத்தைத் தான் கிண்டல் செய்கிறார் என்று உணர்ந்தார் பீர்பால். உடனே ஒரு வினாடி கூட தாமதிக்காமல் : ஆம், மன்னா, கழுதைகள் தான் புகையிலையை எப்போதும் விரும்பாது"என்று யதார்த்தமாகப் பேச, அசந்து போனார் அக்பர்.


    அறிஞர் ஆல்ஸ்டன்
    -----------------------------------

    அறிஞர் ஆல்ஸ்டன் மிக மிகக் குள்ளமானவர்.வழக்கறிஞர் ஒருவர் அவரைக் கிண்டலடிக்கும் வகையில் 'உங்களை என் கோட் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் 'என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்தார்.


    உடனே ஆல்ஸ்டன் ,'அப்படியும் செய்யலாம். ஆனால் உங்கள் தலையை விட கோட் பாக்கெட்டில் அதிக மூளை இருக்கும் 'என்று சொல்லவும், வழக்கறிஞர் முகத்தில்
    ஈயாடவில்லை.
    Jayasala 42
     
    3 people like this.
    Loading...

Share This Page