1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Shri Rudram

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Feb 25, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சிவ ராத்திரி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ருத்ரமும் அபிஷேகமும்தான்.



    யஜுர் வேதத்தின் தலை சிறந்த பகுதிதான் ஸ்ரீ ருத்ரம் .தைத்ரீய சம்ஹிதையில் நாலாவது காண்டத்தின் நடு நாயகமாக விளங்குவது.

    யஜுர் வேத சாகைகள் 101லும் , மற்ற வேத சாகைகளிலும் படிக்கப் படுவதால் இது' சத ருத்ரீயம்' எனப்படுகிறது.

    ஸ்ரீ ருத்ர ஜபத்தினால் கை கூடாத நன்மையே இல்லை என்று சொல்கிறார்கள்.

    ஸ்ரீ ருத்ர சாராம்சம்
    ----------------------------------


    முதல் அனுவாகம்:-ஈஸ்வரனுடைய கட்டளையை மீறி நடந்து கொண்டவர்களிடம் கோபம் கொண்ட அவர் மன்னித்துப் பிரசன்னம் ஆகவேண்டும் என்ற பிரார்த்தனை


    2 முதல் 9 அனுவாகங்கள் :-பகவானுடைய சர்வே ச்வரத்வம்,சர்வ சரீரதவம் ,சர்வ அந்தர்யாமித்வம் முதலி யவற்றைக் குறிக்கும் நாமங்களால் நமஸ்காரம்.


    10 வது அனுவாகம் :ஈஸ்வரனிடம் நமது இஷ்டங்களை நிறைவேற்ற வேண்டுதல்


    11வது அனுவாகம்:- ருத்ர கணங்களுக்கு நமஸ்காரம்

    2வது முதல் 9வது வரை உள்ள விஷயங்கள் நம்மை ஆட்கொள்ளுபவை .

    " உலகில் காண்பதெல்லாம் அவர் வடிவே ஆகும்.திருடர்களின் உடல்களிலும் கூட அவர் நிறைந்துள்ளார்,

    உட்கார்ந்து இருப்பவர்களாகவும்,படுத்துக் கொண்டு இருப்பவர்களாகவும்,தூங்குகிறவர்களாகவும் , விழித்துக் கொண்டு இருப்பவர்களாகவும்,சபையில் உள்ளவர், சபையில் வீற்றிருப்பவர் தச்சர்கள், குயவர்கள்,வேடர்கள், செம்படவர்கள் எல்லாமாக அவரே இருக்கிறார..அவரைப் பொருத்தவரை எதுவுமே அற்பம் அல்ல.தும்பைப் பூவும், ஊமத்தம் பூவும் கூட சிவ ஆராதனைக்கு உதவும்.

    உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களும், பிராணிகளும், பறவைகளும், புழு பூச்சிகளும்,எல்லா செயல்களும் -திருட்டு முதல் ஆசிரியப் பனி வரை, வீரன் முதல் கோழை வரை,,சப்த மாதர்கள், சப்த கணங்கள் ,பஞ்ச பூதங்கள்,கடல், நதி ஓடை, மேகம், சவாலை, நவக்ரஹங்கள் என்று எல்லாம் ருத்ர மயமான பெரிய பட்டியலை ஸ்ரீ ருத்ரம் வழங்குகிறது. அதில் பிரபஞ்சம் முழுதுமே அடங்கியுள்ளது.


    இதைதான் தாயுமானவர் நாலே வரிகளில் கூறியுள்ளார்.

    " எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர்

    எவர் பகைவர் யாதும் உனையன்றி உண்டோ ?

    இக பரம் இரண்டினிலும் உயிருக்குயிராகி

    எங்கும் நிறைகின்ற பொருளே .


    பாராயணம்
    ---------------------


    ஸ்ரீ ருத்ரத்தை அடுத்து வருவது சமக பிரச்னம்

    ஸ்ரீ ருத்ர பாராயணம் 5 வகைப் படும்.

    1. சாதாரண ரூபம்:

    ருத்ரத்தையும் அதைத் தொடர்ந்து சமகத்தையும் பாராயணம் செய்வது.


    2.ருத்ர ஏகாதசினி :

    ருத்ரத்தின் 11 அனுவாகம் , சமக்கத்தின் 1வது அனுவாகம்

    ருத்ரத்தின் 11 அனுவாகம்,சமக்கத்தின் 2வது அனுவாகம். இது மாதிரி 11 முறை செய்தால் அது ருத்ர ஏகாதசினி .


    3.11 ருத்ர ஏகாதசினி கொண்டது ஒரு ஒரு லகு ருத்ரம்.


    4.11 லகு ருத்ரம் கொண்டது ஒரு மகா ருத்ரம்.


    5, 11 மகா ருத்ரம் கொண்டது ஒரு அதி ருத்ரம்.( 11x 11x 11x 11) முறை

    நாம் நிறைய தடவை இந்த வார்த்தைகளைக் கேட்டிருப்போம். ஆனால் விவரம் தெரிந்திருக்காது.


    ஸ்ரீ ருத்ரத்துக்கு நிறைய விளக்க உரைகளும் , உப கதைகளும் உண்டு.

    ஒரு சமயம் பாசுபத அச்த்ரத்தை அர்ஜுனனுக்குக் கற்பிக்கும் பொருட்டு ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுன னைக் கைலாசம் அழைத்துச் சென்றார்.பரம சிவன்," ஒரு திவ்ய சிரசில் அந்த அஸ்தரம் இருக்கிறது. எடுத்து வாருங்கள் " என்றார்.

    சென்று பார்த்தபோது பல சர்ப்பங்களின் வாய்களிலிருந்து வரும் கொடிய விஷ ஜ்வாலையுடன் மிக பயங்கரமாக அந்த அஸ்திரம் தோற்றமளித்தது. ஸ்ரீ கிருஷ்ணர் ருத்ரம் ஜபித்தவுடன் அந்த அஸ்தரம் மிக சாந்தமாக கிருஷ்ணனை நெருங்கியதாம்.

    இது மாதிரி பல வரலாறுகள்.

    அடேயப்பா ஸ்ரீ ருத்ரத்தின் மகிமை அளப்பறியாதது

    Jayasala42
     
    1 person likes this.
    Loading...

Share This Page