1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Religion and Spiritualism-Bhagavad Gita in Tamil- 7. ஞானவிஞ்ஞான யோகம்

Discussion in 'Posts in Regional Languages' started by PushpavalliSrinivasan, Nov 3, 2011.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female

    தாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ தவாத்மைவ மே மதம்!


    ஆஸ்டித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் திம்!! 18

    இவர்கள் எல்லாரும் சிறந்தவரே. ஆனால் ஞானியானவன் என்னுடைய ஸ்வரூபமே என்பது எனது கருத்து. நிச்சயமாக யோகத்தில் நிலைத்த அவன் அதற்குமேல் உயர்ந்ததில்லாத கதியாகிய என்னையே அடைகிறான்.

    மேலே கூறிய நான்கு பக்தர்களில் ஞானியானவன் சதா காலமும் பகவத் சிந்தனையிலேயே ஒன்றி இருப்பதால் அவனையே சிறந்தவனாகத் தான் கருதுவதாகக் கூறுகிறார். எவர்களுடைய மனமும், புத்தியும் முழுமையாக பகவானிடமே ஒன்றியிருக்கிறதோ, மேலும் அவரைத்தவிர அடையக்கூடிய மேலான பொருள் எதுவும் இல்லை என்று உணர்ந்து அவரிடமே உறுதியுடன் நிலைத்திருப்பதால் அப்படிப்பட்டவரைத் தன்னுடைய ஸ்வரூபமாகவே கருதுவதாகக் கூறுகிறார்.

    ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே!

    வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:!! 19

    பல பிறவிகள் எடுத்த பின்பே வாசுதேவனே எல்லாம் என்று ஒரு தத்துவ ஞானி அவனையே புகலாக அடைகிறான். அத்தகைய மஹாத்மா காண்பதற்கு அரிதானவர்.

    ஆயிரக்கணக்கான மனிதர்களில் யாரோ ஒருவர்தான் பல பிறவிகளுக்குப் பின்பு பரமாத்மாவைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற்று அவரைவிட அடையத்தக்க மேலான பொருள் வேறொன்றுமில்லை என்று உணர்ந்து அவருடனே ஒன்றி மீண்டும் பிறப்பதில்லை. அத்தகைய மஹாத்மாவைக் காண்பது மிகவும் அரியதாகும் என்று கூறுகிறார்.


    காமஸ் தைஸ்தைர் ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தேஅந்ய தேவதா:!

    தம் தம் நியமமாஸ்தாய உரக்ருத்யா நியதா: ஸ்வயா!! 20

    அந்தந்த போகப்பொருட்களில் ஆசைவைத்து மதிகெட்டவர்கள் அந்தந்த நியமத்தைக் கைக்கொண்டு தம்முடைய ஸ்வபாவத்தால் ஆசைப்பட்டதை அடையவேண்டி வேறு தேவதைகளை வழிபடுகிறார்கள்.

    போகப் பொருட்களின் மீது ஆசை வைப்பவர்கள் அவற்றைப் பெறுவதன் பொருட்டு அவர் ஆசைப்படும் பொருளைக் கொடுக்கும் தேவதையை வழிபடுகிறார்கள். இவர்கள் மற்ற தேவதைகள் பகவானிடமிருந்து வேறுபட்டவர்கள்என்று மதிமயக்கத்தினால் அவ்வாறு செய்கிறார்கள்.


    யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஸ்ரத்தயார்சிது மிச்சதி!

    தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்ய_கம்!! 21

    எவனெவன் எந்தெந்த தேவதையை சிரத்தையுடன் பூஜிக்க விரும்புகிறானோ, அவனவனுக்கு சிரத்தையை அந்த தேவதையிடமே அசையாததாகச் செய்கிறேன்.

    எந்த பக்தன் எந்த தேவதையை சிரத்தையுடன் பூஜிக்க விரும்புகிறானோ, அவனுடைய சிரத்தையை, அந்த இஷ்டதேவதையிடமே நிலைபெறச் செய்வதாகக் கூறுகிறார்.

    கீதை தொடரும்
     
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Avaaru aridhaaga pirakkum Mahangalai paarthum, namakku indha Nynanam vara maattengudhe..
    Yella Devathaigalum, Iraivanin amsame enru unarthum indha section...nalla irukku.

    Sriniketan
     
  3. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Sriniketan,
    anjyanam nam kaNNai maRaikkiRathu. athanaale than namakku ippadi thonRukiRathu. Githaiyai maRupati maRupati padiththomanal theLivu piRakkum.
    Love,
    PS
     

Share This Page