1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தாயகத்து நினைவலைகள்.

    எனது உறவினர்கள் இரண்டு நபர்களும் நானும் ஒரே வயதினர்கள். நாங்கள் மூவரும் வெவ்வேறு பள்ளிகளில் 12th படித்தோம். பரீட்சை நேரத்தில் சேர்ந்தும் படித்து இருக்கிறோம். எங்களது நட்பு இன்று வரை தொடர்கிறது. தாயகம் சென்றால் நாங்கள் கதை கதையாக பேசுவோம். ஒருவர் வீட்டில் கடந்த வருடம் ஒரு துக்க கரமான நிகழ்வு. ஏற்கனவே துக்கத்தில் இருப்பவரை துக்கம் விசாரித்து சோகத்தில் ஆழ்த்த மனமில்லை. ஒரு மாற்றம் தேவை பட என்ன செய்ய வேண்டும் ? பக்கத்தில் இருக்கும் ஒரு மலை பிரதேசத்திற்கு டூர் போனால் எப்படி இருக்கும்?

    இன்னும் பத்து உறவினர்களை சேர்த்து கொண்டோம். எல்லோரும் செல்ல ஒரு கார் பத்தவில்லை. வாடகை கார் ஒன்று ஏற்பாடு செய்தோம். வாகன ஓட்டுநர் வாகனத்து உரிமையாளர். அவருக்கு 30 வயது. இவரும் எனது உறவினர்களில் ஒருவரும் நெருங்கிய நண்பர்கள். அதனால் நம்பி பயணம் செய்தோம் என் வயது நண்பர்களுடன். இரவு பயணத்தின் போது நான் அவரிடம் பேசிக்கொண்டே வந்தேன். மரியாதை கலந்த எங்களது ஊர் தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். வாகன ஓட்டுநர் அந்த ஊரிலே 30 வருடங்களாக வசித்து வருபவர். அவர் பேச ஆரம்பித்தவுடனே செட் ஆகி விட்டோம்.

    இரவு பயணத்தில் பனி மூட்டத்தில் கார் முன்னாடி எதுவுமே தெரியவில்லை. இவர் வண்டியை எப்படி ஓட்டினார் என்று இவருக்கும் தெரியாது. Traffic signs - கொஞ்சம் கடினமானது வரும்போது sign என்ன அர்த்தம் என்று நான் அவரை கேட்டேன். அதெல்லாம் எனக்கு தெரியாது என்று பதில் சொன்னார். எதிரில் வரும் வாகனத்தின் வெளிச்சம் கண்ணில் பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டேன். கண்களை மூடி கொள்வேன் என்றார். இரவு இரண்டு மணி வரை பேச்சு கொடுத்து கொண்டே இருந்தேன். எங்களை பத்திரமாக தான் அழைத்து சென்றார். இவரது அனுபவங்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தது.

    1) கல்லூரியில் படிக்கும்போது காதல். காதலி சொல்லிக்கொடுத்து தான் அரியர்ஸ் முடித்தார்.
    வெற்றிகரமாக பட்டம் வாங்குவதற்கு முழு காரணம் இவரது காதலி. (அந்த காதலி தான் இப்போ இவரது மனைவி)
    2) பேங்க் வேலையில் இருந்து இருக்கிறார். கடன் வாங்கியவர் வீட்டிற்கு சென்று கடன் வசூலிக்க கடன் வாங்கிய நபரை திட்ட செல்வது இவரது வேலையில் ஒன்று. இது இவருக்கு பிடிக்கவில்லை. அதனால் பேங்க் வேலையை விட்டு விட்டார்.
    3) ஒரு புகழ் பெற்ற நகை கடையில் வேலை பார்த்து இருக்கிறார். வயதான பெண்மணிகள் நகை வாங்க வரும்போது அவர்கள் எந்த நகையை வாங்கினாலும் உங்களுக்கு நகை நல்லா இருக்கு என்று சொல்ல வேண்டுமாம். ஒரே கடையில் அடைந்து கிடப்பது கொடுமை. இது இவருக்கு பிடிக்கவில்லை. வேலையை விட்டு விட்டார்.

    ஊர் சுற்ற பிடிக்கும் என்பதாலும், பேசுவதற்கு பிடிக்கும் என்பதாலும், கார் ஓட்டும் சுய தொழில் தனக்கு ஏற்றது என்று முடிவு எடுத்தார் என்றும் சொன்னார். ஒரு மாதமாக இந்த வேலை செய்வதாக சொன்னார். எங்களை வைத்து மலை பிரதேசத்தில் வண்டி ஓட்டி பழகுறீங்களா? என்று நான் கேட்டேன். சிரித்து கொண்டார். இவரது கார் ஒரு புத்தம் புது கார். இவரது காருக்கு ஒன்றும் ஆக கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதனால் தான் நாங்களும் பத்திரமாக திரும்பி வந்தோம்.

    இவரும் எங்களது கூட்டத்தில் கலந்து கொண்டு ஜாலி ஆக இருந்தார். ஊர் சுத்தி பார்த்தோம். நல்ல சாப்பாடு சாப்பிட்டோம். நிறைய போட்டோஸ் எடுத்தோம். திரும்பி வரும்போது மழை அடித்தது. சுட சுட பஜ்ஜி போடும் ரோட்டு ஓரத்து கடையில் வண்டியை நிறுத்தினார். மலை பிரதேசத்தில் மழையில் சுட சுட பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு பேசிக்கொண்டு இருக்கும் இன்பமே அலாதி தான். (எனது இணை ரோட்டு ஓரத்து கடைகளில் சாப்பிட மாட்டார். என்னையும் சாப்பிட விட மாட்டார். எனது இணை இந்த டூரில் இல்லாதால் எனக்கு கொண்டாட்டம். )

    டூர் அனைவருக்கும் பிடித்து இருந்தது. துக்கத்தை மறந்து எல்லோரும் சந்தோசமாக இருந்தோம்.

    அந்த ஓட்டுனர் கடைசியாக என்னிடம் சொன்னது : அடுத்த முறை நான் தாயகத்திற்கு வரும்போது இதே மாதிரி இன்னொரு ட்ரிப் போக வேண்டும். கண்டிப்பாக என்னை கூப்பிடுங்கள்.

    கண்டிப்பாக என்று நானும் வாக்கு கொடுத்து இருக்கிறேன். இதெல்லாம் எனக்கு பசுமையான நினைவுகள்!!
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடந்த வாரம் நான் இன்னொரு மலையாள படம் தியேட்டரில் பார்த்தேன்.

    இளம் வயது நண்பர்கள் இருப்பது ரொம்ப வசதி. படம் பார்க்க வேண்டும் என்றேன். இரண்டு மணி நேரங்களில் டிக்கெட் புக் செய்து தியேட்டரில் இருந்தோம்.

    Romantic comedy - படம் ஆரம்பித்தில் இருந்து கடைசி வரை ஜாலி தான். இளமை துள்ளல். நிறைய இடங்களில் சத்தமாக சிரித்தோம். படத்தில் கார் பயணம், திருமணத்தில் கலாட்டா, டூர், அப்பாவி + கியூட் Hero, Hero's friend's கலாட்டா, Heroine's IT வேலை இடம், Villain's கலாட்டா எல்லாமே கலக்கல். படம் பிடித்து இருக்கும் இடங்களும் கண்ணுக்கு குளுமை. கதை பழசு என்றாலும் திரைக்கதை புதுசு. ரொம்ப ரொம்ப அழகாக படத்தை நகர்த்தி இருப்பார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு ரொமான்ஸ்: Kiss + Hug. ஆஹா!! என்று எனக்கு இருந்தது. ரொமான்டிக் பட ரசிகைகள்/ரசிகர்கள் - இந்த படத்தை மிஸ் பண்ணவே கூடாது. Rom com movie எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த படம் ஒரு மிக சிறந்த உதாரணம்.

    படம் பார்த்து விட்டு Heroine எதற்காக காதலில் விழுந்தார்/மயங்கினார் என்றெல்லாம் யோசிக்காதீர்கள். படம் பார்த்து நாம் மயங்குவது தான் முக்கியம்! ! :wink::wink:

    படம் பார்த்ததில் இருந்து இந்த மெலடி எனது நினைவை விட்டு இன்னும் நீங்கவில்லை. இந்த பாடல் காட்சி அமைப்பில் Hero + Hero's friend முக பாவனைகளை கவனியுங்கள். அத்தனை ரசம்!! அட்டகாசம்!! அமர்க்களம்!!

    தேவராகம் 2.0 - ப்ரேமலு
     
    Thyagarajan likes this.
  3. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,486
    Likes Received:
    13,211
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Vicarious enjoyment do often lend enchantment to mind. Many of discoveries and or inventions possible with such a virtue. At times I close my eyes thing of fragrance one by one of flowers then foods then accoutrements .
    It is said Nimble brain is no match for might! I think that is the expression befits your response.
    Regards.
     
    Last edited: Mar 29, 2024
    singapalsmile likes this.
  4. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,486
    Likes Received:
    13,211
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Tour notes enjoyable read. You had walked me with your tourney.
     
    singapalsmile likes this.
  5. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,486
    Likes Received:
    13,211
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Super review. The reader would be highly impressed that he or she would be impelled to search for the movie in discussion.
     
    singapalsmile likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    T அவர்களே!! தங்களது நேரத்தை கொடுத்து எனது பதிவுகளை படித்து பதில் பதிவுகள் இட்டதிற்கு எனது மனமார்ந்த நன்றி. எனது நண்பர்கள்/ நட்பு வட்டம் பற்றிய தங்களின் கணிப்பு 90% உண்மை என்பேன். கணிப்பை படிக்கும்போது அவ்ளோ சந்தோஷத்தில் என்னை ஆழ்த்தியது. எனது வாழ்க்கையில் நான் வரம் வாங்கி வந்த விஷயங்களில்/கொடுப்பினையில் நட்பிற்கு விலைமதிக்க முடியாத இடத்தை கொடுத்து இருக்கிறேன்.

    பள்ளியில்/கல்லூரியில் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள் - அவர்களுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறேன். எனக்கு நிறைய roommates இருந்து இருக்கிறார்கள். கல்லூரி படிப்பை முடித்தவுடனே வேலை. முதல் முறையாக தங்க கூண்டான வீட்டை விட்டு வெளியே பறக்கிறேன். நட்புக்கு பேர் சொல்லும் படியாக roommates அமைந்தார்கள். அவர்களில் ஒருவருடன் இன்னும் தொடர்பில் இருக்கிறேன். கடல் கடந்து வசிக்கும் போது நண்பர்கள் தான் குடும்பத்துந(ண்)பர்கள். மாஸ்டர்ஸ் படிக்கும்போது அமைந்த roommates/friends. அவர்களில் சிலருடன் இன்னும் தொடர்பில் இருக்கிறேன். இதற்கு பிறகு எத்தனையோ roommates. இவர்களை பற்றி ஏற்கனவே இங்கு எழுதி இருப்பேன். நான் யாரிடமும் சண்டை போட்டது இல்லை. இரவு நேரங்களில் ஏதாவது தலைப்பில் நீயா? நானா? விவாதம் எங்களுக்குள் தூள் பறக்கும். எனக்கு சரி சமமாக எதிர் வாதம் புரிந்தவர்கள் பெரும்பாலும் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்கள். அதிகம் பேசுபவர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அமைதியாக இருப்பவர்களுக்கு என்னை ரொம்பவே பிடிக்கும். காலப்போக்கில் என்னிடம் இவர்கள் நிறைய பேச ஆரம்பித்து விடுவார்கள்.

    எனக்கு ஏன் பல நண்பர்கள் கிடைத்தார்கள்? எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

    1) எனது நியாயமான நேர்மையான இயல்பான வெளிப்படையான பேச்சு
    2) எந்த விதத்திலும் பாகு பாடு பார்க்காது இருத்தல்
    3) எதையும் எதிர்பார்க்காது இருத்தல்
    4) Secrets - ரகசியம் கட்டி காப்பது. ஒரு நண்பர் சொன்னது இன்னொரு நண்பருக்கு சொல்ல மாட்டேன் எவ்ளோதான் நெருங்கி நண்பர் என்றாலும்
    5) முக்கியத்துவம் குடுப்பது
    6) தவறு செய்தால் சுட்டி காட்டுவது
    7) நான் நானாகவே இருப்பேன். அவர்கள் அவர்களாகவே இருப்பார்கள். (ஜட்ஜ் செய்வது அறவே கூடாது)
    8) அவர்கள் வெற்றி எனது வெற்றி. பொறாமை பட்டதே இல்லை
    9) தனிப்பட்ட பிரச்னையில் இருந்து என்னிடம் இருந்து விலகி இருக்கிறார்கள். தொந்தரவு செய்ய மாட்டேன். அவர்களாகவே இயல்பு நிலைக்கு வந்து என்னிடம் பேசும் வரை பொறுத்து இருப்பேன்
    10) எதிர்மறையாக பேசாமல் இருத்தல். நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்

    ஒரு நெகடிவ் சொல்லி ஆக வேண்டும். என்னிடம் முதல் முறையாக பேசுபவர்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் அல்லது பிடிக்கவே பிடிக்காது. எதற்கு பிடிக்கவே பிடிக்காது என்றால் "ஆதிக்கம் செலுத்துவது".


    பின் குறிப்பு: இடைவிடாது கடலை போடுவதற்கு கின்னஸ் இருந்தால் எனக்கு முழு தகுதி இருக்கிறது. கோடிட்டு/ வரைமுறை தாண்டாது நான் போட்ட கடலை ஏராளம்.
     
    Last edited: Apr 10, 2024
    vidhyalakshmid and Thyagarajan like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தாயகத்து நினைவலைகள் தொடர்கிறது

    சாப்பாடு

    நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட்டால் தான் எனக்கு திருப்தி. நம்ம ஊர் ஹோட்டல் சாப்பாடு எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

    குடும்பத்து நபர்களுடன் நாங்கள் இருவரும் நிறைய உணவகங்களில் உண்டோம். எங்கள் இருவருக்கும் இருக்கும் பழக்கம் - எதை ஆர்டர் செய்தாலும் எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம். இதனால் என்னிடம் இன்னொரு பழக்கம் இருக்கிறது. நான் எந்த உணவை ஆர்டர் செய்கிறேனோ அந்த உணவை எனது இணை ஆர்டர் செய்ய விட மாட்டேன். எல்லாம் ஒரு காரணத்துக்காக தான். எப்படியும் எனது பாதி உணவை அவருக்கு தந்து/தள்ளி விடுவேன். அவரும் அதை ஆர்டர் செய்தால் என்னால் சாப்பிட முடியாததை அவருக்கு தள்ளி விட முடியாது அல்லவா? இன்னொரு முக்கிய காரணம் - வெரைட்டிக்காக தான். பார்த்து பார்த்து உணவகத்தை/உணவை தேர்ந்து எடுப்பதில் அவர் கைதேர்ந்தவர். மெனு கார்டில் வித்யாசமான பேர் இருந்தால் உடனே ஆர்டர் செய்து விடுவார். சில நேரங்களில் பல்பு வாங்குவார். உணவு பிடிக்காமல் இருந்தாலும் வேஸ்ட் பண்ணாமல் சாப்பிடுவார். இந்த முறை வகை வகையாக உணவு உண்டோம்.

    Shopping

    எனது இணை ஒரு பொருள் பார்த்து பார்த்து வாங்க குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். எதுவாக இருந்தாலும் நான் அஞ்சு நிமிடத்தில் வாங்கி விடுவேன். பொருட்களை வேடிக்கை பார்க்கும் நேரம் தான் எனக்கு அதிகம். இந்த முறை shopping பல தடவை சென்றோம்.

    எதிர்பாராத ஒரு பிளான் போட்டதில் எனக்கு trekking shoes வாங்க வேண்டி இருந்தது (எதற்கு? என்ற சம்பவம் இன்னொரு பதிவில்). ஒன்று இரண்டு கடைகளுக்கு சென்றோம். ஒரு புகழ் பெற்ற பிராண்ட் ஷூஸ் எனது இணை தேர்ந்து எடுத்தார். போட்டு பார்க்க சொன்னார். ஷூ அணிந்த கால்களுக்கு முன்னால் இடைவெளி சரியாக இருக்கிறதா என்று தொட்டு பார்த்து செக் செய்தார். நான் இதெல்லாம் யோசித்ததே கிடையாது. ஷூ போட்டு நடந்து பார்ப்பேன். நடக்க ஓகே என்றால் ஷூ வாங்குவேன். இது எனக்கு வித்யாசமான இனிய அனுபவமாக இருந்தது.

    பொருட்களில் குறை கண்டு பிடிப்பதில் எனது இணை கில்லாடி. எனக்கு ஒருவரை குறை சொல்லவும் வராது. பொருட்கள் குறைகள் பார்க்கவும் தெரியாது. ஒரு கடையில் ஒரு குட்டி புத்தர் சிலை பார்த்தேன். தீர்க்கமான முகம். அம்சமான புன்னகை. நெற்றியில் சின்ன பொட்டு இருந்தது. ஒரு நிமிடத்தில் வாங்க முடிவு செய்து விட்டேன். எனது இணையிடம் காண்பித்தேன். உடனே ஒரு சிறிய குறையை கண்டு பிடித்து விட்டார் - புத்தர் தலை சுமார் 2 degree சாய்ந்து இருந்தது. உடனே நான் சொன்னேன் - நாமும் இடது பக்கம் 2 degree தலை சாய்ந்து பார்த்தால் புத்தர் நேராக தெரிவார். நான் என்ன பேசறேன் என்று புரியாமல் அவர் முழிக்க நான் உடனே பில் போடும் இடத்திற்கு சென்று எனது கார்டு பயன் படுத்தி பொருளை வாங்கி விட்டேன். குறை இருந்தாலும் எனக்கு பிடித்ததை நான் வாங்கி விடுவேன்.

    பொன்னியின் செல்வன் கட்டிய பெரிய கோவில்

    நாங்கள் இருவர் மட்டுமே வாகன ஓட்டுனருடன் காரில் சென்றோம். அவரது குடும்பத்து நபர்கள் இரண்டு பேர் சேர்த்து கொள்ளலாம் என்று சொன்னேன். ஒரு நபர் விட்டுவிட்டு மற்றொருவர் அழைத்தால் தேவை இல்லாத டிராமா. நாம மட்டும் போனால் போதும் என்று சொல்லி விட்டார். சொந்த வேலை வேறு எங்களுக்கு இருந்தது. வழியில் பொன்னியின் செல்வன் கட்டிய பெரிய கோவில் இரவில் சென்றோம். விளக்குகள் வெளிச்சத்தில் சுற்றுப்புறம் பொன்னிறமாக மின்னியது. ஒரு கோபுரத்தின் முன்பு படம் எடுத்து கொண்டோம். ஒரு வழிப்போக்கர் எடுத்த அந்த படம் அவ்ளோ அழகாக இருந்தது. படம் மட்டும் அல்ல, அந்த பயணம் முழுவதும் எங்களுக்கு அழகாக அமைந்தது.
     
    Thyagarajan likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடந்த வார இறுதியில் வலைத்தளத்தில் ஒரு புத்தம் புது படம் பார்த்தேன். திரை அரங்கில் அந்த படம் இங்கு வெளியிட படவில்லை. எதேச்சையாக படத்தின் teaser/trailer பார்த்தேன். பயங்கர BOLD ஆக இருந்தது. காதில் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள். ஏற்றுக்கொள்ள கடினமான வசனங்களில் Adult content. தரம் கெட்ட படமா? படம் விமர்சனம் எப்படி இருக்கிறது என்று YouTube ல தேடி பார்த்தேன். எனக்கு பிடித்த படம் விமர்ச்சகர்கள் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை இவர்கள் நியாயமாக படத்தை விமர்சிப்பவர்கள்.
    விமர்சனம் அருமையாக இருந்தது. படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது. அருகில் திரை அரங்கில் படம் ஓடுகிறதா என்று தேடினேன். இந்த இடத்தில திரையிடப்படவில்லை . Camera print என்றாலும் பரவாயில்லை. வலைத்தளத்தில் படம் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.

    படத்தில் நான்கு கிளை கதைகள். முதல் கதை - ஆஹா!! இரண்டாம் கதை - எனக்கு பிடிக்கவில்லை!!
    மூன்றாம் கதை பேர் - தக்காளி சட்னி - எப்படி இப்படி எல்லாம் யோசித்து படம் எடுக்க முடிந்து இருக்கிறது என்று அசந்து போய்ட்டேன். செம வில்லங்கமான content. Double சாட்டை அடி - ஆணுக்கா? பெண்ணுக்கா? படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

    நான்காம் கதை - எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை!! முதல் மூன்று கதைகள் ஒவ்வொரு மாதிரி வில்லங்கம் ஆனது. Adults வைத்து எந்த அளவிற்கு வேண்டுமானாலும் போகலாம். எதற்கு kids கதை? டைரக்டர் நல்லவர் நாட்டுக்கு தேவை ஆனதை சொல்றார் என்று பாராட்டணுமா? மூன்றாம் படம் குடுத்த கிக் மறந்து ஒரு சில நிமிடம் அப்செட் ஆகி விட்டேன்.

    முதல் மற்றும் மூன்றாம் கதைகள் கண்டிப்பாக பார்க்கவேண்டும் - கணவனும் மனைவியும் மட்டும் சேர்ந்து!!

    YT - Hot Spot - First story - Sneak peak 04
    YT - Hot Spot - First story - Sneak peak 02
    YT - Hot Spot - What is Kalaachaaram song
     
    Thyagarajan likes this.
  9. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,486
    Likes Received:
    13,211
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I had erred here. Pl read it as "A MIGHTY BRAWN IS NO MATCH FOR A NIMBLE BRAIN".
     
  10. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,486
    Likes Received:
    13,211
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Like a breath of fresh air here to read your brooding over motherland from Bamas. It is Elnino effect in Chennai.
    I shall comeback here with my response after a while. Let me be chewing the cud - I mean your latest thoughts on school-mates, class-mates, college-mates & the Food.
    Regards.
    God Bless
     

Share This Page