1. What Movie Did You Watch Today? : Post Here
  Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

 1. vidhyalakshmid

  vidhyalakshmid IL Hall of Fame

  Messages:
  2,656
  Likes Received:
  1,768
  Trophy Points:
  325
  Gender:
  Female
  மிக்க நன்றி ! கவிதையின் காதலியே !
  தாங்கள் கவிதையை சுவைக்கும் அழகை
  வருணித்த விதம் கவிதை!
  பெண்ணின் மன நிலையையும் ஒரு எடுத்துக்காட்டு
  பேசியிருக்கலாம் என நீங்கள் குறிப்பிட்ட பிறகு
  தோன்றுகிறது.(காலம் தள்ளி) என் பேச்சைக் கேட்டு,
  இப்படி ஆக்கப் பூர்வ பின்னூட்டத்தை வரவேற்கிறேன்.
   
  singapalsmile and Thyagarajan like this.
 2. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,486
  Likes Received:
  2,474
  Trophy Points:
  338
  Gender:
  Female
  நன்று. நீங்கள் மட்டும் தான் இப்படி எழுதுவீங்களா? நானும் எழுதுவேன். :grinning::grinning:

  நான் Derivatives
  நீ Futures? Options?

  நான் Revenue
  நீ Expense? Net Income?

  நான் Stock Exchange
  நீ Large cap stock? Blue chip stock?

  நான் Bond
  நீ Inflation? Interest rate?

  நான் Capital structure
  நீ Equity? Debt?

  நான் Bankruptcy
  நீ Corporate bond? Preferred stock?

  நான் Net income
  நீ Dividend? Retained Earning?

  நான் IPO
  நீ Primary market? Secondary market?

  நான் Trading
  நீ Intraday? Swing?

  நான் Company
  நீ Fundamental Analysis? Technical Analysis?

  நான் Computer
  நீ CPU? *GPU?

  (*Due credit to NVDA's stellar earnings :grinning::grinning:)
   
  Thyagarajan likes this.
 3. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,486
  Likes Received:
  2,474
  Trophy Points:
  338
  Gender:
  Female
  Thanks. Most favorite: Blue chip stocks. இந்த லிஸ்ட் ல இருக்கற அனைத்து ஸ்டாக்ஸ் என்னோட VV index ல இருக்கு.

  Hidenburg report - 'SQ' stock அடி வாங்கிய போது கொஞ்சம் வாங்கினேன்(Dollar-cost averaging). ஒரு வருஷத்திற்கு மேல negative return. இப்போ positive return.

  நான் Long term investor. குறைந்த பட்சம் 10 வருடங்கள் காத்திருக்க நினைத்து இருக்கிறேன்.
  NVDA: எனக்கு இப்போ 3.5X return இருந்தாலும் விற்க மனமில்லை. எதுவும் விற்காமலே Tax bracket எகிறுகிறது. 2023 ல நாங்கள் கட்டிய வரி போதவில்லை. வரி இன்னும் பாக்கி இருக்கிறதாம். நாளைக்கு எங்கள் இருவருக்கும் வரும் சம்பளம் மொத்தமும் வரி செலுத்தவே போதுமானதாக இருக்கும்.
  எனது இணைக்கு கொஞ்சம் அழுகை! இந்த வருடத்திற்கு வரி கொஞ்சம் குறைக்க என்ன செய்யலாம் என்று எடுத்து சொல்லி இருக்கிறேன். இதை பற்றிய பதிவு இன்னொரு நாளில்!
   
  Thyagarajan likes this.
 4. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,486
  Likes Received:
  2,474
  Trophy Points:
  338
  Gender:
  Female
  நான் சூரியன்
  நீ சூரியகாந்தியா? நிலவா?


  நீ சூரியகாந்தி
  நான் சூரியன்
  நீ மலர்வதற்கே நான் உதிப்பேன்


  உனக்காக பொறந்தேனே
  இஞ்சி இடுப்பழகி

  இத்துடன் எனது Feb 2024 Special Assignment முடித்து கொள்கிறேன். வெட்டியான காரியமாக இருந்தாலும் எடுத்த காரியத்தை கொஞ்சமாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன்.
  தனிப்பட்ட காரணத்தால் /சூழ்நிலையால் என்னால் ரொம்பவும் ஒன்றி இந்த மாதம் கிறுக்க இயலவில்லை. ஆரம்பத்திலேயே Fallback option யோசித்து வைத்து இருந்தேன். இங்கு வருகை புரிந்த எத்தனை நபர்கள் கவனித்து இருப்பீர்கள் என்று தெரியவில்லை. நான் இந்த மாதம் பதிவிட்ட அணைத்து ரொமான்டிக் பாடல்களும் ஒரு ஸ்பெஷல் தீமில் வரும். :wink::wink:அது என்ன வென்று யோசித்து கண்டுபிடித்து இங்கு எழுதுங்கள். இதற்கான விடை அடுத்த முறை இங்கு வரும்போது எழுதுகிறேன்.
   
  vidhyalakshmid and Thyagarajan like this.
 5. Thyagarajan

  Thyagarajan IL Hall of Fame

  Messages:
  11,728
  Likes Received:
  12,550
  Trophy Points:
  615
  Gender:
  Male
  As a long term investor we are not surprised of volatile fluctuations during the period of holding fundamentally strong stocks. I hv a stock still held after initial ipo allotment and those allotted on right basis and bonus shares since 1983. This company was bought by india's richest man a couple of years ago and he completely cleared off all debts connected to buying this co. Hidenburgreport caused this co stocks to fall almost 60% of its 52 weeks high then in Jan 2023. Now this stock surpassed its previous 52 weeks best and it is on a roller coast ride.


  But once in a while you might have booked profits on atleast 25 to 30% of holdings when the going is good. Enjoy a trip to Caribbean or Cameroon or cocoon.

  I am sure you engage services of a tax consultant.

  But the pleasure it gives is immeasurable and inexplicable. With your chaste tamil, and tremendous experience in foreign country or countries including Bhamas you con conceive wonderful articles for tamil weekly magazines Ananda Vikadan and Kumudam and news papers such as daily thanthi ...& தி இன்து
  I think all those songs comes under one theme
  நீயா நானா ?
   
  singapalsmile likes this.
 6. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,486
  Likes Received:
  2,474
  Trophy Points:
  338
  Gender:
  Female
  நீங்கள் சொல்வதும் சரி தான். ஆனால் என்னுடைய குறிக்கோள் வேறு. 7 இலக்கு எண் தொடும் வரை விற்று லாபம் பார்ப்பதில்லை. Dividend மட்டுமே வைத்து என்னுடைய செலவுகளை நானே பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

  குறிப்பிட்ட இடமெல்லாம் எல்லாமே C யில் ஆரம்பிக்கிறது. இதற்கு Crypto return மட்டுமே போதும். சூதாட்டமாக நான் முயன்றது. அதிர்ஷ்ட காற்று வீசுது.

  சம்பாதிப்பதை இடங்களை சுற்றி பார்க்க செலவு செய்வதில் சிக்கல் எதுவுமே இல்லை. ஆனால் இந்த வருடம் விடுமுறை நாட்கள் போதுமானதாக இல்லை. வருட கடைசியில் வேறு தாயகத்திற்கு செல்ல நாட்கள் சேர்த்து வைக்க வேண்டிய கட்டாயம்.

  எனது இணைக்கு கணக்கு என்றாலே அலர்ஜீ. Tax consultant இருந்தாலும் எங்களது இருவரின் வரி கணக்கு வழக்கு எல்லாமே நானே சரி பார்த்து கொள்வேன். Personal Finance கையாளும் விதத்திற்கு எனது இணை எனக்கு நூற்றுக்கு நூறு கொடுப்பார்.

  எனது வாழ்க்கையின் பாதி வருடங்கள் நான் ஒரே ஒரு நாட்டில் தான் வசித்து கொண்டு இருக்கிறேன். மூன்று நாடுகள் ஊர் சுற்றி பார்த்து இருக்கிறேன். அவ்வளவே. உலகம் சுற்றும் ஆசை இருக்கிறது. அதற்கான நேரம் இனிமேல் தான் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

  உண்மையாக சொன்னால் எனக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. ஆனால் எனக்கு என்ன தெரியுமோ அதில் அளவிற்கு அதிகமாகவே தெரிந்து வைத்து இருப்பேன். அதை பற்றி பக்கம் பக்கம் ஆக எழுதுவேன்/ பேசுவேன். Nanayam Vikatan - எழுதுவதற்கு மட்டுமே படித்த படிப்பு/அனுபவம் அடிப்படையில் முழு தகுதி எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன்.


  நீயா? நானா? என்றால் "போட்டி" மனப்பான்மை. நீயும், நானும் என்றால் "சுமுகமான" மனப்பான்மை.

  நான் பதிவிட்டது "சுமுகமான"கணவன் மனைவி பாடல்கள். :smile::smile:
   
  Thyagarajan likes this.
 7. Thyagarajan

  Thyagarajan IL Hall of Fame

  Messages:
  11,728
  Likes Received:
  12,550
  Trophy Points:
  615
  Gender:
  Male
 8. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,486
  Likes Received:
  2,474
  Trophy Points:
  338
  Gender:
  Female
  இருக்கற அலுவலக வேலை செய்யாமல் இப்போ இங்கு எதற்காக வந்தேன் என்றால் எனக்கு அதிகம் சந்தோஷம் அளித்த ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள தான்.

  வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்போது அதை யாரிடம் பகிர்ந்து கொள்ள தோன்றும்? ஒரு செகண்ட் கூட யோசிக்காமல் சொல்கிறேன் - என்னுடைய வாழ்வில் நான்கு நபர்கள் இருக்கிறார்கள். இரண்டு நபர்கள் எனது குடும்பத்தை சார்ந்தவர்கள். இரண்டு நபர்கள் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் வெற்றியை என்னிடம் பகிர்ந்து கொள்ள துடிப்பவர்கள். இந்த வாரம் ஒரு குடும்பத்து நபரும் ஒரு நெருங்கிய நண்பரும் அவர்களது வெற்றியை என்னிடம் சந்தோசமாக பகிர்ந்து கொண்டார்கள். நானும் மனதார வாழ்த்துக்களை தெரிவித்தேன். இவர்களுக்காக நான் அதிகம் சந்தோஷப்பட்டேன். Positive vibes!!

  -----------------------------------------------------------------------------------------------

  இந்த வருட ஆரம்பத்தில் தாயகத்தில் நானும் எனது இணையும் பீச்சிற்கு சென்றோம். பீச்சில் குறி சொல்லும் ஒரு நபர் எங்களை நோக்கி வந்து என்னிடம் சொன்னார்: சிரிச்ச மகராசியா இருக்கே! உனக்கு ஒரு விஷயம் சொல்லணும். கேக்கறியா? நான் உடனே சொன்னேன் - வேண்டாங்க. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று. எனது இணையை பார்த்தேன். அவரும் வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

  குறி சொல்லும் நபர் கெடுதல் ஆக ஏதாவது சொல்லிவிட்டால் --> Negative vibes!!

  எங்களது ரம்மியமான பீச் சூழலை குறி சொல்லும் நபரால் கெடுத்து விட முடியுமா?

  Negative vibes - உண்மையா? பொய்யா?

  -----------------------------------------------------------------------------------------------

  நான் சமீபத்தில் நண்பர்களுடன் தியேட்டர் சென்று பார்த்து ரசித்த படம் - Manjummel Boys. மலையாள படம் தியேட்டரில் பார்ப்பது இதுவே முதல் முறை. இந்த வருடம் நான் பார்த்த முதல் படமும் இது தான். படம் ஆரம்பத்தில் கொஞ்சம் சோதித்தாலும் போக போக வேகம் எடுத்தது. படத்தில் நிறைய இடங்களில் தமிழில் பேசியதால் மலையாள படம் பார்த்த உணர்வு வரவில்லை. செட் போட்ட மாதிரியே தெரியல. கொடைக்கானல் கொள்ளை அழகு. படம் பார்த்த திருப்தி அதிகமாகவே இருந்தது. உண்மை சம்பவத்தின் அடிப்படை எனும் போது கொஞ்சம் சிலிர்க்க வைத்தது. குணா படத்தில் இருந்து ஒரு பாடல் இந்த படத்தில் காட்டும் இடம் - கலக்கல்! கலக்கல்!! கலக்கல்!!! தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்.

  YT - கண்மணி அன்போடு - IR இசையில் உலகநாயகன் குரலில்
   
  vidhyalakshmid and Thyagarajan like this.
 9. Thyagarajan

  Thyagarajan IL Hall of Fame

  Messages:
  11,728
  Likes Received:
  12,550
  Trophy Points:
  615
  Gender:
  Male
   
  Last edited: Mar 24, 2024
  vidhyalakshmid likes this.
 10. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,486
  Likes Received:
  2,474
  Trophy Points:
  338
  Gender:
  Female
  தனிமையை ரசிக்க தெரிந்தவர்கள் சுயமாக என்றென்றும் வாழ்வை ரசிப்பவர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு தனிமை விரும்பி என்று சொன்னால் எத்தனை பேர் நம்புவீர்கள்/நம்புவார்கள் என்று தெரியவில்லை. தெரிந்தவர் தெரியாதரிடம் என்னால் கலகலப்பாக உரையாடவும் முடியும். என்னுடைய பிரத்யேகமான கற்பனை உலகத்தில் சந்தோசமாக என்னால் உலாவவும் முடியும்.
   
  vidhyalakshmid and Thyagarajan like this.

Share This Page