1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடின வேலை பளுவால் கொஞ்சம் மண்டை காய்ந்து போயிருந்தேன். அந்த நேரத்தில் எனது நண்பர்கள் நான்கு நாட்களுக்கு காரில் Road trip போகலாம் என்றார்கள். கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே சரி என்று சொல்லி விட்டேன். திட்டமிட்டு அலுவலகத்தில் விடுப்பு எடுத்து தான் எனக்கு பழக்கம். இந்த முறை பயணத்திற்கு முதல் நாள் தான் விடுமுறை பற்றி பேசி விண்ணப்பித்து விட்டேன். ஒரு காரில் நான்கு நபர்கள். இரண்டு பெண்கள் இரண்டு ஆண்கள். பயணம் எப்படி இருந்தது?

    • மலை பகுதிகளை, வண்ணமயமான நிறங்களில் இருந்த மரங்களை ரசித்தோம். இயற்கை வளம் பொங்கி வழிந்து இருந்தது. பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
    • கூட்டம் கூட்டமாக மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருந்து கடைகள் நிரம்பி வழியும் இடத்தில ஜோரான நடை பயணம். கடைகளில் window shopping.
    • கிடைத்த உணவை உண்டு விட்டு தாயகத்து உணவை இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்து மூன்றாம் நாள் ஒரு புகழ் பெற்ற தாயகத்து உணவகத்தில் உண்டோம். வகை வகையான உணவுகள். செம ருசி!
    • இரவு பயணத்தில் சூடான காபி இரண்டு நபர்களுக்கு குளிர்ந்த சாக்லேட் ஐஸ் கிரீம் இரண்டு நபர்களுக்கு. அதுவும் மிதமான குளிரில்.
    • காரில் பயணிக்கும் போது நிறைய பேசினோம்; புது பாடல்கள் கேட்டோம்; Junk food சாப்பிட்டோம்.
    • பீச் சென்றோம். நான்கு மணி நேரங்கள் பீச் ஓரத்தில் நடந்து sunset பார்த்து விட்டு கிளம்பினோம். எல்லோரும் ஜீன்ஸ் அணிந்து இருந்ததால் கால்கள் தண்ணீரில் நனைக்க யோசித்தோம். குளிர் காற்றும் அடித்தது. துணிந்து ஒரு நண்பர் பீச்சில் தண்ணீரில் கால் நனைக்க மற்ற எல்லோரும் தண்ணீரில் இறங்கி விட்டோம். சிவந்த வானம் நீலவண்ண தண்ணீர் வெந்நிற அலைகள் - போதும் போதும் என்னும் அளவிற்கு போட்டோக்கள் எடுத்தோம். வீடியோவில் அலைகளின் சத்தங்களை படம் பிடித்தோம்.
    • தங்கி இருந்த இடம் பங்களா மாதிரி இருந்தது. எல்லோருக்கும் தனி தனி ரூம். ஊரை சுற்றி பார்த்த அலைச்சலில் படுத்த உடனே உறக்கம். நான் தான் முதலில் எழுந்து இருப்பேன். போட்டி போட்டு எல்லோரும் தூங்குபவர்கள். இவர்கள் எழுந்து கிளம்புவதற்கு குறைந்தது பதினோரு மணி ஆகிவிடும். இரவில் வீடு வந்தும் சேர்ந்து கொஞ்சம் நேரம் அரட்டை உறங்க செல்வதற்கு முன்பு. குடும்பத்து நபர்கள் போன்ற பிணைப்பு.

    எல்லோரும் அட்ஜஸ்ட் பண்ணோம். பரிவுடன் நடந்து கொண்டோம். ஒருத்தர் கூட கோபப்பட்டு பேசவில்லை. எல்லோரும் கிண்டல் பண்ணுவோம். திரும்பி வருவதற்கு யாருக்குமே மனமில்லை. பத்திரமாக திரும்ப வந்து விட்டோம். புத்துணர்ச்சியுடன் இருக்கிறோம்.

    -------------------------------------------------------------------------------------------------------

    இந்த புது பாடலை இன்று தான் கேட்டேன். கேட்டவுடனே ஒரு சின்ன மயக்கம் :wink::wink: பகிர்ந்து கொள்ளும் ஆவல் இருந்தது.

    YT - நரைச்ச முடி - துருவ நட்சத்திரம் - தாமரையின் வரிகள்

    திருமணத்திற்கு முன்பு இருக்கும் மயக்கம், திருமணம் ஆன புதிதில் இருக்கும் மயக்கம் ஓகே. பத்து வருடங்கள் கடந்தும் மயக்கம் தொடருமா? இது சாத்தியமா? எத்தனை ஏற்ற தாழ்வுகள் சந்திக்க வேண்டி இருக்கும்? வாழ்க்கையை புரட்டி போடும் சம்பவங்கள். ஏன்டா திருமணம் செய்து கொண்டோம்? என்று நொந்து நூடுல்ஸ் ஆன தருணங்கள். சத்திய சோதனைகள். நரக வேதனைகள். விலகல் விளிம்பு நிலை. காதல் - உண்மையா? பொய்யா? என்ற ஆழ்மனது பட்டிமன்ற கேள்வி. இப்படி எதிர்மறையாக அடுக்கி கொண்டே போகலாம்.

    எதிர்மறைகளை எதிர்த்து நேர்மறையாக சிந்திக்கலாமா? பத்து வருடங்கள் கடந்தும் மயக்கம் தொடர என்ன வேண்டும்?

    சமீபத்தில் எங்களுக்குள் நிகழ்ந்த சின்ன உரையாடல்:

    தூரத்தில் இருந்து கொண்டு தாயகத்தில் சொந்த வீட்டை பராமரிப்பது தலைவலியாக இருக்கு.
    பழைய வீட்டை விற்று விட வேண்டியது தானே?
    வீட்டுக்கும் பீச்சுக்கும் அஞ்சு நிமிட நடை தான். உனக்கு தான் பீச் என்றால் ரொம்ப பிடிக்குமே! அதனால விற்க நினைக்கல.
    அப்படியா? வயதான காலத்தில் அந்த வீட்டில் வசித்து நாம ரெண்டு பேரும் தினமும் பீச்சில் வாக்கிங் போகணும்.

    -------------------------------------------------------------------------------------------------------

    சின்ன சின்ன விஷயங்கள் தான் வாழ்க்கையை அழகாக்கிறது. இந்த வருடம் எனக்கு ரொம்பவே அழகான வருடம். இரண்டு மாதங்கள் IL விடுமுறை எடுத்து கொள்கிறேன் என்பதை சொல்வதற்கு தான் இன்று இங்கே வந்தேன். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். உங்களை நீங்களே சந்தோசமாக வைத்து இருங்கள். சந்தோசத்திற்கு குறைவே இருக்காது. பொங்கி வழியும்! இன்னும் நிறைய இனிப்பான நினைவுகளுடன் உங்களை சந்திக்கிறேன். பிரியா விடைபெறுகிறேன் புன்னகையுடன் !! :grinning::grinning:
     
    maalti and vidhyalakshmid like this.
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,691
    Likes Received:
    1,821
    Trophy Points:
    325
    Gender:
    Female
    நல்ல தமிழில் மேடையில் பேசுவதே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
    அனைத்து ஊடகங்களும் அதை மறந்து விட்டன. இன்னும் பத்து ஆண்டுகளில் இது அழிந்து விடும் அபாயமும் உள்ளது. நடுநடுவே சாதாரண பேச்சு வழக்கை கலந்தாலும், பெரும்பான்மை முனை முறியா தமிழிலே தான் பேசுவேன். அது எனக்கு தனித்தன்மையையும் கொடுத்துள்ளது .தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
     
    maalti, Induslady and singapalsmile like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எல்லோருக்கும் வணக்கம்.

    கடந்த இரண்டு மாதங்களில் எழுதுவதற்கு சுவையான நினைவுகள் நிறையவே சேகரித்து வைத்து இருக்கிறேன். இன்றைய துவக்கம் மங்களகரமாக இருக்கட்டும்.

    பல வருடங்களுக்கு பிறகு நாங்கள் இருவரும் தாயகத்தில் கிட்டத்தட்ட பத்து கோவில்களுக்கு சென்று இருப்போம். வயதான காலத்தில் நாங்கள் நேரத்தை செலவழிக்க போகும் வழிகளில் இதுவும் ஒன்று என்பதன் முன்னோட்டம் சிறப்பாகவே எனக்கு பட்டது. சென்ற கோவில்களில் எல்லாம் தரிசனம் எனக்கு நன்றாக கிடைப்பதற்கு ஏற்ப வழி விட்டு பார்த்து கொண்டார். ப்ரசாதத்திற்காகவே நான் கோவில் விரும்பி செல்வேன். பிரசாதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தால் இரட்டிப்பாக எனக்கு கிடைக்கும் ( அவரது பங்கு எனக்கு). பிரசாதம் அவ்ளோவாக பிடிக்கவில்லை என்றால் அவருக்கு இரட்டிப்பாக கிடைக்கும் (எனது பங்கு அவருக்கு).

    2023 வருட இறுதியில் ஒரு புகழ்பெற்ற கோவிலுக்கு சென்றோம். எனது கணவர் எனது நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார். எங்களுக்கு பக்கத்தில் இன்னொரு தம்பதியர் இருந்தார்கள். அந்த பெண்மணி அவராகவே குங்குமம் வைத்து கொண்டார். எங்களை பார்த்து அவரது கணவர் அந்த பெண்மணிக்கு நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார். பார்ப்பதற்கு சந்தோசமாக இருந்தது. நான் அந்த நபரை பார்த்து புன்னகைத்தேன். 2023 ல என்னுடைய சிறந்த புன்னகை அதுவாக தான் இருக்கும். :grinning::grinning:

    மற்ற இனிய அனுபவங்கள் அடுத்த மாதத்தில் எழுதுகிறேன். அடுத்த போஸ்ட் ல Feb 2024 special assignment!! Happy Feb 2024!! :wink::wink:
     
    svpriya, vidhyalakshmid and maalti like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Feb 2024 Special

    கடந்த இரண்டு மாதங்கள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் இனிதாக கடந்தது. ஒரு பாடல் கூட கேட்கவில்லை. குடும்பம்/நண்பர்கள் வட்டத்தில் வாழ்வு சந்தோசமாக சுழன்று கொண்டிருந்தது. இன்னும் jet lag இருக்கிறது. தமிழில் எழுதும் ஆசை எட்டி பார்த்தது. இப்போ என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. எனக்கு தோன்றியதை கிறுக்குகிறேன்!

    #1
    நான் கடவுள் என்றால்
    நீ பக்தனா? அர்தநாரிஸ்வரனா?


    #2
    நீ சிலை
    நான் சிற்பி
    உன்னை பார்த்து பார்த்து செதுக்குவேன்


    APK, A1C lines. இந்த வரிகள் எதில் சேர்ப்பது என்பது அவரவர் கற்பனையை பொறுத்தது. :wink::wink:

    என்னவோ இந்த பாடல் தான் இன்று பதிவிட தோன்றியது.

    நன்றி சொல்ல உனக்கு - மறுமலர்ச்சி
     
  5. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    It reads like a breath of fresh air. I enjoyed reading though it looks like you wrote these sweet lines out of inertia or you may call it jet-lag.
    After long hiatus to read something in chaste tamil is enjoyable indeed. Your followers all must hv missed you as I do for this long.
    Religious tour, prasadam sharing and cine song lines all turned me quite nostalgic of my prime days.
    Prasadam reminded me of a blig
    ....https://indusladies.com/community/threads/neivedyam-bhakthi.309358/
    I liked your averment about your best "soft smile of the 2024" but for readers it provides only vicarious image.

    And the one of the lyrics you had quoted reminds 'sharda' film song lyrics of which in link
    Kannanal Naan Imaiyaven பாடல் வரிகள் - - Deeplyrics - Deeplyrics.
    Long live your love for thayagum & writing in absolute chaste tamil which provides delight to your readers.
    Best wishes to all members of your family & you.
    Regards.
     
    Last edited: Feb 2, 2024
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி T. நலமாக இருக்கிறீர்களா? நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி. வழக்கம் போல உங்களது பதிவில் பாராட்டு மிகுதி. :grinning::grinning:

    படித்தேன். என்னுடைய இளம் வயதில் பக்தி என்ற தலைப்பில் என்னிடம் யாரவது பேச ஆரம்பித்தால் விவாதிக்க ஆரம்பித்துவிடுவேன். காலப்போக்கில் வாழ்க்கை கற்று கொடுத்த பாடங்கள், வயது ஏற அனுபவங்களும் கூட இப்போதெல்லாம் எதுவும் கருத்து கூறாமல் ஒதுங்கி விடுவேன்/ ஓடி விடுவேன். உங்களது பதிவு விவாதம் புரிய தூண்டியது. என்னுடைய அனுபவம் ஒதுங்க சொல்கிறது. ஒதுங்கி கொள்கிறேன்.

    பக்திக்கும் எனக்கு ஏகப்பட்ட தூரம். நான் கோவிலுக்கு சென்றால் கோவில் கட்டட அமைப்பு/கோபுரம்/ தூண்கள்/ சிற்பங்கள் பார்த்து ரசித்தும் வியந்தும் பார்ப்பேன். என்னை சுற்றி இருப்போர்கள் நடவடிக்கைகளை கவனிப்பேன். இவர்கள் எல்லோரும் 100% மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்து இருப்பார்களா? சக மனிதர்களை மரியாதையுடன் எப்பவுமே நடத்தி இருப்பார்களா? எந்த சூழ்நிலையிலும் நியாயமாக/நேர்மையாக நடந்து இருப்பார்களா? இப்படி நிறைய கேள்விகள் மனதினுள் எழும். எவ்ளோ நம்பிக்கை வைத்து கோவிலுக்கு வருகிறார்கள் என்று ஆச்சர்யப்படுவேன்.

    சன்னிதானத்தில் பூ அலங்காரத்தில் இருக்கும் மூலவர்/தீப ஆராதனை நடக்கும்போது வெளிச்சத்தில் மூலவர் பார்க்க பிடிக்கும். உற்சவர்கள் - எவ்ளோ தீர்க்கமாக முகம் இருக்கிறது என்று ஆராய்வேன்.
    சிற்பியை பாராட்ட தோணும்.

    பிரார்த்தனை என்னவாக இருக்கணும்? தெரியாது. எது நடந்தாலும் திடமாக இருந்து எதிர்க்கொள்ள வேண்டும் என்று நினைத்து கொள்வேன். பிரசாதம் கிடைத்தால் போனஸ் :grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நினைவுகள் இன்னும் தாயத்தை சுற்றி இருப்பதாலும் அலுவலக வேலை பழுவாலும் நிதானமாக யோசித்து எழுத இயலவில்லை. இப்போதைய இன்ஸ்டன்ட் கிறுக்கல்கள்.

    (APK- lines)
    நான் IL poetic thread என்றால்
    நீ பாடல் வரிகளா? இசையா?

    (APK lines)
    நான் IL poetic thread என்றால்
    நீ ஏதோ ஒரு பாட்டா? நிலாவே வா?

    (A1C lines)
    நான் IL poetic thread என்றால்
    நீ யாஞ்சி யாஞ்சி யா? சிநேகிதனா?

    (A1C+ lines)
    நான் IL poetic thread என்றால்
    நீ நிலா காயுதா? சிவராத்திரியா?

    இன்றைய பாடல்:
    ஒரு பாதி கதவு - தாண்டவம்
     
    Thyagarajan likes this.
  8. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,691
    Likes Received:
    1,821
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Welcome V ! Happy that you are back and this thread members are waiting for your posts.
     
    singapalsmile and Thyagarajan like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Thanks V. எப்படி இருக்கீங்க?

    இந்த டீ கடையில் எத்தனை நபர்கள் காத்திருக்காங்க? எது Reel? Real? ஆளே இல்லாத டீ கடையில நான் டீ ஆத்திட்டு இருக்கேன் என்று அப்போ அப்போ தோணி இருக்கு. கிறுக்குவதில் எனக்கு காதல். எப்படியும் இங்கு வந்து விடுவேன். :grinning::grinning:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அடுத்த பயணத்திற்கு இன்னும் ஒன்பது மாதம் காத்திருந்தால் போதும் என்ற எண்ணம் என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டது. கடந்த பயணத்தை பற்றி எழுத நிறைய இருக்கிறது. அடுத்த மாதம் நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    தீம் க்கு வருகிறேன்

    நீ கற்பனை என்றால்
    நான் காட்சிப்பொருளா? மெய்ப்பொருளா?


    நீ கவிதை
    நான் கற்பனை
    உன்னை சார்ந்தே இருப்பேன்


    பாடலுக்கு வருகிறேன்
    சின்ன சின்ன கண் அசைவில் உன் அடிமை ஆகவா - தீரன் அதிகாரம் ஒன்று
     
    Thyagarajan likes this.

Share This Page