1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பாடல்களுக்கு வருகிறேன்.

    இன்று போஸ்ட் செய்யும் பாடல்களில் இருந்து ஒற்றுமையும் வேற்றுமையும் கண்டுபிடித்து சொல்லுங்கள்/எழுதுங்கள். பரிசு/பாராட்டு காத்திருக்கிறது :wink::wink:

    உன் சமையல் அறையில் - தில்
    நீ காற்று நான் மரம் - நிலாவே வா
     
    vidhyalakshmid and svpriya like this.
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,691
    Likes Received:
    1,821
    Trophy Points:
    325
    Gender:
    Female
    துப்பாக்கி பற்றி இத்தனை கேள்விகளா?

    எனக்கு சிறு வயதில் தீபாவளிக்கு கேப்பை வெடி
    வைத்து சுட்டது நினைவு வந்தது. இறுதி பாரா
    மிகவும் சரி. நம் சூழ்நிலை நம் இயல்பையே
    மற்றும் ஆற்றல் கொண்டது.
     
  3. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,691
    Likes Received:
    1,821
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Similarities
    Both songs are composed by Vidyasagar. Both have couplet answers for each thing.
    Differences
    Samayal arai lyrics by Kabilan(not Vairamuthu`s son), he is different from Kabilan V.
    Nee katru lyrics by Vairamuthu
    Un samayal song has all questions! Nee katru song has definite answers.
     
    singapalsmile likes this.
  4. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,691
    Likes Received:
    1,821
    Trophy Points:
    325
    Gender:
    Female
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சரியாக சொன்னீர்கள். சூழ்நிலை கைதிகள் - ஏற்றுக்கொள்ள கடினமான நிதர்சனம்.

    எனது சொந்த அனுபவத்தில் எனது இயல்பை மாற்றிய ஆற்றல் கொண்டதில் பெரும் பங்கு காதலுக்கு தான். எனது இனிப்பும் இதுவே எனது கசப்பும் இதுவே!! :grinning::grinning:

    ரசிக்கக்கூடிய பதில். தங்களது அருமையான பதிலுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நேரம் எடுத்து பதில் பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி.

    பாராட்டு என்றால்
    வார்த்தைகளா? கைதட்டலா?

    வார்த்தைகள் - மேலே பதிவு செய்து விட்டேன்; கைதட்டல் இதோ - :clap2::clap2: உங்களக்கு பிடித்த மாதிரி பாராட்டை ஏற்றுக்கொள்ளுங்கள்.

    பரிசு பற்றி வேறு பதிவில் கிறுக்குகிறேன்.
     
    vidhyalakshmid likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நம்ம poetic thread க்கு நெருக்கமான/ எனது மனதிற்கு என்றென்றும் நெருக்கமான தலைப்பில் பேசியது கலக்கல். நானும் உங்க அணி தான் என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை. ஆத்ம ராகம் பற்றிய IR குறிப்பு சிறப்பு. IR இசையில் இதயக்கோவில் படத்தில் வரும் அத்தனை பாடல்களும் தேனினும் இனியவை. பூவண்ணம் போல நெஞ்சம் - கேட்பதற்கு மட்டுமா? பார்ப்பதற்கும் குளிர்ச்சியான ரொமான்டிக் பாடல் அல்லவா? :wink::wink:

    உங்களது அணியில் பேச வந்து உங்களது தலைப்பிற்கு சார்பாக இன்னும் என்ன கிறுக்கி விட போகிறேன்? இங்கு நான் பதிவிடும் பெரும்பாலான ரொமான்டிக் பாடல்கள், போடற பிட் பத்தாதா? :wink::wink:

    இப்போதைக்கு ஒரு ஸ்பெஷல் பிட்.

    Wine - வயது ஏற ஏற இதன் சுவை கூடிட்டே போகும் என்பார்கள் எனக்கு தெரிந்த குடிமகன்கள்.
    அதுபோல தான் பழைய பாடல்களும். பாடல்களில் வரிகளில் இசையில் பாடுவதில் அங்கு அங்கு கிக் வருவது ஒரு ரகம். பாடல் முழுவதுமே கிக் ஆக இருந்தால்? போதை தலைக்கு மேலே ஏறாதா? இந்த பழைய பாடலை அடிச்சுக்க கூடிய ஒரு புதிய பாடலை சொல்ல முடியுமா? :wink::wink:
     
    vidhyalakshmid likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சமீபத்தில் கேட்டது - YT: படித்தவர்கள் - நீயா நானா Gopinath பார்வையில்

    என்னுடைய இன்றைய உளறல்கள்:

    படித்தவர்கள் தான் வெல்கிறார்களா? படிக்காதவர்கள் தோற்று போகிறார்களா? எது வெற்றி எது தோல்வி என்று எப்படி உறுதியாக தீர்மானிக்க முடியும்?

    படித்தால் மட்டும் போதுமா? பணம் இல்லாமல் இருந்து படிப்பு மட்டும் இருந்தால் ப்ரயோஜனப்படுமா?
    பொதுவாக யாருக்கு மரியாதை அதிகம் கிடைக்கும் - படித்து பணம் இல்லாதவர்க்கா? படிப்பு இல்லாமல் பணம் இருப்பவர்க்கா?

    படிப்பு வருகிறது. ஆனால் படிக்க பணம் இல்லை என்றால்?
    படிப்பு வரவில்லை. ஆனால் பணம் நிறைய இருந்தால்?

    படிப்பிற்கு ஏற்ற உத்யோகம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது? பொதுவாக யாருக்கு மரியாதை அதிகம் கிடைக்கும் -
    படித்து தகுந்த உத்யோகத்தில் இருப்பவர்க்கா? படித்து சற்று குறைவான உத்யோகத்தில் இருப்பவர்க்கா?

    பணம் பெரிதா? படிப்பு பெரிதா? பணி பெரிதா? இதெல்லாம் சிறப்பாக அமைந்து பண்பு இல்லாவிட்டால் ? பண்பு நிறைந்து மற்ற மூன்றும் (படிப்பு, பணி, பணம்) இல்லாவிட்டால் ?

    நாலு பேரு நாலு விதமா இல்லை, 4!, 4 power 4 வழிகளில் கன்னா பின்னாவென்று பேசுவார்கள்.
    இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி கொண்டிருக்க முடியுமா? அவரவர் சூழலுக்கு ஏற்ப சிறப்பாக வாழ்க்கையை அமைத்து கொள்வது தானே வெற்றி?

    -----------------------------------------------------------------------------

    எனது 100% தெளிவான கருத்துக்கள்

    எனது வாழ்க்கையில் எத்தனையோ நபர்களுக்கு அறிவுறை வழங்கி இருக்கிறேன்:

    1. படிக்கற வயதில் ஜாலி ஆக இருந்து படிப்பை கோட்டை விட்டு விட்டால் பின்னாடி கடைசி வரைக்கும் கஷ்டப்படணும். இப்போ கஷ்டப்பட்டு படித்தால் பின்னாடி எவ்ளோ வேணாலும் ஜாலி ஆக இருக்கலாம்
    2. படித்து பணியில் சேர்ந்தவுடன் பணத்தை பற்றி யோசிக்காதே. வேலையில் கவனம் செலுத்தி எப்படி வேலையில் முன்னேற வேண்டும் என்ற வேகம் எண்ணத்தில் இருக்கட்டும்
    3. கடமைக்காக வேலை செய்யாதே, காதலோடு செய். வேலையில் முன்னேற்றம் வரும், சம்பளம் தானாகவே உயரும்
    4. சம்பளம் மட்டுமே உனது வருமானமாக இருக்க கூடாது. பணத்தை எப்படி முதலீடு செய்வது என்பதை கற்றுக்கொள். செலவு கம்மி பண்ணாதே, எப்படி பணத்தை இரட்டிப்பு ஆக்கலாம் என்று யோசி.

    படிப்பு + பணம் + பணி = சிறப்பாக அமைத்து விட்டு பண்பை மறந்து விடாதே. 4 பபபப - மிக சரியா இருந்தால் வயதான காலத்தில் உனக்கு நீயே ஒரு சபாஷ் போட்டுக்கொள்!! நீ வெற்றியாளராக உனக்குள் உணரணும்! நாலு பேர் சொல்றத கேக்காதே இந்த நாலு pointers புரிந்துகொள்!!

    நாலு பேரில் நீயும் ஒன்று தானே என்று என்னை கேள்வி கேட்க நினைப்பவர்களுக்கு எனது பதில்: கடந்து வந்த பாதையை தானே கோடிட்டு காட்டி இருக்கிறேன். :grinning::grinning:
     
    vidhyalakshmid likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சீரியஸ் போஸ்ட் பதிவிட்டு விட்டேன். இதோ பரிசு பற்றிய ஒரு ஜாலியான பதிவு.

    நம்ம thread தொடர்ந்து படிப்பவர்க்கு ஒரு பரிசு - Feb 2024 இல்.

    உன் சமையல் அறையில் , நீ காற்று நான் மரம் பாடல்களை கேட்டவுடனே எனக்குள் ஒரு romantic பொறி. :wink::wink: இதை வைத்து தான் என்னுடைய Feb 2024 special assignment. விருப்பம் இருப்பவர்கள் பங்கேற்கலாம்.

    APK members - கொஞ்சமாவது feel பண்ண வைத்து இருப்பேன் என்று நினைக்கிறேன். இவர்களை கொஞ்சம் better ஆக feel பண்ண வைக்கலாம் என்ற ஒரு நல்ல எண்ணம் உதித்தது. எப்படி? இருகோடுகள் கொள்கை தான்: APK- அறிமுகப்படுத்தி தான். :grinning::grinning:

    APK- lines
    நான் drawing book என்றால்
    நீ crayons? paint ?

    APK lines
    நான் drawing book என்றால்
    நீ செவ்வானமா? வானவில்லா ?

    A1C lines
    நான் drawing board என்றால்
    நீ brush? sketch?

    APK- இருக்கும் போது A1C+ இருக்க கூடாதா?

    A1C+ lines
    நான் drawing room
    நீ XXXXXXXXXX ( ஒளிந்திருக்கும் வார்த்தைகள் தெரிந்து கொள்ள Feb 2024 காத்திருக்கவும்) :wink::wink:
     
    svpriya and vidhyalakshmid like this.
  9. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,691
    Likes Received:
    1,821
    Trophy Points:
    325
    Gender:
    Female
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,505
    Likes Received:
    2,496
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பணிவு? துணிவு? நல்ல தலைப்பு.

    ஆங்கில கலப்படம் இன்றி தூய தமிழில் எப்படி உரையாற்றுகறீர்கள்? வியந்து கேட்கிறேன். இயல்பாக பேசும்போதும் இப்படி தானா? இல்லை பட்டி மன்றத்தில் மட்டுமா? கெத்தாக பேசுனீர்கள். ஆணித்தரமான பேச்சு.

    அப்துல் கலாம் - எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர். Rocket science என்றால் சும்மா வா ? அங்கு பணிவிற்கு என்ன வேலை? எல்லாமே துணிவு தான்.

    நேர்முக தேர்வில் பணிவை காட்டிலும் துணிவை தூக்கி நீங்கள் பேசியது எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. எனது கல்லூரி நாட்களில் நான்காவது ஆண்டு துவங்குவதற்கு முன்பே நடந்த முதல் நேர்முக தேர்வில் 0 பணிவு + 100 துணிவு கொண்டு பேசி முதல் வேலை கிடைத்த அந்த நேர்முக தேர்வு நாள் இன்னும் பசுமையாக எனக்கு நினைவிருக்கிறது. வீண் வம்பில் மாட்டாத எதையும் எதிர்க்கொள்ளும் துணிச்சல்காரி என்ற பெருமிதம் எனக்குள் எப்போதுமே உண்டு. :grinning::grinning:
     
    vidhyalakshmid likes this.

Share This Page