1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பொறுமையாக படித்து கமெண்ட்ஸ் எழுதுவதற்கு உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். பெரும்பாலும் தனி ஆளாக தான் இங்கு அரங்கேற்றம் நடக்கும். அதுவும் பிடிக்கும். உரையாடலும் பிடிக்கும். :grinning::grinning:

    என்னோடது நல்ல தமிழ். சுத்த தமிழ் என்றெல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டேன். எனது கொள்கை இதுவே: நான் பேசுவதோ எழுதுவதோ அடுத்தவர்க்கு புரியாமல் இருந்தால் அது எனது பேச்சிற்கும் எழுத்துக்கும் கிடைத்த தோல்வி. தோல்விக்கு இடம் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன். பேச்சிலும்/எழுத்திலும் எளிமையான நடை என்னுடையது. (வாழ்க்கை முறையிலும் தான்)


    மிகைப்படுத்திய பாராட்டிற்கு மறுபடியும் நன்றி. பொருத்தமான பாடல் வரிகளை தேர்ந்து எடுத்து போடுகிறீர்கள். அதற்கும் இன்னொரு நன்றி.

    பரபரப்பான ஒரு பக்க சிறுகதை படித்த மாதிரி இருந்தது. குறும்படம் எடுக்கலாம்.

    பூஜை புனஸ்கரம் விரதம் இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது. ஆன்மிகம், மதத்தில் எந்த ஈடுபாடும் கிடையாது. என்னோட மனசாட்சிக்கு நான் ஒழுங்கா நடந்துக்கணும். அவ்வளவே!

    எழுதறது கம்மி தான். நான் நிறைய பேசுவேன். ஆனால் ஆன்மிகம் என்ற பேச்சை யாரவது எடுத்தால் அந்த இடத்தில ஒரு வார்த்தை பேச மாட்டேன். ஓடி விடுவேன்.

    An excerpt from the link you have provided:

    ChatGPT noted:

    “One of the main risks is increased competition in the smartphone market, as other manufacturers introduce new models and technologies that compete with Apple’s products. Additionally, regulatory changes, economic downturns, and other factors could all impact the future growth of Apple’s stock price.”

    இந்த ChatGPT B-school notes அப்படியே பிட் அடித்து இருக்கிறது. மேல சொன்னது AAPL க்கு மட்டும் பொருந்துமா என்ன? எல்லாத்துக்கும் இதே notes தான்.

    Apple car, Apple glasses, Apple AR headset - இது பற்றி ChatGPT என்ன நினைக்கிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கலாம்.

    WB சும்மாவா இவ்ளோ AAPLs வைத்து இருப்பார்? Apple's financial statements - கண்ணில ஒத்திக்கலாம் போலிருக்கும். :grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
    ஒள்ளமர்க் கண்ணாள் குணம்


    மு.வரதராசன் விளக்கம்:
    போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே!

    சாலமன் பாப்பையா விளக்கம்:
    ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.

    குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா - கரகாட்டக்காரன்
    மறந்தால் தானே நினைக்கனும் மாமா
    நினைவே நீதானே நீதானே

    நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம் மறப்பதில்லை
    நெஞ்சம் மறப்பதில்லை
    அது நினைவை இழக்கவில்லை

    எனக்கு தெரிந்தவரை பெரும்பாலான பெண்கள் ரொமான்டிக் புத்தகங்கள் படித்து கனவுகளை வளர்த்துக்கொண்டு கணவரது நினைப்பில் 24*7 இருப்பார்கள். வள்ளுவரின் குறள் கணவனது நினைப்பில் 24*7 மனைவி என்று சொல்கிறதே. இது எப்படி சாத்தியம் என்று யோசித்தேன்?

    குறளில் விளக்கத்தில் க்ளூ இருக்கிறது - 'போர் செய்யும் பண்புகள்', 'ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்கள்'. இந்த கணவன் ஒரு முறை மனைவியின் பிறந்த நாளையோ தங்களது திருமண நாளையோ ஏதோ அதிமுக்கிய தினத்தையோ ஒரு முறை மறந்து இருக்கலாம் - வன்முறையில் இறங்கியோ/ ஒளி பொருந்திய கண்களாலோ இவரது மனைவி செமயா மிரட்டி இருப்பாரோ? அந்த ஒற்றை அனுபவம் இவரை 24*7 alert ஆக வைத்து இருக்கிறதோ? :wink::wink:
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
    பழிகாணேன் கண்ட இடத்து.


    மு.வரதராசன் விளக்கம்:
    மை தீட்டும் நேரத்தில் தீட்டுக் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

    சாலமன் பாப்பையா விளக்கம்:
    முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.

    மீனம்மா - ஆசை

    சின்னச் சின்ன ஊடல்களும்
    சின்னச் சின்ன மோதல்களும்
    மின்னல் போல வந்து வந்து போகும்
    ஊடல் வந்து ஊடல் வந்து
    முட்டிக் கொண்டபோதும்
    இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்

    திருமணமான பெண்கள் எல்லோரிடமும் ஒரு தராசு கொடுத்து தங்கள் கணவரிடம் இருக்கும் நல்ல விஷயங்களை ஒரு தட்டிலும் தவறான விஷயங்களை (குற்றங்கள்) இன்னொரு தட்டிலும் வைத்து எடை பார்க்க சொன்னால் என்ன நடக்கும்? குற்றங்கள் தாங்கிய தட்டு எடை தாங்காமல் விழுந்து விட்டது என்பது தானே பொதுப்படையான பதிலாக இருக்கும்? :wink::wink: (மனைவி பூதக்கண்ணாடி போட்டு பார்த்தால் கணவனின் சின்ன குறைகளும் பெரிதாக தானே தெரியும் என்பது வேறு விஷயம்.)

    என்ன தீர்வு? குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. மனைவியின் மனதில் காதல் துளியாவது இருந்தால், அந்த காதலுக்காக கணவனை மன்னித்து விடலாம். காதல் மறைந்து வருடங்கள் கடந்து விட்டது என்றால் என்ன செய்வது என்ற ஒரு நியாயமான கேள்வி எழும்பலாம். அப்படி இருந்தால் கடனுக்காக (பூர்வ ஜென்மத்து கடன்) மன்னித்து விடலாம். மன்னிக்கவே முடியாதது என்றால் உங்களுக்கு எந்த முடிவு சரியென்று படுகின்றதோ அந்த முடிவை தைரியமாக எடுத்து கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே - தனியாக என்றாலும் சேர்ந்தே என்றாலும்!!
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
    கண்நிறை நீர்கொண் டனள்.


    மு.வரதராசன் விளக்கம்:
    இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.

    சாலமன் பாப்பையா விளக்கம்:
    காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.

    ஒன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை - விருமாண்டி

    உன் கூட நான் கூடி இருந்திட
    எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
    நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமியே

    (என்ன கேட்குற சாமிய?
    நூறு ஜென்மம் உன் கூட போதுமா?)

    நூறு ஜென்மம் நமக்கு போதுமா
    வேற வரம் ஏதும் கேட்போமா?
    சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

    அடுத்த ஜென்மத்திலும் இதே துணை வேண்டும் என்று எத்தனை தம்பதிகள் ஆசைப்படுகிறீர்கள்? இந்த ஜென்மத்தில் எத்தனை வருடங்கள் சேர்ந்து எவ்ளோ பட்டிருப்போம்; பழக்கப்படுத்தி இருக்கிறோம்; பழகி கொண்டிருக்கிறோம். இன்னொரு நபரை தேர்ந்து எடுத்து மறுபடியும் முதல இருந்து ஆரம்பிக்கனுமா?
    "A known wife/husband is better than an unknown angel/prince charming." இந்த சூட்சுமத்தை உணர்ந்தவர்கள்
    புத்திசாலிகள். :wink::wink:

    இந்த ஜென்மத்தில் பட்டது போதாதா? அடுத்த ஜென்மத்தில் திருமணமே வேண்டாம் என்று நினைப்பவர்கள்
    அதிபுத்திசாலிகள். :wink::wink:

    நம்மால் பிறரை மாற்ற முடியாது. ஆனால் நம்மை மாற்றிக்கொள்ள முடியும். ஆணோ பெண்ணோ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நொண்டி அடித்து நிற்காமல் தனித்துவத்தை இழக்காமல் முடிந்தவரை உங்களை மாற்றி உங்களுக்கும் உங்களது துணைக்கும் பிடித்த வாழ்க்கையை இந்த ஜென்மத்திலேயே வாழுங்கள் என்ற
    வாழ்த்துக்களுடன் இத்துடன் எனது Feb 2023 Special Assignment முடித்து கொள்கிறேன்!! :grinning::grinning:
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  5. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,707
    Likes Received:
    1,848
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Missed this thread ! Veda, you can submit a research paper -திருக்குறளும் திரை இசையும் (காதல் பாடல்கள்). Super ma! I want to read and grasp all these kurals , because we never read it in our school syllabus:blush:. Songs are also very apt.
     
    singapalsmile and Thyagarajan like this.
  6. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,346
    Likes Received:
    13,099
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:
    Indeed. I am with you @vidhyalakshmid
    This thesis of love spectrum covers entire gamut of emotions which only a thespian actor Shivaji Ganesan & a svelté நாட்டியப் பேரொளி பத்மினி could emote.

    A doctorate or & PhD befits veteran
    @singapalsmile for her painstaking seminal & rare effort & contribution. Moderators @Cheeniya & @Rihana may kindly make a note of it and do the needful please. (elsewhere sister Rihana written beautiful note about the Kural and awarded the monthly title for fine post to madam sister @jayasala42).
     
    singapalsmile and vidhyalakshmid like this.
  7. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,346
    Likes Received:
    13,099
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I read it in the link. I too bet on WB chosen stocks at times. Previously for BSE i sometimes used to copy late
    Ace investor Rakesh Jhunjhunwala, known as the 'Big Bull' of Dalal Street, who passed away at the age of 62 in Mumbai following a cardiac arrest.
    He was unerring in picking stock when market shun it. Here too his portfolio
    Invariably worth iris touch.

    I deliberately hid part of my comments within the highlighted portion above.
     
    singapalsmile likes this.
  8. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,346
    Likes Received:
    13,099
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Her Stare is not necessarily restricted to only occasions like Birth or and wedding anniversary. When DH OPENS. His mouth to comment in a party she cuts through his sentence that begins with a macabre stare. Indeed I remember many of spouse’s such stare events even after decades. One such stare stated in
    Spouse, Sambandhi & Uppuma
    Thanks & Regards.
     
    singapalsmile likes this.
  9. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,346
    Likes Received:
    13,099
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:யதார்த்த நிலை.
    ஜென்மம் என்ற வார்த்தை தங்களை வாசுகியாக நினைக்க வைக்கிறது. திருவள்ளுவர் இல்லத்தரசியாக ஒரு ஜென்மத்தில் இருந்து அவரை கண்ணால் செம்மையாக மிரட்டி இருப்பீரோ என்று.
    இதை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது. மீண்டும் தொடர்க..
    நன்றி சொல்ல வார்த்தை இல்லை என்னிடம்
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,510
    Likes Received:
    2,507
    Trophy Points:
    338
    Gender:
    Female
    மிக்க நன்றி V. எனக்கு மிகவும் பிடித்த பொழுபோக்கு - ரிசர்ச் பண்ணறது - வேலை /வெட்டி வேலை சம்பந்தமா இருந்தாலும் சரி.

    பள்ளி நாட்களில் திருக்குறளின் மூன்றாம் பால் எனது எண்ணத்தில் துளியும் இருந்திருக்கவில்லை. அப்போது பாடல்கள் ஒன்று கூட தெரியாது. இன்று இங்கே நான் கடந்து வந்து இருக்கும் பாதையை நினைத்தால் மலைக்க வைக்கிறது.:wink::wink:

    சந்தோசம் ஆக இருந்தாலும் பாடல்கள் கேட்பேன். சந்தோசம் இரண்டு மடங்காக தோன்றும். துக்கமாக இருந்தாலும் பாடல்கள் கேட்பேன். துக்கம் பாதிக்கு மேல் குறைந்து விடும்.

    உடல் நிலை குறைவு மனது சரியில்லாமை - எந்த நிலையிலும் தமிழ் ரொமான்டிக் பாடல்கள் தான் எனக்கு இதுவரைக்கும் தலையாய மருந்து.

    உண்மையான உலகத்தில் இருந்து எனது கற்பனை உலகிற்கு பாடல்கள் என்னை கடத்தும். எனது கற்பனை உலகத்தில் நான் வசிக்கும் நேரங்கள் மிகவும் ரசனையானவை. இப்படியே ஒரு மாதிரி மஜாவான நிலையில் இருந்துவிடலாம் என் தோணும். ஆனால் எனது லாஜிக் மண்டை குறுக்கிட்டு எனது கற்பனை நிலைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்து விடும். காதல் பாடல்களும் எனது கற்பனையும் னு பதிவு போட்டால் கிறுக்குவதற்கு இடம் போதாது. :grinning::grinning:
     
    vidhyalakshmid likes this.

Share This Page