1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    பங்கு பெற்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதிற்கு மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டது ஏற்புடையதாக இருந்தது. நான் அதிகம் ஏற்றுக்கொண்டது /அதிக மதிப்பெண்கள் எனது பார்வையில் பெறுவது:

    இளம் தம்பதியினர்
    1. வசந்தத்தின் வாசலில் இருப்பதால் புதுமையை காணும் ஆர்வத்தில் மகிழ்ச்சி

    முது தம்பதியினர்
    1. வாழ்வின் ஏற்ற தாழ்வுகளைப் பார்த்து விட்டதால், மனப்பக்குவம்
    அடைந்து விட்ட மகிழ்ச்சி

    மற்ற கருத்துக்களுக்கு எனக்கு கொஞ்சம் மாற்றுக்கருத்து இருக்கிறது. சீரியஸ் என்பதால் எழுத மனம் வரவில்லை.

    தாங்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் அனுபவம் இனிதாக அமைய வாழ்த்துக்கள். விவரங்களை பார்த்த பிறகு எனது கருத்துக்களை முன்வைக்கிறேன்.
     
    vidhyalakshmid likes this.
  2. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,783
    Likes Received:
    12,618
    Trophy Points:
    615
    Gender:
    Male
    படித்து ரசித்தேன். Three colourful monkeys - doll was my paperweight in my office desk.
    அற்புதமான பாராட்டு. பாட்டால் பாராட்டு தன்தால் இன்னும் அற்புதம்.
    நன்றி.
    God Bless.
     
    vidhyalakshmid and singapalsmile like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வார தீம் #2 - பட்டிமன்றம்

    அதிகமாக சந்தோசமாக இருப்பவர்கள் - இளம் தம்பதிகளா? முதுமையான தம்பதிகளா?

    இளம் தம்பதிகள்
    1) Fantasy world - இருவருக்குமே எண்ணற்ற வண்ண வண்ண வானவில் எண்ணங்கள். கணக்கில் அடங்கா ஆசைகள். "நான் தான் உன் உலகம்; நீ தான் என் உலகம்" என்ற மாய உலகத்தில் கவலையற்று வாழ்வது சிற்றின்பம்/பேரின்பம்.
    2) புதுக்கவிதை - இலக்கணம் அறிந்திருக்க வேண்டாம். ஆழ்ந்த மொழித்திறன் வேண்டாம். பொருள் இருக்கலாம் இல்லாமல் போகலாம். நாம எழுதறது தான் புதுக்கவிதை. இளம் கன்றுகள் பயம் அறியுமா? எல்லை கோட்டுக்குள் அடங்காமல் தாறுமாறா புதுக்கவிதை போல வாழ்க்கை நகர்வது த்ரில்லிங்கான அனுபவம் ஆனந்தம் இல்லையா?
    3) களிமண் பொம்மைகள் - ஒருவருக்கு பிடித்தமாதிரி உருவம் பிடிக்கலாம். உருவம் பிடிக்காவிட்டால் கலைத்துவிட்டு வேறு உருவம் பிடிக்கலாம். தன்மை மாற்றலாம். அடுத்தவர் சந்தோஷத்திற்காக மாற்றி மாற்றி பிடித்த மாதிரி இருக்க முயல்வது வரவேற்க தகுந்த விஷயம்/ மிகுதியான சந்தோசத்திற்குரியது.

    கதைகளை பேசும் விழி அருகே - அங்காடி தெரு

    கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
    வருகிற வாசனை நீயல்லவா
    உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
    சர்க்கரை தடவிய நொடியல்லவா

    உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
    எந்தன் உலகம் முடிகிறதே
    உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
    எந்தன் நாட்கள் விடிகிறதே


    முதுமையான தம்பதிகள்
    1) Realistic world - நடைமுறை அறிந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு தனித்தன்மையோடு அவரவராக ஏற்றுக்கொள்வது. "எனக்கென்று ஒரு உலகம் இருக்கிறது; உனக்கென்று ஒரு உலகம் இருக்கின்றது; நமக்கென்று ஒரு உலகம் இருக்கின்றது" என்று personal space கொடுத்து வாழ்வது கோடானு கோடி இன்பம் அல்லவா சுதந்திரப்பிரியர்களாக இருவரும் இருந்து விட்டால்.
    2) மரபுக்கவிதை - இலக்கண விதிகளுக்கு உட்பட்டது. பொருள் புரிந்துகொள்வது கடினம். புரிந்துவிட்டால் கிடைக்கும் சுகம் அலாதியானது. எல்லை கோடுகள் வகுத்து திட்டமிட்டு முறையாக வாழ்க்கை சீராக நகர்வது ஆனந்தம் இல்லையா?

    3) செதுக்கப்பட்ட சிலைகள் - தனித்துவமான உருவங்கள். தன்மை இயல்புகள் மாறாது. எந்த வித திணிப்பும் இன்றி தத்தம் இயல்போடு இருந்தாலும் இன்னொருவரை காயப்படுத்திவிட கூடாது என்று கவனம் செலுத்தி நடந்துகொள்ளும் வாழ்வு கொடுப்பினை அல்லவா? வயதான காலத்தில் காயம் தரும் வலியை தாங்க இயலாது. காயப்படாமல் வாழ்வது சந்தோசம்.

    உனக்காக பொறந்தேனே எனதழகா - பண்ணையாரும் பத்மினியும்

    உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க
    போனா என்ன போகாது
    உன்னோட பாசம்

    எனக்காக பொறந்தாயே எனதழகி
    இருப்பேனே மனசெல்லாம்
    உன்னை எழுதி
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi T,

    எப்படி இருக்கீங்க? தங்களது உள்ளமும் உடலும் நலமா? தங்களது வருகை எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. தங்களது பதிவு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது. மிக்க நன்றி. நேரம் அமையும்போது இங்கு வருகை தாருங்கள். பொன்னான கருத்துக்களை அள்ளி தெளித்து விடுங்கள்.
     
    Thyagarajan likes this.
  5. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,783
    Likes Received:
    12,618
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:அருமையான
    வரவேற்ப்பு . மயில் இரகால் தடவி பொன்னாடை போர்த்தி கையில் கனமான ரோஜா
    மாலையுடன் வரவேற்றது
    போல் கற்பனையில் மகிழ்ந்தேன்.
    நலம். நன்றி. அவ்வப்போது கருத்து தெளிக்கப்படும்.
    பொன்னா பித்தளையா மதிப்பிட வேண்டும் தாங்கள் தான்!
     
    vidhyalakshmid and singapalsmile like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வார தீம் #3 - ஐம்புலனும் காதலும்!

    Happy V-week!! இது தான் V-day's ஸ்பெஷல் போஸ்ட். ஐம்புலன் அடக்கம் வாழ்வில் எங்கேயோ கொண்டு நிறுத்தும். ஆனால் காதல் என்று வந்து விட்டால் ஐம்புலன் அடங்காமை தான் காதலை எங்கயோ கொண்டு நிறுத்தும். :wink::wink:

    கண் - கண்கள் இல்லாம காதலா? கண் ஜாடை, கண் அசைவு, கண் அடித்தல், கண்களால் கட்டி இழுத்தல், கண்ணாலே கரெக்ட் பண்றது, கண்களில் கிறக்கம் என்று எப்படி எல்லாம் கண்கள் ஜாலம் பண்ணலாம்.

    கள்வரே கள்வரே - ராவணன்

    என் ஆசை நானா சொல்வேன்
    என் ஆசை நீயே சொன்னால்
    கண்ணாலே ஆமாம் என்பேனே

    எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ - பார்த்தேன் ரசித்தேன்

    உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன்
    அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்
    கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி

    காது - காதுகள் கேட்காத காதல் பேச்சுகளா? ரசிக்காத ரொமான்டிக் பாடல் வரிகளா? ரகசிய சிநேகிதன் காதில் சின்ன சின்ன காதல் ஹைக்கூ கோரிக்கைகள்/'கடி' ஜோக்ஸ்கள். (கடைசியா சொன்னதில் சில வன்முறையாளர்கள் ஜோக்ஸ் விட்ருவாங்க :wink::wink:)

    சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே - அலை பாயுதே

    சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே
    சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே

    காதோடுதான் நான் பாடுவேன் - வெள்ளிவிழா

    காதோடுதான் நான் பாடுவேன்
    மனதோடுதான் நான் பேசுவேன்
    விழியோடுதான் விளையாடுவேன்
    உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

    மூக்கு - வாசனை/ நறுமணம் பிடிக்க வேண்டாமா? தலைவியின் மல்லிகை வாசனையும் தலைவனின் ஷர்ட் வாசனையும் நுகர வேண்டாமா? மூக்குத்தியால் செல்லமா குத்த வேண்டாமா? மூச்சு காத்தின் வெப்பம் சுமக்க வேண்டாமா?

    குண்டுமல்லி - Album

    குண்டுமல்லி நீ பூத்து குலுங்க
    உன் கொடியா நானும் ஆவேனோ
    குண்டு மல்லி நீ கொஞ்சி சிணுங்க
    உன் நினைப்பில் கெறங்கி போவேனோ

    அவ மூக்குத்தியும் ஜோரா
    என்னைக் கொத்தும் சுக்குநூறா
    அழகா அழகா
    சொக்க வச்ச உன் நேசம் அடியே
    குண்டு மல்லி உன் வாசம்

    அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும் - கிரீடம்

    நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி
    நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலை கோதி
    காதோரதில் எப்போதுமே உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமைப்பேன்

    வசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே

    எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
    சில சமயம் விளையாட்டாய்
    உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

    வாய் - கடலை போடாம காதலா? ஆசை முத்தம்/மீசை முத்தம் சொல்லாம விட்டுவிட்டால் காதல் குத்தம் ஆய்டும். பாடியும் உறங்க வைக்கலாம்; படுத்தியும் உறங்க வைக்கலாம் :wink::wink:

    சங்கீத ஸ்வரங்கள் - அழகன்

    நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
    நானும்தான் நெனச்சேன்
    ஞாபகம் வரல
    யோசிச்சா தெரியும்
    யோசனை வரல
    தூங்கினா விளங்கும்
    தூக்கந்தான் வரல
    பாடுறேன் மெதுவா உறங்கு

    எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்
    துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா
    சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம்
    இன்று தான் வந்தது

    இதழில் கதை எழுதும் நேரமிது - உன்னால் முடியும் தம்பி

    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது

    நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி - புதிய மன்னர்கள்

    நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே
    உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே

    மெய் - ஸ்பரிசம். மேலே சொன்னது புள்ளிகள். புள்ளிகள் அனைத்தையும் நேர்த்தியாக ரசனையாக இணைத்தால் திருவிழா கோலம் தானே?

    என்ன இது என்ன இது என்னை கொல்வது - நளதமயந்தி

    என்ன இது என்ன இது என்னை கொல்வது
    என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

    புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
    புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
    நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ

    தொட தொட மலர்ந்ததென பூவே - இந்திரா

    தொட தொட மலர்ந்ததென்ன
    பூவே சுட சுட நனைந்ததென்ன

    பார்வைகள் புதிது
    ஸ்பரிசங்கள் புதிது
    நரம்புகள் பின்ன பின்ன
    நடுக்கம் என்ன

    தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் - என் ஸ்வாச காற்றே

    தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
    ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
    என் நரம்போடு வீணை மீட்டியதே
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi T,

    அழகான பதிவு. ரசனையான வர்ணனை. படித்ததில் பரவசம். மிக்க நன்றி.

    வாழ்க்கையில் அனுபவம் கற்றுக்கொடுக்கும் பாடங்களை விட சிறந்ததாக வேறு எந்த பாடமும் இல்லை என்று நான் சொல்வேன். நீங்கள் ரொம்பவே பழுத்த அனுபவசாலி. நான் கத்துக்குட்டி. உங்களது அனுபவத்தை எட்டி பிடிக்க இன்னும் சுமாராக 35 to 40 வருடங்கள் நான் கடக்க வேண்டும் என்று தோராயமாக கணக்கிடுகிறேன்.

    தக்க வார்த்தைகள் கொண்டு வரும் தங்களது கருத்துக்கள் உள்ளத்தை உருக்குபவை. அவற்றை பொன்னா பித்தளையா என்று மதிப்பிட நான் பொற்கொல்லர் அல்ல. நான் எனது வேலையை அதிகம் நேசிக்கிறேன் தொழில் மாற்ற துளியும் விருப்பமில்லை. :grinning::grinning:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    பட்டிமன்ற தலைப்பு இந்த மாதத்திற்கு வெகு பொருத்தம். மண்ணில் இந்த காதலன்றி என்று பாடலுடன் பட்டிமன்றம் நீங்கள் ஆரம்பித்தது நன்று. தாயகத்தில் வாழ்ந்த தம்பதிகள் அந்நிய தேசத்தில் வாழ்ந்த தம்பதிகள் என்று இரண்டு பக்கமும் உதாரணம் கொடுத்தது நன்று. Karl marx-Jenny காதல் பற்றி நான் ஏற்கனவே கேட்டு இருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டு பேசியது ஆச்சர்யமாக இருந்தது. சங்க கால இலக்கியத்தில் இருந்து பொருத்தமான குறிப்புகளை சேகரித்து உங்களது பேச்சில் சேர்த்து கொள்வது சிறப்பு. எல்லா தரப்பு பெண்களையும் குறிப்பிட்டு பெண்கள் காதலை போற்றுவதில் சிறந்தவர்கள் என்று வாதிட்டதிற்கு பாராட்டுக்கள்.

    கண்ணகி கோவலன், Mrs. நளாயினி, சாவித்ரி சத்தியவான், வாசுகி வள்ளுவர் அவர்களை எல்லாம் குறிப்பிடாமல் விட்டதிற்கு நன்றி. :wink::wink:

    எந்த பக்கத்தில் நான் நிற்கிறேன் என்பது எனது அடுத்த பதிவில். என்னை கேட்டால் காதலில் அதிகம் பல்பு வாங்குபவர்கள் பெண்களா? ஆண்களா? என்று தலைப்பை மாத்தி வைத்து கொள்ளலாம் என்று சொல்வேன். :wink::wink:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  9. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,663
    Likes Received:
    1,782
    Trophy Points:
    325
    Gender:
    Female
    :grinning::grinning:
    கண்ணகியை பற்றி மற்ற பேச்சாளர் பேசுவார் என்ற சின்ன
    ஊகம் இருந்தது, சரியாகவும் இருந்தது. தங்களின் விமர்சனம்
    செய்யும் பாங்கும், தேர்ந்தெடுக்கும் சொல் ஆக்கமும் சிறப்பு.
    கடைசி தலைப்பு சிரிக்க வைக்கும் , அடுத்த ஆண்டு யாராவது
    ஆலோசனை கேட்டால் சொல்வேன். நன்றி வேதா!
     
    singapalsmile and Thyagarajan like this.

Share This Page