1. What Movie Did You Watch Today? : Post Here
  Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

 1. vidhyalakshmid

  vidhyalakshmid Platinum IL'ite

  Messages:
  2,319
  Likes Received:
  1,300
  Trophy Points:
  290
  Gender:
  Female
  THANIMAYILE ORU RAAGAM || தனிமையிலே ஒரு ராகம் || HD - YouTube
  பாடல் வரிகளும், சுரேந்தரின் குரலும், சங்கர் கணேஷின்
  இசையும் 2 நாட்களாக பல முறை கேட்க வைக்கிறது.
  பள்ளிக்காலத்தில் கேட்டிருந்தாலும், இப்போது சுரேந்தரின்
  குரல் வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் இளைய தளபதி
  விஜயின் மாமா.(விக்கிபீடியா )
   
  maalti, singapalsmile and Thyagarajan like this.
 2. vidhyalakshmid

  vidhyalakshmid Platinum IL'ite

  Messages:
  2,319
  Likes Received:
  1,300
  Trophy Points:
  290
  Gender:
  Female
  பெண்களுக்கு நினைத்த சுதந்திரம் கிடைத்ததா ? தமிழால் இணைவோம் கருத்தரங்கம் - செப். 4,2021

  பெண்கள் கருத்தரங்கம் - YouTube
  தங்கள் கருத்துகளை சொல்லவும்!
   
  singapalsmile and Thyagarajan like this.
 3. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,306
  Likes Received:
  2,192
  Trophy Points:
  338
  Gender:
  Female
  Hi V,

  எப்படி இருக்கீங்க? தங்களது வருகைக்கும் பதிவுகளுக்கும் நன்றி. அருமையான வரிகளை குறிப்பிட்டு சிந்தனையை கொழுந்து விட்டு எரிய செய்றீங்க. நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். நல் வரிகள் படித்து மனதில் உள்வாங்கி கொண்டால் மட்டும் பத்தாது. செயலிலும் வெளிப்படுத்த தக்க முயற்சி எடுக்க வேண்டும். அப்போ தான் பெர்சோனாலிட்டி மெருகேறும். அறிவை விரிய வைக்கணும். விசால பார்வையும் இருக்கணும். அப்போ தான் முன்னோக்கி செல்ல முடியும்.


  பல வருடங்களுக்கு பிறகு இந்த பாடலை கேட்கிறேன். குரல் வளம் நடிகர் மோகனை நினைவு படுத்தியது. சுரேந்தர் நடிகர் மோகனுக்கு பல படங்களுக்கு டப்பிங் கொடுத்தவர் என்று தெரிந்து கொண்டேன். வசீகரிக்கும் குரல் வளம்.


  தலைப்பு நன்று. பேச்சும் நன்று. உங்களது குரல் வளம் பாடலுக்கும் பொருந்துகிறது.

  ஆணிற்கும் பெண்ணிற்கும் விளையாட்டில் எல்லை கோடுகள் தொடுவதில் இருக்கும் வித்யாசம் பற்றி குறிப்பிட்டது புதுமையாக இருந்தது.

  Sara's படம் பற்றிய கருத்து எனக்கு நெருக்கமானது. படம் பார்க்கும்போது அப்படி ஒரு சந்தோஷம். ஒற்றை ஆளாக எடுக்க கூடிய முடிவல்ல. சம்பந்தப்பட்ட இருவருக்கும் உடன்பாடு இருப்பது 100% அவசியம். அந்த படத்தில் டாக்டர் சொன்ன ஒரு கருத்து க்ளாஸ். கை தட்டி விசில் அடிக்க தோணுச்சு.

  இப்போ விவாதத்திற்கு வருகிறேன். உங்கள் கருத்துக்கு எதிராக :

  1) அந்த காலத்து பாண்டி நொண்டி விளையாட்டில் இன்னும் இருக்காதீங்க. காலம் எவ்ளோவோ மாறி விட்டது. நான் சமீபத்தில் WA la பார்த்த ரசித்த விளம்பரம். எல்லை கோடுகள் தகர்க்கப்பட்டு விட்டது.

  Cadbury's Dairy Milk - Old Ad
  Cadbury's Dairy Milk - Latest Ad

  2) தாம்பாள தட்டில் வைத்து பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்படுமா என்ன? சுதந்திரமாக தான் இருப்பேன் / நடப்பேன் என்கிற சுயமான சிந்தனை பெண்களுக்கு வேண்டும். எதிர்ப்பு வந்தால் எதிர் நீச்சல் போட தெரியணும்.

  3) அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கை கணவர் குழந்தை நண்பர்கள் - இவர்களை எப்பவும் சார்ந்து இருக்கும் எண்ணம் ஒரு வகையான அடிமைத்தனம் என்னை பொறுத்தவரை. ஒரு பெண் தன்னை தான் முதலில் சார்ந்து இருக்கணும். இந்த அடிப்படை எண்ணம் ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் பெண்கள் சுதந்திர பிரியர்கள். சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.
   
 4. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,306
  Likes Received:
  2,192
  Trophy Points:
  338
  Gender:
  Female
  பூ, பூங்காத்து, பூஞ்சோலை, கோடை காற்று, மலையோரம் என்று இயற்கை மணம் கமழும் ரம்மியமான பாடல்கள். IR இசையும் இயற்கையில் ஒன்றாக சேர்த்துக்கொள்ளலாம்.

  MV songs Playlist 63

  பூவே இளைய பூவே - கோழி கூவுது
  பூங்காத்து திரும்புமா - முதல் மரியாதை
  ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் - மண் வாசனை
  கோடை கால காற்றே - பன்னீர் புஷ்பங்கள்
  மலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்
   
  Thyagarajan likes this.
 5. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,306
  Likes Received:
  2,192
  Trophy Points:
  338
  Gender:
  Female
  மணம் ஆன ஆண்களின் யோசிக்கும் திறன் பற்றி சமீபத்தில் எழுதி இருந்தேன். சமீபத்து உதாரணம் ஒன்னு வேண்டாமா? :wink::wink:

  பத்து நிமிடங்களுக்கு அர்ச்சனை கொடுத்தாச்சு.

  பத்து நிமிடங்கள் கழிந்த பிறகு, நிதானமான குரலில், நீ என்னை திட்டறயா?

  (Mind voice: திட்டறேன் னு புரியறதுக்கு பத்து நிமிஷங்கள் ஆச்சு. செஞ்ச தப்ப புரிய வைக்க எவ்ளோ நேரம் ஆகுமோ? எப்படியும் சொல்லி திருந்த போறது இல்லை. பட்டு தெரியட்டும்/ தெளியட்டும்.. நேரத்தை உபயோகமா யூஸ் பண்ணனும்.)

  தப்பு செஞ்சா திட்ட தான் செய்வாங்க. என்ன பண்றது ? முதல் காதல் ஆச்சே. என்ன பண்ணாலும் இந்த காதல் போக மாட்டேங்குது. காதல் அத்தனையும் சகிக்க கற்றுக்கொடுக்கிறது. 143.

  குறிப்பு: கடைசியில் எக்ஸ்ட்ரா பிட் எதுக்கு னு யோசிக்கறீங்களா? திட்டி விட்டு சமாதானப்படுத்த குழந்தைக்கு சாக்லேட் குடுப்பது போல. திட்டினது மனசுல நிக்கணுமா? காதலை மனசுல நிலை நிறுத்தணுமா? :wink::wink:
   
  vidhyalakshmid and Thyagarajan like this.
 6. rgsrinivasan

  rgsrinivasan IL Hall of Fame

  Messages:
  10,264
  Likes Received:
  9,937
  Trophy Points:
  540
  Gender:
  Male
  17. புத்தகங்கள் எனக்குள் நிறைய நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன / வருகின்றன. ஒரு செய்தியை எப்படி சொல்ல வேண்டும் என்பதில் இருந்து ஒரு நாளில் என் செயல்களை எவ்வாறு திட்டமிடலாம் என்பது வரை, ஆங்கிலத்திலும், தமிழிலும் மொழியறிவும், சிந்தனையும் மேம்பட, இவற்றின் பங்கு மிகுதி.
  சுய முன்னேற்றப் புத்தகங்களை விரும்பிப் படிப்பதுண்டு. மேலாண்மை மற்றும் மனஓட்டம் தொடர்பான பல புத்தகங்களும் படிப்பதுண்டு. புனைவின் மிகப் பெரிய விசிறியும் கூட.

  18. காதலோ, பக்தியோ அன்றி வேறெதுவோ, அதில் முழுமையாகத் திளைக்கும் போது பித்து நிலை வருவது இயல்பே. ஆயினும், நான் முன்பே சொன்னது போல, நம் செயல்களை ஒரு மையச் சரடாக வைத்துக் கொண்டால், அவை தன்பாட்டில் நிறைவேறிக் கொண்டிருக்கும். பித்து நிலையும் தனிச் சரடாக ஓடிக் கொண்டிருக்கும். பொதுவில், தன்னை இழந்து கொண்டே இருப்பது எளிதல்ல. அது ஒரு மேலான காரணத்துக்காக இல்லாது போனால். ஏதோ ஒரு கட்டத்தில் வருந்த நேரிடும். -rgs
   
  singapalsmile and Thyagarajan like this.
 7. rgsrinivasan

  rgsrinivasan IL Hall of Fame

  Messages:
  10,264
  Likes Received:
  9,937
  Trophy Points:
  540
  Gender:
  Male
  என்றைக்கும் இனிமையான இளையராஜா பாடல்களில் ஒன்று - தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது நம்பி! - வாலியின் இனிய வரிகளும், இராமாயணத்தை பாட்டில் நுழைத்த அழகும், அனைத்து நடிகர்களும் மிகையின்றி நடித்ததும், காட்சியமைப்பில் குறும்பும், தெளிவும், இராஜாவின் மயக்க வைக்கும் எளிமைப்படுத்தப்பட்ட இசைக்கு அருகே வர முயன்றன. கார்த்திக் - வாவ்! -rgs
   
 8. vidhyalakshmid

  vidhyalakshmid Platinum IL'ite

  Messages:
  2,319
  Likes Received:
  1,300
  Trophy Points:
  290
  Gender:
  Female
   
  singapalsmile likes this.
 9. vidhyalakshmid

  vidhyalakshmid Platinum IL'ite

  Messages:
  2,319
  Likes Received:
  1,300
  Trophy Points:
  290
  Gender:
  Female
  I absolutely accept your above point Veda!
   
  singapalsmile likes this.
 10. singapalsmile

  singapalsmile IL Hall of Fame

  Messages:
  5,306
  Likes Received:
  2,192
  Trophy Points:
  338
  Gender:
  Female
  Hi RGS,

  கேள்விகள் மேல் கேள்விகள் இன்னும் தொடர்கிறது.

  19. புத்தகங்கள் படிப்பதால் கிடைக்கும் மேன்மைகளை சிறப்பாக சொன்னதுக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றி. நீங்கள் படித்த மேலாண்மை புத்தகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? ஏன்? ஆங்கில புத்தகம் படிக்கும்போது சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் இருந்தால் உடனே அகராதியை புரட்டி பார்த்து அர்த்தம் தெரிந்து கொள்வீர்களா? அல்லது அந்த வார்த்தைகளை குறித்து கொண்டு பிறகு அர்த்தம் தேடுவீர்களா? படிக்கும்போது அதில் லயித்து இருக்கும்போது அர்த்தம் தேட முயலும் ஒரு சில நொடிகளும் எண்ண ஓட்டத்திற்கு தடையாக இருக்காதா?

  20. பித்து நிலை ஒரு இயல்பான நிலை என்று சொன்னதுக்கு ஒரு சபாஷ் உங்களுக்கு. எந்த வித பித்த நிலையில் (காதல் மார்க்கம் அல்லது பக்தி மார்க்கம் அல்லது வேறேதோ மார்க்கம்) முதல் கவிதை எந்த வயதில் எழுதி இருந்தீர்கள்? அந்த கவிதையின் கரு எதுவாக இருந்தது? பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தால் உங்களது முதல் கவிதையை இங்கு பகிருங்கள்.
   
  rgsrinivasan likes this.

Share This Page