1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அஞ்சறை பெட்டியில் காதலுக்காக மட்டுமே ஒரு அறை ஒதுக்கினா எப்படி இருக்கும்? வார்த்தையில் சொல்வதற்கில்லை. அனுபவிப்பதற்கு மட்டுமே! :wink::wink:

    MR க்கு இருமல் வந்தால் மூன்றில் ஏதாவது ஒன்றை KK செய்வாங்க:
    1) குடிக்கறதுக்கு தண்ணி வேணுமா? என்று கேட்பது
    2) தண்ணி கொண்டு வந்து கொடுப்பது
    3) தட்டி கொடுப்பது

    இரவில் இருமல் இருந்தால் மூன்றாவது மட்டுமே.

    ஏதோ ஒரு நாளில் ஏதாவது அபிப்பிராய வேறுபாடு/கருத்து மோதல் இருந்தால் அன்று இரவு MR க்கு இருமல் வந்தால் KK என்ன செய்வாங்க? MR நால KK நார்மலாக இல்லை என்று MR உணர்ந்து இருக்கும்போதெல்லாம் MR க்கு இரவில் இருமல் வந்தால் அது திட்டமிட்டதா? எதேச்சையானதா?

    தட்டி கொடுக்கணுமா? என்று KK's மூளை எதிர் கேள்வி கேக்கும்..அஞ்சறை பெட்டியில் காதலுக்கு ஒரு பிரத்யேகமான இடம் இருந்தால் அங்க காதல் ஜெயிக்குமா? மோதல் ஜெயிக்குமா? கண்டிப்பா காதல் தான் ஜெயிக்கும். இதுக்கு பேர் தோத்துட்டே ஜெயிக்கறதா? :wink::wink:
     
    Thyagarajan and suryakala like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கண்ணம்மா

    இந்த நாவலில் கண்ணம்மா என்று எத்தனை முறை காதலோடு குந்தவியை சிவா அழைத்தான் என்பது கணக்கில் அடங்காது. அவன் அவளை கண்ணம்மா என்று அழைக்கும் பகுதிகளை படித்தபோது காதலில் கரைந்து போகும் உணர்வு தான் எனக்கு வந்தது. ஒரு இடத்தில கூட இவனுக்கு வேற வேலை இல்லை. கண்ணம்மா என்று அழைப்பதே பொழப்பா போச்சு என்ற சலிப்பு எனக்கு வரவே இல்லை. கண்ணம்மா என்ற பேர் ஒற்றை வார்த்தை கவிதையாக எனக்கு தோன்றுவதாலோ அல்லது காதல் பொங்கி வழியும் உணர்வுகள் நான் படிக்கும்போது தோன்றியதாலோ கண்ணம்மா என்ற பெயருக்காக இந்த போஸ்ட்.

    ஒரு காசுக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, அவன் அவளை கண்ணம்மா என்று அழைக்கும் போது நான் மயங்கியது போல அவள் அவனை இப்படி எல்லாம் அழைத்தபோதும் படித்து நான் மயங்கி இருக்குகிறேன் :wink::wink:
    • சிறுத்தை சிவநாதா (அவன் காதல் தீவிரவாதியாக இருக்கும்போது)
    • சிலேடை சிவநாதா (இருபொருள் பட அவன் பேசும்போது)
    • உதை படுவாய் சிவநாதா (அவன் அவளை சீண்டும் போது)
    • ப்ளீஸ் சிவா (வெட்கப்பட்டு கெஞ்சும்போது)
    • மீசை தொலைத்த சிவநாதா (அவனை போல மீசையை தடவி மிமிக்கிரி செய்த போது)
    • வந்தியதேவா (அவனது கவிதைகளை ரசிக்கும் போது)
    YT - கண்ணம்மா கண்ணம்மா - றெக்க
     
    Thyagarajan and suryakala like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    செல்ல பேர் வைத்து கூப்பிடுவது எல்லாம் MR க்கு சுத்தமாக தெரியாது. MR பேசறதே கொஞ்சம்; இதுல கொஞ்சலா பேசுவார் என்றெல்லாம் எதிர்பார்த்தால் ரொம்பவே ஓவர்.

    KK என்ன சொல்றாங்க?
    டா என்று எப்பவாது அழைத்தால் அது செல்லமா? செல்ல பெயர் வைத்து கூப்பிட்டதில்லை. ஆனால் நிறைய செல்லம் கொடுத்து கெடுத்து வச்சாச்சு. :grinning::grinning:

    ரோல் மாடல் ஆக இருக்க வேண்டிய அவசியம் இருவருக்குமே இல்லை என்பது இவங்களுக்கு பிளஸ்.:grinning::grinning:
     
    suryakala likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    MIL - DIL relationship

    இந்த நாவலில் மாமியார் மருமகள் நடந்து கொள்ளும் விதம் படிப்பதற்கு நன்றாக இருந்தது. என்னை பொறுத்த வரை இப்படி கூட இருப்பாங்களா என்று மூக்கின் மேல் விரல் வைத்து கொள்ளும்படி இல்லை. நான் சந்தித்த நபர்கள் எனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் கேள்விப்பட்டது சிறப்பாக இருப்பதால் எனக்கு அப்படி தோணி இருக்கலாம். தமிழ் சீரியல் பார்க்கும் பழக்கம் சுத்தமாக இல்லை. IL Rel forum எட்டி பார்ப்பதுவும் இல்லை. எனது ஒப்பீடு/கணிப்பு கொஞ்சம் குறுகியது ஏனெனில் நான் பார்த்தது கேள்விப்பட்டது மட்டுமே வைத்து சொல்வதால். நாவலில் பிடிச்ச பகுதியை பகிர்ந்து கொள்கிறேன்.

    திருமணத்திற்கு பிறகு குந்தவியும் சிவாவின் அம்மாவும் சிவாவின் வீட்டில் பேசி கொண்டிருப்பார்கள்.

    எங்களை எல்லாம் உனக்கு பிடித்திருக்கிறதா?
    ஆமா அத்தை உங்கள் பிள்ளையை விட உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு
    ஏன் அப்படி?
    அப்படி ஒரு தயாரிப்பை வெளியிட்ட ஆள் ஆச்சே நீங்க என்று சொல்லி நாக்கை கடித்து கொள்வாள்
    எதை பேசலாமா கூடாதோ னு நீ பயப்பட வேண்டியதில்லை. Free யா பேசலாம்
    தாங்க்ஸ் அத்தை
    வீடு பிடிச்சிருக்கா?
    ரொம்பவே புடிச்சிருக்கு. அதில் இருக்கும் மனிதர்களை இன்னும் ரொம்பவே
    அத்தை ஒரு அக்ரீமெண்ட்
    சொல்லு
    இந்த ஆம்பளைங்க பயங்கரமானவங்க. யார் அவருக்கு முக்கியம் னு நீங்களும் நானும் சண்டை போடுவதை பார்த்து அவங்க அதில் குளிர் காய்ஞ்சுப்பாங்க. வீ ஆர் நாட் செகண்டரி citizens..ஓகே? நாமளே ஒரு அண்டர்ஸ்டாண்டிங் க்கு வந்துரலாம்.
    எவ்ளோ பெரிய உண்மையை இவ்ளோ அழகா சொல்லிட்ட குந்தவி. என் மகன் ஏன் விழுந்தான் னு இப்ப புரியுது.
    எப்பவும் போல outspoken னா இரு..
     
    suryakala likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    விமானத்தில் ரயிலில் ஆட்டோவில் பஸ்சில் தெரியாத பயணிகள் என்றாலும் ஏதோ பல வருஷம் தெரிஞ்சவங்க மாதிரி KK அவர்களிடம் சகஜமா பேசுவாங்க..ஆயுளுக்கும் வேண்டியவர்கள் என்று இருக்குபோது எப்படி பேசுவாங்க?

    திருமணத்திற்கு பிறகு ஒரு வருடம் கழிந்து தாயகத்துக்கு தனியாக செல்லும் சூழ்நிலை KK க்கு வந்தது. MR வீட்டில் ஒரு நாள் மட்டும் தங்கி இருந்தாங்க. இரவில் அவரை தனியாக தூங்க விட மறுத்து MR's அம்மா துணைக்கு இருந்தார். ஒரே படுக்கையில் தனது அம்மாவோடு பேசுவது போலவே MR's அம்மாவோடு அந்த இரவில் KK பேசினார். நிறைய மனம் விட்டுபேசினாங்க.

    நீங்க நல்ல பேசறீங்க மா.
    நீயும் தான் நல்ல பேசற. என்னை விட அப்பா இன்னும் நல்லாவே பேசுவார்.

    கடைசியில் அவங்க பையனை பத்தி பேச்சில் வந்தது.

    உனக்கு வீட்டுல ஹெல்ப் பன்றானா?
    கேட்காமலே எல்லா ஹெல்பும் பண்ணுவார்
    அட்ஜஸ்ட் பன்றானா?
    நல்லாவே அட்ஜஸ்ட் பண்ணுவார்
    உன்கிட்ட நல்ல பேசறானா?
    கம்மியா தான் பேசுவார். ஆனா நா பேசினா கவனித்து கேப்பார்
    உனக்கு பிடிச்சது வாங்கி தரானா?
    நானே எனக்கு பிடிச்சது வாங்கிக்குவேன். அவரும் வாங்கி தருவார்.
    உனக்கு பிடிக்காதது எதுவும் பன்றானா?
    (உண்மை விளம்பி நா இந்த கேள்விக்கு சரியா பதில் சொல்லணும் தானே?)

    MR சமஸ்க்ருதம் பயின்றவர். மந்திரங்கள் அறிந்தவர். தீவிர பெருமாள் பக்தர். சனிக்கிழமை தோறும் பூஜை செய்பவர். பெருமாள் கோவிலுக்கு வாரம் தவறாமல் செல்பவர். ஆனால் படிக்கறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோவில். என்ன பண்றது மா?

    எனக்கு உன்கிட்ட பிடிச்சதே உன்னோட தைரியம் கான்பிடென்ஸ் தான். பிரச்னை என்ன னு எங்ககிட்ட தைரியமா சொல்லு. எல்லாத்தையும் மனசுல வச்சு நீயே கஷ்டப்படாதே. மனசுவிட்டு அவன்கிட்ட பேசு. அவன் கேக்கலான எங்ககிட்ட சொல்லு. நாங்க அவன்கிட்ட பேசறோம்.

    சொன்னது போலவே அவங்க பையனிடம் பேசினார்கள். அதற்கு அப்புறம் தான் ஒரு உண்மை KK க்கு புரிந்தது. வீட்டில் சொல்வதற்கு எல்லாம் சரி சரி என்று MR சொல்லிவிட்டு தனக்கு என்ன தோணுதோ அதை மட்டும் தான் செய்வார் என்பது.

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொன்னார்கள்? KK மட்டும் வீட்டில் சொன்னது கேட்டு நடந்து இருக்காங்களா? MR மட்டும் வீட்டில் சொன்னது கேட்டு நடப்பார் என்று எப்படி KK எதிர்ப்பார்க்கலாம் ? ஒரே ஒரு வித்யாசம் - வீட்டில் சொன்னது செய்ய மாட்டேன் என்று KK நேரிடையாக சொல்வாங்க. செய்ய முடியாததிற்கு குடும்பத்து நபர்களுக்கு விளக்கமும் கொடுப்பாங்க. வீட்டில் சொன்னது செய்றேன் என்று MR குடும்பத்து நபர்களுக்கு தலை ஆட்டிவிட்டு சொன்னது செய்ய மாட்டார். விதி வலியது!

    FIL பத்தியும் குறிப்பிட்டாக வேண்டும். MIL க்கு ரேட்டிங் A குடுத்தா FIL க்கு AAA குடுக்கணும். :grinning::grinning:

    YT - விசிறி - எனை நோக்கி பாயும் தோட்டா (GM padangalil ILs uber-cool..adhanaal GM padathil irundhu oru paadal)
     
    Last edited: Feb 18, 2021
    suryakala likes this.
  6. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,771
    Likes Received:
    12,604
    Trophy Points:
    615
    Gender:
    Male
    படித்து ரசித்தேன். மிக சரியாக சொன்னீர்கள்.
    YT பாடல் குறிப்பு அருமை.
     
    singapalsmile likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நிறைய பாடல்களில் மடியில் உறங்குதல் பத்தி ரொமான்டிக்கா குறிப்பிட்டு இருப்பார்கள்.

    ஆணின் பார்வையில் வரிகள்:
    உன் மடியில் நான் உறங்க கண் இரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ


    YT - Kannan oru kai kuzhandhai - Bhadrakali

    பெண்ணின் பார்வையில் வரிகள்:
    வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
    அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்


    YT - Vaseegara - Minnale

    இந்த நாவலில் மூன்று இடங்களில் மடியில் உறங்குதல் பத்தி வரும். நான் ரசித்து ரசித்து படித்தேன். :wink::wink:

    1) கன்னியாகுமரி ட்ரிப் முடிந்து பஸ்ல வரும்போது சிவா கடைசி பெஞ்சில் உக்காந்து குந்தவியை கலாட்டா செய்து கொண்டிருப்பான். பேசி முடித்ததும் குந்தவி சிவாவை தன் மடியில் படுத்து தூங்க சொல்வாள். தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு உறங்கி போவான். அவளும் அமர்ந்தபடியே உறங்குவாள். காலை மூணு மணி அளவில் சிவா எழுந்து அவளை காலியாய் இருக்கும் எதிர்சீட்டில் உறங்க செய்து அவளை பார்த்தபடி அமர்ந்திருப்பான். அவனுள் வந்தியத்தேவன் முழித்து கொண்டு கவிதை பொழிய ஆரம்பித்தான்.

    2) திருமண பேச்சு இரு வீட்டிலும் முடிவான நேரத்தில் இருவரும் தஞ்சாவூர் சென்று இருப்பார்கள். குந்தவி டயர்ட் ஆக இருக்கும்போது தன்னை அறியாமல் சிவாவின் மடியில் படுத்து உறங்கி விடுவாள். அவன் உறங்காமல் அவளை பார்த்து கொண்டிருப்பான். திரும்பி படுத்தவள் விழித்தி கொள்வாள். முகம் குங்குமமாய் சிவக்க, சிவா என்னை எழுப்பி இருக்கலாம் ல? என்று கேட்பாள். இனி இந்த மாதிரி உன் முகம் எப்ப பார்ப்பேனோ? எழுப்பறதாம் என்று சொல்லி சிரிப்பான்.

    3) திருமணத்திற்கு பிறகு வெகு இயல்பாக ஒரு நாள் குந்தவி சிவாவின் மடியில் படுத்துக்கொண்டு பேசி கொண்டிருப்பாள்.
     
    suryakala likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    MR - ஒழுங்கான ரூம்/பெட்/தலையணை/கும்மிருட்டு வேணும். அப்ப தான் இவருக்கு தூக்கம் வரும். குண்டூசி சத்தத்தில் கூட எழுந்து விடுவார்.
    KK - பஸ்ல/கார்ல/டிரெயின் ல/விமானத்தில போனாலும் தூக்கம் தானாகவே வரும்.
    உட்கார்ந்து கொண்டே சேர் ல தூங்கினாலும் சுகமா தூங்குவாங்க. தூங்கறதே சொகுசு. சொகுசான செட்டிங் தூங்கறதுக்கு வேணும்னு நினைச்சதே கிடையாது. இடி விழுந்தாலும் தூக்கம் களைந்து போகாது.

    திருமணம் ஆன புதிதில் தாயகத்தில் ஒரு புகழ் பெற்ற கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்து MR and KK காரில் திரும்பி கொண்டிருந்தார்கள். காரில் பின் சீட்டில் அமர்ந்து இருந்தார்கள். கார் ல தூங்கி வழியற KK பார்த்து தனது மடியில் படுத்து தூங்க சொன்னார் MR. சந்தோசமா சொகுசா MR மடியில் படுத்து KK தூங்கிட்டு இருந்தாங்க. MR தனது கையை பட்டும் படாமலும் KK மேல் வைத்து இருந்தார். திடீர் என்று மேலே வைத்து இருந்த கை எடுத்து விட்டார்.

    வீட்டிற்கு வந்து தனிமை கிடைத்ததும் நடந்த குட்டி உரையாடல்:

    எதுக்கு மேல போட்ட கைய திடீர்னு எடுத்தீங்க?
    கார் சிக்னல் ல நிக்கும்போது பக்கத்துல வண்டி ஓட்டிட்டு வந்தவன் எட்டி பார்த்தான்
    பாத்தா பார்த்திட்டு போறான். இதுக்கு போய் ஓவர் ரியாக்ஷன் குடுத்து இருக்கீங்க.
     
    suryakala likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வாழ்வின் பரிமாணங்கள்

    இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வருமா என்று யோசிக்காமல் படித்து மட்டும் பரவசப்பட்டு கொண்டேன்.

    வாழ்க்கை பற்றிய கோணத்தை குந்தவியும் சிவாவும் ஏற்காட்டு குளிரில் பேசி கொண்டிருப்பார்கள்.

    இடது கையில் விரல் விட்டு தர்க்கம், கவித்துவம், த்யானம், விழிப்புணர்வு, சமயவாதி என்றாள். வலது கையில் விரல் விட்டு காரியத்தில் ஈடுபாடு, குழந்தைத்தனம், ஆழ்ந்த காதல், சமுதாய ஈடுபாடு, ஆன்மீக ஈடுபாடு என்றாள்.

    இதுவும் ஒரு வகைப்பாடு தெரியுமா?
    • ஆழ்ந்த காதல் வழியாக போனால் தந்த்ரா
    • உணர்வின் வழியாக போனால் பக்தி, யோகம்
    • செயல்களின் வழியாக போனால் கர்மயோகம்
    • அறிவின் வழியாக போனால் ஞானயோகம்
    காரியம் னு சொன்னீங்களே அதான் தர்க்கம். நம்ம ரிசர்ச் ஒர்க்.
    குழந்தைத்தனம், ஆழ்ந்த காதல் ரெண்டும் இல்லேன்னா கவித்துவம் வராது. படைப்பாளி ஆக முடியாது. அது தான் வந்தியதேவன்.
    யோகா, த்யானம் இதெல்லாம் ஆன்மிகம்.
    அப்புறம் நம்ம சமுதாய சேவை.

    இந்த பரிமாணங்கள் அடிப்படையில் நம்ம வாழ்க்கையை அமைச்சுக்கற பரிசோதனையை ஏன் செய்ய கூடாது னு தோணிச்சு என்று சிவா சொல்வான்.

    YT - ரா ரா ரா ராமையா - பாட்ஷா - SPB - (சராசரி மனிதர்களின் வாழ்க்கை கோணங்கள்)
     
    suryakala likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இதுவரைக்கும் செதுக்கின வாழ்க்கையே போதும் னு KK க்கு தோணுது. நோ மோர் செதுக்கிங். ஒன்லி பாலிஷிங். :grinning::grinning:

    "Man proposes, God disposes." இருந்தாலும் ஆசை யாரை விட்டது. MR and KK விதி விலக்கல்ல.
    • இன்னும் 15 வருடங்களுக்குள் தாயகத்துக்கு மொத்தமா திரும்பி போகணும் - சென்டிமெண்ட் - தாய் மண்ணில் உயிர் பிரியனும் KK க்கு
    • வேலை பார்ப்பதை நிறுத்தியவுடன் ஒரு வருடம் உலகத்தை சுத்தி பார்க்கணும் - World cruise - உல்லாசம் - வயதான தம்பதியர் அன்பு சுற்றுலா
    • தாயகத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களுக்கு போகணும்
    • அறிவை தூண்டி விடும் புத்தகங்கள் நிறைய படிக்கணும்
    • Angel investing - பணம் சம்பாதிக்க அல்ல - இளைய தலைமுறையினரிடத்து சிந்தனை தொடர்பில் கிடைக்கும் அனுபவத்திற்கு கொடுக்கும் விலை
    • ரொமான்டிக் கதைகள்/கவிதைகள் கிறுக்கணும் - பரவசம் - திருந்தற ஐடியா இல்லவே இல்லை
    • பண்டிகை தினங்களில் தாயகத்து அநாதை ஆசிரமங்களுக்கு சென்று உணவு, உடை, பரிசு பொருட்கள், பாட புத்தகங்கள் வாங்கி தருவது
    • Luxurious retirement home la தங்கி சம வயது நபர்களுடன் பழகி கடைசி வருடங்களை சந்தோசமாக கழிப்பது (ஒரே இடத்தில தங்க KK's close friends சிலர் இப்பவே ரெடி)
     
    suryakala likes this.

Share This Page