1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனக்கும் சென்டிமென்ட்க்கும் ரொம்ப தூரம். Detached attachment தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். போன போஸ்ட சென்டி ஆக இருந்தால் இந்த போஸ்ட் படித்து பாலன்ஸ் பண்ணிக்கொள்ளவும். :grinning::grinning:

    ஒரு செம செம ரொமான்டிக் நாவல் படித்து மூணு நாள் முழு கிறுக்கா சுத்தினேன். என்னை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டது. அந்த நாவல் டவுன்லோட் பண்ணி save பண்ணி இருக்கிறேன். திரும்ப திரும்ப படிப்பதற்காக. ஏக மனதாக முடிவு பண்ணிட்டேன் இந்த நாவல் தான் Feb 2021 கிறுக்கல் க்கு என்று.

    Circuit breaker (CB) - எனக்கு அப்போ அப்போ தேவை படும். கிக் ஆன கற்பனை உலகில் நீண்ட நேரம் இருந்து விட்டால் மீண்டு வருவதற்கு அலுவலக வேலை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது/ ஆன்லைன் ல ரிசர்ச் பண்ணுவது. அலுவலக வேலையில் மூழ்கி விட்டால் அதில் இருந்து மீள ரொமான்டிக் பாடல்கள்/ படங்கள் கேட்பது/ பார்ப்பது. இன்று காலையில் CB தேவை பட்டது. அதனால் அடுத்த வருடத்திற்கு நான் வேலை செய்ய போகும் புது ப்ராஜெக்ட் பத்தி ரிசர்ச் பண்ணிட்டு இருந்தேன். மாலையில் CB தேவை பட்டது. தேடிப்பிடித்து கேட்ட 'கெட்ட' IR + SPB + SJ பாடல்கள் :wink::wink:

    SPB songs Playlist 37

    YT - அஞ்சுகஜம் காஞ்சிப்பட்டு - ராசா மகன்
    YT - சொக்கனுக்கு வாச்ச சுந்தரி - காவல் கீதம்
    YT - புன்னை வனத்து குயிலே - முத்துக்காளை
    YT - பருவமே புதிய பாடல் - நெஞ்சத்தை கிள்ளாதே
    YT - கோழி கூவும் நேரத்திலே - வண்ண வண்ண பூக்கள்
     
    suryakala likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Th #7: SPBSongsaholic

    கடந்த மூன்று மாதங்களாக நான் தேடி பிடித்து எத்தனையோ SPB பாடல்கள் கேட்டேன். முதல் முறையாக கேட்ட பாடல்களும் அதில் அடங்கும். இவரின் பாடல்கள் எனக்கு கொடுத்த சந்தோசத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. என்னுடைய வாழ்நாளில் இவரை போல இன்னொரு பாடகரை நான் பார்க்கப்போவதில்லை. இவர் தான் எனது ஆயுள்வரை எனக்கு most favorite பாடகர். இவர் பாடி பறந்தாலும் இவரது கணக்கில் அடங்கா பாடல்கள் நான் கேட்கும்போதெல்லாம் என்னை சந்தோஷத்தில் சிறகடித்து பறக்க வைக்கும்.

    நான் இங்கு போஸ்ட் பண்ணாத சில SPB பாடல்கள் என்னோட Private Collection ல வரும். ரோஜா படத்தில் SPB+Chithra பாடிய ஒரு மேட்டர் சாங் once in a bluemoon தேடிப்பிடித்து கேட்பதுண்டு. ஆனா அந்த பாடலை இங்கு நானும் சரி நமது நண்பர்களும் சரி இதுவரைக்கும் ஒருவர் கூட போஸ்ட் பண்ணதில்லை. சபை நாகரீகத்தை கொஞ்சம் காப்பாத்த சில பாடல்கள் நான் வேண்டும் என்றே போஸ்ட் பண்ணவில்லை.

    எனக்கு இனிப்பு உயிர் என்பதால் எந்த இனிப்பு சாப்பிட்டாலும் உடனே தண்ணீர் குடிக்க பிடிக்காது நாவில் இனிப்பு சுவை போய் விடும் என்பதால். இப்போதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த இனிப்பில் ஒரு சின்ன பீஸ் எடுத்து வைத்து கொள்வேன். தண்ணி குடித்து முடித்த பிறகு அந்த பீஸ் சாப்பிடுவேன். அதில் ஒரு அலாதி சந்தோஷம். அது போல 200+ SPB sweets போஸ்ட் பண்ணிட்டேன். இன்று நான் நேசிக்கும்/சுவாசிக்கும் SPB sweets பொத்தி வைத்து கடைசியாக போஸ்ட் பண்றேன்.

    SPB sweets Playlist 40 (Finale)

    YT - வளையோசை கலகலவென - சத்யா
    YT - பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - மண்வாசனை - IR+SPB+SJ
    YT - அந்திமழை பொழிகிறது - ராஜபார்வை - IR+SPB+SJ
    YT - மௌனமான நேரம் - சலங்கை ஒலி - IR+SPB+SJ
    YT - ஐய்யயோ நெஞ்சு அலையுதடி - ஆடுகளம்

    குறிப்பு: கமல் சைட் அடிச்சிட்டு பாடல் கேட்காம விட்றாதீங்க. :wink::wink:
     
    suryakala likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ரொமான்டிக் படம்/பாடல்/கவிதை/புத்தகம் - இதெல்லாம் இன்ஸ்டன்ட் கிக் கொடுக்கும். ஆனால் நடைமுறைக்கு பெரும்பாலும் ஒத்து வராது. படிச்சோமா கற்பனையில் இருந்தோமா என்பதோடு நான் நிறுத்திக்கொள்வேன். அது மாதிரி நிஜமாக நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு போதும் எண்ணியதில்லை. அன்றாட வாழ்க்கையில் இருந்து சில மணி நேரங்கள் எஸ்கேப் ஆக இந்த மாதிரி போதை எனக்கு தேவைப்படுகிறது. தம்/தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்தால் அது வேறு மாதிரி போதை. எனக்கு அது எப்படி இருக்கும் என்று இதுவரைக்கும் தெரியாது. இனிமேலும் தெரிந்து கொள்ளவும் துளியும் விருப்பமில்லை. ஏதாவது போதை இல்லாமல் இருந்தால் வாழ்க்கை ரொம்பவே போர் அடிக்கும் என்று நினைக்கிறேன்.

    விவரிக்க முடியாத போதையை நான் சமீபத்தில் படித்த ஒரு நாவல் தந்தது. ஒரு Romantic fanatic ஆக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக இந்த நாவலை படித்து பாருங்கள். இந்த நாவலை படிக்க ஆரம்பித்த போது கொஞ்சம் bore அடித்தது. சில பக்கங்கள் விட்டுவிட்டு படித்தேன். ஒரு கவிதை இருந்தது. அதை படித்ததும் எனக்குள் இருந்த கவிதை கிறுக்குத்தனம் தலைகால் புரியாமல் ஆட தொடங்கியது. வந்த குறும்புகள் மனதில் கும்மி கூத்தடித்தது. Intellectual component எடை போட்டால் தராசு வெயிட் தாங்காமல் கவிழ்ந்துவிடும். ரொமான்ஸ் சுனாமி எங்கெங்கோ இழுத்து செல்லும். ஒரு வார்த்தை/வரி கூட விடமால் முதலில் இருந்து கதையை படிக்க ஆரம்பித்தேன். கடைசி பக்கம் படிக்கும் வரை செம கிக். இரவில் ஆரம்பித்து காலை வரை படித்தேன். படிப்பதை என்னால் நிறுத்தவே முடியல. மூன்று பாகங்கள் இருக்கிறது. அர்த்தம் தெரியாத தமிழ் வார்த்தைகளுக்கு ஆன்லைன் ல அர்த்தம் தேடினேன். தமிழ் மொழி இவ்ளோ இனிமையா என்று அசந்து போனேன்.

    Novel: கனிந்த மன தீபங்களாய்
    Author: ஜெய்சக்தி


    Feb 2021 - ஆவலுடன் காத்திருக்கிறேன் இந்த நாவலை அலச. கொஞ்சம் கற்பனையோடு நிஜம் கலந்து கலக்க. :wink::wink:
     
    suryakala likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    உலகத்துக்கு இது படுமோசமான வருடம் என்றாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த வருடம் ஒரு அதி அற்புதமான வருடம்/வரம். உண்மையை சொல்ல போனால் இந்த வருடத்துக்கு Bye சொல்றதுக்கே எனக்கு மனசில்லை. ஆனால் நம்மளை சுத்தி இருக்கறவங்க நலனையும் பார்க்கணுமே.

    வரும் புது வருடத்தில் உலக நிலைமை சீராகி எல்லோரும் வளமாக இருக்கணும் என்ற நல்ல எண்ணத்தில் Good Bye 2020 Welcome 2021.

    அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த வருடம் மீண்டும் சந்திப்போம்.

    YT - Happy New Year - இளமை இதோ இதோ - SPB
     
    cinderella06 and suryakala like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இலக்கு இல்லாமல் இருந்தால் எந்த பாடல்கள் போடுவது என்றே தெரியவில்லை. அதிகமாக புது படங்களும் வெளி வருவது இல்லை. சுகமா பொழுது போக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது இந்த ஐடியா தோன்றியது.

    எனக்கு பிடித்த பாடகர்கள்/ பாடகிகள் பாடிய பாடல்கள்/ ரசித்த வரிகள் தேர்ந்து எடுத்து Playlist போடலாம் என்று இருக்கிறேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரொமான்டிக் பாடல்கள் கொண்ட பொக்கிஷமாக நம்ம thread இருக்கட்டும். யான் பெற்ற ரொமான்டிக் இன்பம் இந்த IL poetic thread நண்பர்கள் பெறட்டும். :wink::wink: கார சாரமா SPB பாடல்கள் போட்டாச்சு. இப்போ காம்பென்சேட் பண்றதுக்கு இலைமறைவாக வரிகள் கொண்டு கொல்லாமல் கொல்லும் பழைய பாடல்கள் போஸ்ட் பண்ண போறேன்.

    AMR songs Playlist 41

    சின்ன சின்ன கண்ணிலே - தேன் நிலவு

    பின்னி வைத்த கூந்தலில் முல்லை பூவை சூடினால்
    கன்னி நடை பின்னல் போடுமா
    சிறு மின்னலிடை பூவை தாங்குமா
    மின்னலிடை வாடினால் கன்னி உந்தன் கையிலே
    அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்
    அதில் அந்தி பகல் பள்ளி கொள்ளுவேன்


    நிலவும் மலரும் பாடுது - தேன் நிலவு

    முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
    இன்று பார்த்து பார்த்து முடித்துவிட்டால் நாளை வேண்டுமே
    முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
    கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
    மலர்முடிப்போம் மணம் பெறுவோம் மாலை சூடுவோம்
    நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

    கண்மூடும் வேளையிலும் - மஹாதேவி

    தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகை
    சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன்
    சின்ன சின்ன சிட்டு போல
    வண்ணம் மின்னும் மேனி
    கண்டு கண்டு நின்று நின்று
    கொண்ட இன்பம் கோடி

    தென்றல் உறங்கிய போதும் - பெற்ற மகனை விற்ற அன்னை

    நேசமாக பேசிடாமல்
    பாசம் வளருமா
    ஆசை தீர கொஞ்சிடாமல்
    இன்பம் மலருமா
    அன்பை நினைந்தே ஆடும்
    அமுத நிலையை நாடும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா

    ஆடாத மனமும் ஆடுதே - களத்தூர் கண்ணம்மா

    ரோஜா மலர்தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ
    வாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
    இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
     
    suryakala likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    காதில் தேன் அருவியாக கொட்டுகிறது AMR மற்றும் PS அவர்களின் குரல். வரிகளிலும் இசையிலும் தேன் வடிகிறது. ரசித்து கேட்பவர்களுக்கு தேன் குளியல் என்று சொன்னால் மிகை ஆகாது.

    AMR songs Playlist 42

    துயிலாத பெண் ஒன்று கண்டேன் - மீண்ட சொர்க்கம்

    மணமேடை தனில் மாலை சூடும்
    உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும்
    நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை
    அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை


    மாசிலா உண்மை காதலே - அலிபாபாவும் 40 திருடர்களும்

    உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
    இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
    அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
    இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்


    பாட்டு பாடவா - தேன் நிலவு

    மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா
    இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா


    வாடிக்கை மறந்தது ஏனோ - கல்யாண பரிசு

    காந்தமோ இது கண்ணொளிதானோ
    காதல் நதியில் நீந்திடும் மீனோ
    கருத்தையறிந்தும் நாணம் ஏனோ


    தேன் உண்ணும் வண்டு - அமர தீபம்

    மீன் நிலவும் வானில்
    வெண்மதியைக் கண்டு
    வெண் அலைகள் ஆடுவதேன் ஆனந்தம் கொண்டு
    மென் காற்றே நீ சொல்லுவாய்

    கான மயில் நின்று வான் முகிலைக் கண்டு
    களித்தாடும் விதம் போலவே
    கலை இதுவே
    வாழ்வின் கலை இதுவே
     
    cinderella06 and suryakala like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Amazon Prime la கடந்த வார இறுதியில் பார்த்த படம் - மாறா. ஆர்ட் ஒர்க் நிறைந்த வண்ணமயமா ஒரு அழகியல் படம் பார்த்த பிரமிப்பு என்னை விட்டு போக பல மணி நேரங்கள் ஆச்சு. படம் பார்த்தவுடனே ரவி வர்மியாக மாறி ரூம் சுவற்றில் கலர் கலராக ஓவியம் கிறுக்கி கலை பொருட்கள் நிரப்பி ஒரு மினி பொருட்காட்சி அரங்கமா மாத்தணும் னு தோணுச்சு.

    இப்போ வீட்டில் இருக்கற ஆர்ட் ஒர்க் பத்தாதா? என்று என்னையே கேட்டு கொண்டேன். நான் ரெண்டு குட்டி கான்சப்ட்ஸ் வச்சு வீட்டில் ஏற்கனவே அலங்கரித்து இருக்கிறேன். அடிக்கடி அதை ரசித்து பார்ப்பது உண்டு. அதில் ஒன்று இந்த படத்துக்கு நெருங்கிய சம்பந்தம் உண்டு. அதனாலேயே இந்த படம் ரொம்பவே பிடித்தது.

    நிறைய கதாப்பாத்திரங்கள் படத்தில் இருந்தாலும் எல்லோருக்கும் ஏதோ ஒன்று நிறைவாக அமைந்து இருந்தது. கவிஞர் தாமரையின் பாடல் வரிகளும் ஜிப்ரான் இசையும் வெகுவாக கவர்ந்தது. கொண்டாடுவதற்கு நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தது. வயதானவர்களின் காதல் கதையில் இருந்த அழுத்தம் ஹீரோ ஹீரோயின் காதலிலும் கடத்தி இருந்து இருந்தால் படம் இன்னும் வேற லெவல் க்கு இருந்து இருக்கும். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். சில இடங்களில் Maddy's charm குறையவே இல்லை. அலைபாயுதே மின்னல் படங்களில் பார்த்த அவரது என்றென்றும் புன்னகை வசீகரம் நினைவிற்கு வந்தது :wink::wink: மாறாவில் இருந்து எனக்கு ரொம்பவே பிடித்த பாடல்கள்:

    யார் அழைப்பது - மாறா
    ஒரு அறை உனது - மாறா
     
    cinderella06 and suryakala like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அனைவருக்கும் எனது மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்; கரும்பாய் நிறைய நிகழ்வுகள் இனிக்கட்டும். :grinning::grinning:

    போகி யில் பழைய கசப்புகள் மனதில் களைவோம். அப்போ தான் புது இனிப்புகளுக்கு மனதில் நிறைய இடம் கிடைக்கும். புத்துணர்ச்சியோடு வாழ்வை கொண்டாடுவோம்.

    YT - பூ பூக்கும் மாசம் தை மாசம் - வருஷம் பதினாறு
     
    cinderella06 and suryakala like this.

Share This Page