1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Paguththarivu

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Nov 11, 2022.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கிருபானந்தவாரியாரை தேடிபிடித்து வம்பிழுத்து அந்த கேள்வியினை தன் துண்டு சீட்டில் எழுதி பலருக்கு கொடுத்து தன் பகுத்தறிவினை வெளிகாட்டுவது அய்யா கருணாநிதிக்கு பிடித்தமான விஷயமாக இருந்தது

    கிருபானந்தவாரியாரின் கூட்டத்தில் புகுந்து தான் கேள்வி கேட்டதையெலலம் நெஞ்சுக்கு நீதியில் கூட அவர் எழுதியிருந்தார் ஆனால் கடைசிவரை என்ன கேள்வி கேட்டார் என அவர் சொல்லவில்லை, அதற்கு வாரியார் சுவாமிகள் என்ன பதில் சொன்னார் என்பதையும் சொல்லவில்லை

    ஒருமுறை சைவ உணவின் தன்மையினை சுவாமி விளக்கி கொண்டிருந்த பொழுது, கேள்வி கேட்பது ஒன்றே பகுத்தறிவு என நம்பி, கடலே நீ ஏன் அலையடிக்கின்றாய்,, சூரியனே நீ ஏன் உதிக்கின்றாய் என பல கேள்விகளை கேட்டு சுற்றிகொண்டிருந்த கருணாநிதி அங்கும் வந்தார்

    சுவாமிகள் தனக்கே உரித்தான பாணியில் உபதேசம் செய்து கொண்டிருந்தார்

    "கத்தரிக்காய் பறிப்பதால் கத்தரிசெடி சாவதில்லை, வெண்டைக்காய் பறிப்பதால் வெண்டை செடி சாவதில்லை ஆனால் ஒரு ஆட்டையோ மாட்டையோ உண்ணும்பொழுது அந்த விலங்கு செத்துவிடுகின்றது" என மொழிந்து கொண்டிருந்தார்

    வழக்கம் போல துள்ளி எழுந்தார் கருணாநிதி

    "சுவாமி, அப்படியானால் கீரையினை வேரோடு பிடுங்குகின்றோம், கிழங்கினை பிடுங்குகின்றோம், கடலையினை பிடுங்குகின்றோம், அப்படியானால் அது சாவாதா சுவாமி

    தஞ்சை தரணியிலே நெற்பயிறை கூட சாகவிட்டுத்தான் கதிரறுக்கின்றார்கள், அதெல்லாம் பாவமில்லையா சுவாமி" என கேட்டுவிட்டு கூட்டத்தை சுற்றி கம்பீரமாக பார்த்துவிட்டு அமர்ந்துகொண்டார்

    கருணையே உருவான சுவாமி அவரை புன்னகைத்தபடி நோக்கி சொன்னார்

    "தம்பி, இந்துமதம் வேருக்கு அடியில் விளையும் எதையும் உண்ண அனுமதிக்கவில்லை , இதனாலே வெங்காயமும் பூண்டும் இன்ன பிறவும் சாஸ்திரம் அறிந்தவர் சேர்ப்பதில்லை

    கீரையினை இலையினை கிள்ளி உண்ணலாம், இதர் காய்கறிகளை அபப்டியே பறித்து உண்ணலாம், ஆனால் பாலுக்காக மாட்டை வெட்டமுடியுமா? கறந்து பெற்றாலே போதும்

    இலையினை பறித்தாலும் கனியினை பறித்தாலும் மரத்துக்கு வலிக்குமா செடிக்கு வலிக்குமா என்றால் கனிந்தது முதிர்ந்தது எல்லாம் வலி கொடுக்காது, உங்கள் தலைமுடி நகத்தை வெட்டினால் உங்களுக்கு வலிக்காது அல்லவா? அப்படித்தான் அங்கு கனிந்தது முதிர்ந்தது சுமையாகும் நாம் அதன் சுமையினை அகற்றுகின்றோம்

    மனிதனுக்கு தேவை சாந்தமான குணம் அதுதான் சமூகத்தில் அமைதி கொண்டுவரும், கானகத்தில் சாந்தமான விலங்குகள் கூட தாவரபட்சியாகத்தான் இருக்கின்றன, அவைகளுக்கு தெரிந்தது கூட பகுத்தறிவு கொண்ட மனிதனுக்கு புரியாவிட்டால் எப்படி?

    அதன் பின் அய்யா கருணாநிதியினை அப்பக்கம் காணவில்லை

    அதன் பின்னும் அவர் வழியில் உபிக்கள் கிருபானந்தவாரியாரை தேடி தேடி வம்பிழுத்தன‌

    திருவிளையாடல் படம் பார்த்த உபி ஒரு கூட்டத்தில், முருகனின் தகப்பன் யார்? என சுவாமிகள் கேட்க "சிவாஜி சாமி" என கிண்டலாக பதிலளித்தது

    சுவாமி தனக்கே உரித்தான புன்னகையில் சொன்னார்

    "சரியாக சொன்னீர்கள், காந்தி ஜி, நேரு ஜி, நேதாஜி என தலைவர்களை ஜி போட்டு சொல்வது நம் கலாச்சாரம்

    அப்படி முருகனுக்கு தகப்பனான சிவாவினை இவர் "சிவா ஜி" என சரியாக மரியாதையாக சொல்லியிருக்கின்றார், வாழ்த்துக்கள்" என்றார்

    அதன் பின் உபிக்கள் கிருபானந்தவாரியார் பக்கம் செல்வதையே குறைத்துவிட்டன

    போலி பகுத்தறிவு ஒரு காலமும் பரிசுத்தமான முன் நில்லாது, நிலைக்கவும் செய்யாது

    Jayasala 42
     
    svpriya, maalti, joylokhi and 2 others like this.
  2. maalti

    maalti Gold IL'ite

    Messages:
    312
    Likes Received:
    511
    Trophy Points:
    180
    Gender:
    Female
    Good to read
     
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,750
    Likes Received:
    12,576
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I enjoyed reading this share.
    Once, Padmasri Kripa - In his discourse was elaborating about sins and how sinners ending up with incurable diseases. He was stating that one sin lead to another like "lie". In this context he said sinners will have to use tabs or creams containing "sin" like
    Anacin, erythromycin soframysin and other names of medicines ending with suffix 'cin or sin' .
    Delhi tamil audience burst into Laughter .
    Regards.
    God Bless Us.
     
    maalti likes this.

Share This Page