1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

My Story In Anandha Vikatan!

Discussion in 'Varalotti Rengasamy's Short & Serial Stories' started by varalotti, May 22, 2008.

  1. pavithuari

    pavithuari New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    hi,
    can u please tell me ,how to write stories or articles to Anandha Vikatan?
    or any other magazines..i am living in abroad is there any possibility to send my stories or articles online? or by any means..
     
  2. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    Many magazines have online facility. But normally they wont read the mails from first-time writers.
    You may go to the vikatan website and get to know the details.
    You can also print and send the stories by airmail. It reaches here in 7 days and it's not as expensive as it used to be.
    all the best,
    sridhar
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அவளுக்கு எப்படி இருந்துருக்கும் அவன் அந்த முகவரி சொல்வதைக் கேட்டு... ஆனால் எனக்கு அதை நினைத்து பார்த்தால், சிரிப்பு தான் வருகிறது.. ஏனோ கோபம் வரவில்லை.:):)

    இப்படி கதை எழுதி அதன் மூலம், "பாருங்கள் அப்பாவி மனைவிகளே, எங்கள் இனம் கில்லாடியாய் இருப்போம் தவறு செய்வதில்" அப்படின்னு பெண்களை உஷார் படுத்தி தானே இருக்கிறீர்கள் ஸ்ரீ ?? பிறகு ஏன் எல்லாரும் உங்களை அடப்பாவி ன்னு சொல்றாங்க??:hide::hide:
     
  4. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    இப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்கிவிட்டாயே அடப்பாவி என்று தான் அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் போகட்டும் விட்டுவிடுங்கள்.
    இந்தக் கதை வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு கதை எழுதினேன். கால் செண்டர் காதலி என்ற தலைப்பில். அதில் ஆண்கள் நினைக்கும் அளவிற்கு பெண்கள் அப்பாவிகள் இல்லை என்ற வாதத்தை முன் வைத்தேன். கதை பெரிய வெற்றி. இப்போது கூட விகடனிலிருந்து போன் செய்து அதே மாதிரி கதை இருந்தால் அனுப்புங்களேன் என்று சொல்கிறார்கள். என்ன செய்ய?
    நன்றி தேவப்ரியா.
    ஸ்ரீ
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இதிலிருந்து என்ன தெரிகிறது ஸ்ரீ...:) உலகம் பொய்யை தான் அதிகமாய் விரும்புகிறது என்பது தெரிகிறதல்லவா??:hide:
    அதை எல்லாம் விட்டுவிடுவோம்...இங்கு அந்த கதைக்கான தொடுப்பு கொடுக்க முடியுமா உங்களால்? எனக்கு அதை படிக்கும் ஆவல்..பிளஸ்..:)
     
  6. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    அந்தக் கதையும் இந்தப் பகுதியில் தான் இருக்கிறது.
    இதோ அதற்கான தொடுப்பு

    http://www.indusladies.com/forums/v...ies/83286-my-story-latest-ananda-vikatan.html

    தொடுப்பு என்பது link என்பதற்கான நேர் தமிழ்ச் சொல்லா என்ன? உங்கள் புண்ணியத்தில் ஒரு நல்ல தமிழ்ச் சொல் கற்றுக் கொண்டேன்.
    எங்கள் பக்கத்தில் தொடுப்பு என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு.

    சரி இந்தக் கதையைப் படித்துவிட்டு என்னுடைய blogs பகுதிக்கு வாருங்களேன். பொன்னியின் செல்வனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அது போக ஒரு தொடர். அது போக ஆன்மீகம் கடவுள் பற்றிய ஏராளமான பதிவுகள். வந்துதான் பாருங்களேன்.
    ஸ்ரீ
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    படித்துவிட்டேன் ஸ்ரீ.... அவமானமாக இருந்தாலும், இதையும் ஒத்துக்கொள்ள தான் வேண்டும்..இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள்.
    நானும் இங்கு ஒருவர் மூலமாக தான் அந்த தமிழ் வார்த்தையைத் தெரிந்துக்கொண்டேன்.
    நிச்சயம் வருகிறேன் உங்கள் blogs க்கு.. இப்போது தான் உங்கள் கதைகளை படிக்க தொடங்கியிருக்கிறேன். ஒரே ஒருமுறை வாரமலரில், இளைஞர்கள் மனதில் பெண்களை பற்றி எப்போதுமே தவறான கண்ணோட்டம் இருப்பதில்லை எனுமாறு கதை ஒன்று எழுதியிருந்தீர்கள்..அதை படித்தேன்.:)
     
  8. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    நன்றி தேவப்ரியா! இதில் அவமானப்படுவதற்கு என்ன இருக்கிறது? அந்தக் கதையில் அந்தப் பாத்திரம் அப்படி. அவ்வளவுதான்.
    உங்கள் தமிழார்வம் மனதுக்கு இதமாக இருக்கிறது. இந்த வலைதளத்தில் கையெழுத்துப் பகுதியில் திருக்குறளை வைத்தது நீங்கள் ஒருவராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
    அது சரி, நீங்கள் சென்னையில் வசிக்கிறீர்களா? வரும் ஜனவரி மாதம் 8ம் தேதி (சனிக்கிழமை) மாலை நான்கு மணி அளவில் உங்களால் புத்தகக் கண்காட்சி நடக்கும் இடத்துக்கு (அதாவது புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி (பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ளது) மைதானத்துக்கு வர முடியுமா? அன்று தான் எனது அடுத்த புத்தகம் வெளிவருகிறது.
    உங்களைப் போல் என் எழுத்தை ரசிப்பவர்கள் வந்தால் மனதிற்கு நிறைவாக இருக்கும் என்பதால்தான் இந்த அழைப்பு.
    அன்புடன்,
    ஸ்ரீ
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நான் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதலாம் என்ற முயற்சியில் இருக்கிறேன் ஸ்ரீ..அதன் முதல் கட்டமாக தான் இந்த திருக்குறள் பயிற்சி.இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் கற்று கொள்வதாய் இருக்கிறேன்.அதை பார்க்கும் போதெல்லாம் அக்குறளும்,அதன் கருத்தும் மனதில் நிற்கும் என்பதற்காக.

    நான் தற்போது சென்னையில் தான் இருக்கிறேன் ஸ்ரீ..ஆனால் படிப்பதற்காக வந்த இடம் இது.நான் ஜனவரி மாதம் இங்கு இருந்தால், கண்டிப்பாக வர முயற்சி செய்வேன்.அடுத்த புத்தகம்?? தலைப்பு??
     
    Last edited: Dec 24, 2010
  10. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    நீங்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களைப் போன்ற மென்மையான மனம் கொண்ட, திருக்குறளை விரும்பும் ஆட்சியாளர்கள் இன்றைய அவசரத் தேவை.
    திருக்குறளில் நாம் அறியாத பல முத்துக்கள் பல இருக்கின்றன. ஒரு முறை விருதுநகரில் ஒரு அமைப்பில் பத்து அரிய குறட்ப்பாக்களை வைத்து வழிகாட்டும் வள்ளுவம் என்ற இரண்டு மணி நேர வகுப்பு எடுத்தேன். அதில் ஒரு குறள்
    உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும்
    கள்வரும் நேர்.
    இதன் பொருளை ஆராய்ந்து பாருங்கள். வள்ளுவனின் வல்லமை புரிபடும்.
    அந்தப் புத்தகத்தை ஆன்மீகம் என்ற வகுப்பில் சேர்த்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்த மட்டில் ஆண்டவன் மேல் நமக்கு இருக்கும் அன்பும் நம் மேல் அந்தப் பெருந்தகைக்கு இருக்கும் கலப்படமில்லாத காதல் வகையைச் சேர்ந்தது. இந்த அடிப்படைக் கருத்தை வைத்து 416 பக்கங்களுக்கு ரூமியின் கவிதைகளைத் தொட்டுக் கொண்டு நம் நாட்டுச் சான்றோர்களின் வாழ்க்கையையும் கலந்து எழுதின அந்தப் புத்தகம் "வல்லமை தாராயோ"
    புத்தகம் பால் தாங்கள் காட்டிய ஆர்வத்திற்கு நன்றி.
    அன்புடன்,
    ஸ்ரீ
     

Share This Page