"Maha Periavaa AruL Vakku" [Thanks to Kalki] ...அம்பாள் மனம் இறங்கணுமா?

Discussion in 'Religious places & Spiritual people' started by bharathymanian, Nov 6, 2014.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    அம்பாள் மனம் இறங்கணுமா?

    [​IMG]

    சௌந்தர்ய லஹரி சொல்கிறோம். அபிராமி அந்தாதி சொல்கிறோம் என்று பல பெண்கள். என்னிடம் வந்து ஆசிர்வாதம் கேட்கிறார்கள். நல்ல காரியம்தான் ஆசிர்வாதம் பண்ணுகிறேன். ஆனால், இதையெல்லாம் விட அதிகமாக அம்பாளுடைய ப்ரீதியைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமானால் இவர்கள் வரதக்ஷிணை, வைரத்தோடு, சீர்செனத்தி என்ற கண்டிஷன் இல்லாமல் கல்யாணங்களுக்கு மனப்பூர்வமாக சம்மதித்தால் தான் முடியும். தங்கள் மாதிரியான பெண்கள் வயது வந்ததும் கல்யாணமாகாமல் நிற்பது, அதனால் மனவிகாரப்படுவது, மானபங்கப்படுவது, அப்புறம் மான உணர்ச்சியும் மரத்துப் போய் விடுவது என்றிப்படி ஆகியிருக்கிற நிலைமையை மாற்றுவதற்கு முன்வந்தால் இவர்களிடத்தில் அம்பாளும் மனசு தானாக இரங்குவாள்.
    நாங்கள் கேட்காமல் பெண் வீட்டுக்காரர்களாகவே இத்தனைக் கொடுக்கிறோம் என்று சுயேச்சையாக வந்ததால் வாங்கிக் கொண்டோம்" என்று சொல்வது கூடத் தப்பு. ஏனென்றால், ஒருத்தர் பண்ணுவதிலிருந்து இன்னொருத்தர் என்று இது செயின் மாதிரி போய்க் கொண்டிருக்கிற வழக்கம். கட்டாயப்படுத்தாமல் ஒருத்தர் வரதட்சணை கொடுத்தாலும் இதனால் அவர்தம் பிள்ளைக்கும் கல்யாணம் பண்ணும் பொழுது, வரதட்சணை எதிர்பார்க்கத்தான் செய்வர். அதனால் அவர்களாகவே கொடுத்தாலும் கூட வேண்டாம்" என்று சொல்கிற உயர்ந்த மனோபாவம் வேண்டும்."

    காஞ்சி மகா சுவாமிகள் அருளுரையிலிருந்து...
    =============================================================
    நம், வியத்தகு, "மஹா பெரியவா" வெகு அழகாக ஒரு சமூக பிரச்னையை, அவருக்கே உரித்தான பாணியில், லகுவாக, சரியான சந்தர்ப்பத்தில், 'அம்பாளின் 'ப்ரீதியை எப்படி சம்பாதிக்கவேண்டும் என்று சம்பந்தபட்டவர்கட்கு சொல்லியிருக்கிறார்/அறிவுறைத்துள்ளார். எப்படி பிள்ளை வீட்டார்கள் இருக்க வேண்டும் என்றும் விவரித்துள்ளார். [அப்படியே இதில் இன்னொரு விஷயமும் தொக்கி இருக்கிறது; இது என் கருத்தாகும்.....அது என்னவென்றால் பிள்ளை வீட்டார் அடித்து, பிடித்து பணமோ, பொருளோ பெண் வீட்டாரிடம் தண்டி வாங்கினார்களானால் பெண் மணம் முடிந்து புக்ககத்தில் போன பிறகு, எந்த வித மனோபாவத்தில் இருப்பார்கள் என்பதையும் உணரவேண்டும். அது முக்கியமில்லையா? அது சாதாரண விஷயமா?]

    "பாரதிமணியன்"
     
    sindmani likes this.
    Loading...

Share This Page