1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Krishna's Chaaturyam

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 7, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இது செவி வழிச் செய்தி .
    கிருஷ்ணன் சில சமயங்களில் சமாதான முறையிலும் தம் காரியத்தைச் சாதித்துக் கொண்டிருக்கிறார்.

    " நாளைக்கு கட்டாயம் போரில் அர்ஜுனனைக் கொல்லப் போகிறேன் " என்று துரியோதனனுக்கு வாக்களித்து விட்டார் பீஷ்மர்.

    இது கண்ணனுக்குத் தெரிய வந்தது.பீஷ்மர் சத்ய பிரமாணம் செய்து விட்டால் அது கட்டாயம் நடந்தாக வேண்டுமே. அவரது பிரம்மச்சர்யத்தின் வலிமை அப்படிப்பட்டது.சிந்தித்தான் கண்ணன்.


    அடுத்த நாள் விடியற்காலையில் பீஷ்மரின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.பீஷ்மர் வெளியே வந்து கதவைத் திறந்தால் கண்ணன்!கூடவே யாரோ ஒரு பெண் , முகத் திரையைப் போட்டுக் கொண்டு பவ்யமாக நிற்கிறாள் .

    பீஷ்மரைக் கண்டதும் கீழே விழுந்து பல முறை நமஸ்காரம் செய்கிறாள்.

    பீஷ்மர் விடியற்காலையில் பரமாத்மா கிருஷ்ணரைப் பார்த்த மகிழ்ச்சியிலும் அதிர்ச்சியிலும் உறைந்து போய் " தீர்க்க சுமங்கலி பவ "என்று பலமுறை கையை உயர்த்தி உளமார வாழ்த்துகிறார்.

    கண்ணனும் பீஷ்மரை வணங்குகிறான்.

    அந்த பெண் தன முகத் திரையை விலக்குகிறாள் .பீஷ்மருக்கு அதிர்ச்சி.வந்தது யாரோ ஒரு பெண்ணல்ல. சாக்ஷாத் திரௌபதியே .

    எந்த வாயால் " நாளை அர்ஜுனனைக் கொல்வேன்" என்று வாக்களித்தாரோ அதே வாயினால் சௌபாக்யத்தைக் கூறி அமங்கலத்தை ஓட ஓட விரட்டி விட்டார் பீஷ்மர்.சத்தியத்தைக் கொண்டே சத்தியப் பிரமாணத்தை முறியடித்த கண்ணனின் ராஜதந்திர வெற்றியல்லவா?

    Jayasala42
     
    4 people like this.
    Loading...

Share This Page