1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Indus Ladies மேலும் வளர சில டிப்ஸ்!

Discussion in 'Posts in Regional Languages' started by Nilaraseegan, Jun 4, 2009.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    இந்த வலைத்தளத்தில் உறுப்பினர் ஆனதிலிருந்து மனதெங்கும் இனம்புரியாத சந்தோஷம் என்னை தொற்றிக்கொண்டிருக்கிறது. பல குழுமங்களில் பல வருடங்களாக உறுப்பினராக இருந்துவந்தாலும் இந்தத் தளத்தின்
    நிர்வாகம் வியக்க வைக்கிறது. அதற்கு மிக முக்கிய இரண்டு காரணங்கள்

    1.நிர்வாகத்தை திறம்பட நடத்துபவர்(கள்)
    2.ஒவ்வொருவரும் இதை தன் வீடாக/குடும்பமாக/நட்பாக கருதி பழகும் விதம்.

    முதலில் இது பெண்களுக்கான தளம் மட்டுமோ என்கிற தயக்கத்திலேயே உறுப்பினர் ஆகாமல் தவிர்த்தேன். அதன்பிறகு சில ஆண்களையும் கண்டதில் (ஆயிரந்தான் இருந்தாலும் எங்க இனமாச்சே :)) மகிழ்ந்து
    உடனே உறுப்பினரானேன்.

    சரி விஷயத்திற்கு வருவோம். இந்த தளத்தில் 100000 நபர்களை சேர்ப்பது பற்றி ஒரு தனி இழை(Thread)
    இருப்பது கண்டவுடன் அந்த இலக்கை அடைய என் மனதில் தோன்றும் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    நிறைய உறுப்பினர்களை அடைவது எப்படி?

    1. இதுவரை உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரும் தங்களது மடலில்(மின்னஞ்சல்) Signature
    ஆக IndusLadies - Global Online Community of Indian Ladies
    என்று வைக்கலாம்.

    2. தனியாக வலைப்பதிவு(Blog) வைத்திருக்கும் அன்பர்கள் தங்களது வலைப்பதிவில் இத்தளத்தின் முகவரியை கொடுக்கலாம்.

    3. சிறுகதை/கவிதை/கட்டுரை இப்படி ஏதேனும் ஒரு போட்டியை நடத்தலாம். இதனை மற்ற தளங்களிலும் விளம்பரமாக கொடுக்கலாம். போட்டியில் கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக தளத்தில் உறுப்பினராக சேரவேண்டும் என்றொரு நிபந்தனை மட்டும் போதும். இதன் மூலம் இணையத்தில் எழுதுகின்ற இளம் எழுத்தாளர்கள் பயன்பெறுவர். அதன் மூலம் நம் தளமும் உயர்வடையும்.

    4. சென்னை சந்திப்பு புகைப்படங்கள் கண்டேன் மிகச்சிலர் மட்டுமே பங்கேற்றிருப்பதாக உணர்கிறேன். இதனை பெரிய அளவில் சந்திப்பாக வைக்கலாம்( ஏதேனும் உதவி தேவை எனில் நான் செய்கிறேன். இதற்கு முன்பு வேறொரு தளத்தில் 100+ உறுப்பினர்களை இணைத்து பெரும் சந்திப்பை நிகழ்த்திய அனுபவம் இருக்கிறது)

    5.அதேபோல் சந்திப்பானது ஒவ்வொரு மாதமும் நடத்தலாம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை. இதை ஒவ்வொரு ஊரிலும்(சென்னை,மும்பை,தில்லி,) நடத்தவேண்டும். ஒவ்வொரு ஊருக்கும் ஒருவர் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    6.இதெல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு ஆனா நடத்த சாத்தியமா என்று உங்கள் மனதில் கேள்விகள் எழுவதாக இருந்தால் "முடியாது" என்கிற சொல் என் அகராதியிலேயே இல்லைங்கோ :)

    முயற்சி செய்வோம். வெற்றி பெறுவோம். :thumbsup


    (நண்பர்கள் உங்களது டிப்ஸையும் சொல்லுங்களேன்)

    அள்ளித்தர நட்புடன்
    நிலாரசிகன்.
     
    Loading...

  2. Stephane

    Stephane Senior IL'ite

    Messages:
    180
    Likes Received:
    1
    Trophy Points:
    20
    Gender:
    Female
    Hai Nila,
    I have read lots of poem written by you. I joined recently IL. I never expected that I will meet you here in IL.
    Nice to see u and ur poems here..
     
  3. madhuharini

    madhuharini Silver IL'ite

    Messages:
    186
    Likes Received:
    36
    Trophy Points:
    55
    Gender:
    Female
    WELCOME for IL.How do u type in tamil.Pl share .
     
  4. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    Hi Madhu,

    You need to Install E-kalappai Software for tamil typing.
     

Share This Page