1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Home Remedies - Tamil

Discussion in 'Posts in Regional Languages' started by swamy24598, Mar 6, 2013.

  1. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 95

    பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப்பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்துவர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.
     
  2. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 96

    உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை, குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் பொன்னாங்காணி கீரையை விந்து கட்டி எனப் பேசுகிறது.
     
  3. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 97

    நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
     
    Last edited: Jul 24, 2013
  4. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 98

    கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
     
  5. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 99

    அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும். ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.
     
  6. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Remedy # 100

    ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
     

Share This Page