History of Sri Lalitha Sahasranaamam.

Discussion in 'Pujas Prayers & Slokas' started by malaswami, Mar 11, 2012.

  1. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Dear IL-ites..

    It is my long pending desire to bring out the History of Sri Lalitha Sahasranaamam and the meaning of all the 1000 naamas of Sri Lalitha. Just after finishing Lalitha Trisati, I have just started in bringing out the History of Sri lalitha sahasranaamam. Hope this shall be useful for all IL-ites here, and request you all to pray for me in completing this Noble task of bringing out the History of Sri Lalitha....and also with the blessings of Sri Lalithambiga.


    ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம வரலாறு

    திரிலோக சஞ்சாரியும் தமிழ் மொழியை உண்டு பண்ணித் தமிழ் வளர்த்தவரும் சிறந்த சித்தரும் ஆகிய அகத்திய முனிவர் ஒருமுறை இமயமலைக்குச் சென்றார். அங்கு ஒரு இடத்தில் சில ரிஷிகள் தலைக்கீழாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டார். அகத்தியர் அவர்களை பார்த்து "ரிஷிகளே தாங்கள் ஏன் இவளவு கடுமையான தவத்தைச் செய்து கொண்டு இருக்கீர்கள் ? காரணம் என்ன? " என்று வினவினார்.

    அதற்க்கு அந்த ரிஷிகள் பூலோகத்தில் எங்கள் பரம்பரையில் அகத்தியன் என்று ஒருவன் இருக்கிறான். அவனுடைய மூதாதையர் நாங்கள். அவனது ஊழ்வினை (ப்ராப்தம்) அவன் திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகா வேண்டும். இல்லறத்தால் உண்டாகும் கஷ்டங்களையும் இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பதாகும். அனால் அவனோ பிரமச்சரிய விரதம் பூண்டு திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறான். அவன் அனுபவிக்க வேண்டிய கஷ்ட நஷ்டங்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் என்றனர்.

    உடனே அகத்தியர் அந்த ரிஷிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி, அந்த அகத்தியன் என்பவன் நான் தான். எனக்காக தாங்கள் துன்புற வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்கிறேன், ஒரு குழந்தைக்குத் தந்தையும் ஆகிறேன், இது சத்தியம் என்று வாக்குறுதி அளித்தார். உடனே அந்த ரிஷிகள் தவத்தை விட்டு விட்டு அகத்தியருக்கு ஆசி வழங்கினர். பின்னர் மகிழ்ச்சியுடம் பிதுர் லோகம் சென்றனர்.

    will be continued.....
     
    2 people like this.
    Loading...

  2. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    அன்றிலிருந்து அகத்தியர் தனது பிரமச்சரிய விரதத்திற்கு குந்தகம் விளைவிக்காத, தன்னை அனுசரித்து நடக்ககூடிய பெண் எங்கு இருக்கிறாள் என மூவுலகையும் சுற்றி தேடி வந்தார். அப்படித் தேடி வரும்போது பிரம்ம லோகத்திற்கும் சென்றார். அங்கு பிரம்ம தேவர் விஷுன்னுமாயையை ஓர் அழகிய கன்னிகையாக ஆக்கி வைத்திருந்ததைப் பார்த்தார். பிரம்மாவை வணங்கி விட்டுப் பூலோகத்திற்கு வந்து விட்டார். இது இப்படி இருக்க........

    விதர்ப்ப தேசத்தில் கவேரன் என்னும் அரசன் குழந்தை வேண்டிப் பல ஆண்டுகள் தவம் செய்தார். பலன் இல்லை. கடைசியாக மனைவியுடன் சேர்ந்து சிவா பெருமானைக் குறித்து கடுமையாகத் தவம் செய்தார். சிவபெருமான் அவர்முன் தோன்றி "இப்பிறவியில் உனக்கு புத்திர பாக்கியம் இல்லை. ஆதலால் வீணாக உன் உடலை வருத்திக் கொண்டிருக்காதே. தவத்தை விட்டுவிடு" என்றார். கவேரரும் தவத்தை விட்டுவிட்டு மனச் சோர்வுடன் வாழ்ந்து வந்தார். வயதும் ஆகிவிட்டது.

    இந்நிலையில் அகத்தியர் பெண் தேடிக்கொண்டு விதர்ப்ப மன்னன் கவேர ரிஷியிடம் வந்தார். கவேரரும் அவரது மனைவியும் அகத்தியர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்போது இவர்களது சோகத்தைத் தனது சித்தியினால் அறிந்த அகத்தியர் "புத்திர பாக்கியம் உண்டாவதாக!" என்று ஆசீர்வதித்தார். இருவரும் திடுக்கிட்டு "ஸ்வாமி, எங்களுக்கு இப்பிறவியில் புத்திர பாக்கியம் கிடையாது என்று சிவபெருமானே கூறிவிட்டார், அப்படி இருக்க தாங்கள் புத்திர பாக்கியம் பெருக என ஆசீர்வதித்து உள்ளீர்கள். இது நடக்க கூடியதா,? நாங்களும் மிகுந்த வயோதிகர்கள் ஆகிவிட்டோம் , தங்கள் வார்த்தை பொயிக்கலாமா? என்று கண்ணீர் மல்க வினவினர்..
     
    1 person likes this.
  3. shantisubra

    shantisubra Gold IL'ite

    Messages:
    1,193
    Likes Received:
    240
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Dear Malaswami

    Wish you good luck in your endeavour. Its great to know the history of such a beautiful sahasranamam of Goddess Lalitha. Thanks for taking this measure and sharing with us all. We are blessed.

    Goddess Lalitha Devi's blessings to all.

    Best Regards
    Shanti
     
    1 person likes this.
  4. shruthipraveen

    shruthipraveen Platinum IL'ite

    Messages:
    2,580
    Likes Received:
    879
    Trophy Points:
    233
    Gender:
    Female
    Can u pls post the english translation for ppl like me who cannot read tamil????
     
  5. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    அகத்தியர் புன்முறுவலித்து கூறுகிறார். "தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை. ஆனால் எனது தபோ வலிமையால் நான் இப்போது ஒரு பெண் குழந்தையை கொடுக்கின்றேன். இவளைத் தக்க வயதில் எனக்கே திருமணம் செய்து தர வேண்டும்" என்று கூறி தனது இரு கரங்களையும் முன் நீட்டி கண்மூடி, பிரம்ம லோகத்தில் விஷ்ணு மாயையாக உள்ள கன்னிகையைத் தனது தவ வலிமையால் அப்போது பிறந்த குழந்தையைப் போல் ஆக்கி கவேர அரச-அரசியின் கையில் கொடுத்தார். இவ்விஷயத்தை தெரிந்துக்கொண்டு தேவர்கள் அக்கொழந்தையைப் பார்க்க வந்தனர். அக்குழந்தை பெண்ணிற்குரிய 64 லக்ஷணங்களும் நிறைந்து மிக அழகாகத் திகழ்வதைப் பார்த்து லோபாமுத்ரா (அறுபத்து நான்கு லட்சணங்களும் குறையாதவளே) எனப் பெயரிட்டு அழைத்தனர். கவேர அரசரின் மகளானதால் மக்கள் அவளைக் காவேரி என்று அழைத்தனர்.

    காவேரி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தால். இது நாள் வரையும் குழந்தை இல்லாததால் சோகமாக இருந்த கவேரரும் அவரது மனைவியும் மிக்க சந்தோஷத்துடன் அவளது மழலையையும், தவழ்ந்து நடப்பதையும் கேட்டும் பார்த்தும் ரசித்தனர். விஷ்ணு மாயையே பிராந்தி இருப்பதால் மிக விரைவிலேயே மழலை மாறி மிகத் தெளிவாக பேச ஆரம்பித்தாள், காவேரி.
     
    1 person likes this.
  6. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    காவேரிக்கு ஏழு வயதாயிற்று. விதர்ர்ப்ப நாடும் வளம் கொழிந்து விளங்கிற்று. ஒரு நாள் சர்யானந்தநாதர் என்னும் ஸ்ரீவித்யா குருவானவர் வந்து அரசனிடம் " நான் சாதுர்மாஸ்ய விரதம் இருக்க விரும்புகிறேன், ஆதலால் உன்னுடைய நந்தவனத்தில் ஒரு குடிசையமைத்து என் கருத்தறிந்து பணிகள் செய்ய ஒரு பணியாளையும் ஏற்படுத்தி தருவாயாக!" என்று கூறினார். அரசர் சிந்தித்தார். சர்யனந்தநாதரோ மிகவும் கோபக்காரர். நந்தவனத்தில் பர்ணகசாலை அமைத்து கொடுத்துவிடலாம். இம்முனிவர் கருத்துணர்ந்து பணி செய்ய ஆட்களுக்கு என்ன செய்யலாம்? நாமே செய்யலாம் என்றால் அதிக வயசாகிவிட்டது. அரசிக்கும் வயதாகி விட்டது. இக்கட்டில் மாட்டிக் கொண்டோமே என்ன செய்வது என மனவருத்தத்துடன் மிகவும் சோகமாக இருந்தார். இவ்வாறு தாய் தந்தையர் சோகமே உருவாக இருப்பதைப் பார்த்த லோபாமுத்திரை அவர்களைப் பார்த்து ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்? இது நாள் வரை தங்களை நான் இவ்வாறு பார்த்தது இல்லையே ? என்ன காரணம்? என வினவினாள்.

    அரசர் "காவேரி! கண்மணி! நமது நந்தவனத்தில் தவம் இயற்ற ஒரு முனிவர் வந்துள்ளார். அவரது மனம் அறிந்து பணியாற்ற ஒரு பணியாளும் கிடைக்கவில்லை. வயோதிகர்களாகிய எங்களாலும் இயலாது. என்ன செய்வது? அவருக்கோ சீக்கிரம் கோபம் வந்து சாபமிட்டுவிடுவார். அதுதான் பயமாக உள்ளது " என்றார்.
     
    1 person likes this.
  7. hetha

    hetha Bronze IL'ite

    Messages:
    201
    Likes Received:
    31
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Sir,
    We all are much blessed by coming to know the history of goddess shri lalitha ambigai. Hope to hear more things like this in future.
    Good regards
     
    1 person likes this.
  8. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    I am very sorry mrs.shruthipraveen... Perhaps some learned person in Translation would help in translating this noble History into english, as I am very poor in translation...

    Goddess Lalitha Bless us all..

    Malathi Swaminathan
     
  9. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    A very good write-up on Lalitha Sahasranamam.. I feel this as a blessing of Lalithambal as I jus now finished reciting the Sahasranamam, and happened to see this article now. Thanks for sharing with us.
     
    1 person likes this.
  10. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hi latharam09..
    Divine blessings of Ambal is really showered upon you....
    Thanks for your FB
     

Share This Page