1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  3. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

Halwa, Halwa

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Sep 18, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    4,650
    Likes Received:
    9,357
    Trophy Points:
    408
    Gender:
    Female
    *கொஞ்சம் சிரிக்கலாமே*
    இப்போதெல்லாம் ஆன்லைன்ல சாப்பிடும் பொருள்களை ஆர்டர் கொடுத்து வரவழைத்துக் கொள்ளலாமாம் ...
    இப்படித் தான் ஒருத்தருக்கு ஸ்வீட் சாப்பிட ஆசையாய் இருக்குன்னு ஒரு பிரபல ஸ்வீட் கடைக்குத் தனது ஃபோனில் தொடர்பு கொண்டார்
    "எனக்கு ஸ்வீட் சாப்பிட ஆசையாய் இருக்கு உங்களிடம் என்னென்ன வகை இருக்கு "
    பதில் வந்தது ...
    லட்டுக்கு எண் 1 அழுத்தவும்
    பூந்திக்கு எண் 2 அழுத்தவும்
    ஹல்வாவுக்கு எண் 3 அழுத்தவும்
    கேசரிக்கு எண் 4 அழுத்தவும்
    குலோப்ஜாமூன் வாங்க எண் 5 அழுத்தவும்
    ஜிலேபிக்கு எண் 6 அழுத்தவும்
    இவன் எண் 3-ஐ அழுத்தினான்
    பதில் வந்தது ...
    கோதுமை ஹல்வாவுக்கு எண் 1 அழுத்தவும்
    பாதாம் . ஹல்வாவுக்கு எண் 2 அழுத்தவும்
    பால் ஹல்வாவுக்கு எண் 3 அழுத்தவும்
    ரவா ஹல்வாவுக்கு எண் 4 அழுத்தவும்
    இவன் எண் 1-ஐ அழுத்தினான்
    பதில் வந்தது ...
    பசு நெய்யால் செய்த ஹல்வாவுக்கு எண் 1 அழுத்தவும்
    நெய்யால் செய்த ஹல்வாவுக்கு எண் 2 அழுத்தவும்
    சாதாரண நெய்யால் செய்த ஹல்வாவுக்கு எண் 3 அழுத்தவும்
    பாமாயில் ஆயிலில் செய்த ஹல்வாவுக்கு எண் 4 அழுத்தவும்
    இவன் எண் 1-ஐ அழுத்தினான்
    பதில் வந்தது ...
    கால் கிலோ வேண்டுமென்றால் எண் 1 அழுத்தவும்
    அரை கிலோ வேண்டுமென்றால் எண் 2 அழுத்தவும்
    முக்கால் கிலோ வேண்டுமென்றால் எண் 3 அழுத்தவும்
    ஒரு கிலோ வேண்டுமென்றால் எண் 4 அழுத்தவும்.
    ... ... ...
    நூறு கிலோ வேண்டுமென்றால் எண் 9 அழுத்தவும்
    இவன் தவறுதலாக எண் 9 ஐ அழுத்தி விட்டு ஃபோனை off செய்து விட்டான் ...
    ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஃபோனை on செய்த உடனே
    "அங்கிருந்து" மீண்டும் அழைப்பு வந்தது ...
    "நீங்கள் தானே ஆர்டர் செய்தீர்கள் ?"
    " ஆம் இது என்னுடைய ஃபோன் தான் ... ஆனால் ஆர்டர் செய்தது நான் அல்ல ... என் வீட்டில் இருக்கும் உடன் பிறந்தவர்கள் யாராவது செய்திருப்பார்கள் ... எனவே நீங்கள்
    என் பெரிய அண்ணனைத் தொடர்பு கொள்ள எண் 1 ஐ அழுத்தவும்
    என் சிறிய அண்ணனை தொடர்பு கொள்ள எண் 2 ஐ அழுத்தவும்
    என் தம்பியை தொடர்பு கொள்ள எண் 3 ஐ அழுத்தவும்
    அடுத்தத் தம்பியை தொடர்பு கொள்ள எண் 4 ஐ அழுத்தவும்
    ஆனால் அந்தப்பக்க தொடர்பு
    ஏனோ அறுந்து போனது ...
    கொய்யலயாருகிட்டதமிழன்டா
    யாருக்காவது ஹல்வா வேணுமா
    jayasala42
     
    umaakumar likes this.
    Loading...

Share This Page