1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Guru Paarvai

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Nov 20, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஒரு முறை குரு பகவானாகிய பிருகஸ்பதி ஆழ்ந்த மனக் கவலையில் இருந்தார்.அங்கு வந்த நாரதர் " என்ன, அறிவின் சிகரத்துக்கே குழப்பமா?" என்றார் கேலியாக.


    "என் மகள் கிரீஷன் என்ற தேவ குமாரனைக் காதலிக்கிறாள் .என் மகளின் ஜாதகப்படி,அவளை மணப்பவன் அன்று இரவே மாண்டு போவான்.என் மகளை மணக்கும் காரணத்துக்காக ஒரு சிறந்த வாலிபன் உயிர் துறப்பதை நான் விரும்பவில்லை.உண்மையை கிரீஷனிடமே கூறிவிட்டேன்.ஆனால் அவன் "ஒரு நாள் வாழ்ந்தாலும் என் பெண்ணோடு தான் வாழ்வேன்" என்கிறான். என் பெண்ணும் தன நிலையை மாற்றிக் கொள்ள விரும்ப வில்லை " என்றார்.


    நாரதர் உடனே"எப்பேர்ப்பட்ட அறிஞரும் தனக்கு என்று ஒரு பிரச்னை வந்து விட்டால் குழம்பி விடுகின்றனர். அதற்கு நீரும் விதி விலக்கல்ல.நீங்கள் திருமணம் நடத்துங்கள். பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன்: என்றார்.

    நாரதர் கூறிய தீர்வு என்ன?



    திருமணம் ஆன முதல் இரவு தம்பதிகள் இருவரும் அம்மன் கோவிலுக்குச் சென்று கண்களை இறுக மூடிக் கொண்டு பிரார்த்தனை பண்ண வேண்டும்.கண்ணைத் திறக்கக் கூடாது.நீங்கள் வெளியே நின்றபடி அவர்களை இடைவிடாமல் கண்காணிக்க வேண்டும்" என்றார்.


    திருமணம் எளிமையாக நடந்தது.திருமணம் முடிந்ததும் தம்பதி சமேதராக இருவரும் தேவியின் திரு உருவம் முன்பு மண்டியிட்டு அமர்ந்து கண்மூடி தியானத்தில் அமர்ந்தனர்..குரு பகவான் வெளியே நின்றபடி இருவரையும் பார்த்தபடி நின்றார்.

    திடீரென்று உறுமலுடன் பாய்ந்து வந்தது ஒரு புலி.உள்ளே நுழைந்த புலி சாதுவாக அமர்ந்து கொண்டது.அது வெளியேறிய கொஞ்ச நேரத்தில் ஒரு கொடிய விஷப் பாம்பு அங்கு வந்தது.சிறிது நேரம் பொறுத்து அதுவும் தன தலையைத் தொங்க விட்டபடி சென்று விட்டது.

    பொழுது விடிந்ததும் இருவரும் தியானம் கழிந்து எழுந்தனர்.

    " எல்லாம் சுபமாக முடிந்ததா?" என்றார் நாரதர் .


    " எப்படி இது? நேற்று இரவே இவன் மாண்டு போயிருக்க வேண்டுமே"?என்று கேட்டார் குரு.

    "எல்லாம் உங்கள் பார்வையின் மகிமைதான்.அதனால் தான் உங்கள் பார்வையை விட்டு அவர்கள் விலகக் கூடாது என்று சொன்னேன்.உங்கள் பார்வை பட்டதும் ,புலி தன குரூர எண்ணத்தை விட்டு விட்டது .பாம்பு விஷம் கக்கும் தன்மையையே இழந்து விட்டது.குருவின் லேசான பார்வையே கோடி நன்மை தரும்.உங்கள் முழு பார்வையும் முழு தீக்ஷ்ணத்துடன் பாயும்போது எமன் கூட எதிர் நிற்க முடியாது"என்றுரைத்தார் நாரதர்.

    குருவை விட குரு பார்வை மேலானது.

    நம்பிக்கை இல்லாதவர்க்கும் நல்லது நடந்தால்
    சந்தோஷம் தானே?


    Jayasala 42
     
    Loading...

Share This Page