1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Durga Bhabi

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jul 27, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    19 டிசம்பர், 1928, நள்ளிரவு, லாகூர்...
    அந்த பங்களாவின் திட்டி வாசல் போன்ற ரகசிய கதவு சங்கேத மொழியில் தட்டப்படுகிறது. கதவை திறந்தது ஒரு அழகிய இளம் பெண், இடுப்பில் குழந்தையுடன்.

    வந்த நால்வரை பார்த்த உடன் அவர் முகம் மலர்கிறது. உள்ளே அமரச் செய்து உணவளிக்கிறர். வந்தவர்கள் எல்லோரும், இளைஞர்கள். HSRA (ஹிந்துஸ்தான் ஸோஷியலிஸட் ரிப்பப்ளிக் அஸோசியேஷன்) என்ற தேச விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் தாழ்ந்த குரலில் பேசிக் கொள்ளுகிறார்கள.

    என்ன பிரச்சினை? அவர்களை இன்றைய தேதியில் லாகூரில் 500 போலீசார் வலை வீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள்... காரணம்?
    இரண்டு நாட்கள் முன்தான் இந்த நால்வரும் லாகூரின் டெபுட்டி போலீஸ் சூப்பிரன்டென்டன்ட் John P Saunders மற்றும் ஒரு கான்ஸடேபிளை சுட்டு கொன்று விட்டு தப்பியவர்கள்...

    (அவர்கள் குறி வைத்தது என்னமோ பஞ்சாப் சிங்கம் #லாலா_லஜ்பத்_ராய் அவர்களின் வீர மரணத்திற்குக் காரணமான போலீஸ் சூப்பிரன்டென்டன்ட் "ஜேம்ஸ் A. ஸ்காட்டுக்கு". குறி தப்பியது, "Mistaken identity")

    நால்வருக்கும். லாகூர் இப்போது HOT SPOT. இங்கிருந்து தப்பியே ஆக வேண்டும். இருக்கும் ஒரே எஸ்கேப் ரூட் விடியற் காலை கிளம்பும் "லாகூர் -via "லக்னோ / கான்பூர் டிரைன்" தான்.

    திட்டம் தயார்...
    இளைஞர்களில் ஒருவரான #பகத்_சிங் தன் தாடி மீசை எடுத்து விட்டு, ஒரு பணக்கார பிரபு வேஷத்திலும்...,
    மற்றொருவரான #ராஜ்குரு, அவருடைய வேலைக்காரன் போலவும்...,

    போலீசை ஏமாற்ற....
    அவர்களால் மரியாதையாக #துர்கா_பாபி (Bhabhi) என அழைக்கப்பட்ட இளம் பெண் (#துர்காவதி_தேவி) பகத் சிங்கின் மனைவி போல் கை குழந்தை சச்சின் வோரா உடனும்....

    மற்ற இளைஞர் #சந்திரசேகர_ஆசாத் தங்கள் சஹாவான #சுக்_தேவின் தாய், மற்றும் தங்கையை காசிக்கு புனித யாத்திரை அழைத்தப் போகும் சன்யாசி வேஷத்தில்....

    கான்பூருக்கு போய்,
    - அங்கிருந்து பகத் சிங் போலி தம்பதி - குழுவினர் கல்கட்டாவிற்கும்,
    - ஆசாத், குழுவினர் காசிக்கும் ரயில் மாறி நழுவி விட வேண்டும்.

    இதற்கு தேவையான மாறு வேட உடைகள், போதுமான (5000 ரூபாய்) பணம், தேவையானால் பயன்படுத்த துப்பாக்கிகள் (துர்கா Bhabhiக்கு ) எல்லாம் துர்கா Bhabhi தயாராக வைத்திருந்தார்.

    திட்டம் அச்சு பிசகாமல்நடந்தேறுகிறது. பறவைகள் லாகூர் விட்டு சிட்டாக பறந்து விடுகின்றன. ஏன் கல்கட்டாவிற்கு? அங்குதான் துர்கா பாபியின் 26 வயது கணவர் "பகவதி_சரண்_ஓரா" BA, செல்வந்தர், HSRA இயக்கத்தின் முக்கிய ரகசிய நபர்... இயக்கத்தின் மீட்டிங்கில் கலந்து கொள்ள போய் இருக்கிறார். துர்கா Bhabhiயே தன் கைப் பட தயாரித்து கொடுத்து அனுப்பியுள்ள ஒரு வெடி குண்டுடன். (அதில் அவர் ஒரு நிபுணர்) அடுத்த தாக்குதலுக்கு.

    கல்கட்டாவில், மனைவியை சந்தித்த ஓரா, அவருடைய தீரச் செயலை கேட்டு மகிழ்ந்து, இவர் முகம் சிவக்க. எல்லோர் முன்பும் கை குலுக்கினாராம்.

    சில நாட்கள் கழித்து ஒரு ஏழை பெண் வேஷத்தில் அதே டிரைனில் குழந்தையுடன் இரண்டாம் பேர் அறியாமல் லாகூர் திரும்பி விடுகிறார் துர்கா Bhabhi. வந்து, வழக்கம் போல் அவர்கள் நடத்தும்ஹிமாலையன்_ஸ்டோரஸ் என்ற கடையின் வியாபரத்தை கவனிக்கிறார்.

    உண்மையில்... ஹிமாலையன் ஸ்டோரஸ் ஒரு திரை தான். அதன் திரை மறைவில் இயங்குவது ஒர் வெடிகுண்டு தொழில் சாலை. அதன் Chief Technician துர்கா Bhabhi தான்.

    1929 டிசம்பர் இல் வைசிராய் லார்ட் இர்வின் பிரயாணம் செய்த ரயிலின் அடியில், கணவர் ஓராவினால் வைக்கப்பட்டு வெடித்த குண்டு இவர் கையால் செய்யப்பட்டது தான்.
    கல்கட்டாவில் இருந்து திரும்பி வருகிறார் ஓரா.

    பின்னாலேயே அந்தச் செய்திகளும், வருகின்றன. - சுக் தேவ், ராஜ் குரு, பகத் சிங், அசெம்பிளி யில் குண்டு வீசிய (Smoke bomb) பின், அவர்கள் பிடி பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டு, லாகூர் சதி வழக்கு என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது., முதலியன.

    ஓரா தம்பதியினரும்.. HSRA இயக்கமும், சிறைப்பட்ட புரட்சியாளர்களை சிறை மீட்கக் சிறையை வெடி குண்டு வைத்து தகர்க்க திட்டம் இடுகின்றனர். மாதிரி வெடி குண்டு ஒன்றை துர்கா Bhabhi தயாரிக்கிறார்.

    ஆனால் என்ன துர் அதிஷ்ட்டம்...
    மாதிரி குண்டை ரவி நதிக்கரையில் பரிசோதிக்க ஓரா முயலும் போது, அது எதிர் பாராமல் சீக்கிரமே வெடித்து, ஓரா இறந்து விடுகிறார்... வயது 26 தான்.
    துர்கா Bhabhi தன் 23ம் வயதிலேயே கைம்பெண். மனம் உடைத்தாலும் அவர், தன் நம்பிக்கை, தேசபக்தியை இழக்கவில்லை.

    அரசாங்கம் லாகூர்_சதி வழக்கு குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனை விதிக்கிறது. ''குற்றவாளிகள் 24 வயது கூட நிரம்பாததால் அவர்களின் இளமை கருதி அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்'' என சட்ட, வீதி போராட்டங்கள் வெடிக்கின்றன.
    ஆனால், பஞ்சாப் கவர்னர் லார்ட்_ஹெய்லி தூக்கு தண்டனையை உறுதி செய்ய கடும் முயற்சி எடுக்கிறார்.

    கூடக் குரல் கொடுப்பது யார்...? அட! அது நம் M.K.காந்தீஜீ.

    துர்கா Bhabhi தன் நகைகளை விற்று, (4000 ரூபாய்) குற்றவாளிகளின் தண்டனை குறைப்பதற்கு சட்டப் போராட்டம்.... பலன் இல்லை.
    அவர்கள் மூவரும் 23 மார்ச், 1931 அன்று சிறை வளாகத்தில் தூக்கில் இடப்படுகிறர்கள். கொதித்து எழுகிறார் துர்கா Bhabhi.
    பழிக்கு பழி... பஞ்சாப் கவர்னர் பழி வாங்கப்பட வேண்டும்...

    அன்று கவர்னர் மாளிகை அருகில் மறைந்திருந்து.., கவர்னர் வெளிவரும் போது துப்பாக்கியால் சுட (நான்கு ரவுண்டு) துர் அதிஷ்டவசமாக... அந்த நேரத்தில் குறுக்கே வந்த வேறு இரு பிரிட்டீஷ் அதிகாரிகள் கொல்லப்பட்டு, கவர்னர் தப்பி விடுகிறார்.

    துர்கா Bhabhi கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.
    ஆனால்,

    - பஞ்சாப் மக்களின் வீதி போராட்டம்,
    - சர்தார் படேலின் சட்டப் போராட்டம்,
    - அவருடைய இளம் வயது,
    - குழந்தை என்ற காரணங்களினால்...
    தண்டனை ஐந்தாண்டு காலமாக குறைக்கப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டார்.

    விடுதலை ஆன பிறகும், அவருடைய உதவி, பங்களிப்பு தீவிரவாத விடுதலை போராளிகளுக்குத் தொடர்கிறது...
    குறிப்பாக, 1926 இல்... அவர் HSRA போராளி, #தியாகி_கத்தார்_சிங் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பில் பெரும் கூட்டத்திற்கு லாகூரில் தலைமை தாங்கியது....

    மற்றொன்று
    போராளி ஜித்ரேந்ததிர_நாத்_தாஸ் சிறையில் 65 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, இறந்தபோது... அவருடைய இறுதி உர்வலத்திற்கு லாகூரில் இருந்து, கல்கட்டா வரை ரயிலிலும், நடந்தும் தலைமை தாங்கியது... பின் தொடர்ந்த மக்கள் கூட்டம் 4 /5 மைல் நீளம் இருந்ததாம்!

    15. ஆகஸட் 1947, இந்தியாவிற்கு சுதந்திரம்...ஏராளமானவர்கள் சுதந்திர_போராட்ட_தியாகிகள் என்று, பட்டம், பதவி, பணம், செல்வாக்கு, நிலம் பெற்றனர்.

    சரோஜனி நாயுடு, அருணா ஆசப் அலி, விஜயலட்சுமி பண்டிட், ருக்மணி லட்சுமிபதி போன்ற பெண்மணிகள் உட்பட...!

    துர்கா_Bhabhi போன இடம் தெரியவில்லை.... அரசுக்கு எந்த துப்பும் இல்லை. அரசை எந்த விதத்திலும் அவர் நெருங்கவும் இல்லை.

    பிற்க்காலத்தில் ஒரு நேர்காணலில் அவர் குறிப்பிட்டது...."பாரத்தின் சுதந்திரத்திற்காக தன் உடல், பொருள், ஆவி, இளமை எல்லாவற்றையும் மனப்பூர்வமாக, என் கணவர் போல் தியாகம் செய்த நூற்றுக் கணக்கானவர்களை சந்தித்து உள்ளேன். அவர்கள் தியாகத்தின் முன் என்னுடையது கால் தூசி கூட இல்லை. அதை காட்டி எந்த சலுகையும் அடைய என் மனசாட்சி ஒப்பாது... அதுவும் காங்கிரஸ் இடம். அந்த வீரர்கள் புகழ் பரப்புவது,... நினைவை போற்றுவது தான் என் பணி" என்றார்.

    தன் சொத்துக்களை விற்று லக்னோவில் ஒரு பெண்கள் பள்ளி ஆரம்பித்து, அதே பள்ளியில் ஒரு சதாரண ஆசிரியை ஆகவே இறுதி வரை பணி ஆற்றுகிறார்....

    1907 இல் கஸியாபாத்தில் ஒரு வசதியான #பிராமண குடும்பத்தில் பிறந்து, சிறு வயதில் பெற்றோரை இழந்து, சித்தியால் வளர்க்கப்பட்டு, படித்து, பகவதி சரண் வோரா என்ற படித்த, பணக்காரபிராமண_இளைஞரை 13 ம் வயதில் கைபிடித்து அவருடைய சுதந்திர போராட்ட காரியம் யாவிலும் கை கொடுத்து, ஒரு குழந்தைக்கு 18 ம் வயதில் தாயாகி, 23ம் வயதில் கணவரை இழந்து, துப்பாக்கி பிடித்து நாட்டு விடுதலைக்காக போராடி, அப்பழுக்கற்ற வீர தேசபக்தி/தியாக வாழ்வு வாழ்ந்து..
    தன் 92ம் வயதில் 1999 இல் கஸியாபாத்தில் மறைந்தார்.

    அவர் இறுதி விருப்பப்படி அவர் மறைவிற்குப் பின், அவர் நிறுவிய அந்தப் பள்ளிக்கு அவர் பெயரோ, அவர் கணவர் பெயரோ, வைக்கப் படவில்லை. அது வெறும் "பெண்கள் பள்ளி" என்றே அழைக்கப்பட்டது.

    அந்தப் பள்ளி இன்றும் உள்ளது. பெயர், "பெண்கள் பள்ளி"

    இதுவல்லவோ, வீர தியாக வாழ்வு.
    வாழ்க அவர் புகழ். வந்தே மாதரம்.

    Jayasala 42
     
    Loading...

Share This Page