1. Interested in Natural Skin Care Solutions?: Check Here
  Dismiss Notice

care ...hair care ...

Discussion in 'Hair Care & Hair Styles' started by sathya, Jun 25, 2007.

 1. sathya

  sathya Gold IL'ite

  Messages:
  1,459
  Likes Received:
  68
  Trophy Points:
  103
  Gender:
  Female
  hello

  கூந்தல் வளர்க்கலையோ கூந்தல்

  ரிப்பன் கட்ன கூந்தலல்லாம்
  அந்த காலத்து பாசனுங்க
  குஞ்சலம் வச்சு ராக்கோடி வச்சு
  மொக்குதச்சது கூட
  அந்த காலத்து பாசனுங்க
  இன்னக்கி வளந்த கூந்தலா இருந்தா
  சீரியல் கணக்கா தொங்கவிட்டு அலையராங்க
  வளரலையா வெட்டிவிட்டு அலையராக
  விதவிதமா கொண்டைகளையும் காணோம். ஹும்!

  பாட்டு பாடுனா கூந்தலு வளருமோ?
  நம்ம ஹரிஹரன் ஏ.ஆர். ரஹ்மான் பார்த்தீகளா?
  அந்த காலத்து பாகவதர்களுக்கும்
  நீண்ட கூந்தல் இருந்தது பாட்டுனாலோ
  ச, ரி, க, ம, அட நமக்கெங்க சங்கீதம் வருது?

  வடிச்ச கஞ்சி இப்பலலாம் ஏதுங்க
  அது அந்தக்காலம்.
  கழுநீர்ல தலை ஊரவச்சு குளிச்சதும் அந்தக்காலம்.
  வாரம் தோரும் எண்ண
  தேச்சு குளிக்கர்து கூட
  இனி அந்தக்காலம்!
  அழுகின தேங்காய் (உவ்வே)
  புளிச்ச தயிறு எல்லாம்
  அந்தக்காலம்.
  புக் படிச்சு கஷ்டப்பட்டு
  கூந்தல் வளர்ப்பது
  அது இந்தக்காலம்!

  நல்ல எலுமிச்சம்பழம்
  தலைல தேச்சுக்க
  புத்தி தெளிவாகும்னு
  மறைமுகமா லூசுன்னு
  திட்டுவாங்க
  ஆனா பாருங்க
  பொடுகு எல்லாம் டாடா சொல்லி
  போயேபோச்சு
  குளுகுளுன்னு ஷாம்பு போட்டாப்ல
  தலையும் மின்னுங்க
  கொஞ்ச சீயக்காயும் தேச்சு நல்லா
  அலசிவிடுங்க!

  எதிர்த்த வீட்டு
  ரோசி கொஞ்சம் பூப்போலங்க
  நீங்க கூட டீவியில பார்த்திருப்பீக
  கோவமார்ந்தாலும், சிரித்தாலும்
  விரிச்ச தலைய கோதிவிடுங்க.
  அந்த ரகசியத்த நம்ம
  ராக்காயிகிட்ட சொல்லி
  பெருமைப்பட்டுக்கிச்சாம்.

  சேப்பு செம்பருத்தி பூவையெல்லாம்
  சாயங்காலமும் காலையிலும்
  போட்டி போட்டு பரிச்சு
  பரிக்கும் போதே பாதிய துன்னு
  கொஞ்சம் எண்ணைல போட்டு காச்சி
  மிச்சத அரச்சு அல்லது
  வென்னீர்ல முக்கி
  தலைக்கு தேய்து முழுகுமாம்பாரு
  அதாங்க டீவில அத்தினி அல்டாப்பு.

  பெரிய கத்தாழ் மடல் ஒண்ணு எடுத்து
  (இப்பெல்லாம் மார்க்கெட்டிலியும்
  விக்கிராங்க
  கிராமம்னா செடியே அஞ்சு ரூபா
  அதே பெரிய டவுனு, டிபார்ட்மெண்டல்
  ஸ்டோருன்னா கிலோ ரூ. 80).
  வூட்டுல வளர்த்தாலும் சரி
  வாங்குனாலும் சரி
  கத்தி கொண்டு நடுவில கிரல் ஒண்ணு போடுங்க
  மொத நாளே தண்ணில ஊரவச்ச வெந்தயத்த
  பிளவுபட்ட கத்தாழையில் கொஞ்சம் கொஞ்சமா அடைங்க.
  வெந்தயத்த ஊரவைக்காமலும் அடைக்கலாம்
  இப்ப அங்கங்க லேசா ரிப்பன் கட்டி
  அது வாயமுடிந்த மட்டும் மூடுங்க
  பழைய மெல்லிய துணில சுத்தி
  தண்ணி தெளிச்சு ஈரமா
  நிழல்ல வைங்க.
  இரண்டு மூன்று நாள் ஈரமாவே இருக்கட்டும்
  பின் துணிய எடுத்தா
  வெந்தயம் கத்தாழ சாற்றுல முளைத்திருக்கும்
  இதன எடுத்து துண்டு துண்டா வெட்டி
  தேங்காய் எண்ணெய் காய்ச்சி
  அடுப்ப அணச்சு கத்தாழய எண்ணெல போடுங்க
  (கொஞ்சம் பொங்கும் பெரிய வாணலிய
  வச்சுக்கங்க)
  சூப்பர் மணமா இருக்கும்.
  அப்படியே சிம்முல கொஞ்சநேரம் வச்சு
  ஆற வச்சு
  அப்பப்ப தலைக்கு தடவி வர
  அரையடி கூந்தலு ஆரடியா நீளுமாம்!
  பாட்டி சொன்னாங்க.
   
  6 people like this.
  Loading...

 2. sujakalyan

  sujakalyan Silver IL'ite

  Messages:
  642
  Likes Received:
  45
  Trophy Points:
  63
  Gender:
  Female
  akka!!
  sathya akka
  kalakiteenga:2thumbsup:

  super and informative poem
   
  3 people like this.
 3. sathya

  sathya Gold IL'ite

  Messages:
  1,459
  Likes Received:
  68
  Trophy Points:
  103
  Gender:
  Female
  hello

  ஆலம் விழுதுல அதாங்க தொங்கர வேறு
  ஊஞ்சலல்லாம் ஆடுவாங்க
  சிலரு பல்லுக்கூட தேய்ப்பாங்க அதவச்சு
  நல்ல இளசா தொங்குர வேற எடுத்துவந்து
  இந்த கத்தாழ மடலோட காய்ச்சி தேச்சுகினா
  அப்பார்ட்மென்ட்லெர்ந்து
  ரோட்டுக்கு தொங்குமாம் கூந்தலு
  சும்மா டமாஸுக்குத்தான்
  யாரு அத்தன நீளத்த அலசரது?.

  கண்ட ஷாம்பூவெல்லாம்
  தேச்சுகுளிச்சா
  எலிவாலாட்டமாத்தான் இருக்கும் கூந்தல்
  திட்டுராங்க அம்மா.
  சீயக்காய்க்கும் ஊரவச்ச வெந்தயத்துக்கும்
  எனக்கேதுங்க நேரம்?

  கருகருன்னு கூந்தலுக்கு
  கருப்பு திராட்சை திங்கணுமாம்.
  அப்பப்ப
  கேப்ப கஞ்சி குழந்தைலேர்ந்தே குடிக்கணுமாம்
  கரிசலாங்கண்ணி எலய அரைச்சு தேச்சு குளிக்கணுமாம்
  எள்ளுண்டை விரும்பி சாப்பிடணுமாம்
  கருப்வேப்பிலய தினமும் கொஞ்சம்
  மென்னு திங்கணுமாம்
  அம்மா செய்யாட்டியும் கீரைய
  தினமும் செஞ்சு சாப்பிடணுமாம்
  நெல்லிக்காய கிடைக்கிறப்ப ரெண்ட மென்னு சாப்பிடணுமாம்
  ரகசியத்த எல்லார்க்கிட்டயும் மெல்ல சொல்லணுமாம்!

  கட்பண்ண கட்பண்ண வளந்துடுங்க
  கண்ணாமூச்சி வயசுல
  பின்னிய கூந்தலு நனைய நனைய ஆடுனாலும் கொட்டாதுங்க
  ஒரு இருவது வயது வரைக்குமே
  நம்மள மாதிரி கவலையில்லாம வளருமுங்க
  அப்புரம் கவல பட்டீங்க
  அதுவும் வெசனத்துல கொட்டுமுங்க
  கவலப்படாம பார்த்துக்கொங்க!

  வில்வ இலய சிவங்கோவில்
  வாசல்ல விப்பாங்க
  இந்த வில்வப்பழத்துக்கு எங்கங்க போகிறது.
  வில்வமரத்துக்குத் தான்.
  அக்கம் பக்கம் சொல்லிவச்சு
  சிவங்கோவில்ல கெஞ்சி கேட்டு
  பழமா இருந்தா அப்படியே
  கொஞ்சம் சாப்பிட்டு
  மிச்சத அரச்சு தலைக்கு தேச்சு
  குளிச்சா
  மூச்சு விடாதீங்க
  இந்த ஷாம்பூகாரன் எவனாச்சும்
  இந்த வில்வத்தயும் களவாண்டுர
  போறான்.

  ரொம்பதூரம் தினமும் போகிற
  பொண்ணுங்களா
  ஒரு ஸ்கார்ப்பு ஒண்ணு கட்டிக்கிட்டு
  வண்டி ஓட்டுங்க.

  ஆறு வயதும்
  அறுபது வயதும்
  கவலை மறக்குதுங்க
  அதான் கருங்கூந்தலோ
  சூப்பர் வெண்மையோ
  அத்தனை நீளமுங்க

  அழகு நிலயங்கள்ள
  பேக்கோம்பிங்னு சொல்லி
  (சீவி விடுவாங்க) சிடுக்கிவிடுவாங்க
  அடுத்தநாளு பிச்சுகிட்டு
  அலையவேணுங்க.

  தினமும் ஈரத்தலய
  கொண்ட போட்டு வேல பாத்தாக்க
  கொஞ்ச நாள்ள
  மயிர்க்கான்னு நாசமாகிடும்
  கழுநீர்ல ஊரவச்சு
  தோக்கர கல்லுல தேச்சாலும்
  பாதி கொட்டி மீதியத்தான்
  அள்ளி முடியணும்!

  பேனுக்கு நல்லவழி சொல்றேன்
  கேளுங்க.
  தினமும் சீப்பு போட்டு வாரிப்புட்டா
  பேனு ஏதுங்க.
  துளசி இலைய நிழல்ல
  காயவச்சு
  பையில அடச்சு தலையணையா கொஞ்சநாளு
  வச்சு தூங்கணும்.
  சீத்தாபழம் தின்புட்டு கொட்டையெல்லாம்
  வாட்டர்ல அலம்பி
  காயவச்சு எண்ணையில போட்டு வைக்கணும்
  அத அப்பப்ப வெய்யில்ல காய வக்கணும்.
  சீதாபழ கொட்டையும் பேனும் எனிமியாம்!

  சின்ன வெங்காயம், கொஞ்சம் தயிறு
  மிளகு ஒரு டீஸ்பூன், வெந்தயம் கொஞ்சம்
  எல்லாத்தை மிக்ஸில பீட் பண்ணி
  ஸன்டே தோரும் தேச்சுகினா
  பேனுக்கு குட்பை!

  நுணிய கொஞ்சம் வெட்டினதாலே
  முடி வளராதுங்க
  நுனி இல்லாது விரைப்பாய் நின்னதால்
  அடர்த்தியாய் தோன்றுமுங்க
  வெட்னதுனால் சிடுக்கு என்ற
  பிராப்ளம் இல்லங்க!

  இந்த தாம்பிரபரணி, ஹூக்ளி, கங்கை
  தண்ணி ஏதும் குடத்திலே விக்குராங்களா
  அதுல குளிச்சதால நீண்ட கூந்தல்
  அந்தந்த மாநிலத்து பெண்களை கேளுங்க
  தேங்கா எண்ண கொஞ்சம் தடவி
  தினமும் தலைக்கு குளிப்பாங்க
  நம்ம நீண்ட கூந்தல் அழகிங்கள்ளாம்
  கேரள வங்காள அம்மணிக்குதானுங்க

  எம்பொண்ணு கேக்குரா
  ஆரடி கூந்தலில்லை
  அள்ளி நான் முடித்திடவே
  அரிந்திடவா
  அரையடியாய்
  ஆசையாய் நான்
  அசைத்திடவே
  என்னத்த சொல்ல.

  வடைய தட்டி எண்ணல போட்டு ஆங்!
  உளுந்து வட இல்லீங்க, நீங்கவேர!
  நம்ம ஹென்னா லீபூ இருக்குங்களா
  அதாங்க மருதாணி.
  அதோட கொஞ்சம் டீ, தூளு
  ஊரவச்ச வெந்தயம், செம்பருத்தி பூ இரண்டு
  கரிசலாங்கண்ணி கொஞ்சம்
  கொஞ்சம் அரச்ச சந்தனம்
  நல்லா மைபோல அம்மீல அரச்சு
  குட்டி குட்டியா மெல்லிசா வடதட்டி
  வெய்யில்ல காயவச்சி
  ஒண்ணு ரெண்ட கொஞ்சம்
  தேங்காண்ணல போட்டு
  வெய்யில்ல அதையும் வச்சு
  தலைக்கு தடவி சீவினா சூப்பரா வளருமாம்
  பெரியம்மா சொன்னாங்க.


  sathya
   
 4. sathya

  sathya Gold IL'ite

  Messages:
  1,459
  Likes Received:
  68
  Trophy Points:
  103
  Gender:
  Female
  hello

  கெணத்துல எரச்சு ஜில்லுனு குளிச்சாலும்
  கடைசியா கொஞ்சம் பைப் தண்ணி
  ஊத்தி குளிங்க
  இல்லாட்டி உப்பு தண்ணியால
  அடை அடையா போயிடும் முடி

  இந்த தாத்தா பாட்டி வழுக்கையெல்லாம்
  ஹெரிடிடி தானுங்க
  சின்ன வயசுலேந்து
  கேர் எடுத்துக்கிட்டா
  வழுக்கைய தள்ளிப் போடலாங்க.
  இந்த நாப்பது வயதுல
  சால்டு பெப்பரு நிறைய பேருக்குங்க
  டை அடிச்சா முடி கொட்ட சான்ஸ் இருங்குங்க.
  நெல்லிக்கா, கடுக்கா, கரிசலாங்கண்ணி, கரிவேப்பலை
  இரும்பு வாணலில ஊரவச்சு
  தேச்சு, ஊரவச்சு வாரம்
  ஒரு நா குளிங்க.
  இந்த ஷாம்பு வாணாம்

  இயற்கை
  அருவியில தினமும் குளிச்சா சூப்பர்தானுங்க
  தண்ணி பஞ்சம் இருக்கையில ஷவரு ஏதுங்க
  மழைய கொஞ்சம் அப்பப்ப
  நம்ம ரூட்ல வரச்சொல்லுங்க
  ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங்கெல்லாம்
  வீட்ல இருக்குங்க!
  குளமாச்சும் பக்கத்துல இருந்தா முங்கி குளிங்க.

  முடி வளர
  எந்த ஜீன்னு தேடிட்டிருக்காக
  தெரிஞ்சதும் அத புடிச்சு
  நிமித்திர வேண்டியதுதான்!

  விளக்கண்ண (திட்டலீங்க)
  ஆலிவ் ஆயிலு
  அப்பப்ப தலைல தடவுனாக்க
  கருப்பா நீண்டு வளருமுன்னு
  அக்கா சொல்ராக.
  பான், எ.சி. போட்டு
  வெகுநேரம் படிச்சா, எளுதுனா
  முடி கொட்டும்னு
  பாட்டி சொல்ராக
  எண்ண தேச்சு குளிக்க வேணும்
  வர்ட்டா அழகிகளா.
  ஆமாம், கூந்தல் அழகிளா.


  wishes for long lustrous and jet black hair.....!!!!

  sathya
   
 5. sathya

  sathya Gold IL'ite

  Messages:
  1,459
  Likes Received:
  68
  Trophy Points:
  103
  Gender:
  Female
  hello suja

  fast reply thaan
  karu karu koonthal thaan
  ?

  sathya
   
  1 person likes this.
 6. sathya

  sathya Gold IL'ite

  Messages:
  1,459
  Likes Received:
  68
  Trophy Points:
  103
  Gender:
  Female
  hello

  and to think there will be many replies
  from rapunzels..!
  so nobody had the time to read
  the long long
  tressesssssssssss

  have to give one at a time then?

  sathya
   
 7. asharao

  asharao Senior IL'ite

  Messages:
  172
  Likes Received:
  5
  Trophy Points:
  23
  Gender:
  Female
  Hi! Can U please translate for me in English.It'd be useful for those who don't understand the language.

  Regards,

  Asha:goodidea:
   
  10 people like this.
 8. ramyanand

  ramyanand Gold IL'ite

  Messages:
  907
  Likes Received:
  145
  Trophy Points:
  108
  Gender:
  Female
  Satya,
  Very useful info..This is a ready reckoner for hair care:2thumbsup:
  Romba nandringa!!
  :wave
  Ramya
   
 9. valarmathee

  valarmathee New IL'ite

  Messages:
  8
  Likes Received:
  0
  Trophy Points:
  1
  Gender:
  Female
  Hi Satya,

  I was looking for this kind of information and now I got it, Thanks a lot satya.

  With love
  Mathee
   
 10. vidyasundar

  vidyasundar Bronze IL'ite

  Messages:
  221
  Likes Received:
  15
  Trophy Points:
  33
  Gender:
  Female
  hi Satya
  gr8 job
  keep it up
  thanks for sharing

  padikumbodhe mudi valandha madhiri iruku:clap

  regards
  vidyasundar
   

Share This Page