1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Bharathi--oru isaik kuyil

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Dec 10, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பாரதியின்கவிதைகளைக் கற்பவர் அவரது இசைக் கோட்பாடுகளை நன்கு உணர முடியும்.. பாரதியாரின் இசை எங்குள்ளது என்பதை அவரது குயில் பாட்டு நன்கு உணர்த்தும்.

    "கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
    காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
    ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும்,

    நீலப் பெருங்கடலேந் நேரமுமே தானிசைக்கும்
    ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
    மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
    ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
    ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும்,நெல்லிடிக்குங்

    கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
    சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
    பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
    வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
    கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்.

    வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
    வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
    நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
    பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்."


    பாரதியின் 'மழை' யை ரசிக்கலாமா ?


    " திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
    தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
    பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
    பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
    தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
    சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
    தக்கை யடிக்குது காற்று-தக்கத்
    தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

    வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
    வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
    கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
    கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
    சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
    தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
    எட்டுத் திசையும் இடிய-மழை
    எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!"


    மழை ஓசையோடு அவரது ஜதியும் தாள ஞானமும் அல்லவா வெளிப்படுகின்றன?


    ராகம், தாளம் போன்ற இலக்கண இசை மட்டுமல்ல,பாமரரும் கேட்டு மகிழும் சக்திக் கூத்து,ஊழிக் கூத்து , அம்மாக் கண்ணு பாட்டு,புதிய கோணங்கி,நொண்டிச் சிந்து போன்ற பாடல்களும் ;


    கண்ணம்மாவை 'வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நான் உனக்கு ' என்று கூறும்போது, பாரதியும் இசையும் இரண்டறக் கலந்தவர்கள் என்பதில் சந்தேகம் உண்டோ?


    பாரதியின் பிறந்த தினமாகிய இன்று,இசை விழா நடக்கும் வேளையில் ,'பாட்டுக்கொரு புலவன் பாரதியடா !' என்று போற்றுவோம்!


    Jayasala 42
     

Share This Page