1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

5 Kural-a-day..

Discussion in 'Posts in Regional Languages' started by Sriniketan, May 5, 2008.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    26. செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்.
    Seyarkkariya seyvaar periyar siriyar
    seyarkariya seykalaa dhaar.

    (நினைக்க முடியாத), செய்ய முடியாத செயல்கள் செய்வோர் பெரியோர் என்போர். அவ்வரிய செயல்களைச் செய்ய இயலாதவர்கள் சிறியோர் எனப்படுவர்.
    Great men accomplish the impossible
    While the ordinary fail to do the same.

    27. சுவைஓளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு.
    Suvai oli ooruosai naatramenru aindhin
    vagai therivaan katte ulagu.

    ஐம்புலன்களின் இயல்பை ஆராய்ந்து அறியும் ஒருவனிடமே உள்ளது உலகம். The world is within the grasp of him who has the knowledge
    Of the five senses – Taste, sight, touch, hearing and smell.

    28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்.
    Nirai mozhi maandhar perumai nilathu
    marai mozhi kaati vidum.

    சான்றோரின் பெருமையை அவர்களது அற நூல்களே காட்டிவிடும்.
    The greatness of men who are full of wisdom
    Shall be proclaimed to the world by their words themselves.

    29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயுங் காத்தல் அரிது.
    Gunamenum kundreri ninraar veguli
    ganameyum kaaththal aridhu.

    நல்ல பண்புகளாகிய மலைமேல் ஏறிநிற்கும் பெரியோரின் ஒரு கண நேர சினமேயாயினும், அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
    The anger of those who have reached the pinnacle of virtue
    Cannot be endured even if it were just for a second.

    30. அந்தணர் என்போர் அறவோர் மற்ற எவ்வுயிர்ற்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.
    Andhanar enbor aravor mattrevuyirkkum
    senthanmai poondu ozhugalaan.

    எல்ல உயிரிடத்தும் அன்பு கொள்பவரே அந்தணர் எனப் படுவர்.
    Those who show kindness to all beings
    Are the ones who are truly ascetics.

    This portion is translated by Sowparnika.
     
    Loading...

Share This Page