1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice
 2. Would you like to join the IL team? See open jobs!
  Dismiss Notice
 3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
  Dismiss Notice
 4. What can you teach someone online? Tell us here!
  Dismiss Notice
 5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
  Dismiss Notice

16 -கிருஷ்ண லீலா!

Discussion in 'Regional Poetry' started by deepa04, Jun 17, 2010.

 1. deepa04

  deepa04 Gold IL'ite

  Messages:
  3,652
  Likes Received:
  264
  Trophy Points:
  183
  Gender:
  Female
  16 -கிருஷ்ண லீலா!
  கதை கேட்க்கும் கண்ணன்,
  மகாவிஷ்ணுவின்,அவதாரக் கதைகளை அகிலமெல்லாம் ஜெபித்திருக்க,
  யது வம்சம் தனில் ,யாதவ இனத்தினிலே வசுதேவன் மகனாக பிறப்பெடுத்த தெய்வம்,
  தன் அன்னை யசோதை ,கருத்துடனே சொல்லும் தன் ரகுவம்சக் கதையை கேட்டுக் கொண்டான்.
  யசோதை தன் மகனை மடியினிலே ஏற்றி,இன்று நானுனக்கு ராமகதை செப்புகிறேன் செவிமடுப்பாய்,
  என சொல்ல ,தன் அன்னை மனம் அறிந்திட்ட ஆனந்த ரூபன் ஊம்,கொட்டி கதை கேட்க உடன் பட்டான்,
  புண்ணியமான,இந்த புவியினிலே,அயோத்தியா நாட்டினிலே தசரதன் எனும் மன்னன் ஆண்டுவந்தான்,
  சூர்யகுலமான ,தன் ரகுவம்சம் விளங்க தசரதன் ,யாகம் செய்து வரமாக பிள்ளை பேரை பெற்றான்.
  தசரதனின் குலம் தழைக்க வந்த வைரங்கள் நான்கு,ராம,பரத,லட்சுமண ,சத்ருக்கன் என்பவராம்.
  அனைவரிலும் மூத்தவன் ,முன்னவன் ,பண்பிலே சிறந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாம்,
  ராமனுக்கு தம்பியாய்,ரத்தினமாய் மற்ற தம்பிகள்,பாசமான அன்னையாய் மூவருண்டு,
  சிவதனுசை தான் ஒடித்து ,ஜனகனின் மகளாம் சீதையினை மணமகளாக பெற்றான்,
  எனத்தொடங்கி,ராவண சம்ஹாரம் ,ராமனது பட்டாபிசேகம் வரை அன்னை சொல்ல,
  இதை கேட்ட,நந்த நந்தன் தனை மறந்து ,லட்சுமணா எடு என் கோதண்டத்தை என இயம்ப,
  பிரம்ம ரகசியத்தை அறியாத அன்னையவள் தான் சொன்ன கதையின் பாதிப்பே,என எண்ணுகிறாள் ,

  கதை கேட்டு உறங்கிட்ட தன் மகனை கண்ட தாயவள்,தன் மகனது முந்தைய நிகழ்சிகளை நினைத்துக்கொண்டால்,
  குழந்தை கண்ணனை,முதன் முதலாய் வீட்டை விட்டு வெளியே கொண்டு வரும் தினத்தினை கொண்டாடினால்,
  கோகுலத்து கோபியரை அழைத்துக்கொண்டு ,யமுனையிலே மங்கள ஸ்நானம் செய்வித்து தூங்க வைத்தால்.
  மாடுகள் பூட்டாத வண்டியின் அடியினிலே தொட்டியிட்டு படுக்க வைத்து மற்றவரை கவனிக்க சென்றால்,
  சற்று நேரம் சென்றவுடன்,குழந்தை வீரிட்டு அழுது,தன் சின்னச்சிறு கால்களால் வண்டியினை உதைத்தது,
  சகடாசுரன் என்ற பெயருடைய அரக்கன் ,வண்டியாய் மாற்றுரு கொண்டு கண்ணனை கொள்ள காத்திருக்க,
  இதை அறிந்த ஹரி ,தன் கால்களினால் உடைத்தெறிந்து கம்சனால் அனுப்பப்பட்ட அசுரனை வதம் செய்தார், யசோதை தன் மகனை துஷ்ட்ட சக்தியிடம் இருந்து காப்பாற்ற புரோகிதர்களை கொண்டு மந்திரம் சொல்லவைத்தால்
  மற்றொருநாள் திருணாவர்த்தன் என்ற அரக்கன் கண்ணனை தூக்கி செல்ல முயன்று வந்தான்,
  அவன் தூக்கி விண்ணில் செல்லும் போதே கணம் தங்காமல் கண்ணனை கீழே தள்ளிவிட முயல ,
  கண்ணன் அவன் கழுத்தை இருக கட்டி கொல்ல,அதன் பளு தாங்காமல் கீழே விழுந்து வீழ்ந்தான் ,
  குழந்தையை காணமல் ஓடிவந்த யசோதை தன் மகன் நலமாக இருப்பதை கண்டு மகிழ்வுற்றாள் .

  யாதவர் குலகுருவாம் கர்க்கமகரிஷி,நமகரன சடங்கு செய்ய கோகுலம் வந்தார்,
  நந்தரும்,யசோதையும் அன்போடும்,பக்தியுடனும் வணங்கி கர்க்கரை வரவேற்றனர்,
  எளிய முறையில் ,நமகரன வைபவத்தை வைக்க நந்தருக்கு ஆலோசனை சொன்னார்,
  ரோஹினியின் மகனுக்கு,நற்பண்புகளால் மற்றவரை மகிழ்விப்பான் எனவே ராமன் என்ற பெயரையும்,
  பிற்காலத்தில் பலவானை ஆகிடுவான் எனவே பலராமன் என்றும்,இரு குடும்பத்தை இன்னைப்ப்பதால் ,
  சங்கர்ஷன் என்றும் மூத்தவனுக்கு பெயரிட்டார்,இளையவனை நோக்கி கடவுளின் அவதாரம் என அறிந்து ,
  கருமை நிறம் கொண்டதனால் கிருஷ்ணன்,கண்ணன் என்றும்,வசுதேவர் மகன் என்பதால் வாசுதேவன் ,
  என்றும் பெயர் சூட்டி,இறைவனுக்கு பெயர் சூட்ட தாம் பெற்ற பேரினை தம் அகத்துள்ளே மகிழ்ந்தார்.
  அன்னை யசோதை தன் மகனின் நினைவலையில் முழ்கி திரும்பி வரும் முன்னே மகனும் விழித்திருந்தான்.
   
  Loading...

 2. latha85

  latha85 Silver IL'ite

  Messages:
  2,388
  Likes Received:
  41
  Trophy Points:
  83
  Gender:
  Female
  arumai deepa.....
   
 3. deepa04

  deepa04 Gold IL'ite

  Messages:
  3,652
  Likes Received:
  264
  Trophy Points:
  183
  Gender:
  Female
  தினம் தோறும் தவறாமல் வந்து,எனை உற்சாகப் படுத்தும் இனிய தோழிக்கு நன்றிகள் பற்பல!
   
 4. devapriya

  devapriya IL Hall of Fame

  Messages:
  10,369
  Likes Received:
  1,396
  Trophy Points:
  438
  Gender:
  Female
  kathaikulla oru kathai........ superb......:thumbsup
   
 5. mahe23

  mahe23 Senior IL'ite

  Messages:
  149
  Likes Received:
  0
  Trophy Points:
  16
  Gender:
  Female
  it's good to read - mahe
   
 6. deepa04

  deepa04 Gold IL'ite

  Messages:
  3,652
  Likes Received:
  264
  Trophy Points:
  183
  Gender:
  Female
  thank you for your fb.
   
 7. Vaishnavie

  Vaishnavie Gold IL'ite

  Messages:
  2,914
  Likes Received:
  59
  Trophy Points:
  130
  Gender:
  Female
  :hiya nallarukke...
   
  Last edited: Jun 20, 2010
 8. deepa04

  deepa04 Gold IL'ite

  Messages:
  3,652
  Likes Received:
  264
  Trophy Points:
  183
  Gender:
  Female
  thanks vaisu.
   
 9. Ramavyasarajan

  Ramavyasarajan Silver IL'ite

  Messages:
  1,523
  Likes Received:
  24
  Trophy Points:
  68
  Gender:
  Female
  munthaiya avathaara ninavu, sagadasura vadam namagaranam anaithum padithu magizhthen nandri

  Ramavyasarajan
   

Share This Page