1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

10 -கிருஷ்ண லீலா http://www.indusladies.com/forums/newthread.php?do=newthread&f=153

Discussion in 'Regional Poetry' started by deepa04, Jun 2, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    10 -கிருஷ்ண லீலா
    யசோதையின் ஏக்கம்.
    அசுரர்களை,அரை நொடியில் சம்ஹாரம் செய்யும் மூர்த்தி அவன்,
    மூர்த்தி சிறிதாய் இருக்கும் போதே ,கீர்த்தி பல பெற்ற பெருமாள் அவன்,
    இத்துணையும் வாய்க்க,பெற்ற தன மகனை, அறியாத அன்னையவள்,
    தன மகன் என்று, பெரியவனாய் ஆவனோ,என ஏங்கி பெரு மூச்சொரிந்தால் ,
    முட்டிக்கால் மண்ணில் பட,கைதனை தரையில் ஊன்றி,நாலு கால் பாய்ச்சலாக,
    என்று என் மகன் இந்த இல்லம் தனில் தவழ்வானோ?என ஏங்கினாள்,
    மூவுலகும் தன் பாதத்தால் அளந்த பின்னே,மூன்றாம் பாதம் மகாபலி தலையில் வைத்தான்,
    இதை அறியா அன்னை நல்லாள்,தன் மகன்,என்று தத்தி,தத்தி நடப்பானோ என ஏக்கம் கொண்டாள்.
    உபதேசம் பலபல உதிர்த்த திரு வாய் திறந்து,கொஞ்சு மொழி மழலை சொல்லால் அம்மா என அழைப்பானோ?
    அதிசயங்கள் பல புரியும் பகவான்அவன்,கை கால் உதைத்து ,அழுதுப் புரண்டு அடம் செய்வானோ?
    அனைவருக்கும் ,படியளக்கும்,படி வாசன் அவன், என்று தன் பிஞ்சு கையால்,சோறு அள்ளி உண்பானோ?
    யாவையுமே,கற்பனையில் கண்டால் அன்னை,நிஜத்தில் அவை காணும்படி அருள் செய்வாயே!

    கண்ணன் வளர்தல்
    குப்புற விழுதல் ,
    மூன்று மாதம்,முடிந்த பின்னே,குப்புற விழுந்தான் கண்ணன்,
    இதை கண்டு,தேங்காய் தலை சுற்றி திருஷ்டி கழித்து உடைத்தால் அன்னை.
    வயிறு அமுங்கி,வாய் மூக்கு,தரையில் பட்டு அடிபடவே அழுதான்,கண்ணன்,
    தான் கற்ற ,முதல் வித்தை தன்னை விடாமல் பலமுறை முயன்றான் வண்ணன்,
    எத்தனை முறை,விழுந்த போதும் ,சலிக்காமல் திருப்பி விட்டால்,அன்னை.

    கண்ணன் அமுதுன்னல்
    ஆறு மாதம் முடிந்ததுவே,ஆனந்த கண்ணன் அவன் ஆயர் பாடி அடி வைத்து!
    அனைவருக்கும் படியளக்கும் மன்னன் அவன்,அவனுக்கும் அன்னமிட, தாயவள் நாள் குறித்தாலே!
    இப்புவியில் உள்ள மக்கள் தன் குழந்தைக்கு அன்னமிட குருவாயூர் சென்று அவன் சன்னதியில் ஊட்ட,
    அன்று அவன் அன்னை தன் மகனாம்,பரந்தமனுக்கே அன்னமிட அனைவரையும் அழைத்திட்டாள் ,
    கோகுலத்தின் கோபரும்,கோபியரும்,நந்தரில்லாம் வந்தனரே,மன்னன் அவன் புசித்து ,பசி தீர்க்க மகிழ்ந்தனரே!
    ஆனந்தமாய்,ஆட்டம் ஆடி,வாழ்த்து பாடி நந்த மைந்தனை கண்டு கழித்தனரே!
     
    Loading...

  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Re: 10 -கிருஷ்ண லீலா http://www.indusladies.com/forums/newthread.php?do=newthread&f=1

    cha super ka...
    fantastic description...
    keep going...
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: 10 -கிருஷ்ண லீலா http://www.indusladies.com/forums/newthread.php?do=newthread&f=1

    kuzhanthai...kadavule eninum...oru thaayin ennam ithu polathan irukkum...

    miga azhgaga sonneergal..oru thaayin ekkathai.....

    super deepa...
     
  4. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Re: 10 -கிருஷ்ண லீலா http://www.indusladies.com/forums/newthread.php?do=newthread&f=1

    krishna leela kalaikattugirathu. Super

    Ramavyasarajan
     

Share This Page