1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

“அந்த குருடன் நிலைல தான் Vote போடற நாம இருக்கோம்”

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Mar 21, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எங்கயோ எப்பவோ சுட்ட கதை.

    அந்த குருடன் நிலைல தான் vote போடற நாம இருக்கோம்”

    ஒரு ஊர்ல ஒரு இராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை walking போனாங்க ஒரு ஆத்தங்கரை ஒரமா. அப்போ அங்க ஒரு கொடில வெள்ளரிக்காய் காச்சு தொங்கரத பார்த்த ராஜா மந்திரி அந்த வெள்ளரிக்காய பரிச்துகிட்டு வா சாப்பிடலாம் ன்னு சொன்னார். மந்திரி பறிக்க போன அப்போ அது கிட்ட உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான் ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும் ன்னு. ராஜா சொன்னான் யோவ் மந்திரி அது பரிச்சு சாப்பிடு வாந்தி வருதா பாக்கலாம். வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டான். உடனே மந்திரி க்கு கும்மட்டிக்கிட்டு ஒரே வாந்தி. ராஜா கேட்டான் யோவ் கபோதி இதுக்கு என்ன remedy ன்னு. அந்த குருடன் சொன்னான் அதும் பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும் அத கைல கசக்கி மந்திரி வாய்ல விட்டா வாந்தி நிக்கும் ன்னு. ராஜா try பண்ண மந்திரி க்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரி க்கு போன உசுரு திரும்பி வந்தது. ராஜா குருடன் ன பார்த்து கேட்டான் உனக்கு தான் கண் தெரியாதே எப்படி கரெக்ட் ஆ சொன்ன அப்படின்னு. குருடன் சொன்னான் ராஜா இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விடுவானா. எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய குடுத்தா இறைவன் பக்கத்துல ஒரு மாற்று மருந்து வெச்சிடுவான். ராஜாக்கு சந்தோஷம். இந்தா ஒரு டோக்கன். கிழக்கு வாசலுக்கு போ. பட்ட சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு. சொல்லிட்டு ராஜா போய்ட்டான்.

    கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். ராஜா எங்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்கிரீங்களா ன்னு கேட்டான். ராஜா சரி இது ஒரிஜினலா duplicate aa ன்னு எப்படி தெரிஞ்சு கரதுண்ணு மந்திரி ய கூப்ட்டான். ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததாலே எங்கயாவது முழுங்கி வைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துடுண்ணு தெரியாதுன்னு ட்டான். ராஜா சொன்னான் மந்திரி போய் அந்த கபோதி ய கூட்டிண்டு வா அவன்தான் காரண காரிய தோட கரெக்டா சொல்லுவான்னான். மந்திரி போய் அந்த குருடன கூட்டிட்டு வந்தான். ராஜா சொன்னான் டேய் இதுல ஒரிஜினல் வைரம் duplicate வைரம் mix இருக்கா ன்னு பார்த்து சொல்லு. அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் பொருத்து அத கைல எடுத்து பிரிச்சு ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி ன்னு பிரிச்சு கொடுத்துட்டான். வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்தான். ராஜாவுக்கு ஆச்சர்யம். ராஜா குருடன பார்த்து கேட்டான் எப்படி கண்டு பிடிச்ச காரண காரியதோட சொல்லு. குருடன் சொன்னான் ராஜா வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதுனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடுஆகாதது எல்லாம் வைரம் ன்னு பிரிச்சேன். ராஜா சந்தோஷமா பாக்கெட் ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன் ன குடுத்து பட்ட சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு ன்னு சொல்லி அனுப்பிச்சான்.

    இப்படி கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சான். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜா க்கு confusion. யார தேர்ந்து எடுக்கரதுன்னு. மந்திரி கேட்டா எல்லாம் நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே சொல்றான். ராஜா பார்த்தான் கூப்ட்ரா அந்த கபோதிய. குருடன் வந்தான். ராஜா குருடன் கிட்ட சொன்னான் என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பாக்கரேன். எந்த ராஜா வோட ராஜகுமாரி சரி யா இருக்கும்ன்னு காரண காரியதோட சொல்லு அப்படின்னான்.
    குருடன் சொன்னான் ராஜா அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜா பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆனா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்ததுப்பான். ராஜா ஒரே குஷி. சபாஷ். இந்தாட டோக்கன் போடா. வடக்கு வாசலுக்கு போ. பட்ட சாதம் குடுப்பான். வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னான். குருடனும் போய்ட்டான்.

    கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னான். டேய் நான் ஒண்ணு கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லணும் அப்படின்னான். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல என்ன எல்லோரும் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற அப்படின்னான். குருடன் அமைதியா இருந்தான். பதிலே பேசல. ராஜா திரும்ப கேட்டான். குருடன் சொன்னான் ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன் நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான் அப்படின்னான். ராஜாக்கு ரொம்ப வருத்தம். ஏண்டா ன்னு கேட்டான். ராஜா முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷமா ஆகிட்டீங்க. ஆனா குடுத்தது இலவச டோக்கன் பட்ட சாத்துக்கு. ராசாவா இருந்தா கைலஇருந்த மோதிரத்தை குடுத்துஇருப்பான். அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். ராஜா வா இருந்தா கைல இருந்த தங்க தோடகத்த குடுத்து இருப்பான். ஆனா நீங்க குடுத்தது பட்ட சாத டோக்கன். மூணாவது ஒரு ராஜ்யமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன். இன்னொரு ராஜாவா இருந்தா கழுத்துல் இருந்த மாலைய குடுத்து இருப்பான். நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்ட சாத டோக்கன். இதுலேர்ந்து தெரியர்து சத்தியமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன்னு. ஏன்னா உங்க புத்தி டோக்கநோட முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போவல.

    அந்த குருடன் நிலைல தான் vote போடற நாம இருக்கோம்.

    Jayasala42
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,750
    Likes Received:
    12,576
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:@jayasala42
    Madam sister super share in election time which is in the offing. I need to disseminate this story right away to discerning members to think about freebies being doled out to potential voters.
    Tax payers money to be utilized for construction & developmental activities of the state. Parties announcing in their manifesto should be asked to pay for freebies from their party funds. They are not elected to take tax payers money to fritter away.
    Thanks and regards.
     

Share This Page