அன்று தான் அந்த துயர சம்பவம் நடந்த . ஒரு தாய் பத்து மாதம் சுமந்து பெற்ற தன் மகனை கதற கதற தர தரவென்று இழுத்துக் கொண்டு பள்ளியில் சேர்க்க சென்று கொண்டிருந்தாள். இவர்களை போலவே இன்னொரு தாயும் அவள் மகனை தர தரவென இழுத்துக் கொண்டு பள்ளியில் சேர்க்க வந்திருந்தார்கள். ஒருவன் பெயர் ரவி இன்னொருவன் பெயர் பாலா. இவர்கள் நட்பு ஆரம்பமானது பால்வாடியில் இருந்து . இருவரும் பள்ளிக்கு வழக்கம் போல அலுத்து கொண்டே தான் வருவார்கள். பள்ளி வந்தவுடன் இருவரும் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள். பால்வாடியில் முதல் பாடம் அமைதியாக உறங்குவது. அனைவரும் உறங்கி இருப்பார்கள் இவர்கள் இருவரை தவிர. இவர்கள் இருவரும் செவுற்றுக்கு அருக்கில் சென்று செவிற்றின் மேல் காலை வைத்துக்கொண்டு தான் தூங்குவார்கள் இல்லை இல்லை தூங்குவதை போல் நடித்துக்கொண்டு பேசுவார்கள். இருவரும் மூன்றாம் வகுப்பு சென்றனர். இங்கு தான் இவ்விருவருக்கும் ஒரு பரிதாப உணர்வு ஏழை மாணவர்கள் மீது ஏற்பட்டது . slate பென்சில் illaamal தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு என்ன செய்யலாம் என்று இருவரும் யோசித்தனர். அந்த வகுப்பில் சில திமிரு பிடித்த மாணவர்கள் இருந்தனர். இவர்கள் இருவருக்கும் ஒரு யோசனை இந்த திமிரு பிடித்த மாணவர்கள் இடம் இருந்து slate பென்சிலை மற்றும் வேறு என்னென்ன வேண்டுமோ அவற்றையும் அந்த மாணவர்களிடம் இருந்து எடுத்து ஏழை மாணவர்களிடம் கொடுக்கலாம் என்று முடிவு எடுத்தனர். எப்படி அவர்கள் பையில் இருந்து பென்சில் boxai எடுப்பது என்று யோசித்தனர். ஒரு யோசனை ரவிக்கு தோன்றியது. டேய் பாலா நாம ரெண்டு பெரும் சண்ட போட்ற மாதிரி போடலாம் டா சண்ட போட்டு கிட்டு இருக்கும் பொது நீ என்ன bag மேல தள்ளி விட்டுட்டு நா அப்டியே நைசா எடுத்திருவேன். நா எடுத்துட்டு உன்ன தொரத்துற மாதிரி தொரத்துவ நீ வெளிய ஓடிடு நானும் வெளிய வந்தர்ரன், boxla இருக்குறதுல நமக்கு தேவையானத எடுத்துட்டு தூக்கி வீசிரலாம். ஓகேவா டா டேய் சூப்பர் ஐடியா டா ரவி . திட்டமிட்ட படியே இருவரும் boxai எடுத்துக் கொண்டு அதிலிருந்த பொருட்களை எடுத்து இல்லாத ஏழை மாணவர்களிடம் கொடுத்தனர். boxaiyum கொடுத்தால் அடையாளம் தெரிந்து விடும் என்று அதனை தூக்கி வீசியுள்ளனர். இதே போல் ஒவ்வொரு ஏழை மாணவருக்கும் திமிரு பிடித்த மாணவர்களிடம் இருந்து பொருட்களை எடுத்து கொடுத்தனர். தங்கள் பாக்ஸ் காணாமல் போவதை மாணவர்கள் ஆசிரியரிடம் புகார் செய்து விட்டனர். ஆசிரியர் வகுப்பில் வந்து யார் யார் பாக்ஸ் எல்லாம் காணோம் என்று கேட்டார். boxai பறிகொடுத்த மாணவர்கள் அனைவரும் எழுந்தனர் அவர்கள் கூடவே ரவியும் பாலாவும் எழுந்தனர் எழுந்து தங்கள் boxaiyum காணவில்லை என்று ஆசிரியரிடம் தெருவித்தனர். காரணம் அவர்கள் மீது சந்தேகம் வந்து விட கூடாது என்பதர்க்காக. ரவி மீது அனைத்து ஆசிரியர்களுக்கும் அளவு கடந்த பாசம் காரணம் அவன் படிப்பில் கொஞ்சம் கெட்டி. ஆனால் பாலா படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரன் இல்லை. ரவி படிப்பில் மட்டும் கெட்டியல்ல மிகவும் சுட்டி குறும்புக்காரன் . ஒரு நாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றான். அவன் வீடு அருகில் ஒரு கம்பம் நடப்பட்டு இருந்தது. அன்று சிலர் வந்து அந்த கம்பத்தை குழி தோண்டி எடுத்து சென்று விட்ட்டனர். அந்த இடத்தில் குழி அப்படியே மூடாமல் விடப்பட்டு இருந்தது. ரவி அந்த குழியின் அருகில் சென்று அந்த குழிக்குள் தன காலை விட்டு அருகில் கிடந்த கல் மண் எல்லாவற்றையும் போட்டு புடுங்க முடியாத அளவுக்கு மூடிவிட்டான். மூடியவுடன் பிடுங்கி பார்த்தா வரவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் வலி தாங்க வில்லை ஊரே ஒன்று கூடும் படி கத்தி விட்டான். அனைவரும் வந்தனர் ரவியின் பெற்றோரும் வந்தனர். பக்கத்து வீட்டு காரர்கள் கடப்பாறையுடன் வந்தனர். அருகில் இருந்தவர்கள் ரவியை பயமுறுத்தும் வகையில் அண்ணே கால் ரெண்டு அடி உள்ள போயிருக்க வெட்டி தா எடுக்கணும், ஏப்பா கடப்பாரை எதுக்கு அறிவால எடுத்துட்டு வா வெட்டி எடுத்திரலாம் என்று கூறி ரவியை உச்ச கட்ட அழுகைக்கு அழைத்து சென்றனர். அந்த தெருவில் உள்ள அனைவருக்கும் ரவியின் சுட்டி தனம் தெரியும். அதனால் தான் அவனை கலாய்திருகிரார்கள். எப்படியோ ஒரு வழியாக அவனை சுற்றிலும் பெரிய பள்ளமாக தோண்டி அவன் காலை எடுத்து பார்த்தனர். எதோ concrete போடுவதை போல போட்டு இருக்கிறன் என்று ஊர் மக்கள் அனைவரும் சிரித்து கொண்டே சென்று விட்டனர். இவன் சுட்டி என்பதற்கு இன்னொரு சான்றும் இருக்கிறது. இவன் வீட்டிக்கு அருகில் தான் முடி வெட்டும் கடை இருக்கிறது. ஒரு நாள் முடி வெட்டுவதை பார்த்து தானும் இப்படி செய்தால் என்ன என்று இவன் அம்மா விடம் சென்று அம்மா முடி வெட்ட என்னென்ன வேணும் என்று கேட்டுள்ளான் . அவன் அம்மாவும் எதார்த்தமாக கத்தரி கோல், சீப்பு, தண்ணி, கண்ணாடி எல்லாம் வேணுமடானு சொல்லி இருக்கிறார்கள். ரவி இதை எல்லாம் கவனமாக கேட்டு கொண்டு அவன் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து தன வேலையை காட்ட தொடங்கினான் அன்று தான் நல்ல தண்ணீர் வந்து அவன் அம்மா இருக்கின்ற அணைத்து அண்டாக்களையும் நிரப்பி விட்டு சென்றார். இவன் ஒரு அண்டாவையும் மிச்சம் வைக்காமல் ஒரு வெட்டு வெட்டி விட்டு ஒரு அண்டாவில் முக்கி எடுப்பான் மீண்டும் ஒரு வெட்டு வெட்டி இன்னொரு அண்டாவில் முக்கி எடுத்து இருக்கின்ற அணைத்து அண்டா தண்ணீரையும் நாசப் படுத்தினான். அவன் முடி வெட்டிய அழகை காண கண் கோடி வேண்டும். ஒரு இடத்தில் முடி இருந்தது ஒரு இடத்தில் சொட்டயாக இருந்தது. வீட்டில் அனைவரும் வந்து பார்த்தால் அணைத்து அண்டாக்களிலும் முடி. இவனை வேறு ஆளை காணோம். எங்கு இருக்கிறான் என்று தேடினார்கள் பக்கத்தில் உள்ள ஒரு வீடு பாக்கி இல்லை. அவனை தேட பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மிதி வண்டியை எடுத்து கொண்டு ஆளுக்கு ஒரு திசையாக அலைந்தனர். எங்கும் கிடைக்கவில்லை . மீண்டும் வீட்டில் இருக்கிறானா என்று பார்க்க அவன் அம்மா உள்ளே சென்று பார்த்தால் . வீட்டின் ஒரு மூலையில் போர்வையை போர்த்தி கொண்டு அமர்ந்து இருந்தான். அவன் அம்மா அனைவரையும் உள்ளே கூப்பிட கோபம் கொண்டு இருந்த அனைவரும் அவன் திரு உருவத்தை பார்த்ததும் நகைக்காத வாய்கள் இல்லை. ஒரு மாதம் தலையில் முக்காடு போட்டு கொண்டு தான் எங்கும் செல்வான். பாலாவும் ரவியை போல் சுட்டி தான் ஆனால் அவன் அளவுக்கு இல்லை. இருவரும் ஒரு நாள் வீட்டில் அடிக்கடி அவர்களை அடிக்கிறார்கல் என்று ஒரு முடிவு எடுத்தனர். அது வீட்டை விட்டு ஓடி போவது. அன்று வழக்கம் போல் இருவரும் பள்ளிக்கு வந்தனர். வகுப்பில் பையை வைத்து விட்டு ஓடி போவதற்காக வெளியே வந்தனர். இருவரும் பள்ளியில் இருந்து இடது கை பக்கமாக நடக்க ஆரம்பித்தனர். ஒரு இடத்தில் மீண்டும் இடது கை பக்கம் திரும்பி நடந்தனர். மீண்டும் ஒரு இடத்தில் இடது கை பக்கம் பக்கம் திரும்பி நடந்தனர் அந்த இடத்தில் ஒரு காடு இருந்தது அது வெறும் முள் காடு தான். ஆனால் இவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை பாருங்கள் . டேய் பால இது தான் டா எங்க ஊரு காரை குடி இங்க நெறையா முந்திரி பலம் இருக்கும் டா நாம பொரிச்சு பொரிச்சு சாப்டலாம் டா என்றான். அதற்க்கு பாலா போடா டேய் இது எங்க ஊரு பாண்டிச்சேரி இங்க நெறையா ஆப்பிள் மரம் கொய்யா மரம்லா இருக்கும் டா செம ஜாலி டா. என்று கூறி விட்டு மீண்டும் அதே திசையில் நடக்க ஆரம்பித்தனர் ஒரு ஆப்பிள் மரமும் இல்லை முந்திரி செடியும் இல்லை ஒரு கொய்யா செடி கூட இல்லை . அருகில் ஒரு ஊர் தான் தென்பட்டது அங்கு இடது புறமும் வலது புறமும் இரண்டு சாலைகள் சென்றது இவர்கள் வழக்கம் போல இடது பக்கம் திரும்பி நடந்தனர். மீண்டும் ஒரு திருப்பம் அங்கும் இடது பக்கம் திரும்பி நடந்தனர். கொஞ்ச தூரத்தில் பாலா ரவியிடம் டேய் உங்க ஊர்ல நம்ம ஸ்கூல் மாதிரியே ஒரு ஸ்கூல் டா என்றான். டேய் இது நம்ம ஸ்கூல் தான் டா அங்க பாரு நம்ம டெய்லி முறுக்கு வாங்கி சாப்டுவோம்ல அந்த பாட்டி இருக்கு. ஆமாண்டா இப்ப என்னடா பண்றது வா டா பேசாம ஸ்கூல் கு போயிறலாம். அன்று பள்ளிக்கு தாமதம். ஆசிரியர் எதுக்கு டா லேட் அதுவும் பைய வச்சுட்டு எங்க போநீங்கனு கேட்டார். ஊற விட்டு ஊரு ஓடுறோம் பேர்வழினு தெருவிட்டு தெரு ஓடியதை எவ்வாறு சொல்லமுடியும். இருவரும் எதோ ஒரு காரணத்தை சொல்லி சமாளித்தாலும் ஆசிரியர் இருவரையும் அந்த வகுப்பு முழுவதும் மண்டியிட செய்து விட்டார். அன்றுடன் அவர்கள் வீட்டை விட்டு ஓடலாம் என்பதை பற்றி யோசிக்கவே பயந்தனர். நன்றி
ராம் நல்ல எழுத்தும், ஓவியமும் சேர்ந்த எழுத்தோவியம். இதில் நீங்கள் ரவியா? பாலாவா? சிறு வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து எண்ணங்களையும் அழகாக பிரதிபலித்து இருக்கிறீர்கள். தவறான எண்ணங்களும், நல்ல எண்ணங்களும் இரண்டறக் கலந்த வயது. சரியா? தவறா? எனத் தெரியாத வயது. குழந்தைகள் திருந்தியதாகக் கூறியது இதம் தந்தது.
ninaichen neenga thaan ravi yendru.....azhagaaga yezhudi irukeenga...... kadaiyin mudivu nandru......