1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மீண்டும் ஒரு முறை

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jan 7, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    கதவைத் திறந்து கடுப்புடன் பார்த்து என்னவென்றேன்,
    கலக்கம் இலாது கரைந்தே பேசி என்னை வென்றாள்.
    வரவாய் இரு துணி துவைக்கும் கட்டிகள் சேர்ந்தன,
    நன்றியோடு சென்றவள் விழிகள் நினைவில் நின்றன.

    மனைவி வரவும், நான் அவற்றை எடுத்து நீட்டிடவும்,
    புரியாப் பார்வையில் அவள் அவற்றை வாங்கிடவும்,
    ஒன்றுக்கு ஒன்று இலவசம் என நான் சொல்லிடவும்,
    ஒன்றும் சொல்லாது, அவளும் உள்ளே சென்றிடவும்,

    அதில் கோபமுற்று, நான் வேகமாய் எழுந்து,
    முன் அணிந்த இரண்டு சட்டைகள் எடுத்து,
    அவற்றை நனைத்து, ஒரு கட்டியை எடுத்து,
    ஒரு சட்டையின் கழுத்துப் பகுதியில் தேய்த்து,

    நுரை பெருகி வருவதை அவளிடம் காட்டி,
    பெருமையோடு அந்த சட்டையை அலசி,
    கழுத்தைப் பார்க்க, என் அதிர்ச்சியும் கூடி,
    மனைவியின் முகத்தைப் பார்க்கவும் கூசி,

    அசையாது, துவைத்த சட்டையைப் பார்க்க,
    அழுக்கே நீங்காது அடையாக அதிலிருக்க,
    அழகானவள் முகத்தில் சிரிப்பும் பொங்க,
    நான் நின்றிருந்தேன் தரை பார்த்து அங்கே!.
    -ஸ்ரீ
     
    Loading...

  2. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    அழுக்கு தானே நீங்கலை ஸ்ரீ, நாங்கலாம் வாங்கினப்போ, காலரே கையோடு வந்தது... அவ்வளவு மோசமா இருக்கும் வாசலில் வருபோரிடத்தில் வாங்கினால்..
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நல்ல அனுபவம் தான் லதா. பிடிக்காத சட்டைகளை ஒரு வழி செய்து விடலாம் இல்லையா? பின்னூட்டத்துக்கு நன்றி. -ஸ்ரீ
     
  4. nityakalyani

    nityakalyani Gold IL'ite

    Messages:
    2,664
    Likes Received:
    96
    Trophy Points:
    130
    Gender:
    Female
    wow washing dirty shirts- oru katti karaitum - azuku pogale - very bad management- you must have brought some cheap soap - take surf excel it will surely remove the dirt - ha ha ha- ops btw hope the soap foams did not burn your hand. thanks rgs even after washing sometimes dirt does not go - hence send it to laundry. nice way to pen on washing clothes
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    துணி வெளுக்கவில்லை! நான் வெளுக்கப்பட்டேன்! :)
    தரமற்ற சோப்பை விலை கொடுத்து வாங்கியதற்கு -ஸ்ரீ
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    எதுக்கும் ஒரு அனுபவம் வேணும்,அறிவுஜீவிகள்,ஆபத்பாந்தவன் வேலை எல்லாம் இது போன்ற சலவை,சிலவைகளில் நடவாது,ஒத்துக்குங்க!தெரியாத விசயத்துல நுனிவிரலையும் நுழைக்க வேண்டாம்:bonk.
     
    Last edited: Jan 8, 2011
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பின்னூட்டத்துக்கும், கருத்துக்கும் நன்றி தீபா. ஆயினும் சிறு வயதிலேயே என் வேலைகளை நானே செய்து கொள்ளப் பழகி விட்டேன். இங்கு சொல்ல வந்தது என்னவெனில், நம் வீட்டில் இருப்பவர்களிடமே நம் பெருமையைப் பற்றி சொல்லிக்கொள்வது அபத்தம் என்பதைத் தான். -ஸ்ரீ
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotfl:rotflநீங்க வெளுத்துக்கட்ட வாங்கப்போக,
    வெளுத்து வாங்கி கட்டிக்கொண்ட அனுபவத்தை
    அருமையாக விளக்கி வெளுத்து வாங்கிட்டீங்க ஸ்ரீ!!!!!:thumbsup:thumbsup
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பின்னூட்டத்தால் நீங்கள் வெளுத்து வாங்குகிறீர்களே நீங்கள்? பலே! -ஸ்ரீ
     

Share This Page