1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மித்ர மாளிகை..!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Oct 8, 2014.

  1. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Nandri Madam ji! Will post soon! You ppl are awesome :)
     
  2. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    23. மித்ர மாளிகை – மாதவி!

    தன் கண்களை நம்ப முடியாமல் ஏ.பி. திகைத்து நின்றார். எந்தப்பெண்ணும் வரவில்லை என நேற்று அடித்துச்சொன்னவன் இன்று அதே பெண்ணோடு வருகிறான். அவளை அலுவலகத்திற்கு சற்றுத்தள்ளி இறக்கிவிடுகிறான். இதற்கெல்லாம் என்ன பொருள் என அவர் மனம் குழப்பியது. விஜய் தன்னிடம் பொய் சொல்கிறானா? ஏன் சொல்லவேண்டும் அந்தப்பெண்ணுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? அதற்கு மேல் யோசிக்க அவரால் முடியவில்லை.

    குழப்பமும் கோபமுமாய் ஏ.பி. தவித்துக்கொண்டிருக்க விஜய் அவர் அறைக்குள் நுழைந்தார்.

    “குட் மார்னிங் அருள்.. ஃபாக்டரி போயிட்டு வந்துடுவோமா?”

    “யாருடா அந்தப்பொண்ணு?” என்றார் ஏ.பி. நேரடியாக.

    “எந்தப்பொண்ணு..?” என்றார் விஜய் தெரியாதுபோல, பின் தொடர்ந்து, “ஓ! நேத்து யாரையோ எங்க வீட்ல பாத்தேனு சொன்னியே அதுவா? இன்னும் நீ அத விடலையாடா?” என்றார் சலிப்பது போல.

    “அத நான் விட்றதிருக்கட்டும்.. நான் அதப்பத்திக்கேக்கல... இப்போ யாரையோ ஆஃபீஸ்க்கு இரெண்டு பில்டிங் தள்ளி இறக்கிவிட்டியே அந்தப்பொண்ணு யாருனு கேட்டேன்” கோபம் அடக்கிய குரலில் வந்தது ஏ.பி.யின் குரல்.

    “என்னடா.. ஒரு மாதிரி இருக்கு கேள்வி? ஓ! பணத்த தொலச்சுட்டேன்னு எங்கிட்ட இல்லாத தப்பெல்லாம் கண்டுபிடிக்கிறியா? தொலஞ்ச பணம் மொத்ததையும் என்னோட கணக்குல எழுதிடு போதுமா?” என்றார் விஜய் வேகமாக.

    “நான் இப்போ பணத்த பத்தி பேசவேயில்லயே.. அந்த பொண்ண பத்திதான கேட்டேன்.. ஏன் பேச்ச மாத்தற?” எதையும் நேரடியாகக் கேட்பதுதானே ஏ.பி.

    “லிஃப்ட் கேட்டாங்க.. ட்ராப் பண்ணேன்.. போதுமா? இல்ல இன்னும் ஏதாவது கேள்வியிருக்கா?”, என்றுவிட்டு அறையிலிருந்து வெளியேறினார் விஜய்.

    விஜய் சென்ற திசையையே பார்த்த ஏ.பி. ‘இவன் கோபத்துல போறானா? இல்ல இதப்பத்தி மேலே பேச இடங்கொடுக்காம போறானா’ என்றார் தனக்குள்.

    அதற்கு மேல் ஏ.பி.க்கு வேலை ஓடவில்லை. விஜய்யும் அவர் நடவடிக்கையுமே அவர் மூளையை ஆக்கிரமித்தது. வெகு நேரம் யோசித்த அவருக்கு நடந்தவற்றிற்கு இரெண்டு விளக்கங்களே இருக்கமுடியுமென தோன்றியது. ஒன்று, விஜய் சொல்வது உண்மையாயிருந்தால், அந்தப்பெண் எதற்காகவோ விஜய்யை நெருங்க முயற்சிக்கிறாள். இல்லையேல், விஜய் பொய்சொல்கிறான்! முதலாவது காரணமாக இருக்கவேண்டுமென அவர் மனம் அடித்துக்கொண்டது. அப்படியிருப்பின் அவள் எதற்காக இவனை சுற்றுகிறாள் என்ற கேள்வி எழுந்தது. எதுவாவினும், அந்தப்பெண்ணிடமிருந்து விஜய்யை காப்பாற்றவேண்டும். தன் நண்பனுக்காகவும் தன் தங்கைபோலவே மாறிவிட்ட பாரதிக்காவும் இதை செய்யவேண்டுமென அவர் மனம் உறுதிப்பூண்டது.

    ஒரு முடிவுக்கு வந்தவராய் சில தொலைப்பேசி அழைப்புகள் செய்துவிட்டு தன் வேலையில் மூழ்கினார்!

    இரவு அவர் வீடு வந்து சேர அவர் வேண்டிய சில தகவல்களும் வந்துசேர்ந்தன. அந்த நடிகையின் பெயரும் முகவரியும்! “மாதவி! பொருத்தமான பெயர்” என்றார் வெறுப்பாக.


    ஏ.பி. இராமசந்திரனை சந்தித்து நடந்தவற்றை கூற இருவரும் சேர்ந்து அடுத்து என்ன செய்வதென ஆலோசித்தனர். நடப்பவற்றை கண்டும் காணாதுபோல்விட இருவருக்கும் விருப்பமில்லை. விஜய்நந்தன் மேலிருந்த நம்பிக்கை அவர்கள் இருவரையும் அந்த பெண்ணை சந்தேகிக்க வைத்தது.

    “என்னடா பண்றது. பாரதி வரத்துக்குள்ள இத செட்டில் பண்ணனும் டா..” என்றார் ஏ.பி.

    “ஹ்ம்ம்..” என்று யோசித்தவர், “டேய் பேசாம அந்த பொண்ணப்போயி நேர்ல பாத்துபேசினா என்ன?” என்றார் இராமசந்திரன்

    “போய் கேட்டா என்ன சொல்லப்போறா.. ஆமா உங்க ஃப்ரெண்ட ஏமாத்தப்பாக்குறேன்னா? ஒன்னும் தெரியாத மாதிரி நடிப்பா.. அதுவும் நடிகை வேற..” என்றார் ஏ.பி. கசப்பாக.

    “அவ ஒத்துக்குவானு நானும் சொல்லலடா.. ஆனா விஷயம் நம்பளுக்கு தெரிஞ்சிருச்சுனு அவளுக்கு தெரிஞ்சிரும்ல.. ஸோ விஜி பக்கம் வர யோசிப்பா.. நான் அவள்கிட்ட போய் உண்மைய தெரிஞ்சுக்கலாம்னு சொல்லல.. மறைமுகமா மிரட்டிட்டு வரலாம்னு சொல்றேன்..” என்று விளக்கினார் இராமசந்திரன்.

    “ஹம்ம்.. வேற வழியில்ல.. அவன் கிட்ட ஜாக்கிரதையா இருனு சொன்னா.. அவன் மேல பழி போடறேன்.. சந்தேகப்படறேன்னு சொல்வான்” என்ற ஏ.பி., “எதுக்கும் கொஞ்சம் வெய்ட் பண்ணுவோமா.. அவ ப்ளான் என்னனு தெரிஞ்சுக்க முடிஞ்சா பரவால்ல.. நம்ப நேர்ல பொய் அவ உஷாராயிட்டான்னா?” என்றார் யோசனையாக.

    “அதுவும் சரிதான்.. எதுக்கும் யாரயாவது விட்டு அந்த அட்ரெஸ்ல போய் பாத்துட்டு வர சொல்லனும்.. அவ கூட யாரெல்லாம் இருக்காங்கற டீடெய்ல்ஸ் தெரிஞ்சா நல்லாருக்கும்” என்ற இராமசந்திரன் பின் தொடர்ந்து, “வேணாம் வேணாம்.. ஆளெல்லாம் வேணாம்.. நம்பளே போய் பாத்திடுவோம்.. அப்படியே முடிஞ்சா அவளயும் பாக்கலாம்” என்றார்.

    “என்னது அவள பாக்கனுமா..?! என்னடா ரூட் மாறுது..” என்று ஏ.பி. சிரிக்க,

    “ஆமாடா.. அது ஒன்னு தான் கொறச்சல்.. அன்னைக்கு அந்த பொண்ண சரியா பாக்கல.. நேர்ல பாத்தா ஆள் எப்படினு ஒரு இம்ப்ரெஷன் கிடைக்கும்.. நம்பளே பாத்தா விஷயமும் வெளிய போகாம இருக்கும்” என்றார் இராமசந்திரன் சிரித்துக்கொண்டே.

    “ஓக்கே.. வக்கில் சார்.. நீங்க துப்பு தொலக்கிடுவிங்கனு எனக்கு நம்பிக்கையிருக்கு” என்று கேலிப்பேசிய ஏ.பி., “இவனுக்காக இதையும் பண்ணவேண்டிருக்கு” என்றார் ஒரு குழந்தையை பற்றி பேசிவதுப்போல.

    “இன்னைக்கு என்னா கோபம் தெரியுமாடா அவனுக்கு.. பணம் காணாம போயிடுச்சுனு இல்லாத கேள்வியெல்லாம் கேக்கறேனாம்..” என்றார் அவரே தொடர்ந்து.

    சிரித்த இராமசந்திரன், “விட்றா... ஆல்ரெடி பணம் காணாம போன குற்றவுணர்ச்சி.. தாழ்வு மனப்பாண்மை.. அது இப்டி கோவமா வெளிய வருது”, என்றார்.

    அந்த வாரம் வேறு எந்த குழப்பங்களும் இன்றி வழக்கமான வேலைகளில் கழிந்தது. நண்பனின் மனநிலை அறிந்து பணம் பற்றி பேசாது தவிர்த்து கண்கானிப்பு காமிரா பதிவுகளை பார்பதையும் தள்ளிப்போட்டார் ஏ.பி. அவர் மனதை பணத்தைவிட மாதவி அதிகம் ஆக்கிரமித்திருந்தாள் என்பதும் ஒரு காரணம். விஜயநந்தனும் வேலை விஷயங்கள் தவிர கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார்.


    சனிக்கிழமை இரவு தாங்கள் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தது போல ஏ.பி.யும் இராமசந்திரனும் அந்த மாதவியின் முகவரி தேடிச்சென்றனர். இராமசந்திரன் தான் வாகனத்தை ஓட்டினார். அந்த பகுதி அதிகம் வீடுகள் இல்லாத ஊருக்கு வெளியே அப்போது தான் மெல்ல வளர்ந்துவரும் குடியிருப்பு. அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் வீடுகளிருந்தன. அந்த முகவரியில் குறிப்பிட்டிருந்த தெருவுக்குள் நுழைந்தவுடனே காரின் விளக்குகளை அனைத்துவிட்டு மெல்ல வாகனத்தை செலுத்தினார் இராமசந்திரன். ஆர்வமாக அவர் அருகில் அமர்ந்தார் ஏ.பி.

    சற்று தூரம் செல்ல அந்த வீடு பார்வைக்குக் கிடைத்தது. அது தான் அந்த மாதவியின் வீடு என்று இவர்கள் ஊர்ஜிதப்படித்திக்கொள்ளும் தேவையே இல்லாமல் வாசலில் விஜய்நந்தனின் கார் நின்றுகொண்டிருந்தது!

    இராமசந்திரனின் கால்கள் அனிச்சையாய் ப்ரேக்கை சட்டென அழுத்த அவர் கைகள் நரம்புகள் புடைக்க ஸ்டியரிங்கை பற்றியது.

    கற்சிலையாய் உரைந்திருந்த ஏ.பி.யின் விழிகளில் நீர் படலம் திரண்டு தழும்பியது – அது அவர் ஏமாற்றபட்ட ஆக்ரோஷத்தின் வெளிப்பாடா? அவர் நம்பிக்கை பொய்த்துப்போன வேதனையின் பிரதிபலிப்பா? இல்லை அந்த நட்பின் மீதமிருந்த கடைசித்துளியின் கசிவா? இல்லை இவை அனைத்தும் சேர்ந்த கலவையா? விடையற்ற கேள்வியது!


    (தொடரும்)
     
    Sweetynila and Deepu04 like this.
  3. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Super super. Asusual twist at the end.... rajeni U r simply superb..Eagerly awaiting g for next update dear.
     
  4. meepre

    meepre Gold IL'ite

    Messages:
    549
    Likes Received:
    974
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Rajeni the story is going very wel. You explain the details exactly how it is. You bring it in front of our eyes. Please post next episode soon.
     
    Last edited: Nov 24, 2016
    Ragavisang likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Rajeni dhinam oru episode potrunga.kadhai viru virppa poguthu .super
     
    Ragavisang likes this.
  6. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    938
    Likes Received:
    1,755
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Wow.... wow... Rajeni, simply brilliant. Interesting and unexpected twists. Prolific writer you are undoubtedly, every time you come back, you come back with a stylenu dhan sollanum.



    Awww. tat was fantastic narration R. Simply loved the above lines, the doubt of being conned is so expressively stated. What is Vikrams participation in the death of AB, is there anything? OMG too many questions, pls pls post soon.

    What an irony, though am too much eager to read the next episode, a sadness also creeps in that the story is nearing its end, blame it on your writing calibre. You are born to win yar, please publish all your works, I would definitely grab a published version as well.
     
    Last edited: Nov 24, 2016
    Ragavisang likes this.
  7. Ragavisang

    Ragavisang Gold IL'ite

    Messages:
    356
    Likes Received:
    442
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Please post the next episode when you get a chance Rajeni. Read the storyat one stretch.. looks like I should have waited few more days:smash2:... Suspense thangalappa:nut:... by the way thanks very much for giving us the nice story:clap2:
     
  8. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    24. மித்ர மாளிகை – சாட்சி புத்தகம்!

    சையின்றி காரை கிளப்பி வந்த வழியே திரும்ப செலுத்தினார் இராமசந்திரன். காரிலிருந்த இருவருக்குமே தாங்கள் கண்டதை ஜீரணித்துக்கொள்ள சற்று அவகாசம் தேவைப்பட்டது. வீடு திரும்ப மனமின்றி காரை ஓட்டியவர் எலியாட்ஸ் பீச்சை அடைந்து காரை நிறுத்தினார். கார் நின்றதை உணர்ந்து ஏ.பி. இறங்க இராமசந்திரனும் இறங்கினார். ஏதும் பேசாமல் இரு நண்பர்களும் கடற்கரை மணலில் நடந்தனர்.

    கரையோரம் நின்று கையை கட்டிக்கொண்டு கடலை வெறித்தார் ஏ.பி. அது அவர் மனம் போலவே பேரலைகளை எழுப்பி கொந்தளித்துக்கொண்டிருந்தது. அவர் அருகில் வானத்தை அன்னார்ந்து பார்த்தபடி நின்றிருந்தார் இராமசந்திரன்.

    “இப்ப என்னடா பண்றது?”, என்றார் இராமசந்திரன் அவர்களது நீண்ட மௌனத்தை கலைத்து.

    பதிலுக்கு ஏ.பி.யிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது. “அவன் கிட்ட பேசிதானடா ஆகனும். எப்படி இப்டியே விட்றது”, என்றார் இராமசந்திரனே தொடர்ந்து.

    “அவனாடா இப்டியெல்லாம் பண்றான்?”, குரல் கரகரத்தது.

    “டேய் ஒரு வேள அவனுக்கு நம்ப ஹெல்ப் தேவைப்படலாம்டா.. அவனே எதுலயாவது மாட்டிருக்கானோ என்னவோ?”, அப்படி இருந்துவிடாதா என்ற ஏக்கத்தோடு கேட்டார் இராம்.

    “என்னடா சொல்ற.. அப்படி இருந்தா நான் அந்த பொண்ண பத்தி கேட்டப்போவே சொல்லிருப்பானே.. லிஃப்ட் கேட்டானு சொல்றான்.. அதுக்கு மொத நாள் நீயே பாத்தில்ல? யாருமே வரவேயில்லனு சாதிக்கறான்.. வீண் பழிப்போடறேனு எம்மேலயே திருப்பறான்டா”, ஆதங்கமாய் குற்றம் சாட்டினார் ஏ.பி.

    பின் சட்டென எதையோ கண்டுபிடித்தது போல, “பணம் காணாமப் போனதாவது நிஜமா? இல்ல அதுவும் இவனோட நாடகமா?” என்றார். அதிர்ந்து அவரை பார்த்தார் இராமசந்திரன் ‘என்னடா இப்படி சொல்லிட்ட’ என்றது பார்வை. அடுத்த வினாடியே தன் நெற்றியில் ஓங்கி அறைந்து கொண்டார் ஏ.பி., “பாருடா.. என்ன எப்படியெல்லாம் சந்தேகப்பட வச்சிட்டான்.. கட்ன பொண்டாட்டிய விட நான் இவன தான்டா அதிகமா நம்பிருக்கேன்”, என்றார் அவரே தொடர்ந்து விரக்தியாக.

    “டேய் பொறுமையா இருடா.. அவனையே நேர்ல கேட்டுடலாம்.. நம்ப இப்படி பொலம்பி ஒரு பிரயோஜனமுமில்ல..”, என்றார் இராமசந்திரன்.

    “கேட்டா அப்படியே உண்மைய சொல்லிடப்போறானா?”, என்றார் ஏ.பி. கோபமாக.

    “அப்போ அவளையும் வச்சிகிட்டு கேப்போம்.. அவ வீட்லயே அவன சந்திப்போம் அப்போ அவள தெரியாதுனு சொல்ல முடியாதுல்ல”, இராமசந்திரனின் யோசனை ஏ.பி.க்கும் சரியாகவே பட்டது.

    “சரிடா.. அவன் என்ன நினச்சாலும்.. பாரதிக்காக அந்த பொம்பளையோட சகவாசத்த ஒழிச்சிதான் ஆகனும்”, என்றார் ஏ.பி சலிப்பாக.

    நண்பன் தங்களிடன் பொய் சொல்கிறான் என்று அறிந்த போதும் அந்த ஏமாற்றத்தையும் தாண்டி அந்த நண்பனையும் அவன் குடும்பத்தையும் காக்கவே துடித்தனர் அந்த இரண்டு நண்பர்களும். நட்பிற்கு மட்டிமே உண்டான தனித்துவம் அது!


    ரவு வெகுநேரம் தன் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தார் ஏ.பி. அவர் மனதின் குழப்பமும் சந்தேகமும் கோபமும் தூக்கத்தை தூர நிறுத்தின. அருகில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியை எழுப்பிவிடாமல் மெதுவாக எழுந்து அவர்கள் அறையைவிட்டு வெளியே வந்து கூடத்தில் குறுக்கும் மறுக்கும் நடந்தார். யோசிக்க யோசிக்க அவர் உள்ள கொதிப்புகள் அதிகமாயிற்றே தவிர தெளிவேதும் கிட்டவில்லை. கூடத்தில் ஒரு புற சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தின் முன் சென்று நின்றார். அது அவர்கள் நால்வரும் கல்லூரிகாலத்தில் எடுத்துக்கொண்ட படம். புகைப்படத்தில் இவரருகில் நின்ற விஜய்நந்தன் இவரை பார்த்து பற்கள் தெரிய சிரித்தார். அவர் முகத்தையே வெகு நேரம் பார்த்திருந்தார் ஏ.பி.

    அந்த முகத்தின் வெகுளித்தனம் அவரை தடுமாறச் செய்தது. அதுவா தவறு செய்யும் முகம்? அதுவா கட்டிய மனைவியை ஏமாற்ற துணியும் முகம்? அவர் உள்ளம் ஏற்க மறுத்தது. பின், அந்த எண்ணத்திற்கு சவால்விடுவது போல அந்த பெண் வீட்டின் முன் நின்ற நண்பனின் கார் கண்முன் தோன்றி நகைத்தது. ‘பழிப்போடுகிறாயா?’ என்ற நண்பனின் இதுவரை கண்டிராத சீற்றம் கண்முன் தோன்றி முரண்டியது. ‘பணம் காணாமப் போனதாவது நிஜமா? இல்ல அதுவும் இவனோட நாடகமா?’ – அன்று மாலை அவர் இராமசந்திரனிடம் கேட்டது அசந்தர்ப்பமாய் அப்போது தோன்றி அவரை அதிரவைத்தது.

    அலுவலகத்தின் அக்கௌன்ட்ஸ் கணக்கு புத்தகங்களெல்லாம் ஏ.பி.யின் வீட்டில் தான் இருந்தன. ஒரு முடிவு செய்தவராய் அவரது அலுவலக அறை நோக்கி நடந்தார். சந்தேகம் என்று வந்துவிட்டபின் அதை தெளிவு படுத்திக்கொள்ளவேண்டுமென்று அவரது மூளை சொன்னாலும் அவரது கைகள் அந்த கணக்கு புத்தகங்களை எடுக்க தயங்கின. மனதிலொரு தேவையற்ற அச்சம் சூழ்ந்துகொண்டது. ஓர் அழ்ந்தமூச்சை வெளிவிட்டபடி, கணக்குகளை பார்க்கத் துவங்கினார் ஏ.பி.

    எது இருந்துவிடக்கூடாது என்று அவர் மனம் பிரயாசைப்பட்டதோ எது இருந்துவிடுமோ என்று அவர் மனம் அஞ்சியதோ அது அவர் கண்முன் விரிந்திருந்த புத்தகப்பக்கத்தில் எக்களித்தது. கடந்த ஆறு மாதங்களில் இருமுறை கணக்கு திருத்தப்பட்டும் ஒரு முறை விஜய்நந்தனின் சொந்த செலவு கணக்கில் என்று ஒரு பெருந்தொகை எடுக்கப்பட்டுமிருந்தன! அவர் தலைக்குமேல் மெல்லிய ஓசையோடு சுழன்ற மின்விசிறி தன் தலைக்குள்ளேயே பேரிச்சலோடு சுழல்வதைப்போல் தன் இரு கைகளாலும் தன் தலையை தாங்கிக்கொண்டு மேசையில் சாய்ந்தார் ஏ.பி.!


    காலையில் எழுந்த மேகலா பார்த்தது தன் அலுவலக அறையில் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த ஏ.பி.யை தான். பதறிப்போய் என்னவென்று வினவிய மனைவிக்கு ஒன்றுமில்லை என்பதாய் ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாக தந்துவிட்டு விலகி நடந்தார் அவர். தொழில் பிரட்சனைகள் துவங்கி அனைத்தையும் தன்னிடம் பகிர்ந்துகொள்ளும் கணவனின் இந்த விசித்திரபோக்கை கவலையோடு பார்த்திருந்தாள் மேகலா. காரணம் புரியாத ஒருவித பயம் அவள் உள்ளத்தை ஆட்கொண்டது. ஏதோ தவறாக நடக்கப்போவதாய் ஓர் அச்சம்!


    ன் சமீபத்திய கண்டுபிடிப்பையும் இராமசந்திரனிடம் கொட்டினார் ஏ.பி. அவருக்கும் இது பேரதிர்ச்சியே. அன்று தான் கோயமுத்தூருக்கு ஒரு மருத்துவ மாநாட்டிற்காய் சென்றிருந்த அசோக் திரும்பியிருந்தார். நடந்த அத்தனையையும் கேட்ட அவரின் விளையாட்டுத்தனமான முகம் கூட அதிர்ந்து கலங்கியது. நெற்றிப்பொட்டுகள் தெரித்துவிடும் போல விரல்களால் அழுத்திக்கொண்டார்.

    இதுவரை தங்கள் நண்பனிடம் தவறில்லை என்பதுபோல் ஓர் விளக்கம் கிடைத்துவிடாத என்று தேடிய அவர்களின் மீதமிருந்த நம்பிக்கையையும் இந்த கடைசி கண்டுபிடிப்பு துடைத்தெறிந்தது. ஆயினும், அவர்களுக்கு விஜய்நந்தன் மேலிருந்த அக்கறை அவரின் மாற்றத்திற்கான பழியை அந்த பெண் மேல் சுமத்தியது. அதுநாள் வரை அப்பாவியாயிருந்த தங்கள் நண்பனை அடியோடு மாற்றியது அந்தப் பெண்ணின் தந்திரம் தான் என குமைந்தார்கள். இதற்கிடையில், இங்கு நடக்கும் எதையும் அறியாமல் கணவனையும் கவனியாமல் பிள்ளை சாக்கிட்டு தன் பிறந்தவீட்டில் அமர்ந்திருக்கும் பாரதி மேலும் எரிச்சலுற்றார்கள். ஒருவேளை அவளருகில் இருந்திருந்தால் விஜய்நந்தன் இப்படி திசைமாறாமல் இருந்திருப்பாரோ என்ற ஆதங்கம்!

    அடுத்து என்ன செய்வது என்ற பேச்சு எழுந்தது.

    “இந்த அக்கௌன்ட்ஸ் புக்க காட்டி அவன் கிட்டயே நேர்ல கேக்கறேன்.. இப்போ நான் வீண் பழிப்போடறேன்னு சொல்லமுடியாதுல்ல.. என்ன சொல்றான்னு பாக்கலாம்”, என்றார் ஏ.பி.

    “ஆமா அதுதான் சரி.. ஆஸ்க் ஹிம் டேரக்ட்லி”, என்றார் அசோக் ஆமோதிப்பாய்.

    “நாளைக்கு காலையில நீ ஆஃபீஸ் வாடா.. கேட்டுடலாம்”, என்றார் ஏ.பி. இராமசந்திரனை பார்த்து.

    “டேய் அவன வச்சிகிட்டு கேட்டேனா.. அவன இவன் முன்னாடி இன்ஸல்ட் பண்றனு நினைக்கப்போறாண்டா”,என்றார் அசோக் கவலையாக.

    “அவன் கார அந்த பொம்பள வீட்ல நாங்க ரெண்டுப்பேரும் தானடா பாத்தோம்”, என்றார் ஏ.பி.

    “அதானே.. அதுமட்டுமில்லாம இவன் கேட்டப்போலாம் தான் அவன் உண்மைய சொல்லமாட்டேங்கறானே”, என்றான் இராமசந்திரனும் தொடர்ந்து.

    “நீங்க ரெண்டுபேரும் போனா மட்டும் சொல்லிடுவானா?”, என்ற அசோக் தொடர்ந்து, “யாரு கண்டா இது வரைக்கும் பண்ணமாதிரி இந்த அக்கௌண்ட்ஸ்க்கும் ஏதாவது சாக்கு ரெடி பண்ணிவச்சிருக்கானோ என்னவோ”, என்றார் சலிப்பாக.

    அவர் சொல்வதுப்போல் நடக்கவும் வாய்ப்பில்லாமலில்லை என்று தோன்றியது மற்ற இருவருக்கும். அந்த புது விஜய்நந்தன் என்ன செய்வார் செய்யமாட்டார் என்று அவர்களால் கணிக்கமுடியவில்லை.

    “சரி.. பாக்கலாம்... அவன கேளுடா நீ.. இராமும் வேணும்னா இருக்கட்டும்.. எப்படியும் என்ன காரணம் சொன்னாலும் பணம் எடுத்தத ஒத்துகிட்டுதான ஆகனும்? அந்த பொண்ணோட அஃபேர தான ப்ரூவ் பண்ணமுடியாது..” என்றார் அசோக். பின் அவரே, “என்ன அதுக்கப்புறம் நம்ப ஆளு உசாரயிட்டான்னா வம்பு.. பட் கேளுடா பாத்துக்கலாம்.. நம்பளே ஓவரா யோசிக்க வேண்டாம்”, என்றார்.

    “இல்லடா.. அவன் பணம் எடுத்தான்னு ப்ரூவ் பண்றதவிட அந்த பொண்ணோட சகவாசத்த ஒழிக்கறதுதான்டா முக்கியம்.. நீ சொல்ற மாதிரி அவன் உசாராய் நமக்கு தெரியாத மாதிரி கண்டின்யூ பண்ணான்னா அவன் லைஃபே போயிடும்.. நம்பளும் இருக்கற வேலையெல்லாம் விட்டுட்டு அவன் பின்னாடியே அலஞ்சிட்டிருக்க முடியாது..”, என்றார் ஏ.பி.

    “அப்போ அந்த பொண்ணபோயி மிரட்டிருவோமா?”, என்றார் அசோக்.

    “ஏன்? தொழிலதிபர் ஏ.பி.யும் அவர் நண்பர்கள் வக்கீல் இராமசந்திரனும் டாக்டர் அசோக்குமாரும் நடிகை மாதவி வீட்டில் கலாட்டானு பேப்பர்ல வரனுமா?”, என்ற இராமசந்திரன், “ஐடியா சொல்றான் பாரு.. ஏற்கனவே அவனால மானம் பொயிடுமோனு இருக்கு.. இவன் சொல்ற மாதிரி கேட்டா நம்ப மானமும் கப்பலேறிடும்!” என்றார் தொடர்ந்து நக்கலாக.

    “அவ பேரெல்லாம் கரெக்டா நியாபகம் வச்சிருக்க போல!” என்று அசோக் கண்ணடிக்க, “மிதிப்பேன்டா உன்ன!”, என்றார் இராமசந்திரன். மூவரும் சிரித்துவிட சூழ்நிலை சற்று இலகுவானது.

    “ஏற்கனவே யோசிச்ச மாதிரி அவன அவ வீட்லயே வச்சு கார்னர் பண்ணிடுவோம்.. அப்பதான் அவன் குட்டு ஒடையும்”, என்றார் இராமசந்திரன்.

    “பிராப்ளம் ஒன்னும் ஆய்டாதே..”, என்றார் அசோக் தயக்கமாய்.

    “வரும்.. அந்த பொண்ணு பிரச்சன பண்ணுவா தான்.. பட் அவளுக்கு பணம் ஏதாவது குடுத்து செட்டில் பண்ணிடலாம். பாரதுயையும் பையனையும் வச்சுதான் இவன மெரட்டனும்.. அவ சகவாசம் விட்டுச்சுன்னா இவன் வழிக்கு வந்துடுவான்..”, என்றார் ஏ.பி.

    “ஆமா..கையோட அந்த மகராசிய வீட்டுக்கு வர சொல்லனும் மொதல்ல”, என்றார் இராமசந்திரன் பாரதியை குறித்து.

    சனி அல்லது ஞாயிறன்று அந்த பெண் வீட்டிற்கு விஜய்நந்தன் செல்வார் அப்போது தங்கள் திட்டத்தை நிறைவேற்றலாம் என முடிவு செய்தனர். அந்த இரெண்டு நாட்கள் அவரை கண்காணிக்கும் பணியை இராமசந்திரன் ஏற்றுக்கொண்டார். மீதமிருந்த அந்த வாரநாட்கள் வேறு எந்த மாற்றமுமின்றி கழிந்தன. அலுவலகத்தில் தன்னிடம் ஒரு ஒதுக்கதுடனேயே இருக்கும் விஜய்நந்தனை கவலையோடு கவனித்துக்கொண்டிருந்தார் ஏ.பி.

    அவர்கள் விதியை மாற்றப்போகும் அந்த சனிக்கிழமையும் வந்தது!


    (தொடரும்)
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Rajeni super suspense.seekiram adutha episode podunga.illana mandai vedichudum
     
    Rajeni likes this.
  10. Ragavisang

    Ragavisang Gold IL'ite

    Messages:
    356
    Likes Received:
    442
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Thanks Rajeni for posting this chapter. Can't wait for the next one:laughing:.
     
    Rajeni likes this.

Share This Page