1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

மித்ர மாளிகை..!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Oct 8, 2014.

 1. Rajeni

  Rajeni Moderator Platinum IL'ite

  Messages:
  1,257
  Likes Received:
  2,318
  Trophy Points:
  290
  Gender:
  Female
  தோழமைகளே வணக்கம்! சில சிறுகதைகளுக்குப் பிறகு, என்னுடைய புதியதொரு படைப்பைத் தொடர்கதையாக இங்கு பதிகிறேன்! தவறாமல் படித்து உங்கள் கருத்துக்களைப் பகிறுங்கள்! குற்றம் குறைகள் இருப்பினும் திட்டிவிடுங்கள்! பாராமுகம் மட்டும் வேண்டாமே!!


  இதோ முதல் பதிவு..!
   
  Last edited: Oct 8, 2014
  Loading...

 2. Rajeni

  Rajeni Moderator Platinum IL'ite

  Messages:
  1,257
  Likes Received:
  2,318
  Trophy Points:
  290
  Gender:
  Female
  மித்ர மாளிகை - உயில்!


  சென்னை அடயாறில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி என்று அறிவிப்பு பலகை இல்லாமலே பறை சாற்றிக்கொண்டிருந்த அப்பகுதியில், ஒரு குறுக்குத்தெருவின் கடையெல்லையில் இருந்தது மித்ரா ரெசிடென்ஸ் (Residence). சென்னையின் காலை பத்து மணி வெயிலிலும் இருள் படிந்தது போன்ற ஒரு மாயை அதை சூழ்ந்திருந்தது. சுமார் பத்து நாட்களாய் பராமரிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதை வீட்டின் பெரிய தோட்டம் பிரதிபலித்தது. புல்வெளியின் சீரான உயரம் பல இடங்களில் குழைந்தும், நீர் பற்றாக்குரையால் சில இடங்களில் காய்ந்தும், இடையில் ஆங்காங்கே ஓடிய நடைபாதைகளில் குப்பையும் சருகுகளும் சேர்ந்தும் தோட்டம் எழில் அற்று காணப்பட்டது. முன் போர்டிக்கோவில் ஒரு டாபர்மேன் படுத்து இருக்க அதன் அருகில் குடிக்கப்படாமல் பால் ஆடை படர்ந்து கிடந்தது. உள்ளே அகண்ட வரவேற்பு அறையின் பிரதான பகுதியில் புதிதாக ஃப்ரேம் செய்யப்பட்ட புகைபடத்தில் லேசான புன்னகையுடன் இருந்தார் ஆருள்பிரபாகர், அதை அலங்கரித்தது பெரிய ரோஜா மாலை.


  புகைப்படதிற்கு சற்று தள்ளி சுவரோரமாய் நின்றிருந்த அந்த பெண்ணின் முகத்தில் அதிர்ச்சி, ஆச்சர்யம், கலவரம், கவலை என ஒரு உணர்வுக்கலவை! அவளை சுற்றி அந்த வரவேற்பறையில் கூடியிருந்த அனைவர் முகங்களும் ஒவ்வொரு உணர்வில் ஒரு நிமிடம் உறைந்திருக்க, அந்த மௌனத்தை "ரிடிக்குலஸ்" என்று கத்திய ஓர் ஆணின் குரல் கலைத்தது. அந்த கத்தலை சிறிதும் லட்சியம் செய்யாமல் தன் கருமமே கண்ணாய் தன் கையில் இருந்த உயில் பத்திரத்தை மடித்தார் வக்கீல் ராமசந்திரன்!


  அவர் அதை தன் கை பையில் வைப்பதற்குள், யாரும் எதிர்பாராதவண்ணம் பாய்ந்து அவர் கையில் இருந்ததை பறித்து கிழித்துப்போட்டான் முன்பு கத்திய அந்த இளைஞன்! இருபத்து ஐந்து வயது மதிக்கத்தக்க அவனை பதற்றம் சிறிதும் இன்றி ஒருவித ஏளனத்துடன் பார்த்தார் வக்கீல்.


  "உன்னோட இந்த குணம் தான் உன்ன இந்த நிலைக்கு தள்ளியிருக்கு. அது வெரும் நகல்"


  "இத நான் ஒதுக்க முடியாது. என் அப்பன் சொத்தை கண்டவளும் அனுபவிக்கிறதா.." என்று கத்தினான் அவன்


  "நீ விரும்புறியோ இல்லையோ.. ஏ.பி.யோட எல்லா சொத்துக்களும் ராஜிய தான் சேரும். அவளா பாத்து உனக்கு குடுக்கறது தான்.." அழுத்தமான குரலில் பேசினார் அவர்.


  "இவ யாரு என்னோட காச எனக்கே குடுக்க?" சீறினான்.


  "அவ்வளவு ரோசக்காரனா இருந்தா கெளம்புப்பா.. இங்க இருந்து பிரட்சன பண்ணாதே.."


  "நானா பிரட்சன பண்றேன்? அந்த உயிலே ஒரு ஃபொர்ஜெரி.. ஏமாத்து வேலை.. அத ஒடைக்காம விடமாட்டேன்!"


  "முடிஞ்சத செய்" என்று முடித்தார் அவர்.


  "உன்ன விடமாடேன் டி!" என்று இவர்கள் இருவரையும் மாறி மாறி மிரண்டு போய் பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்து உருமிவிட்டு வெளியேறினான்!


  அவன் மிரட்டலில் இன்னும் மிரண்டுபோனாள் ராஜி என்று வக்கீல் குறிப்பிட்ட ராஜேஸ்வரி! அருள்பிரபாகரின் அண்ணன் மகள்!


  பின் மெல்ல வக்கீலிடம், "சார் மனோக்கும் கொஞ்சம்.." என்று நிறுத்தினாள். அந்த மனோ சொன்னது போல, அவனுடையது என இது நாள் வரை கருதப்பட்டதை, அவன் தந்தையின் சுய உழைப்பில் வந்த சொத்துக்களை அவனுக்கும் "கொஞ்சம்" கொடுக்கலாம் என்று கூற நா எழவில்லை.


  அதற்குள் இடைமறித்து, "ஆனால் அவன் கொஞ்சத்தில் திருப்தி அடைய மாட்டானேம்மா.. எது எப்படியோ ஏ.பியோட முடிவு இதுதான்! அவரோட வக்கீலாவும் நண்பனாவும் அத செய்யிறது தான் என்னோட கடமை"


  "நான் எப்டி சார்.." என்று இழுத்தவளிடம், "உன்ன தனியா விட்றமாட்டோம்மா.. கவலைப்படதே.. நான் சயங்காலம் வந்து சொத்து விவரமெல்லாம் சொல்றேன்.. இப்போ ஒரு அப்பாயின்மென்ட் இருக்கு எனக்கு.. நீ பயப்படாம இரு.. இனிமே தான் நிறைய சந்திக்கனும் நீ" என தன் பைய்யை கையில் எடுத்து புறப்பட திரும்பியவர்,


  "முழுக்க முழுக்க ஏ.பி.யோட நண்பனா ஒன்னுக் கேட்டுக்கறேம்மா.. மனோ நடத்தையும் போக்கும் சரியில்லை தான்.. ஆனா அவனோட ஆட்டமும் ஒரு நாள் அடங்கும். அப்போ அவன அதரவற்று விட்டுடாதே!" என்று விட்டு அதிகமாய் பேசிவிட்டது போல வேகமாக வெளியேறினார்.


  -தொடரும்..!
   
 3. dharshinis

  dharshinis New IL'ite

  Messages:
  2
  Likes Received:
  2
  Trophy Points:
  3
  Gender:
  Female
  அருமையான தொடக்கம்...வாழ்த்துகள் !!
   
  1 person likes this.
 4. Rajeni

  Rajeni Moderator Platinum IL'ite

  Messages:
  1,257
  Likes Received:
  2,318
  Trophy Points:
  290
  Gender:
  Female
  Mikka Nandri dharsini!

  Yours is the first FB! Special thanks for that too!! Continue reading the story :)
   
 5. Padhmu

  Padhmu IL Hall of Fame

  Messages:
  9,920
  Likes Received:
  1,887
  Trophy Points:
  340
  Gender:
  Female
  good start. nice to read.
   
  1 person likes this.
 6. kalpavriksham

  kalpavriksham Gold IL'ite

  Messages:
  884
  Likes Received:
  473
  Trophy Points:
  138
  Gender:
  Female
  very good beginning, Rageni.
  i think it will be a mix of all emotions.
  looking forward to more reading.
  please keep posting without much gap.

  "Mithra vasilin" vayilil nangal ellorum wait pannugirom!
   
  Ragavisang and Rajeni like this.
 7. kithuraja

  kithuraja Senior IL'ite

  Messages:
  29
  Likes Received:
  17
  Trophy Points:
  23
  Gender:
  Female
  very nice and interesting story and update
   
  1 person likes this.
 8. umasivasankar

  umasivasankar IL Hall of Fame

  Messages:
  2,021
  Likes Received:
  4,948
  Trophy Points:
  300
  Gender:
  Female
  good story keep writing.........
   
  Ragavisang and Rajeni like this.
 9. cherrybud

  cherrybud Silver IL'ite

  Messages:
  151
  Likes Received:
  110
  Trophy Points:
  93
  Gender:
  Female
  Hi Rajeni,

  Migavum arumaiyana thodakkam.... Pinnoottam koduppatharkkaagave ivvalai thalaththinul ippodhu nuzhainthen....

  Yerkanave kurippittadhu pola naan thangal azhagaana kadhaigalin oru eliya rasigai...

  thodarkadhai muyarchi maaperum vetriyadaiya en nenjam kanintha vaazhthukkal...

  Anbudan,
  S.
   
  1 person likes this.
 10. periamma

  periamma IL Hall of Fame

  Messages:
  9,237
  Likes Received:
  20,465
  Trophy Points:
  470
  Gender:
  Female
  ஆரம்பமே அமர்க்களமா இருக்கு .வாழ்த்துக்கள்
   
  1 person likes this.

Share This Page