1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மிசினுக்கு என்னா பேரு?’ ‘புருசன்’

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Mar 4, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,749
    Likes Received:
    12,571
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: மிசினுக்கு என்னா பேரு?’
    ‘புருசன்’ :hello:

    வீட்டு வேலை செய்யும் மூன்று பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்....

    ‘எங்கூட்டு அக்கா ஒரு சின்ன பொட்டி வச்சிருக்கு. அவங்க ஃபோனை பெட்ரூம்ல வச்சிட்டு அதுல பாட்டு போட்டுட்டு கிச்சன்ல அந்தப் பொட்டியில பாட்டு கேப்பாங்க. ஒயரெல்லாம் கிடையாது’ என்றாள் ஒருத்தி.

    ‘புளூடூத்தா?’ என்றாள் இன்னொருத்தி.
    ‘ச்சே.. அந்தக்காவுக்கு பல்லெல்லாம் பளிச்சுன்னு முத்து மாதிரி இருக்கும்’

    ‘புளூடூத்துன்னா சொத்தப் பல்லு இல்லடி. அந்த மிசினோட பேரு’
    ‘அப்புடியா!’

    ‘இதுக்கே சொல்றியே, ஜவஹர் அண்ணன் வீட்டு அக்கா சின்னதா இட்லி மாதிரி ஒரு மிசின் வச்சிருக்கு. அந்தக்கா இங்கிலீஸ்ல பேசினா அது பதில் சொல்லும். எந்தப் பாட்டு கேட்டாலும் தேடிப் பாடும்’

    ‘ஆத்தாடீ.. அந்த மிசினுக்கு பேரு இருக்கா?’
    ‘அது பேரு ஏதோ கூகுள் மிசினுன்னு சொல்றாங்க...’
    இப்போது மூன்றாவதாய் வந்த பெண் அவர்கள் இருவரையும் அலட்சியமாய்ப் பார்த்தாள்.

    ‘எங்கக்கா துணி தோய்க்கணும்ன்னு சொன்னதும் அழுக்குத் துணியை எல்லாம் தேடி எடுத்து, தோய்ச்சி, மாடியில காயப் போட்டு, மடிச்சி கொணாந்து பீரோ உள்ளே வைக்கும்’

    ‘அடியாத்தி இது சூப்பர் மிசினா இருக்கே. இந்த மிசினுக்கு என்னா பேரு?’
    ‘புருசன்’
    சிரிக்க மட்டும்
     
    Loading...

Share This Page