1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மழைக்கு காத்திருக்கும் சிறுமி

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, Dec 17, 2010.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    [font=&quot]1.
    உனக்கும் எனக்கும் இடையில்
    மூன்று நதி ஓடிக்கொண்டிருக்கிறது.
    முதல் நதியில் ஒரு ஓடமும்
    இரண்டாம் நதியில ஒரு இலையும்
    மிதப்பதை மூன்றாம் நதியில்
    அமர்ந்திருக்கும் நீள்தாடி கிழவன்
    ரசித்துக்கொண்டிருக்கிறான்.
    கற்பனைகளாலான கயிற்றில்
    நாம் கட்டப்படுகிறோம்.
    நம் பாவத்தின் அறிக்கைகளை
    வெளியிடும் நாளில்
    கட்டுக்கள் அவிழ்ந்து மீண்டும்
    இணைகிறோம்.
    நம்மிடையே நிற்காமல்
    இப்போதும்
    ஓடிக்கொண்டிருக்கிறது அதே நதி.

    2.

    யார் யாரோவாக அறிமுகமாகிறோம்.
    யாதுமாகி உள் அமர்கிறோம்.
    எதுவுமற்று சாம்பலென உதிர்கிறோம்.

    3.

    அன்பெனப்படுவது ஒரு வதை.
    வதையெனப்படுவது ஒரு மாயை.
    மாயையெனப்படுவது ஒரு துயர்
    துயரெனப்படுவது அன்பின்
    மற்றொரு பெயர்.

    4.
    தாயின் ஸ்பரிசங்களோடு
    தொடுகின்ற விரல்களை
    பெற்றிருக்கிறாய்.
    நீலக்கடலின் ஆழ்ந்த அமைதி
    உன் விரல்களெங்கும் விரவிக்கிடக்கிறது.
    வலிகளை கண்ணீர்த்துளிகளால்
    நீக்குகிறாய்.
    மார்போடு அணைத்துக்கொண்டு
    நீங்குதலின் அர்த்தங்களை தெருவெங்கும்
    சிதறவிட்டபடி கதறும் சருகுகளின்
    மேல் நடந்து செல்கிறாய்.
    மீண்டும்,
    மழைக்கு காத்திருக்கிறாள் சிறுமி.

    -நிலாரசிகன்.[/font]
     
    Loading...

  2. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female

    என்ன சொல்ல nr?
    எப்போதோ வருகிறீர்கள்... வார்த்தை சிதறல்களால் எண்ணங்களை சிதறடித்துவிட்டு செல்கிறீர்கள்....
    அடுத்த (கவிதை)மழை எப்போதோ? நாங்களும் காத்திருக்கிறோம்.
     
  3. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    அபி,

    எப்பொழுதாவதுதானே மழையும் பெய்கிறது :)
    என் அடுத்த கவிதை நூல் "வெயில் தின்ற மழை" உயிர்மை பதிப்பகம் இம்மாதம் டிசம்பர் 26 வெளியிடுகிறது. கலந்துகொண்டால் மகிழ்வேன்.
    இதைப்பற்றிய அறிவிப்பு என்னுடைய வலைப்பூவில் இருக்கிறது.
    நன்றி,
    நிலாரசிகன்.
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    இதில் இரண்டாம் கவிதை எனக்கு மிகப் பிடித்தது நிலாரசிகன். நிறைய யோசிக்க வைக்கிறது அது.
    உங்கள் அடுத்த கவிதை நூல் வெளியாவது குறித்து மிகவும் மகிழ்ச்சி நிலாரசிகன். மனமார்ந்த வாழ்த்துக்கள். -ஸ்ரீ
     
    Last edited: Dec 17, 2010
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வெயில் தின்ற மிச்சத்தை இங்கே சொல்ல வந்திட
    சொல்" எனப் பெய்திடும் மழை
    வார்த்தை பிரயோகம் மிக அருமை.
    வாழ்த்துக்கள்
     
  6. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    உங்கள் வலைப்பூவில் ஏற்கனவே வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தேன்.

    சிங்கையில் இருப்பதால் கலந்துகொள்ள இயலவில்லை. இன்னும் பல புத்தக வெளியீடுகள் நிகழுமல்லவா. கண்டிப்பாக கலந்துகொள்வேன்.:cheers
     

Share This Page