1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனைவிக்கு திடீர் சந்தேகம்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Sep 8, 2020.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,808
    Likes Received:
    12,643
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:மனைவிக்கு திடீர் சந்தேகம் :hello:

    மனைவிக்கு திடீர் சந்தேகம் வந்தது...தன்னுடைய கணவனுக்கு காது கேட்கவில்லையோ என்று?.

    ஆனால்... இதை கணவணிடம்
    நேரடியாகக் கேட்க அவருக்குத் தயக்கம்,
    தயக்கம் என்ன...பயம்தான்...

    இந்த விஷயத்தை அவரின் உறவுக்கார டாக்டருக்கு தெளிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதினார்....

    டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்...
    இருபது அடி தூரத்தில் இருந்து கணவரிடம் ஏதாவது பேசிப் பாருங்கள்,...
    கணவரின் காதில் விழவில்லை எனில்....
    சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்,
    பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்றுப் பேசுங்கள்.

    எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் கணவருக்கு காது கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம் என்றிருந்தது.

    அதைக் பார்த்தவுடன் மனைவிக்கு ஒரே குஷி.

    வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த கணவரிடம்...
    இன்று மகனுக்கு பள்ளி கட்டணம் கட்டியச்சா? எனக்கேட்டாள்.

    பதில் எதுவும் இல்லை...
    பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை,..

    ஹாலில் இருந்து கேட்டாள்,...
    சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள். .

    கணவரிடமிருந்து பதிலே இல்லை.
    போச்சு இரண்டு ஸ்பீக்கரும் அவுட் ஆகிவிட்டதுபோல .... என்று மனதில் கன்ஃபார்ம் செய்து விட்டார்.

    கடைசி வாய்ப்பாக கணவனின் காது அருகே சென்றுச் சத்தமாக....
    இன்னைக்கு பையனுக்கு Fees கட்டியச்சா?... எனக் கேட்டாள்.

    காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே அவளின் கணவன் அவளை கோபமாக திரும்பி பார்த்து,
    என்டீ இப்படி கத்துற, நீ வாசல் கேட்டிலிருந்து, வரவேற்பறையில் இருந்து, ஹாலில் இருந்து, சமைலறை வாசலில் இருந்து கேட்க, கேட்க நானும் கட்டியச்சு கட்டிச்சுன்னு சொல்லிக்கிட்டே இருந்தேனே,
    அது உங்கள் காதில் விழவில்லையா?..

    காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்க...? என பொரிந்து தள்ளிவிட்டான்...

    மனைவி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாள்.

    தவறு தன்னிடம் தானா?...

    கதையின் நீதி.

    இப்படித்தான் பலர் பிரச்சனையை நம்மிடம் வைத்துக் கொண்டு... அது பிறரிடம் இருப்பதாக நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்…
    என்ன விசித்திரம்!!!

    இந்தப் பதிவு சிரிக்க மட்டும் அல்ல, சிந்திக்கவும் கூடத்தான்...
     
    kaluputti likes this.
    Loading...

  2. kaluputti

    kaluputti Platinum IL'ite

    Messages:
    1,162
    Likes Received:
    588
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Very true sir..If only we start analyzing our good and bad aspects then the world would be a heaven on earth. At present with both the spouse & myself in the senior category, this is almost the situation...Communication has become so difficult that we have decided to exchange important information through whatsapp....:):)
     
    Thyagarajan likes this.
  3. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,808
    Likes Received:
    12,643
    Trophy Points:
    615
    Gender:
    Male
    கொஞ்சம் ரிலாக்ஸ்....

    பழனிச்சாமி என்பவர் மரணமடைந்து விட்டார். ஒரு பத்திரிகையில் தவறாக குருசாமி காலமானார் என்று எழுதி விட்டார்கள்.

    குருசாமி கடுமையான கோபத்தோடு பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று நியாயம் கேட்கிறார்.

    ‘மன்னிச்சுக்கோங்க.. நாளைக்கே மறுப்பு போட்டுடறோம்’

    குருசாமி கோபமாகச் சொன்னார்: ‘மறுப்பு போட்டா மட்டும் பத்தாது. வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

    அடுத்த நாள் மறுப்பு வெளிவருகிறது.. இப்படி..

    “காலமானவர் பழனிச்சாமி. குருசாமி என்று தவறாக அச்சாகி விட்டது. குருசாமி உயிருடன்தான் உள்ளார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்”
     
  4. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,808
    Likes Received:
    12,643
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:
    *10th Student* : நான் நல்லாப்படிச்சு, பெரிய டாக்டராகி, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பேன்

    கொரோனா : அடி செருப்பால. நீ பாஸானதே என்னாலதான் .
     

Share This Page