மனசுக்கென்ன நிறம்...[மங்கையர் மலரில் வெளி&#299

Discussion in 'Jokes' started by bharathymanian, Nov 4, 2015.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    மனசுக்கென்ன நிறம்? சிறுகதை : by 'அனுராதா வெங்கடேஷ்'

    ஓவியம் : மகேஸ்
    [​IMG]
    [​IMG]
    ‘அக்கா! பாத்து வண்டி ஓட்டுக்கா!’ சி.டி.சி. திருப்பத்தில் கேட்ட குரல் ராஜியை இவ்வுலகிற்கு இழுத்து வந்தது. ‘மனமே, கான்சன்ட்ரேட்’ தனக்குள் கூறிக் கொண்டவளுக்கு அன்று காலையில் வீட்டில் நடந்தது ஞாபகத்துக்கு வந்தது.
    ராஜி, கணவன் ஹரி, 2 குழந்தைகள், கூட மாமியாருமாக சிறிய குடும்பம் ராஜியுடையது. முந்தின தினம் பெஸ்டிவல் அட்வான்ஸ் அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டதை ஹரியிடம் சொன்னபோது தான் குழப்பம் ஆரம்பமானது.
    நாம பூஜாவிற்கு 2 பவுனில் நெக்லஸ் வாங்கலாமாங்க?" என்றாள் ராஜி.
    ஹரி பதிலே சொல்லவில்லை.
    ஏங்க என்ன சொல்றீங்க?" - ராஜி.
    இல்ல ராஜி, பிரியா வீட்டு கிரஹப்பிரவேசத்திற்கு நம்ம சார்பா மாடுலர் கிச்சன் செஞ்சு கொடுத்திடலாம்னு அம்மா பிரியப்படறாங்க. நான் பி.எஃப் லோன் வேணா அப்ளை பண்ணிடறேன்" என்றான் ஹரி.
    ராஜிக்குப் புரிந்தது. தன் தங்கை திருமணத்திற்கு நான்கு வருடங்களுக்கு முன் தான் கொடுத்த ரூ.50,000 நாத்தனாருக்கு வேறு வழியில் போகும் என்று.
    லோன் போட வேணாம். நான் இன்னிக்கு பணம் எடுத்துட்டு வந்துடறேன்" கூறியவாறே வண்டிச் சாவியை எடுத்தாள்.
    வங்கி ஹாலில் கால் வைத்து மணி பார்த்தபோது ‘9.50.’ எதிரில் சி.எம். நின்றிருந்தார். லேட்டாக வரும் போது எப்படியாவது இவர் எதிரில் வருமாறு ஆகிவிடுகிறது.
    காலை வணக்கம் வைத்தவாறே கையெழுத்துப் போட்டுவிட்டு கவுன்டரில் சிஸ்டம் ஆன் செய்தாள்.
    9.45க்கு மெஷினை ஆன் பண்ணணும்மா!" சி.எம். வாணியிடம் கூறுவது தனக்காக என்பது புரிந்தாலும் திரும்பிப் பார்க்காமல் வேலையை ஆரம்பித்தாள் ராஜி.
    சனிக்கிழமை கூட்டம் மொய்க்கத் தொடங்கியது. பிடிவாதமாக மனதை திசைத் திருப்பினாள் ராஜி. பணம் கட்டுபவர்களுக்கும் எடுப்பவர்களுக்கும் மாறி மாறி டோக்கன் ஓட, கையும் மனமும் பணம் எண்ணுவதும், கணினியில் பதிவதுமாக தொடர்ந்து இயங்கியது.
    சாமி, நல்லா இருக்கீங்களா?"
    குரல் கேட்டு நிமிர்ந்தால் எதிரில் ஆராயி. நகராட்சி ஊழியை. அடிக்கடி சம்பளம் எடுக்க வரும்போதும், போகும்போதும் ராஜியிடம் பேசாமல் செல்ல மாட்டாள். அந்தச் சலுகையில் டோக்கன் எடுக்காமல் ராஜியிடம் பணம் வாங்கி விடுவாள். அதில் ஒரு பெருமை அவளுக்கு. பலமுறை ராஜி அவளிடம் வரிசையில் வருமாறு சொல்லி இருந்தாலும் கேட்கமாட்டாள். அப்படி ஒரு அன்புத் தொல்லை.
    [​IMG]
    ஆராயியைப் பார்த்ததும் சுறுசுறுவென்று ராஜிக்கு எரிச்சல் மண்டியது. இன்னிக்கு கூட்டம் பாத்தீங்களா? போய் டோக்கன் எடுத்துட்டு உட்காருங்க" என்றாள்.
    கண்ணு, என் பேத்திய பிரசவத்திற்கு ஆஸ்பத்திரில சேர்த்திருக்கு. டாக்டரம்மா உடனடியா ஆபரேஷன் பண்ணணும் பணத்தைக் கட்டுனு சொல்லிட்டாங்கம்மா. என் கணக்குல எவ்வளவு இருக்குதுனு பாரு" என்றாள்.
    எழுவத்தெட்டாயிரத்து சில்லறை இருக்கு. ஆனா, டோக்கன் வாங்குங்க" என்றாள் ராஜி பிடிவாதமாக. சாமி, சாமி இந்த ஒரு தடவை கொடுத்திடு... இனிமே இப்படி ஊடால வரமாட்டேன்" என்றாள் ஆராயி.
    அதற்குள் வாடிக்கையாளர்களில் இரண்டு பேர் ஆராயிக்கு ஆதரவாகவும், ஒருவர் எதிர்த்தும் பேச ஆரம்பிக்க சிறு கசமுசாவாகி கொஞ்சம் சத்தமாகி விட்டது. சத்தம் கேட்டு சி.எம். வந்து மேடம், என்ன ப்ராப்ளம். சீக்கிரம் கஸ்டமரை கவனித்து அனுப்புங்க. பேச்சை வளத்தாதீங்க," என்று கூற ராஜிக்கு ஆயாசமாக இருந்தது.
    ‘கொடுங்க’ என்று பாஸ்புக்கையும் ஸ்லிப்பையும் ஆராயியிடமிருந்து வாங்கியவள் ஐம்பதாயிரம் போதுமா?" என்று கேட்டாள். பத்தலைன்னா மறுபடியும் வந்து எடுக்கறேன் சாமி" என்றாள் ஆராயி.
    எதுவாயிருந்தாலும் ஒரு மணிக்குள் வரணும்" என்று கூறியவாறே அவள் கணக்கை சரிபார்க்கத் துவங்கினாள்.
    மேடம், ப்ரேக் போகலாமா?" கவிதா கேட்டபோது, போயிட்டே இரு கவிதா. இந்த பேமெண்ட் முடிச்சிட்டு வந்துடறேன்" என்றாள் ராஜி.
    ஐநூறு வேணுமா, ஆயிரம் ரூபாய் நோட்டு வேணுமா?"
    ஐநூறே குடு தாயி. கட்டா குடுத்துடலாம்" என்றாள் ஆராயி.
    பணத்தையும், பாஸ்புக்கையும் பெற்றுக் கொண்ட ஆராயி,போயிட்டு வரேன் தாயி" என்று பல்லைக் காட்டினாள்.
    டீ பிரேக் போய் வருவதற்குள் கூட்டம் இன்னும் அதிகமானது போலத் தோன்றியது. பரபரவென்று இயங்கிய ராஜிக்கு இடையில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு நூறு ரூபாய் நோட்டுகளாகவும், பத்து ரூபாய் நோட்டுகளாகவும் கேட்பவர்களின் தொல்லை வேறு சேர்ந்து கொண்டது. ஒரு வழியாக அனைவரையும் அனுப்பி முடித்தபோது மணி ஒன்றேகால் ஆகிவிட்டது.
    கடகடவென்று பணத்தை கணினியோடு ஒப்பிட்டுப் பார்த்த ராஜி திடுக்கிட்டாள். முழுதாக ஐம்பதாயிரம் குறைவதுபோல் தோன்ற கைகால் பதற ஆரம்பித்தது. மேடம்! பேலன்ஸ்டா?" பக்கத்து கவுண்டர் சுரேஷ் கேட்க, பண்ணிக்கிட்டே இருக்கேன்" என்று கூறிய பதிலின் தொனியைக் கேட்டு அனைவரும் எழுந்து வந்துவிட்டனர்.
    [​IMG]

    என்னாச்சு? நிதானமாப் பாருங்க" என்று ஆளாளுக்கு சொல்ல, மனம் எங்காவது தவறு செய்தோமா? என்று யோசிக்க ஆரம்பித்தது.
    எக்ஸ்சேஞ் கொடுத்தீங்களா?"
    நிறைய போச்சு சிஸ்டத்தில, அப்பப்ப மாத்தலை ரொம்ப கூட்டமா இருந்தது."
    அதுதான் தப்பு."
    வவுச்சர் பாருங்க" என்றார் அக்கவுண்டன்ட்.
    மேடம்! உங்களைப் பார்க்க ஆராயின்னு ஒரு அம்மா வந்திருக்கு" என்றார் கார்ட் செந்தில்.
    எட்டிப் பார்த்த ராஜிக்கு அங்கிருந்தே கையாட்டினாள் ஆராயி.
    பணம் பத்தலைன்னா வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றதால் வந்துவிட்டாள் போல என்று நினைத்த ராஜிக்கு கோபமாக வந்தது.
    மேடம்! எந்த டினாமினேஷன் ஷார்ட்னு எக்ஸாக்டா தெரிஞ்சா கண்டு பிடிச்சிடலாம்" என்றான் சுரேஷ்.
    அதுதான் சரியா தெரியலையே..." என்று முணுமுணுத்தாள் ராஜி.
    மணி 1.45 ஆகியது. இன்னமும் எதுவும் கிடைக்கவில்லை. ராஜியின் ஃபோன் அடித்தது. ஹரிதான். ‘பணம் எடுத் திட்டியா ராஜி? நாளைக்கு பிரியா வீட்டிற்கு போலாம்தானே?’ என்றான்.
    ம்... எடுத்தேன்" சொல்லிவிட்டு அலைபேசியை வைத்தவளுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது.
    மேடம்! அந்த அம்மா உங்களைப் பார்க்காமல் போக மாட்டேன்னு உட்கார்ந்திருக்காங்க" என்றார் செந்தில்.
    அனுப்புங்க."
    உள்ளே அரை ஓட்டமாக ஓடிவந்த ஆராயியைப் பார்த்து, ஏன் இப்படி நச்சறிக்கறீங்க? திரும்ப பணம் எடுக்கணுமா? மணி என்ன தெரியுமா?" என்று படபடத்தாள்.
    தாயி! நீ குடுத்தப் பாரு..." என்ற ஆராயி, பாஸ் புக்கோடு பணத்தை எடுத்து நீட்டினாள்.
    கடவுளே!" இதயம் வாய்க்கு வந்தது போல் ஆனது ராஜிக்கு.
    ஆராயி கையில் இருந்தது ஆயிரம் ரூபாய் கட்டு. தான் பேசிக்கொண்டே ஐநூறு ரூபாய்க்குப் பதிலாக ஆயிரம் ரூபாய் கட்டு கொடுத்துவிட்டது விளங்கியது. நீ பாட்டுக்கு கொடுத்திட்டாயா. நான் நேரா போயி ஆஸ்பத்திரில கொடுத்தப்பதான் தெரிஞ்சது மாத்தி குடுத்துட்டன்னு. அய்யோ, பணம் கம்மி யானா நீ என்ன பண்ணுவேன்னுதான் டாக்டரம் மாட்ட அரை அவர்ல வரேன்னு சொல்லி எடுத்துட்டு ஓடியாந்தேன். காலைலயிருந்து ஒரு டீ கூட சாப்பிடலை தெரியுமா. இதை வெச்சுட்டு என் பணத்தக் கொடு. உடனே கொண்டுட்டு போய் கட்டணும்" வெள்ளந்தியாய் கூறிய ஆராயி, ராஜிக்கு இறந்துபோன அவள் தாயைப் போலத் தோன்றிய கணத்தில், அவள் கண்களை நீர் மறைத்தது.
    ==============================================



    [TABLE]
    [TR]
    [TH]ஆராயினுடைய மனசு நீல நிறம் போலிருக்கு. அதனால் தான் அவள் மனசு உண்மையை, நம்பகத்தன்மையை, பொறுப்பாக இருக்கும் தன்மையை உறுதிபடுத்துவதாய் உள்ளது. இம்மாதிரி மனுஷிகள்/மனுஷர்கள் நூற்றில் 10 விழுக்காடுகளுக்கு உள்ளே தான்! Just...இது என் ஹேஷ்யம் தான். காமெண்ட்டுகள் வரவேற்கப்படுகின்றன.[/TH]
    [/TR]
    [/TABLE]






    [TABLE]
    [TR]
    [TH]
    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.


    "பாரதிமணியன்"[/TH]
    [/TR]
    [/TABLE]





     
  2. yazhinibama

    yazhinibama New IL'ite

    Messages:
    8
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Re: மனசுக்கென்ன நிறம்...[மங்கையர் மலரில் வெளி&

    Good story.....
     

Share This Page