1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Dec 6, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    * தலைப்புச் செய்தி - நினைவூட்ட :

    இது என்னுடைய முதல் குறுங்கதை.... படித்து உங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள் உறவுகளே ! [​IMG]...படிப்பவர்கள் குறைந்த பக்ஷம் ஒரு ஸ்மைலியாவது பதிலாக போடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.....[​IMG]

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா [​IMG]

    காலை இல் எழுந்திருக்கும்பொழுதே எங்கோ மெல்லிய அழுகுரல்களும் பேச்சுக்குரல்களும் கேட்டது. ஆனால் கண்களைத் திறந்ததுமே அந்த சப்தங்கள் மெல்ல மெல்ல அடங்கிவிட்டன. ஆழ்ந்து சுவாசித்தேன், இதுவரை நான் நுகர்ந்து அறியாத சுகந்தம். ஆழ்ந்து மூச்சை இழுத்து, அந்த வாசத்தை நன்கு நுகர்ந்து சுவாசத்தை வெளியே விட்டேன். ஆனாலும் என்னால் அது இன்ன வாசனை என்று சொல்லத்தெரியவில்லை. அதே போல குளிரும் அல்லாத வெயிலும் அல்லாத இதமான ஒருவித தட்பவெட்ப நிலை என்னை சூழ்ந்து இருந்ததை என்னால் உணரமுடிந்தது.

    நான் எங்கேயோ போவது போல இருந்தது. போவது என்று கூட சொல்ல முடியாது, பறப்பது போலிருந்தது. இது கனவு என்றே எண்ணுகிறேன். நானாவது பறப்பதாவது. போன வாரம் என்னவரின் சதாபிஷேகத்தின் போது நடக்கவே நான் சிரமப்பட்டேன். மேடை இல் நாற்காலி தான் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டேன். இதோ நேற்று நடந்த என் பேரனின் ஸீமந்ததிற்கும் என்னால் ஓடியாடி வேலை செய்யமுடியவில்லை. உட்கார்ந்த படிக்கு ஆட்களை ஏவிக்கொண்டிருந்தேன். நானாவது பறப்பதாவது. ஆனாலும் அப்படித்தான் தோன்றியது. கண்களை நன்கு திறந்து பார்த்தேன். என்னுடைய இரண்டு பக்கத்திலும் மிக மிக அழகிய பெண்கள், வெள்ளை வெளேர் என்கிற மிக அழகிய உடையுடன், கருணை வழியும் கண்களுடன் என்னை பார்த்து புன்சிரிப்பு சிரித்தனர். என் கைகளை அவர்கள் ஆதுரத்துடன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

    ஓ, இவர்கள் பிடித்துக்கொண்டிருப்பதால் தான் என்னால் வலி இல்லாமல் நடக்க முடிகிறதா... இல்லை இல்லை பறக்க முடிகிறதா என்று எண்ணிக் கொண்டேன். இவர்கள் யாராக இருக்கும் ...கேட்கலாமா என்று நினைத்தேன். ஆனால் சுற்றுப்புறத்தில் நான் பார்த்த காட்சிகள் என்னை கேள்விகேட்க விடாமல் என் வாயை அடைத்து விட்டன. ஆம் அத்தனை அழகான கண் கவர் காட்சிகள். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என மரங்கள். நான் முன்பின் பார்த்திராத பூ மற்றும் காய்கனி வர்க்கங்கள். ஆச்சர்யமான பாதை. ஆனால் வெகு நீளமான பாதை.

    பறப்பது என்று சொல்கிறேனே தவிர, அது வான் வெளி இல் பறப்பது போல தோன்றவில்லை. கொஞ்சமும் சிரமம் இல்லாமல் நகர்வது அல்லது ஊர்ந்து செல்வது போல இருந்தது எனக்கு. நன்றாக பராக்கு பார்த்துக்கொண்டே அவர்களுடன் சென்றேன். என் வீட்டு மனிதர்கள் ஏன் என்னுடன் இல்லை என்கிற பிரக்ஞையே எனக்கு அப்பொழுது இல்லை. ஏதோ பிகினிக் செல்லும் குழந்தை யைப் போல குதூகலமான மனத்துடன் சென்றுகொண்டிருந்தேன் அவர்களுடன். முடிவில்லாத பயணமாக அது இருந்தாலும் அதில் எனக்கு சம்மதமே என்று தோன்றியது . அத்தனை அழகான வழி அது.

    தொடரும்....
     
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    என்றாலும் முடிவில்லாதது எதுவுமே இல்லையே. ஏதாவது ஒன்று ஆரம்பித்தால் அது எப்பொழுதாவது முடித்து தானே ஆகவேண்டும்.அது போல எங்கள் பயணமும் ஒருமுடிவுக்கு வந்தது. வானளாவிய கோபுரங்களைக் கொண்ட ஒரு வினோத நரகத்துக்குள் நாங்கள் வந்தோம். அந்த இரண்டு அழகிகளும் ஒரு முறுவலுடன் என்னை ஒரு மாளிகை இன் வாசலில் விட்டு விட்டு கண் இமைக்கும் நேரத்தில் சென்றுவிட்டார்கள். நான் ஒரு நன்றி சொல்லக் கூட நேரம் தரவில்லை அவர்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இது யார் வீடோ என்னவோ, உள்ளே போகலாமா வேணாமா என்று ஒருக்ஷணம் தான் யோசித்திருப்பேன். அதற்குள் உள்ளிருந்து வேறு இரண்டு அழகிகள் ஓடிவந்து என் கைகளை பிடித்து உள்ளே அழைத்து சென்றார்கள்.

    அங்கு விசாலமான ஹால் இருந்தது. அழகழகான நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. ஒரு 100 நாற்காலிகள் இருக்கும். எல்லாம் ஒரு மேடையை நோக்கி போடப்பட்டு இருந்தன. மேடை மேல் மிகவும் சிங்காரமாய் ஒரு அழகி அமர்ந்து இருந்தார். அவர் வரை தரை இல் ரத்தினைக் கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. நிறைய பேர் இந்த நாற்காலிகளில் அமர்ந்து இருந்தனர். அந்த அழகிகள் என்னையும் அமரச்செய்து விட்டு நகர்ந்தனர். நானும் அமைதியாக அமர்ந்து கொண்டேன். கேள்வி எதுவும் கேட்கத்தோன்றவில்லை. ஏதோ மெஸிமரைஸ் ஆனது போல இருந்தேன். அந்த மேடை இல் இருந்த அழகி யாரை நோக்குகிறாரோ அவர் மட்டும் எழுந்து அவரருகில் சென்றார். அவர் சொல்வதை இவர் கேட்டுக்கொண்டார் பிறகு உள் அறைக்கு அழைத்து செல்லப்பட்டார். போனவர்கள் யாரும் மீண்டும் இதேவழி இல் திரும்ப வரவில்லை. பாஸ்போர்ட் ஆபீஸ் போல இருந்தது இந்த நடை முறை.

    மேலும் ஒரு வினோதமான நடை முறையையும் அங்கு நான் கவனித்தேன். அங்கு ஆண் பெண் குழந்தைகள் என்று எல்லோருமே கலந்து இருந்தார்கள் என்றாலும் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. மிக மிக நிசப்தமாக இருந்ததால் இங்கும் என்னால் அந்த தேவ கானத்தை கேட்க முடிந்த்தது. மிக மிக மெல்லிய சப்தத்தில் கேட்டது அந்த இசை எனக்கு. அடுத்த ஆச்சர்யம், அங்கு உலவும் நிறைய அழகிகள் வேறு வேறு மாதிரி உடைகளை உடுத்திக் கொண்டு இருந்தார்கள். அதில் சிவப்பு உடை அணிந்த பெண்கள், இங்கு அமர்ந்து இருக்கும் சிலருக்கு சின்ன சின்ன கிண்ணிகளில் உணவு - ஸ்னாக்ஸ்? மற்றும் சிலருக்கு தம்ளரில் ஏதோ திரவம் மற்றும் சிலருக்கு ஒரு தட்டில் விதவிதமான உணவு என்று கொண்டு வந்து கொடுத்தார்கள். எனக்கு அது புரியவில்லை, இது என்ன இத்தனை பேர் இருக்கும்பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று தருகிறார்கள் அதுவும் சிலருக்கு இல்லை. பாவம் அவர்களை பார்த்தால் பட்டினி போல் தெரிகிறது. அவர்களை பார்க்க எனக்கு மிகவும் பாவமாக இருந்தது. ஆனால் அவர்கள் யாரும் இவர்களை கவனித்ததாகவே தெரியவில்லை. மேலும் இவர்களைக் கூப்பிடவும் இல்லை .

    தொடரும் ....
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இதையெல்லாம் நான் மௌனமாகவே பார்த்துக் கொண்டு இருந்தேன். எனக்கு இப்பொழுது தான் நினைவுக்கு வந்தது காலை இல் இருந்து நான் எதுவுமே குடிக்கவோ சாப்பிடவோ இல்லை என்று. எனக்கு ஏதாவது குடித்தால் தேவலை என்று நினைத்த மாத்திரத்தில் ஒரு பெண் அழகி (ஆண் அழகர்களும் அங்கு இருந்தார்கள் ) என்னருகில் வந்தாள்.அவள் கை இல் ஒரு உணவு தட்டு இருந்தது, அதில் ஏதோ கொண்டுவந்தாள் . சரி, எனக்குத்தான் தரப்போகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தபொழுது, அவள் என்னைத்தாண்டி சென்று மற்றும் ஒரு பெண்ணிடம் அதைக் கொடுத்தாள். அதை வைத்துக்கொண்டு சாப்பிட மேஜிக்கால் ஒரு சின்ன டேபிளும் வரவழைத்துக் கொடுத்தாள் .

    எனக்கான உணவு அதில்லை என்றதில் எனக்கு ஏமாற்றமே. அதை அந்தப் பெண்ணும் கவனித்து சிரித்தது போல இருந்தது. அதே நேரத்தில் எனக்கு அவளை எங்கோ பார்த்தது போல இருந்தது. யார் இவள், எங்கே பார்த்தோம் இவளை என்று நினைத்ததுமே எனக்கு அவள் யார் என்று புரிந்து விட்டது. 'ஹே , நீயா' என்று நான் குரல் எழுப்புமுன், அந்த பெண்ணழகி என்னை நோக்கி வந்து ஒரு சின்ன கிண்ணி மற்றும் தம்ளரில் குடிக்கவும் ஏதோ கொடுத்தாள். அவைகள் எனக்கு மிகவும் தேவையாக இருந்தது அந்த நேரத்திற்கு. என்ன வென்று கூட பார்க்காமல் முதலில் தம்ளரில் இருந்ததைக் குடித்து என் தாகத்தை தணித்துக் கொண்டேன். பிறகு அந்த கிண்ணி இல் இருந்ததை சாப்பிட்டேன். பிறகு எனக்கு கொஞ்சம் தூரத்தில் இருந்த அந்த பெண்மணியைப் பார்த்தேன்.

    அவள் இன்னும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் .....இவ..இவ....எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் பெண்மணி....இவ இங்கே எப்படி...போனவாரம் தான் இவ செத்து போய்விட்டாளே ....என் எண்ணம் பூரணமாக முடியும் முன்னே ஒரு உண்மை எனக்கு உரைத்தது..... ஐயோ நானும் செத்துட்டேனா ???

    தொடரும்......
     
    Thyagarajan likes this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,755
    Likes Received:
    12,577
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:பேய் பேயை தொடரும் தொடர் தொடரட்டும்.
    எளிய நடை புதிய கோணம் மர்மம் வளரட்டும்
     
    krishnaamma likes this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஹ...ஹா...ஹா....இதோ தொடருகிறேன் அண்ணா :)
     
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நேற்று கட்டின வாழைமரங்கள் கூட வாட வில்லை அந்த பங்களாவில். அதில் அழுகை சத்தம் கேட்டது காலை இல். அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூடி விட்டனர். போன ஒரு வாரமாக மிகவும் குதூகலத்துடன் இருந்த அந்த பங்களா இன்று சோகமயமாக மாறிவிட்டது. போன வாரம் தான் அந்த வீட்டு மாமா மாமிக்கு சதாபிஷேகம் நடந்தது. இதோ இந்த வாரம் அவங்க பேரனுக்கு ஸீமந்தம். ஒருவாரம் வந்த உறவுகள் திரும்பி ஊருக்கு போகாமல் இங்கு தங்கி இருந்து ஸீமந்தம் கொண்டாடினார்கள். அந்த சந்தோஷத்துடன் இன்று முதல் ஒவ்வொருவராககிளம்ப இருந்தார்கள். ஆனால் அதற்குள் இப்படி.

    இரவு எல்லோரும் பேசிவிட்டு படுக்க வெகு நேரம் ஆனபடியால் காலை இல் கொஞ்சம் நேரம் கழித்தது தான் விழிப்பு தட்டி இருக்கு ரங்கராஜன் மாமாவிற்கு. எப்பொழுதும் அவருக்கு முன்பே விழித்துவிடும் மாமி அன்று பக்கத்தில் படுத்திருந்ததைப் பார்த்து ஏதோ இன்று அசந்து தூங்குகிறாள் என்று நினைத்து மாமியை தொந்தரவு செய்யாமல் இவர் சத்தம் போடாமல் அறையை விட்டு எழுந்து வந்து விட்டார். இவர் தன் காலை கடன்களை முடித்துவிட்டு வந்த போதும் மாமி எழுந்திருக்க வில்லை என்று பார்த்ததும் தான் அவர்களை எழுப்ப குரல் கொடுத்திருக்கிறார். மாமி எழுந்திருக்க வில்லை. தூக்கத்திலேயே போய்விட்டாள் புண்ணியவதி. என்ன, அவள் ஆசைப்பட்டது போல பேரனுக்கு பிறக்கும் குழந்தையை பார்த்துவிட்டால், மூன்று தலை முறையை பார்த்தது போல் ஆகி இருக்கும்.
    பேரன் சந்தான கோபாலனின் மனைவி மதுவந்திக்கு இரட்டைக் குழந்தைகள் என்று ஸ்கேன் நில் தெரிந்ததுமே ஒன்றாவது ஆண்குழந்தையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் மாமி. அது ஆணாக இருந்தால் இவர்கள் அதாவது மாமாவும் மாமியும் கனகாபிஷேகம் செய்து கொள்ளும் பாக்யம் பெறுவார்கள். அதுவும் மாமி இன் அபிலாஷைகளில் ஒன்றாக இருந்தது. எல்லாவற்றிக்கும் மேலானது ஒன்று நடக்காமல் போய்விட்டது, அது தான் மாமி மிகவும் ஆசையாக பிறக்கப் போகும் தன் கொள்ளு பேரக்குழந்தைக்கு ஆசை ஆசையாக செய்து வைத்துள்ள அரைஞாண் கயிறுகள். அதை அந்த குழந்தைகளுக்கு அணிவித்து பார்க்காமலே போய்விட்டாள் என்று சொல்லி சொல்லி மாமா மருகி விட்டார்.

    தொடரும்...
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    எல்லோரும் தான் வாங்கி வைக்கிறார்கள், இதில் என்ன அதிசயம் என்று நீங்கள் நினைக்கலாம். அது அதிசயம்தான். ஏன் என்றால், அது ஒரு ஜோடி கொலுசு. தங்க கொலுசு. மாமியும் மாமாவும் துபாய் இல் இருந்த பொழுது மிகவும் ஆசையாக வாங்கியது. ஆனால் தங்க கொலுசு போடும் வழக்கம் நமக்கு இல்லாததால் அப்படியே உள்ளே வைத்துவிட்டார். பேரன் பிறந்த பொழுது அந்த ஜோடிக்கொலுசை பிரிக்க மனம் இல்லாமல் அப்படியே வைத்தது விட்டார். இப்பொழுது தன் பேரன் மனைவி இரட்டைகொழந்தைகள் பெறப்போகிறாள் என்று அறிந்தவுடன், மிகவும் ஆர்வமாகிவிட்டார் சுந்தரி மாமி. ஆவலுடன் அந்த நாளை எதிர்நோக்கி இருந்தார். அதற்குள் தான் இப்படி ஆகிவிட்டது. மாமாவால் தாங்கவே முடியவில்லை.

    மாமி மாமாவிற்கு பெண் குழந்தைகள் இல்லை ஒரே பையன் தான். அவனுக்கு ஒரு பெண்ணும் பிள்ளையும் உண்டு. பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள். பையனுக்கு போன வருடம் தான் கல்யாணம் ஆனது, இதோ நிறைமாத கர்பிணி அவன் மனைவி. வந்த நாள் முதலே மது பாட்டி யுடன் ஒட்டிக்கொண்டுவிட்டாள். அவளைத் தேற்றுவது தான் மிகவும் கஷ்டமாகிப் போனது இவர்களுக்கு. நிறைமாத கர்பத்துடன் அழுதவாறு இருந்தாள். கவலைப்படாதே மது, பாட்டி இன் முழு ஆசீர்வாதம் உனக்கும் உன் குழந்தைகளுக்கும் உண்டு. அழுகையை நிறுத்து, ஏதாவது சாப்பிடு என்று எல்லோரும்சொல்லி, அவளைத் தேற்றி அவளின் அழுகையை நிறுத்தப் பார்த்தார்கள்.

    மாமி இன் ஒரே பிள்ளை இன் நிலைமையும் பார்க்க சகிக்கவில்லை. மாமாவாவது புலம்பி விட்டார். பாவம் இந்த பிள்ளை, அப்படியே உறைந்து போய்விட்டான். அவன் கொஞ்சம் அம்மாக் கொண்டு. அவனுக்கு உலகமே அம்மா தான். மாமியும் அப்படித்தான் இருந்தார். மாமா எப்பவும் அலுவலகம் என்றே இருப்பார், எனவே அம்மாவுக்கும் பிள்ளைக்கும் மிகவும் ஓட்டுதல் அதிகம். மருமகள் வந்ததும் இது ஒரு சிக்கல் ஆக மாறிவிடக்கூடாது என்பதில் மாமி மிகவும் கவனமாக இருந்தார். அதில் வெற்றியும் கண்டார். வந்த மருமகளும் சும்மா சொல்லக்கூடாது அவள் பங்கை செவ்வனே செய்தாள்.

    அவள் தான் இப்பொழுது கணவனின் தோளோடு தோள் நின்று, அவனைத் தேற்றி கொண்டுவந்தாள். ' நீங்களே இப்படியென்றால் , அப்பாவை எப்படித் தேற்றுவது யார் தேற்றுவது ' என்று பேசி தெளிவு படுத்தினாள்.

    ம்ம்.. என்னதான் அழுது புரண்டாலும் போனவர் திரும்ப வருவதில்லை. எல்லோரும் ஒருவாறாக மனதை தேற்றிக்கொண்டு மேற்கொண்டு ஆகவேண்டியதை பார்க்க ஆரம்பித்தார்கள். உறவுகள் எல்லோருமே அருகே இருந்ததால் சிரமம் எதுவுமே யாருக்குமே இல்லை. மாமி 'ஜாம் ஜாம்' என்று தன் கடைசி ஊர்வலத்தை துவங்கிவிட்டார். கல்யாண சாவு என்பார்களே அப்படி போய் சேர்ந்தார். மேற்கொண்டு ஆகவேண்டியவைகளை வாத்யார் மாமா விளக்கிக் கொண்டு இருந்தார். எந்த குறையும் இல்லாமல் 13 நாள் காரியங்கள் நடக்கவேண்டும் என்று ரங்கராஜன் மாமா கறாராக சொல்லிவிட்டார். ஸ்வர்ண தானம், வெள்ளி தானம், கோதானம் என எல்லாமே ஏற்பாடு செய்தார்கள்.

    இங்கு பூ லோகத்தில் நிலைமை இப்படி இருக்க மேல் லோகத்தில் மாமி இன் நிலையை பார்க்கலாம் வாருங்கள். மாமியே சொல்வார் பாருங்கள்.

    தொடரும்.......
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    @Thyagarajan 'ஈஸ்வர ஸங்கல்பம்' கதை முடித்துவிட்டேன் அண்ணா... இன்னும் நீங்கள் படிக்கவில்லையா?...பதில் எதும் போடவில்லையே....[​IMG]
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஒரு சில நிமிடங்களுக்கு எதுவுமே ஓடவில்லை எனக்கு. கொஞ்சம் வருத்தமாக இருந்தது. சென்ற ஒருவாரமாக எல்லோருடனும் மிகவும் மகிழ்ச்சியாக கழித்தாகிவிட்டது. அதில் ஒரு குறையும் இல்லை. ஆனால் அந்த கொலுசுகளை என் கையால் குழந்தைகளுக்கு போட்டு விட்டிருப்பேன், கனகாபிஷேகம் செய்து கொண்டு இருப்பேன்...ஹூம்...போகட்டும் ஒரு வார்த்தை எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு வந்திருக்கலாம். என்றாலும், படுத்து எல்லோரையும் சிரமப்படுத்தாமல் சுமங்கலியாக இங்கு வந்து சேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி. என் வேண்டுதலுக்கு பெருமாள் செவி சாய்த்ததில் பரம திருப்தி எனக்கு. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கோவிந்தா என்று கையெடுத்து கும்பிட்டேன்.

    அவர்கள் அனைவரும் நலமுடன் வாழ அனுகிரகம் செய் கோவிந்தா. என்னுடைய பிரிவைத்தாங்கிக்கொள்ள நல்ல மனோதிடத்தை அவர்களுக்கு அருள் என்று வேண்டிக்கொண்டேன். வேறு ஒன்றும் செய்ய இயலாத நிலை இல் இருக்கிறேன் நான்.
    எத்தனை நாட்கள் வாழ்ந்து விட்டு வந்தாலும், ஏதாவது ஆசை விட்டுத்தான் போய் இருக்கும்...அதனால் எத்தனை சந்தோஷமாய் இருந்து விட்டு வந்தோமோ அத்தனை நிம்மதி என்று மன அமைதி கொள்ள வேண்டும் என புரிந்து கொண்டேன்.

    இந்த நேரத்திற்குள் ஒரு 7 - 8 தடவைகள் எனக்கு அந்த பெண், சரி அது தான் செத்தாச்சே, இப்பொழுது புரிந்தது அவர்கள் எல்லோரும் தேவதைகள் என்று. வெய்ட் வெய்ட் , தேவதைகள் வந்து…… எம கிங்கரர்கள் வருவதற்கு பதில் என்னை அழைக்க தேவதைகள் வந்தார்கள் என்றால்.....வாவ் சரி...சரி, நானும் ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்து இருக்கிறேன் போல இருக்கிறது. எனக்கு சந்தோஷத்தில் ஆடவேண்டும் போல் இருந்தது.

    ம்ம்.. என்ன சொல்ல வந்தேன் என்றால், எனக்கு தாகமோ பசியோ வருகிறது என்று நான் உணரும் பொழுது, அந்த தேவதை ஒரு புன்னகையுடன் எனக்கு உணவளித்தாள்... எப்படி என்று எனக்கு புரியவில்லை. இத்தனை நேரம் எனக்கு ஸ்னாக்ஸ் தந்தவள் இந்த முறை ஒரு தட்டு நிறைய உணவுவகைகளைக் கொண்டுவந்து கொடுத்தாள். அந்த பெண்ணுக்கு முன்பு தந்தாளே அப்படி.ஹாங்...இப்பொழுது தான் நான் அந்தப் பெண்மணி இன் நினைவு வந்து திரும்பிப்பார்க்கிறேன்... அவர்களை காணவில்லை... எழுந்து போய்விட்டார் போலும்...நான் என் நினைவுகளில் மூழ்கி இருக்கும்பொழுது அவர்கள் போய்விட்டிருக்க வேண்டும்.ம்ம்.. சரி எனக்கு என்ன உணவு வந்துள்ளது என்று பார்த்தேன்.

    அதைத்திறந்ததுமே தெரிந்து விட்டது இது எதிலுமே உப்பு இல்லை என்று.அடப்பாவிகளா, நான் எத்தனை அருமை அருமையாக என் குடும்பத்துக்கு சமைத்து போட்டேன், எத்தனை பேருக்கு சமையல் சொல்லிக் கொடுத்துள்ளேன், எனக்கு நீங்க கொடுக்கும் மரியாதை இது தானா என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அதைப் பற்றி எல்லாம் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ. இது இவர்கள் வழக்கமாக இருக்கலாம். ஏதோ பசி நேரத்திற்கு நான் சொல்லாமலே கொண்டுவந்து இருக்கும் இடத்தில் தருகிறார்கள் அதுவும் அன்பாக...இதை நாம் குறை சொல்லக் கூடாது என்று எண்ணியவளாக அதை உண்ண ஆரம்பித்தேன்.

    தவிர்க்க முடியாமல், மனதில் உப்பிலி அப்பன் கோவில் நினைவுக்கு வந்தது. அன்பான இளம் மனைவி உப்பு இல்லாமல் சமைத்ததை அன்பாக உண்ட பெருமாள் இல்லையா அவர்...மனதார அவரை வணங்கினேன்.... இந்த உணவும் அப்படித்தான் , எனக்கு அன்பாக, மனதார ஒருவர் தரும் பொழுது அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் சிறந்தது என்று நினைத்தேன்.... மண்டைக்குள் ஒரு பிளாஷ்...அடக்கடவுளே, இதில் உள்ள அன்பு இந்த தேவதை இன் அன்பு இல்லை, என் கணவருடையது என் மகனுடையது என்று இந்த மர மண்டைக்குப் புரிந்தது .

    என்ன இது, காலை இல் இருந்து நான் ஏன் இப்படி இருக்கிறேன்...எதிலும் ரொம்ப ஷார்ப் என்று பேர் வாங்கிய நானா இப்படி...என்ன ஆச்சு எனக்கு... கொஞ்சம் அமைதியாக யோசிப்போம்... என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு, கோர்வையாக யோசித்தேன்.....

    அடக்கடவுளே...இது என் பத்து சாப்பாடு.....

    தொடரும்......
     
    Thyagarajan likes this.

Share This Page