1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மதங்களின் மதம்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Jun 23, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,808
    Likes Received:
    12,642
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: மதங்களின் மதம் :hello:
    ஏன்டா சங்கி - நீ எல்லா தமிழ் இலக்கியங்களிலும் இந்துமதம் பற்றிய குறிப்புகள் இருக்கு னு சொன்னியாமே?

    ஆமாடா சொன்னேன் அதுக்கு என்ன இப்போ?

    திருக்குறளில் இந்துமதம் பற்றி இருக்காடா?
    ஆமா இருக்குடா.
    "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி"
    "மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் (திருமால்)
    தாஅயது எல்லாம் ஒருங்கு"
    புறநானூற்றில் இருக்காடா???
    ஆமா இருக்குடா.
    "தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
    அணங்குஉடை முருகன் கோட்டத்துக் கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே"
    அகநானூற்றில் இருக்காடா?
    "வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த பல் வீஷ் ஆலம் போல
    ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே"
    பதிற்றுப்பத்தில் இருக்காடா?
    ஆமா இருக்குடா.
    மாய_வண்ணனை (திருமால்) மனன் உறப் பெற்று, அவற்கு ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து,
    புரோசு மயக்கி,
    கலித்தொகையில் இருக்காடா?
    ஆமா இருக்குடா.
    "இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன் (சிவன்) உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக, ஐ இரு தலையின் அரக்கர் கோமான் (இராவணன்)"
    ஐங்குறுநூற்றில் இருக்காடா?
    ஆமா இருக்குடா.
    "நீல மேனி (சிவன்) வாலிழைபாகத் தொருவ னிருதா ணிழற்கீழ் மூவகை யுலகு முகிழ்த்தன முறையே"
    பரிபாடலில் இருக்காடா?
    ஆமா இருக்குடா.
    "பூவினுள் பிறந்தோன் (பிரம்மா) நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப"
    க்ஷமுல்லைப்பாட்டில் இருக்காடா?
    ஆமா இருக்குடா.
    "நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போல"
    நற்றிணையில் இருக்காடா?
    ஆமா இருக்குடா.
    "மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன் வாலியோன் அன்ன வயங்குவெள் ளருவி"
    சிலப்பதிகாரத்தில் இருக்காடா?
    ஆமா இருக்குடா.
    "நாராயணா என்னாத நாவென்ன நாவே,கரியவனைக் காணாத கண் என்ன எண்ணே"

    (எதைக்கேட்டாலும் இருக்குனு சொல்லி ஆதாரமும் குடுக்குறானேஇவன எப்படி மடக்குறது?)

    தமிழின் எதாவது ஒரு இலக்கண நூலிலாவது இந்துமதம் பற்றிய குறிப்பு இருக்காடா?

    ஆமா இருக்குடா. உனக்கு எந்த இலக்கண நூலிலிருந்து வேணும்னு சொல்லுடா.

    தொல்காப்பியத்தில் இருக்காடா?
    ஆமா இருக்குடா.
    "மாயோன் மேய காடுறை யுலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே"

    என்ன சார்? தொல்காப்பியத்துலயும் இருக்கா?

    நன்னூலில் இருக்கா சார்?
    ஆமா இருக்குடா.
    "பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த நான்முகன் தொழுதுநன் கியம்புவ எழுத்தே"

    புறப்பொருள் வெண்பா மாலையில் இருக்கா சார்?
    ஏன்டா பம்முற? புறப்பொருள் வெண்பா மாலையிலும் இருக்குடா.

    "நீடோளான் வென்றிகொள்கென நிறைமண்டை வலனுயரிக்
    கூடாரைப் புறங்காணுங் கொற்றவை நிலையுரைத்தன்று"

    ஓ...! தமிழின் இலக்கண நூல்களிலும் இந்துமதம் சார்ந்த கருத்துகள் இருக்கா.? இது தெரியாம உங்கள தப்பா பேசிட்டேன். சார.

    - பா இந்துவன்
    22.06.2021
    பா இந்துவன் பதிவு
     
    vidhyalakshmid likes this.
    Loading...

  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,664
    Likes Received:
    1,787
    Trophy Points:
    325
    Gender:
    Female

Share This Page