1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

*பொன் பொருளை விட மதிப்பு மிக்கது மகிழ்ச்சி.

Discussion in 'Interesting Shares' started by Ragavisang, Jun 27, 2023.

  1. Ragavisang

    Ragavisang Gold IL'ite

    Messages:
    357
    Likes Received:
    442
    Trophy Points:
    123
    Gender:
    Female
    *பொன் பொருளை விட மதிப்பு மிக்கது மகிழ்ச்சி. ஏனெனில் அதை யாரும் உங்களுக்கு கடனாய்க் கொடுக்க மாட்டார்கள்.*

    *மகிழ்ச்சியாய் வாழ ஆயிரம் வழி இருக்கிறது. ஆனால் கவலையின்றி வாழ மூன்று வழி தான்.*

    *போவது போகட்டும், வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று இருப்பது தான்.*

    *காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி சிரிக்க பழகிக்கொண்டால் எந்த காயமும் பெரிதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.*

    *எத்தனை முறை உங்கள் சந்தோஷங்கள் பறிக்கப்பட்டாலும், பூத்துக் கொண்டே இருங்கள். பூக்களைப் போல.*
    *அறிவு என்பது படிப்பறிவைச் சார்ந்து இல்லை. நமக்கு கிடைத்த அனுபவத்தையும், சூழ்நிலையும் வைத்து எதிர்காலத்தை கையாளும் தன்மைக்குப் பெயர்தான் அறிவாகும்.*

    *சில சமயங்களில் அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்வதை விட, நீங்கள் எதை செய்யும் முன்னரும் அதனால் கிடைக்க பெறும் நன்மையையும் தீமையையும் சிந்தனை செய்தீர்கள் என்றால் உங்களுக்கான சிறந்த முடிவை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.*

    *தோல்வியும் துன்பமும் உங்களிடம் வரும் போது தனியாக வருவதில்லை.. கூடவே "மனவலிமையையும்" அழைத்து வருகின்றது என்பதை மறவாதீர்கள்.*

    *சரியாக வாழ கற்றுக் கொடுக்கின்ற ஒவ்வொரு வலியும் மிகச்சிறந்த ஆசானே.*

    *#வாழ்த்துகள்.*

    *#வாழ்க_வளத்துடன்.*
     
    vidhyalakshmid and Thyagarajan like this.

Share This Page