1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புறத்தோற்றம் நம்பாதே

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Apr 9, 2024.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,781
    Likes Received:
    12,613
    Trophy Points:
    615
    Gender:
    Male
    புறத்தோற்றம்
    நம்பாதே

    ஒருவரின் தோற்றம் மற்றும் நிலையை வைத்து அவர் சொல்ல வரும் நல்ல விசயங்களை இழந்து விடாதீர்கள்... அது எங்கேனும் உங்களுக்கு வாழ்க்கையில் உதவலாம். அடுத்தவர் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்கள்.. அது உங்கள் எண்ணங்கள் உயர வழி வகுக்கும்...

    வாழ்க்கை மிக அழகானது... அதில் கோபம் குரோதம் பிடிவாதம் போன்றவற்றால் நிரப்பி அதன் பொலிவைக் கெடுத்து இன்னலில் சிக்கி தவிக்க வேண்டாமே... செல்லும் வழி எங்கும் அன்பினை விதைப்போம்... சொல்லும் மொழியதனில் அன்பினை வளர்ப்போம்...
    (Appearances are always deceptive.)
    ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட..

    சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான்.. அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்..

    அற்புதம் என்றார் மேலாளர்..

    இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை.. உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்..

    முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி..

    காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது..

    காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்..

    இளைஞன் சோர்ந்தான்.. தன்னையே நொந்து கொண்டான்..

    ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்..

    வாயிலின் மேற்பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்.. பின்னர் சரிசெய்யலாம் என்றார் மேலாளர்..

    காரை கஷ்டப்பட்டு இருக்கும் வாயில் வழியே எடுத்து செல்லலாம்.. மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரிசெய்யலாம் என்றார் பெயிண்டர்..

    முதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை..
    "ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா? அனுமதி உண்டா?" என்றார்..

    அனைவருக்கும் ஆச்சரியம்.. இந்த கிழவன் என்ன சொல்லப்போகிறான் என்று..ம்..ம்..ம்.. சொல்லு.. சொல்லு..

    வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்.. காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக்கொள்ளலாம்..

    அடடே.. எவ்வளவு சுலபமான வழி.. எந்த சேதமும் இன்றி..
     
    vidhyalakshmid likes this.
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,663
    Likes Received:
    1,782
    Trophy Points:
    325
    Gender:
    Female
    We cannot predict who has nimble and sharp intellect based on the Looks!
     
    Thyagarajan likes this.
  3. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,781
    Likes Received:
    12,613
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Indeed. Appearances are always deceptive.
    Sometimes we tend to reject a person just because looks grotesque or of beggar’s description but a while later we readily reverse our judgement.
    The theatre surroundings looked calm. The electronic board was displaying in read “ HOUSEFULL” Karnan main picture might have started after ads. It was night show at theatre Shanthi mount road chennai.
    A beggar approached us. My bosom friend & I shun the beggar attemptimgto move away from him. But then he said calmly “ayya irandu balcony ticket irruku. Vangikeirela?” My friend told him that we had only three rupees. He said alright . Here the tickets. Our joy knew no bound. We enjoyed and delighted with our luck.
     

Share This Page