1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புத்தம் புதிய இளவேனில்!

Discussion in 'Stories in Regional Languages' started by yams, May 18, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    part-3:

    அங்கு ரத்த தான முகாமில் ஆட்கள் மிகவும் குறைவாய் இருந்தார்கள்!
    ரத்தம் கொடுக்க விருப்பம் உள்ளவர்களே சில பேர் தான்! அதிலும் 50 கிலோ எடைக்கு கீழ் இருப்பவர்களை எடுக்க மாட்டார்கள்!
    ரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபின் அமௌன்ட் வேறு குறிப்பிட்ட அளவுக்கு இருக்க வேண்டும் அது இது என்று வடி கட்டினால் வரும் நபர்களில் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்!

    இப்போதுள்ள இளைஞர்கள் எங்கே உடலை கவனிக்கிறார்கள்?
    பேஷன், டைட் அது இது என்று உடலை மெல்லிதாக்குவதிலேயே குறியாய் இருக்கிறார்கள் பின் இந்த மாதிரி சமூக சேவையில் ஆர்வம் இருந்தும் பயன் தான் இல்லாமல் போகிறது!
    உண்மை தான் இப்போது உள்ள இளைஞர்கள் எவ்வளவோ சமூக பற்று மிக்கவர்கள் தான்! ஆனால் உடல் நிலையும் சரியாக பராமரித்து கொண்டால் தானே பிறருக்கு இது போல் உதவ முடியும் என்று நினைக்கும் போதே அவளுக்கு பெருமூச்சு வெளிவந்தது!

    "அப்படி எதை நினைத்து இவ்வளவு நீண்ட மூச்சு?" என்ற குரல் அருகில் கேட்கவும் சற்று தடுமாறி தான் போனாள்!
    ஓர் கம்பீரமான ஆண் குரல் காதருகில் கேட்க எந்த பெண்ணுக்கு தான் கூச்சம் இல்லாமல் இருக்கும்??
    சட்டென விலகியவள் யார் என்று பார்க்கவும் அப்போது தான் அவளுக்கு உண்மையாகவே மூச்சு அடைப்பதாய்!
    என்ன ஒரு கம்பீரம்? அழகாய் மாநிறத்திற்கும் மேலான நிறத்தில் அடர்ந்த மீசையும் அதனடியில் மெல்லிய சிரிப்புமாய் வாழ்நாள் முழுவதும் இந்த அழகு முகத்தை பார்த்து கொண்டே இருக்கலாம் போல் தோன்றவும் தன் நினைவு போகிற திசைய கண்டு அவளுக்குமே அதிர்ச்சியாய்!
    சே!என்ன நான் பார்த்த உடனே ஓர் ஆண்மகனை கண்டு இப்படி எல்லாம் நினைக்கிறேன் என்று தோன்றினாலும் அவளது விழிகள் மட்டும் அவன் முகத்தை விட்டு நகர்வேனா என்று தர்ண செய்தது!
    ஒவ்வொரு பெண்ணுக்குமே பூப்படைந்த காலம் முதல் தன் மணவாளன் இப்படி தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் அறியாமலேயே மனத்திரையில் ஓர் ஓவியம் வரைய படுகிறது!
    அந்த ஓவியத்திற்கு சொந்தமானவனை பார்க்கும் வரை காதல் அவர்கள் காலடியில் தான்! ஆனால் கண்ட பின்னோ அதன் காலடியில் அவர்கள்!
    இப்போது தர்ஷனாவும் அப்படி தன்னுள்ளான ஓர் ஓவியம் கண் முன் தோன்றியதாய் தான் நினைத்தாள்!
    எங்கோ படித்த வரிகள் நினைவில் வந்தது!
    உலகத்தில் காதலிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அதை வெளிபடுத்தாதவர்கள் தான் இருப்பார்கள்! என்று!

    எவ்வளவு நேரம் தான் அப்படி நின்றாலோ? அவன் சொடக்கு போட்டு அவளை கலைக்கும் வரை அதை அறியாள்!
    "என்ன இப்படி பாக்குறீங்க என் முகத்துக்கு பின்னாடி ஏதாவது தெய்வீக ஒளி தெரிகிறதா?? என்று அவன் திரும்பி பார்க்க அந்த குறும்பில் அவளுக்கு சட்டென சிரிப்பு வந்தது!
    பின்னர் தான் அவள் அப்படி பார்த்ததை தானே கிண்டல் செய்கிறான் என்று உரைக்க
    "அது... அது.. வந்து எங்க சொந்தத்துல ஒருத்தர் உங்கள மாதிரி... அதான்...!" என்று மென்று முழுங்கினாள்!
    "அப்படியா??? ஆனா என் சொந்தத்துல இந்த மாதிரி அழகா ஒரு பொண்ணு இருக்காங்கனு எனக்கு தெரியாதே!" என்று கூறி சிரித்தான்!
    அவன் தன்னை அழகு என்று கூறியதும் முகம் சிவக்க " இல்ல நீங்க அவர் இல்ல!" எண்டு கீழே பார்த்தவாறே கூறினாள்!
    "அடடா! பார்த்தால் ஒன்று வைத்த கண் வாங்காமல் பார்ப்பது இல்லை இப்படி கீழே மண் பார்ப்பதா???? இதற்கு பெயர் தான் எங்கள் ஊரில் வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்போம்! என்று அவன் கூற நிமிர்ந்தவளுக்கு ஏனோ அந்த கண்களை சந்திப்பது மிகவும் சிரமமாய்!

    "நீங்க...!" என்று அவனே எடுத்து கொடுக்க! அப்பாடா என்று தன்னை பற்றி பேச்சை மாற்றினாள்!
    "நான் இந்த காலேஜ் பைனல் இயர் ஸ்டுடென்ட்! நீங்க???"
    "நான் இந்த ப்ளூட் டோனதியன் கேம்ப் அரேஞ் பண்ண டீம்ல ஒரு டாக்டர்!"
    அவன் டாக்டர் என்று கூறியதும் அவன் மேலான மதிப்பு கூட!
    "சாரி டாக்டர்!" என்றால்!
    "எதற்கு சாரி??"
    "இல்ல... ஒண்ணும் இல்ல..!
    "சரி விடுங்க! நீங்க ப்ளூட் டொனேட் பண்ண போறீங்களா????"
    "ஆமா டாக்டர்!"
    "எதுக்கு இந்த டாக்டர்?? எல்லாம் நீங்க பேர் சொல்லியே கூப்பிடலாம்! என்ன உங்கள விட ஒரு அஞ்சாறு வயசு தானே ஜாஸ்தி இருக்கும் என்று அவன் கூற!" அவளுக்கு சிரிப்பு வந்தது!
    "ஏன் சிரிக்குறீங்க??"
    "இல்ல எத்தன வயச கொறச்சு சொல்லியிருப்பீங்கனு யோசிச்சேன் அதான்!"என்று மேலும் புன்னகைத்தாள்!
    "அம்மாடி பெண்களிடம் வாய் கொடுக்கும் போது ஜாக்ரதையாய் இருக்கணும் போல! உண்மையாகவே அவ்வளவு தான் இருக்கும்!" என்றான்!

    "சரி சரி ஒத்துக்குறேன்!" என்றால் அவள் நம்பாத பார்வையுடன்!
    "நீங்க நம்பலன்னு தெரியுது வேணா அடுத்த வாட்டி பாக்கும் போது சான்றிதழோட பாக்குறேன்!"
    அடுத்த முறையா??? அடுத்த முறை அந்த பாக்கியம் கிடைக்குமா? என்று ஏங்க தொடங்கிய மனதை கட்டுக்குள் வரவைத்து மெல்ல புன்னகைத்தாள்!
    "பாருங்க என்னமோ சொல்லி எங்கெங்கயோ போயாச்சு!"
    "என் பேரு தர்மேஷ்! நீங்க????" என்று கை நீட்டினான்!
    அவன் கை நீட்ட அதற்கு பதிலாய் கை குவிப்பது அவ்வளவு நாகரீகமாய் இருக்காது இன்று தோன்ற அவளும் கை கொடுத்து தர்ஷனா! என்றாள்!"
    இருவர்க்குமே தங்கள் பெயர்கள் ஒத்து இருப்பது ஆச்சர்யமாய்!
    "ஆமா என்ன கை நிறைய கிபிட்????புதுசா ஏதாவது கிபிட் ஷாப் ஆரம்பிசுருக்கீங்களா?? நடமாடும் கிபிட் ஷாப் மாதிரி?"என்று அவன் சீண்ட அந்த குரும்பை ரசித்தவாறே,
    "அது இன்னைக்கு என் பிறந்த நாள் அதான்!" என்று கூறும் போதே தான் இது வரை எந்த ஆண் மகனிடமும் இப்படி நின்று பேசியதில்லையே என்று உரைக்க தொடங்கியது!
    "அப்படியா பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இப்போதைக்கு என்னால் இது மட்டும் தான் முடியும்!" என்று கூறி அவளை வாழ்த்தினான்!
    ஏனோ அன்று தர்ஷானவுக்கு இது வரை தான் கொண்டாடிய பிறந்த நாளில் இது தான் மிகவும் இனிமையாய் தோன்றியது!
     
  2. kanaka Raghavan

    kanaka Raghavan IL Hall of Fame

    Messages:
    4,468
    Likes Received:
    1,481
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Really really interesting.This is your first story I am reading of yours.Really really enjoying it.Can't wait for the next episode.Hope it will not be of a sad ending,as the line regarding the blood donation camp between mother and daughter makes me think that way.Anyway,great beginning.Keep going.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks dear! keep reading!
    and hope you enjoy my previous novels too!:thumbsup
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female

    excellent !!!!
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks da! deva!:cheers
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hiyo.......intha part romba romba arumai dear....

    hero heroine conversation "chumma thool kilampitta"

    nalla anubavichu ezuthara.. engalayum anubavikka vaikkara....

    hero , heroine name... super...

    keep going dear...:thumbsup
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks latha! late :rant:rant
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    sorry da.... naan parthuttu irunthappa nee post pannave illa...athan vera thread la irunthen... vanthu partha post panni irukka...inga vanthathum unnoda tha than first parthen...........:bowdown:bowdown
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ok ok! mannichaachu podhum mutti valikka poghudhu!:rotfl:rotfl
     
  10. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    paathiya 1st rendu story maathiriye ithulayum birthday aniku start paniruka...:biglaugh

    ratha thaanam... anna thaanam... nalla karuthukkal da...

    conversations were 2 good...
     

Share This Page