1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாரதியின் புகழ் கொஞ்சம் பாடலாமா...?

Discussion in 'Regional Poetry' started by Induslady, Dec 11, 2017.

  1. Induslady

    Induslady Administrator Staff Member IL Hall of Fame

    Messages:
    6,357
    Likes Received:
    3,527
    Trophy Points:
    355
    Gender:
    Female
    bharathiyaar_71421440584805.jpg

    நமக்கு வீரம் உறுதி தமிழ்ப்பற்று போன்ற பலவற்றை தன் கவிதை மூலம் கொடுத்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினம் இன்று - 11-12-1882!

    இன்று அவர் நினைவாக அவர் கவிதைகளில் பிடித்த சில வரிகளை பகிர்ந்துக்கொள்ளலாமா...?
     
    Thyagarajan, stayblessed, Jey and 2 others like this.
    Loading...

  2. Induslady

    Induslady Administrator Staff Member IL Hall of Fame

    Messages:
    6,357
    Likes Received:
    3,527
    Trophy Points:
    355
    Gender:
    Female
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,463
    Trophy Points:
    470
    Gender:
    Female
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,463
    Trophy Points:
    470
    Gender:
    Female
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,463
    Trophy Points:
    470
    Gender:
    Female
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,463
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Induslady மிக்க நன்றி .முண்டாசு கவிஞனுக்கு மிக சிறந்த பெருமை சேர்த்து விட்டீர்கள்
     
    Thyagarajan and Induslady like this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,886
    Trophy Points:
    490
    Gender:
    Female
    காலமென்றே ஒரு நினைவும்
    காட்சியென்றே பல நினைவும்
    கோலமும் பொய்களோ
    அங்குக் குணங்களும் பொய்களோ
    காண்பதெல்லாம் மறையுமென்றால்
    மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
    நானும் ஓர் கனவோ
    இந்த ஞாலமும் பொய்தானோ
    ..
    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
    நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
    பல தோற்ற மயக்கங்களோ

    மாயை விளக்கும் அழகான பாடல் இது ...
     
  8. Jey

    Jey Administrator Staff Member IL Hall of Fame

    Messages:
    2,765
    Likes Received:
    1,066
    Trophy Points:
    315
    Gender:
    Male
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,045
    Likes Received:
    4,127
    Trophy Points:
    290
    Gender:
    Female
    முண்டாசுக் கவிஞனுக்கு
    இண்டஸ்லேடி மரியாதை !
    விண்டோஸைத் திறந்து
    இண்டஸ்லேடீஸ் தளம் வந்தேன்!
    கண்டேன் அஞ்சலிழை !
    கொண்டேன் நெஞ்சில்மழை !
    விண்டாலும் முடியாது!
    கொண்டாடத் தீராது !
    சண்டாளக் கவிஞனவன்
    திண்டாட விட்டிடுவான் !
    வேண்டிக் கொண்டதனால்,
    யாண்டும் நெஞ்சிலுள்ள,
    ஆண்டனென் பாரதியைத்,
    தோண்டி வெளிக்கொணர்ந்தேன்!
    மீண்டுமவன் பிறவி
    கொண்டுதான் பிறந்தால்,
    வேண்டிக் கேட்டிடுவேன்,
    மீண்டுமவன் கவியெழுத !


    மாலதி- நீங்கள் அழகாய்க் கேட்டுவிட்டீர்கள். வரிகளைப் பதிகவென்று. எத்தனை தான் இங்கு சொல்ல ? அத்தனையும் தித்திக்குமே ! பித்தனவன் சொன்னகவி முத்தெனவே சுடர்விடுமே ! தேர்ந்தெடுத்தேன் சிற்சிலவே- நான் விரும்பும் நல்லமுதை யாவருந்தான் பருகிடவே !

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,045
    Likes Received:
    4,127
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பாரதியார் கவிதைகள்

    வந்தே மாதரம் என்போம்

    வந்தே மாதரம் என்போம்
    வந்தே மாதரம் என்போம் - எங்கள்
    மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

    வந்தே...

    ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
    ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
    வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
    வேறு குலத்தின ராயினும் ஒன்றே

    வந்தே...

    ஈனப் பறையர்க ளேனும் அவர்
    எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
    சீனத் தராய்விடு வாரோ? - பிற
    தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

    வந்தே...

    ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
    அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
    தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
    சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?

    வந்தே...

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
    நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
    ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

    வந்தே...

    எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
    யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
    முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
    முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

    வந்தே...

    புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
    போயின நாட்களுக் கினிமனம் நாணித்
    தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
    தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி

    வந்தே...

    இசைவடிவில் இரசிப்பதற்கு இவ்விடம் நுழையலாம்...
     

Share This Page