1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாதிரி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 27, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மலரின் பெயர்தானா? என்ற ஐயத்துடனே
    இணையத்தை இணைத்தேன், கண்டது
    ஒரு அழகு மலரின் தோற்றம், அதை நான்
    முன்பே கண்டது என் பக்கத்து வீட்டு தோட்டம்

    இளம் மஞ்சளாய் கொஞ்சம், அடர் மஞ்சளில்
    கொஞ்சம் எனக் கண்கவர் வண்ணக் கலவையில்
    மொட்டும், மலருமாய் இந்த மலர்கள் மலர்ந்திருக்கையில்
    காணப் போதாது கண்ணிரண்டு

    எண்ணிரண்டு வயது முதற்கொண்டே கண்ட மகிழ்ந்த
    மலர்தான் என்றாலும், இந்த மலரை என் இரண்டு
    விழி கொண்டு இணையத்தில் பார்க்கும் வரை மலரே
    உன்னை நான் அறியேன்

    இளம் பச்சையில் இலைகளும் அதைத் தாங்கும் கிளைகளும்
    கூட அழகுதான். இந்த மலர்கள் மலரும் பருவத்தில் இலைகள்
    கூடத் தெரியாமல் ஒரு மஞ்சள் வண்ணக் குடையை விரித்தது
    போல அத்துணை மலர்கள் இருக்கும் மரத்தில்

    மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மலரும் பருவம் கொண்ட இந்த
    மரத்திற்கு அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி என நிறைய பெயர்கள்
    உண்டு இம்மலருக்கு. சரித்திரப் பெருமையும் உண்டாம் இந்த மரத்திருக்கு.

    அன்னை உமையவள் சிவ பெருமானின் ஆயிரத்தெட்டு தலங்களையும்
    தரிசித்துவிட்டு, கடைசியாய், திருபத்திரிபுளியூரில் உள்ள பாடலீஸ்வரர்
    சந்நிதானத்தில் ஐயனை தரிசித்து, இந்த மரத்தடியில் பல்லாண்டு காலம்
    தவம் இயற்றி அவரை அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அந்நாள்
    முதற்க் கொண்டு இந்த மரம் அந்தக் கோவிலின் ஸ்தல விருச்சமாகும்

    (என்ன இது இந்த வாரம் மஞ்சள் வாரமே ஆகிவிட்டது, நிறைய மஞ்சள் மலர்கள்.....)

    Name : Yellow Snake Tree
    Botanical Name : Stereospermum colais
    Family : Bignoniaceae
     
  2. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi Veni.

    Another nice yellow flower to your collection of poems!

    On the face of it I was reminded of Aavirai.

    Beautiful poem to describe a beautiful flower.

    Good veni!!!
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நினைத்தேன் வந்தாய் நூறு வயது. கேட்காமலே தந்தாய் அழகு பின்னூட்டம். எங்கே எனது மலர் உன் செல்லத் தீண்டல் இன்றி வாடி விடுமோ என அச்சம் கொண்டேன். எனதச்சத்தை துச்சமாய் விரட்டிய தோழிக்கு நன்றிகள் பல.

    ஆமாம், கோங்கம் என்ன பாவம் செய்தது. நீங்கள் இன்னும் பாராமல் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளது ammalar
     
  4. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    hi venima,
    again with wonderful kavithai with yellow flowers. naanum heading parthu vittu ennovo samiyar pathi thaan solla poreenga enru ninaithaal..........ada idhu oru poo per.......enrathum i feel so happy ma!! nice n beautiful words dear........
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே
    வேணி மலர்களின் நிறமும் மஞ்சள் நிறமே
    :ideaமலரே ஒரு மாதிரி
    பாதிரி என்று பெயரா????

    மஞ்சள் கம்பளம் எனக்கா?
    மலர்க் குடையும் எனக்கா?
    எண்ணிரண்டு தேவை இல்லை.

    கண்ணிரண்டும் போதுமடி உன்
    கவிநயம் காண.
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    veni beautiful poem.... have you seen these trees with cluster and cluster of flowers (only flowers) on it.... right now my heart is filled with happiness like that..... thank you dear....


    Sandhya
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இந்த வாரம் நீங்கள் சொன்னது போல்,
    மஞ்சள் மகிமை வாரம்.

    ஒவ்வொன்னும் ஒரு வித மஞ்சள்.
    அத்தனையும் அருமை - பூக்களும், கவிதையும்.

    அது ஏனோ, மஞ்சள் தாவணி கண் முன்னே வருகிறதே. :)
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    varum varum naalu potta kannula kuruviyae varum!:rant:rantidhaellam overah illa kalyaana vayasula oru ponnirukku sir ungalukku!
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    veni ma very nice poem and the pictures too:thumbsup
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    superb venimohan first time i see this flower thank you very much
     

Share This Page